நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்!

(2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் பகுதி 2)
நாடாளுமன்றவாதத்துக்கு அப்பால்:
‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’

பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு, ஜார் அரசாங்கத்தின் இடத்தில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது; டூமா உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்த நில உடைமையாளரான இளவரசர் ஜி.லோவோவ் தலைமையிலான கேடட் (அரசியல் சாசன - ஜனநாயக) கட்சியின் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில் பெட்ரோகிராடிலும் பிற நகரங்களிலும் தொழிலாளர் மற்றும் படைவீரர் பிரதிநிதிகளின் சோவியத்துக ளும் உருவாக்கப்பட்டன. இப்படியாக இரட்டை அதிகாரம் இருக்கிற தனித்துவமான சூழல் உருவானது. முதலாளித்துவ தற்காலிக அரசாங்கம், அனைத்து உழைக்கும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சோவியத்துடன் அரசியல் ஆதிக்கத்துக்கு போட்டியிட்டது. சோவியத்துகள் தற்காலிக அரசாங்கத்துக்கு அறிவுரைகள் வழங்க ஒரு தொடர்பு ஆணையமும் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முதலாளித்துவத்தாரிடம்தான் அதிகாரம் தரும், பாட்டாளி வர்க்கம் பிந்தைய ஒரு கட்டத்தில் சோசலிசப் புரட்சியைத் துவக்க வேண்டும் என்ற தங்கள் வறட்டுத்தனமான புரிதலுக்கேற்ப, சோவியத்துகளில் இருந்த மென்ஷ்விக்குகள் தற்காலிக அரசாங்கம்பால் சமரசப் போக்கை கடைபிடித்தார்கள்.
மறுபுறம், போல்ஷ்விக்குகள், சோசலிச கட்டம் நோக்கி புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மக்கள் அதிகாரத்தின் அமைப்புகளை விரிவாக்க மக்களை அமைப்பாக்கினார்கள்; வழிநடத்தினார்கள். உதாரணமாக, பெட்ரோகிராட் சோவியத்தின் முயற்சியால், தொழிலாளர் படையும் மக்கள் நீதிமன்றங் களும் உருவாக்கப்பட்டு, படைத் தளபதிகள் மீது கட்டுப்பாடு செலுத்தும்விதம், ஒவ்வொரு ராணுவ அலகிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர் கமிட்டிகளை உருவாக்கினார்கள்.
அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்டு, நீண்ட நாட்களாக கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்த லெனின், ஏப்ரலில் ரஷ்யா திரும்பினார். அவரது முன்வைப்பின் அடிப்படையில் போல்ஷ்விக்குகள் அமைதிவழியில் அதிகார மாற்றம் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்: “தற்காலிக அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை. அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே”. அந்த நேரத்தில் போல்ஷ்விக்குகள் (இதற்கு பெரும்பான்மை என்று பொருள்) பல இடங்களில் சோவியத்துகளில் சிறுபான்மையினராக, மிகச் சிறிய சிறுபான்மையினராக இருந்தார்கள். தொழிலாளர்கள் மீது மென்ஷ்விக்குகள் வலுவான செல்வாக்கு கொண்டிருந்தனர்; சமச்சீரான நில மறுவிநியோகத்துக்காக நிற்பதாகச் சொன்ன சமூகப் புரட்சியாளர்கள் விவசாயிகள் மீது செல்வாக்கு கொண்டிருந்தனர். பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு சில மாதங்களுக்கு, சோவியத்துகளுக்கு வெளியிலும், மக்கள் அப்பாவித்தனமாக தற்காலிக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். தற்காலிக அரசாங்கம், மென்ஷ்விக்குகள், சமூகப் புரட்சியாளர்கள் ஆகியோருக்கு போல்ஷ்விக்குகள் எதிரானவர்கள் என்று அறியப்பட்டதால், பொதுக் கூட்டங்களில் போல்ஷ்விக் பேச்சாளர்களின் உரைகளை கேட்கக் கூட துவக்கத்தில் சில நேரங்களில் மறுத்தார்கள். ஆனால் போல்ஷ்விக்குகள் தொடர்ந்து தங்கள் அம்பலப்படுத்துதல் இயக்கத்தை நடத்தினார்கள். பற்றியெரியும் பிரச்சனைகளில் அரசாங்கத்தின் செயலின்மையால், மக்கள் விரோத செயல்களால் அரசாங்கமும் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டது. ஜ÷ன் மாத வாக்கில், போல்ஷ்விக் முழக்கங்களுடன் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் துவங்கின. ஜ÷லையில் நடந்த ஒரு பேரணியில் தற்காலிக அரசாங்கத்துக்கு விசுவாசமான படைப்பிரிவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மென்ஷ்விக் தலைவர் கெரன்ஸ்கியின் தலைமையில் ஒரு வெளிப்படையான எதிர்ப்புரட்சி முதலாளித்துவ சர்வாதிகாரம் அமைக்கப்பட்டிருந்தது. போல்ஷ்விக்குகள் மீதான தேடுதல் வேட்டை துவங்கியது. லெனின் மீண்டும் தலைமறைவாக நேர்ந்தது.
தற்காலிக அரசாங்கத்தின் மீதான மக்கள் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தது. புரட்சியை ஒடுக்க, ஜெர்மானிய படைகளிடம் (ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் அப்போது போர் நடந்து கொண்டிருந்தது) பெட்ரோகிராட் துருப்புக்களை ஒப்படைக்க பரிசீலிப்பது பற்றி செய்திகள் வந்தபோது, போல்ஷ்விக்குகள் செயலில் இறங்கினார்கள்.

ஆயுதப் பேரெழுச்சி என்ற கலை
ரஷ்யாவுக்குள் தலைமறைவாக இருந்த லெனின் செப்டம்பர் 14 (27) அன்று போல்ஷ்விக் மத்திய கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில் ஆயுதப் பேரெழுச்சிக்கான உத்தேசத் திட்டத்தை வடிவமைத்திருந்தார்; இது பின்னாளில் மார்க்சியம் மற்றும் ஆயுதப் பேரெழுச்சி என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதிகாரம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண, ஜனநாயக மாநாடு ஒன்றும் அதைத் தொடர்ந்து தற்காலிக நாடாளுமன்றமும் (ல்ழ்ங்-ல்ஹழ்ப்ண்ஹம்ங்ய்ற்) நடத்தும் மென்ஷ்விக்குகளின் திட்டத்தை அவர் நிராகரித்தார்; “ஆயுதப் பேரெழுச்சியைத் துவக்கும் சரியான தருணத்தை தீர்மானிக்க ஏதுவாக ஆலைகளிலும் படைத்தளங்களிலும் நமது மொத்த குழுவும் கவனம் குவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அக்டோபர் 24 (நவம்பர் 6) அன்று அந்தத் தருணம் வந்தது; லெனின்தான் முதன்முதலில் இதை உணர்ந்துகொண்டார். மறுநாள், அதாவது நவம்பர் 7 அன்று, சோவியத்துகளின் காங்கிரஸ் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது; அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக அது பரிசீலிக்க இருந்தது. ஆனால், காங்கிரசின் போல்ஷ்விக் அல்லாத பிரதிநிதிகள் உடனடி நடவடிக்கையை எதிர்க்கக் கூடும் என்ற நிலை இருந்தது; போல்ஷ்விக் தலைவர்களில் சிலருக்கும் தயக்கம் இருந்தது. எனவே, லெனின் பெட்ரோகிராடில் தங்கியிருந்த ரகசிய இடத்தில் இருந்து, பெட்ரோகிராடின் ஸ்மோல்னி நிறுவனத்தின் அருகே கூடியிருந்த போல்ஷ்விக் மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு ஓர் அவசரச் செய்தி அனுப்பினார்: அந்தச் செய்தி,
“....எல்லாம் ஒரு நூலிழையில் தொங்குகிறது.... மாநாடுகளிலோ, பேராயங்களிலோ, சோவியத்துகளின் பேராயங்களில் கூட தீர்வு காண முடியாத, ஆனால் மக்களால் மட்டுமே, ஆயுதமேந்திய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்கப்படக் கூடிய பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்”.
“....எல்லா மாவட்டங்களும் எல்லா படைப் பிரிவுகளும் எல்லா சக்திகளும் உடனடியாக அணிதிரட்டப்பட வேண்டும்; அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் குழுக்களை, எந்தச் சூழ்நிலையிலும் கெரன்ஸ்கி மற்றும் அவரது ஆட்கள் கைகளில் அதிகாரத்தை விட்டுவைக்கக் கூடாது என்ற உறுதியான கோரிக்கையுடன், உடனடியாக போல்ஷ்விக்குகளின் ராணுவ புரட்சிகர கமிட்டிக்கும் மத்திய கமிட்டிக்கும் அனுப்ப வேண்டும். 25ஆம் தேதிக்குள், இன்று மாலையே, இன்று இரவே பிரச்சனை முடிக்கப்பட வேண்டும்....”
அக்டோபர் 25ன் ஊசலாட்டமான வாக்கெடுப்புக்கு காத்திருந்தால், அது பேரழிவாக அல்லது வெறும் சடங்காக மாறியிருக்கும். அது போன்ற பிரச்சனைகளில் வாக்கெடுப்பின் மூலம் அல்லாமல், பலவந்தமாக முடிவு செய்ய மக்களுக்கு உரிமை இருக்கிறது; அது அவர்களது கடமை. புரட்சியின் நெருக்கடியான தருணங்களில், தங்கள் பிரதிநிதிகளுக்கு, தங்கள் ஆகச் சிறந்த பிரதிநிதிகளுக்குக் கூட, அவர்களுக்காக காத்திராமல், உத்தரவிடுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது; அது அவர்களது கடமை.
“அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. என்ன விலை கொடுத்தாவது அதற்கு மரண அடி தர வேண்டும்”.
“இந்த நடவடிக்கையை தாமதப்படுத்துவது அழிவில் போய் முடியும்”.
இந்த சுருக்கமான செய்தி, பல விதங்களிலும் அறிவூட்டத்தக்கதாக இருக்கிறது. நவம்பர் புரட்சிக்கு முந்தைய புரட்சிகர காலகட்டத்தில் லெனினின் பிற கட்டுரைகளில், உரைகளில் இருந்ததுபோலவே, “முடிவுகள், பேசிக்கொண்டிருப்பது அல்ல.... நடவடிக்கை, தீர்மானங்கள் எழுதிக்கொண்டிருப்பது அல்ல”, என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விடாப்பிடியான செயல்வீரராக லெனின் இருக்கிறார். நடைமுறை சடங்குத்தனத்துக்கு அல்லது நாடாளுமன்ற தார்மீகவாதத்துக்கு முற்றிலும் எதிரானவராக, மக்களை, அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மேலாக நிறுத்துகிறார்; அந்தப் பிரச்சனையில் மறுநாள் காலை அவர்களது பிரதிநிதிகள் கூடி, விவாதித்து, வாதித்து, வாக்களிக்கும் முன்பு, அரசியல்ரீதியாக செயலூக்கமிக்க வெகுமக்கள் மத்தியில் சென்று, அவர்களை உடனடி நடவடிக்கைக்கு எழுச்சியுறச் செய்யுமாறு தனது தோழர்களுக்குச் சொல்கிறார். மார்க்சின் ஆர்வமிக்க மாணவரான அவரது இந்த ஆளுமைமிக்க வலியுறுத்தல், பாரீசின் கம்யூனார்டுகள் செய்த தவறுகளை, மார்க்ஸ் சொன்னதுபோல், “அவர்களது மிகவும் நல்ல பண்புகள், மிகவும் கவுரவமான நாணயம்” ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட தவறுகளை, அவரது தோழர்கள் செய்துவிடக் கூடாது என்று சொல்கிறது. (லுட்விக் குகல்மேனுக்கு 1871, ஏப்ரல் 12 அன்று மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் “இந்த பாரீஸ் மக்களிடத்தில் என்ன ஒரு நீக்குப்போக்கு, என்ன ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சி, என்ன ஒரு தியாகம் செய்யும் திறன்..... அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களது நற்பண்புகள்தான். முதல் வினோய் பின்வாங்கிய பிறகு உடன டியாக அவர்கள் வெர்செய்ல்ஸ் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்; அதற்குப் பிறகு பாரீஸ் தேசிய படையினரின் பிற்போக்கு பிரிவினரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தார்மீக நேர்மையால் அவர்கள் தங்கள் வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டார்கள். அவர்கள் ஓர் உள்நாட்டுப் போரை துவக்க விரும்பவில்லை; அவர்களது பொல்லாங்கான வில்லன் தேயர்ஸ் உள்நாட்டுப் போரை துவக்கவில்லையா என்ன? இரண்டாவது தவறு: கம்யூனுக்கு பாதையை போடுவதற்குள் மத்திய கமிட்டி தங்கள் அதிகாரத்தை வெகுசீக்கிரமாகவே ஒப்படைத்துவிட்டது. மீண்டும் மிகவும் கவுரவமான நாணயம்தான் அதற்குக் காரணமாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்). கெரன்ஸ்கி அரசாங்கத்தின் இறுதி எதிர்ப்புரட்சி முயற்சிகளைத் தடுப்பதற்கும் மறுநாள் நேரக் கூடிய “ஊசலாட்டமான வாக்களிப்பை” நேர் செய்வதற்கும் இது மட்டுமே வழி என்று அவருக்கு தெரிந்திருந்தது.
இந்தச் செய்தியை அனுப்பிய உடனேயே, நன்கு பயிற்சி பெற்ற அந்தப் புரட்சியாளர், ஆயுதப் பேரெழுச்சியை வழிநடத்த, போல்ஷ்விக் தலைமையகமான ஸ்மோல்னிக்குச் சென்று சேரத் தேவையான ஆபத்தான முயற்சியை மேற்கொண்டார்; மாறுவேடத்தில் வெளியே வந்தார். நள்ளிரவில் நடவடிக்கை ஆரம்பமா னது. மறுநாள் காலை தலைநகரின் பெரும்பாலான, போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எழுச்சியுற்றிருந்த தொழிலாளர்கள், படைவீரர்கள், கடலோடிகளிடம் இருந்தன. அன்று மாலை (அக்டோபர் 25) குளிர்கால மாளிகை தாக்கப்பட்டது; அதேநேரத்தில் இரண்டாவது அனைத்து ரஷ்ய சோவியத்துகளின் காங்கிரஸ் ஸ்மோல்னியில் துவங்கியது. குளிர்கால மாளிகை கைப்பற்றப்பட்டது. முதலாளித்துவ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். சோவியத் காங்கிரஸ் நடந்து முடிந்ததை அறிவித்தது: தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகளுக்கு அரசு அதிகாரம் மாற்றப்படுகிறது. லெனின் தலைமையிலான மக்கள் கமிசார் கவுன்சில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மறுநாளே, வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி தொடர்பான ஆணையும் (உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும்) நிலம் தொடர்பான ஆணையும் (நிலப்பிரபுக்கள், தேவாலயங்கள் வைத்திருக்கிற நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உழைக்கும் விவசாயிகள் மத்தியில் மறுவிநியோகம் செய்யப்படுவது) பிறப்பிக்கப்படுகின்றன. அது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோவியத் அரசாங்கம் அமைக்கப்பட்டது.
அந்த எழுச்சி வெற்றி பெற்றது; ஏனென்றால், பத்தாண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் கடுமையான அரசியல் பணியாற்றி களம் தயார் செய்யப்பட்டது. இரண்டாவதாக, மார்க்ஸ் போதனைகளின் அடிப்படையில், செப்டம்பரில் லெனின் முன்வைத்த, வெற்றிகரமான ஆயுதப் பேரெழுச்சிக்கு தேவையான மூன்று முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டன. (உதாரணமாக, அது “சதியை நம்பியிருக்கவில்லை, ஒரு கட்சியை நம்பியிருக்கவில்லை, மாறாக முன்னேறிய வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது”).
நவம்பர் புரட்சி சதித்தனமான ஆட்சிக் கவிழ்ப்பு என்ற, புரட்சி, புரட்சிகர கட்சி ஆகியவை பற்றிய லெனினின் கருத்துக்கள் முற்றிலும் மேட்டுக்குடிதன்மை கொண்டவை என்ற குற்றச்சாட்டுகளை, இந்த மொத்த நிகழ்வும், லெனினின் ஒட்டுமொத்த சிந்தனைப் போக்கும் பொய்யாக்கின.

“ஆயுதப் பேரெழுச்சி வெற்றி பெற வேண்டுமானால், அது ஒரு சதியையோ, ஒரு கட்சியையோ அல்லாமல் முன்னேறிய வர்க்கத்தைச் சார்ந்திருக்க வேண்டும். இது முதல் விசயம். ஆயுதப் பேரெழுச்சி மக்களின் புரட்சிகர எழுச்சியை சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது விசயம். மக்களின் முன்னேறிய பிரிவினரின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கிற, எதிரிகளின், புரட்சியின் பலவீனமான, அரைமனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் ஊசலாட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கிற, வளர்ச்சி பெற்று வருகிற புரட்சியின் வரலாற்றின் திருப்புமுனையை ஆயுதப் பேரெழுச்சி சார்ந்திருக்க வேண்டும். இது மூன்றாவது விசயம். ஆயுதப் பேரெழுச்சியை நடத்தத் தேவையான இந்த மூன்று நிபந்தனைகள்தான் மார்க்சியத்தை பிளாங்கியத்தில் இருந்து பிரித்துக் காட்டுகின்றன.
இந்த நிலைமைகள் இருந்தாலும், ஆயுதப் பேரெழுச்சியை ஒரு கலையாக கருத மறுப்பது மார்க்சியத்துக்கு, புரட்சிக்கு துரோகமிழைப்பதாகும்”.
- லெனின், மார்க்சியமும் ஆயுதப் பேரெழுச்சியும்

(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 16 - 31)