திருவிழா
- இன்குலாப்
(மக்கள் கவிஞர் இன்குலாப் நினைவாக
வெண்மணி நினைவாக)
வெண்மணி நினைவாக)
ஒத்தையடிப் பாதை
ஓரத்தில் கருந்தூணாய்
நிக்கும் பனைமரங்கள்...
நெடுமரத்து ஓலையெல்லாம்
சரசரக்கும் பாதையிலே
சஞ்சரிக்க யார் வருவார்?
ஓரத்தில் கருந்தூணாய்
நிக்கும் பனைமரங்கள்...
நெடுமரத்து ஓலையெல்லாம்
சரசரக்கும் பாதையிலே
சஞ்சரிக்க யார் வருவார்?
ஒத்தையடிப் பாதை
ஓரத்தில் காட்டுமல்லி.....
காட்டுமல்லிப் பூவெல்லாம்
கண்முழிச்ச தீபம்....
கண் முழிச்ச தீபங்கள்
காட்டுறது எந்தவழி?
ஓரத்தில் காட்டுமல்லி.....
காட்டுமல்லிப் பூவெல்லாம்
கண்முழிச்ச தீபம்....
கண் முழிச்ச தீபங்கள்
காட்டுறது எந்தவழி?
குலைசாய்ஞ்ச கதிரெல்லாம்
வயலில் தலைசாய்க்கும்
வரப்பில் நிமுந்திருக்கும்
கோரம்புல் வயல்பார்க்கும்
கோரம்புல் தலைமிதிச்சுப்
போறவங்க யார் யாரோ?
வயலில் தலைசாய்க்கும்
வரப்பில் நிமுந்திருக்கும்
கோரம்புல் வயல்பார்க்கும்
கோரம்புல் தலைமிதிச்சுப்
போறவங்க யார் யாரோ?
பூத்திருக்கும் வானம்
வானத்தின் கீழே பொட்டுப் பொட்டாய்ப்
பொறி பறக்கும் மின்மினிகள்
பொறி பறக்கும் பாதையிலே
போறவங்க யார் யாரோ?
வானத்தின் கீழே பொட்டுப் பொட்டாய்ப்
பொறி பறக்கும் மின்மினிகள்
பொறி பறக்கும் பாதையிலே
போறவங்க யார் யாரோ?
வெறசா வீசுங்கையில்
வெட்டருவா மின்ன
வெட்டருவா மின்னலுக்கு
அட்டையிருள் அஞ்ச
கச்சை கட்டிப்போகுமிந்த
கண்மணிகள் யாரோ?
உறங்குது ஊரெல்லாம்
ஒவ்வொரு குடிசையிலும்...
ஓரே ஓர் குடிசையிலே
உறங்காத பாலனுக்குப்
பால் கொடுத்த தாய்பாடும்
தாலாட்டுக் கேக்கிறது...
ஐயிரண்டு மாசம் என் அடிவயித்தில் குடியிருந்து
கையில் வந்த சூரியனே கண்ணுறங்கு கண்ணுறங்கு.....
எத நெனச்சி நீ அழுதாய்... அப்பனும் ஆத்தாளும்
வதங்குறார் முச்சூடும் வயக்காட்டில் என்பதுக்கா?
வதங்கி மடிஞ்சாலும் வயலில் வெளஞ்சதெல்லாம்
மொதலாளி வீட்டு முத்தத்தில் காயுதடா
பாடாய்ப் படுத்துற பண்ணை மொதலாளிகளை
வேரோடு புடுங்கி வீசுவேண்ணு போய்விட்ட
மாமனை நெனச்சாயோ? மாமன் சம்பிராயம்
நீமுடிக்க நெனச்சாயோ? நிச்சயமாய் உன்மாமன்
பண்ணையார் தலைவீசிப் பந்தாடி வந்துடுவான்
கண்ணே உனக்கேன் கவலை உறங்கிடடா.......?
‘வங்காளச் செஞ்சேவல்’ வயலோரக் குடிசையிலே
பொங்கும் குரலெடுத்துக் கூவுவதாய்ப் போனமாமன்
கண்ணே ஒரு பொழுதில் கண்ணிறஞ்ச சூரியனாய்
முன்னே வந்துநிப்பான் உறங்கிடடா... ஆரிரோ

பச்சைக் குழந்தைக்குப் பாடிய தாலாட்டைக்
கச்சைக்கட்டிப் போன கண்மணிகள் கேட்டாங்க
கேட்டாங்க... நின்னு கேட்டொருவன் சொன்னான்
கச்சைக்கட்டிப் போன கண்மணிகள் கேட்டாங்க
கேட்டாங்க... நின்னு கேட்டொருவன் சொன்னான்
‘இது ஒருதாய் தன்மகனை உறங்கவைக்கும் பாட்டல்ல...
புரட்சித்தாய் தன் மனசில் பொங்கும் பிரவாகம்
இன்னும் உறங்குகிற மனிதரை எழுப்பவே
அன்னை இசைக்கிற ஆவேசப் பாட்டிதடா.....’
புரட்சித்தாய் தன் மனசில் பொங்கும் பிரவாகம்
இன்னும் உறங்குகிற மனிதரை எழுப்பவே
அன்னை இசைக்கிற ஆவேசப் பாட்டிதடா.....’
‘தாலாட்டுப் பாடுவதென் தங்கைதான் தோழர்களே
மேலும் நாம் போகவேண்டும்...... நடங்கள்’ என்றான் வேறொருவன்.
மேலும் நாம் போகவேண்டும்...... நடங்கள்’ என்றான் வேறொருவன்.
வயலைப் பார்த்து நிற்கும் வரப்போரக் கோரையைப் போல்
உசரமாய் நிக்குற ஒரு வீட்டின் முன்னாலே
கச்சைகட்டி வந்த கண்மணிகள் நின்னாங்க
‘நிச்சயித்த வீடிதுதான்.......’ வந்தவரில் ஒருவன் சொன்னான்.
உசரமாய் நிக்குற ஒரு வீட்டின் முன்னாலே
கச்சைகட்டி வந்த கண்மணிகள் நின்னாங்க
‘நிச்சயித்த வீடிதுதான்.......’ வந்தவரில் ஒருவன் சொன்னான்.
‘இந்த ஊரு பூராவும் இந்த வீட்டுக்கடிமைகளாம்’
........மேலும் எதையோ சொல்ல வேறொருவன் சொன்னான்
‘பேசாதீர் இது நமது பேச்சுக்கு நேரமில்லை
வாசற்பூட்டை உடைக்க வாருங்கள் முன்னாலே....’
கம்பி இடுக்குக்குள் கடப்பாரையை நுழைச்சி
நெம்பியபோதும் பூட்டு நெக்குவிடவில்லை
‘பூட்டுப் பழம்பூட்டு...... பண்ணையார் பூர்வீகம் போல்
பூட்டும் கடும்பூட்டு....... பண்ணையார் மனசைப் போல்
நெம்புவதால் இப்பூட்டு நெக்குவிடும் என்று
நம்புவதால் பலனில்லை நல்லது தோழர்களே
ஓங்கி அடியுங்கள்... உடையுங்கள் பூட்டைத்
தாங்கும் கதவுகளே தகர்ந்து போகட்டும்......’
என்றொருவன் சொல்லி எடுத்தடிச்சான் சுத்தியலை
நின்னவங்க எல்லாம் நெருங்கி அடிச்சாங்க....
அடியும் பலத்தஅடி... ஆண்டாண்டாய் நுகத்தடியில்
மடிஞ்சி கிடந்தவங்க வன்மத்தைக் காட்டும் அடி
இந்த அடிவாங்காமல் எப்பூட்டும் உடையாது
இந்த அடி வாங்கினால் எப்பூட்டும் தாங்காது.

தட்ட அஞ்சுற கதவும் தகர்ந்துவிழ
வெட்டருவா மின்ன வீரரெல்லாம் நுழைஞ்சாங்க
பண்ணையார் கொடுத்த பட்டைச் சாராயத்தால்
கண்ணசந்து ரெண்டுகாலிகள் கெடந்தாங்க.
காலிகளைக் கொண்டுவந்த கயித்தால் கட்டிவிட்டு
மேலே நுழைஞ்சாங்க மிராசின் இடந்தேடி...
வெட்டருவா மின்ன வீரரெல்லாம் நுழைஞ்சாங்க
பண்ணையார் கொடுத்த பட்டைச் சாராயத்தால்
கண்ணசந்து ரெண்டுகாலிகள் கெடந்தாங்க.
காலிகளைக் கொண்டுவந்த கயித்தால் கட்டிவிட்டு
மேலே நுழைஞ்சாங்க மிராசின் இடந்தேடி...
கொஞ்சம் தெறந்த அறையிலிருந்து
கூப்பிட்டதார்விடும் கொறட்டை - இது
கும்மிருட்டையும் அதியாரஞ்ச செய்யுற
பண்ணையார் உடுற கொறட்டை!
கூப்பிட்டதார்விடும் கொறட்டை - இது
கும்மிருட்டையும் அதியாரஞ்ச செய்யுற
பண்ணையார் உடுற கொறட்டை!
மல்லார்ந்து கெடக்கும் மஞ்சத்திலும் கீழும்
உடைஞ்ச வளையல் துண்டு... அந்த
மஞ்சத்தின் பக்கத்து மேசையிலேதான்
பூப்போட்ட கிளாசும் உண்டு.
என்ன சுகத்தில் உறங்குதடா ஏழை
ரத்தம் குடிக்கிற சாதி... இந்த
ஈனச் சுகமின்னும் நீடிச்சால்
ஏழைக்கு ரத்தமிருக்குமா மீதி?
உடைஞ்ச வளையல் துண்டு... அந்த
மஞ்சத்தின் பக்கத்து மேசையிலேதான்
பூப்போட்ட கிளாசும் உண்டு.
என்ன சுகத்தில் உறங்குதடா ஏழை
ரத்தம் குடிக்கிற சாதி... இந்த
ஈனச் சுகமின்னும் நீடிச்சால்
ஏழைக்கு ரத்தமிருக்குமா மீதி?
எரியும் நீலவிளக்கு ஓளியில்
அறையை நோட்டமிட்டார் - பானையில்
இருந்த தண்ணியைப் பண்ணையின்
முகத்தில் ஊத்தி எழுப்பிவிட்டார்.
முழிச்சிப் பார்த்தான் பண்ணை - தன்
முன்னே நிப்பது யாருன்னு?
அழிச்சிப் பார்த்தான் கண்ணை - தன்
அறையில் வந்தது யாருன்னு
இமைச்சி இமைச்சிப் பார்த்தான் - தன்
எதுக்க வந்தது யாருன்னு
நெனச்சி நெனச்சிப் பார்த்தான் - தன்
நேரே வந்தது யாருன்னு
அறையை நோட்டமிட்டார் - பானையில்
இருந்த தண்ணியைப் பண்ணையின்
முகத்தில் ஊத்தி எழுப்பிவிட்டார்.
முழிச்சிப் பார்த்தான் பண்ணை - தன்
முன்னே நிப்பது யாருன்னு?
அழிச்சிப் பார்த்தான் கண்ணை - தன்
அறையில் வந்தது யாருன்னு
இமைச்சி இமைச்சிப் பார்த்தான் - தன்
எதுக்க வந்தது யாருன்னு
நெனச்சி நெனச்சிப் பார்த்தான் - தன்
நேரே வந்தது யாருன்னு
கங்கு கங்கு கங்காய்ப் - பொசுக்கும்
கண்கள்! கண்கள்! கண்கள்!
நீலவிளக்கும் சிவப்பாய் - இப்போ
எரியுதடா நெருப்பாய்....
கண்கள்! கண்கள்! கண்கள்!
நீலவிளக்கும் சிவப்பாய் - இப்போ
எரியுதடா நெருப்பாய்....
வடிச்ச ரத்தமெல்லாம் - இங்கே
வந்திடுச்சோ பேயாய்......?
குடிச்ச ரத்தமெல்லாம் - கூடிப்
பிடிச்சிடுச்சோ தீயாய்?
வந்திடுச்சோ பேயாய்......?
குடிச்ச ரத்தமெல்லாம் - கூடிப்
பிடிச்சிடுச்சோ தீயாய்?
குட்டை போட்ட கால்களெல்லாம்
எட்டி உதைக்க வருதே...
குனிஞ்சி கெடந்த சாதியெல்லாம்
துணிஞ்சி எதுக்க வருதே...
எட்டி உதைக்க வருதே...
குனிஞ்சி கெடந்த சாதியெல்லாம்
துணிஞ்சி எதுக்க வருதே...
முழிச்சிப் பார்த்தான் பண்ணை - தன்
முன்னே நிப்பது யாருன்னு?
அழிச்சிப் பார்த்தான் கண்ணை - தன்
அறையில் வந்தது யாருன்னு?
முன்னே நிப்பது யாருன்னு?
அழிச்சிப் பார்த்தான் கண்ணை - தன்
அறையில் வந்தது யாருன்னு?
‘என்ன தைரியத்தில் என்
எதுக்க வந்து நின்னீர்?
சின்ன சாதி நாய்க்கு - இப்போ
திமிர் பிடிச்சிடுச்சா?
எதுக்க வந்து நின்னீர்?
சின்ன சாதி நாய்க்கு - இப்போ
திமிர் பிடிச்சிடுச்சா?
தொறந்து கெடக்கு தென்றா - இங்கே
துணிஞ்சி வந்து நின்னீர்?
மறந்து போயிடுச்சா - செருப்பால்
வாங்குன அடிகளெல்லாம்?
தக்கைச் சனங்களுக்கு - இந்த
தைரியம் மூட்டுரது
நக்சல் என்றால் அவனை - இடது
கையால் நசுக்கிடு வேன்டா
துணிஞ்சி வந்து நின்னீர்?
மறந்து போயிடுச்சா - செருப்பால்
வாங்குன அடிகளெல்லாம்?
தக்கைச் சனங்களுக்கு - இந்த
தைரியம் மூட்டுரது
நக்சல் என்றால் அவனை - இடது
கையால் நசுக்கிடு வேன்டா
சுட்டுப் பொசுக்கிடுவேன்டா - என்
தோக்கு ரவை தீர
வெட்டிச் புதைச்சிடுவேன்டா - உங்க
குலத்தையே வேரறுப்பேன்டா’
தோக்கு ரவை தீர
வெட்டிச் புதைச்சிடுவேன்டா - உங்க
குலத்தையே வேரறுப்பேன்டா’
சொன்னபடி எழுந்து - தலை
காணியைத் தூக்கையிலே
மின்னடிச்சாப் போல - ஒருத்தன்
பண்ணையின் மேல் பாய்ஞ்சான்.
வெலா உடைஞ்சிப் போக - பண்ணை
விழுந்தான் தரைமேலே-
தலையைத் தூக்கு மின்னே - மீண்டும்
தரையிலேயே சாஞ்சான்.
காணியைத் தூக்கையிலே
மின்னடிச்சாப் போல - ஒருத்தன்
பண்ணையின் மேல் பாய்ஞ்சான்.
வெலா உடைஞ்சிப் போக - பண்ணை
விழுந்தான் தரைமேலே-
தலையைத் தூக்கு மின்னே - மீண்டும்
தரையிலேயே சாஞ்சான்.
நசுக்குறதாச் சொன்ன - கையும்
நைஞ்சி கெடக்குறது
பொசுக்குறதாச் சொன்ன - வாயும்
பொளந்து கெடக்குறது
நைஞ்சி கெடக்குறது
பொசுக்குறதாச் சொன்ன - வாயும்
பொளந்து கெடக்குறது
மிதிச்ச காலிரண்டும் - இப்போ
வெட்டிக் கெடக்குறது
குடிச்ச ரத்தமெல்லாம்...
தரையில் கொட்டிக் கெடக்குறது...
வெட்டிக் கெடக்குறது
குடிச்ச ரத்தமெல்லாம்...
தரையில் கொட்டிக் கெடக்குறது...
புரட்சி வாழ்க என்ற - முழக்கம்
எதிரொலிக்குதடா...
புரட்சி வாழ்க வாழ்க - வானம்
எட்ட முட்டுதடா...!
எதிரொலிக்குதடா...
புரட்சி வாழ்க வாழ்க - வானம்
எட்ட முட்டுதடா...!
புரட்சி வாழ்க வாழ்க - ஆதிக்க
மலை தகருதடா
புரட்சி வாழ்க வாழ்க - அடிமை
பூமி எழும்புதடா...
மலை தகருதடா
புரட்சி வாழ்க வாழ்க - அடிமை
பூமி எழும்புதடா...
உறக்கம் புடிச்ச குடிசை எல்லாம்
எழுப்புதடா முழக்கம்.
மயக்கம் புடிச்சமனசை எல்லாம்
உசுப்புதடா முழக்கம்.
கூப்பிட்ட குரலுக்கு - ஓலைக்
குச்சி எழும்புதடா...
அழைச்ச குரலுக்கு - சேரி
அணிதிரளுதடா
எழுப்புதடா முழக்கம்.
மயக்கம் புடிச்சமனசை எல்லாம்
உசுப்புதடா முழக்கம்.
கூப்பிட்ட குரலுக்கு - ஓலைக்
குச்சி எழும்புதடா...
அழைச்ச குரலுக்கு - சேரி
அணிதிரளுதடா
தகர்த்த வாசற் கதவின் முன்னே
சாய்ஞ்சு கெடக்கு நச்சுமரம்.
உடைஞ்ச பூட்டுக்குப் பக்கத்திலேதான்
விழுந்து கெடக்கு நச்சுமரம்.
சாய்ஞ்சு கெடக்கு நச்சுமரம்.
உடைஞ்ச பூட்டுக்குப் பக்கத்திலேதான்
விழுந்து கெடக்கு நச்சுமரம்.
ஏழைச் சனங்க இந்த வாசலில்
ஏறமுடிஞ்சதுண்டா - பண்ணை
எசமானன் விதிச்சதையெல்லாம்
மீற முடிஞ்சதுண்டா?
ஏறமுடிஞ்சதுண்டா - பண்ணை
எசமானன் விதிச்சதையெல்லாம்
மீற முடிஞ்சதுண்டா?
கொடிகட்டிப் பறந்ததடா
பண்ணை அதிகாரம் - இப்போ
குடை சாஞ்சி கெடக்குதடா
பண்ணை அதிகாரம்.
பண்ணை அதிகாரம் - இப்போ
குடை சாஞ்சி கெடக்குதடா
பண்ணை அதிகாரம்.
வயலைப் பார்த்திருக்கும் வரப்பு கோரையைப் போல்
உசரமாய் நிக்கும் பண்ணையின் வாசலிலே...
உசரமாய் நிக்கும் பண்ணையின் வாசலிலே...
சேரிச் சனமெல்லாம் திரண்டு நின்னாங்க...
ஊருச் சனமெல்லாம் ஒருமிக்க நின்னாங்க...
தொண்டு கிழமெல்லாம் தண்டூனி நின்னாங்க...
புள்ளைகளை இடுக்கிப் பெண்டுகளும் நின்னாங்க...
ஊருச் சனமெல்லாம் ஒருமிக்க நின்னாங்க...
தொண்டு கிழமெல்லாம் தண்டூனி நின்னாங்க...
புள்ளைகளை இடுக்கிப் பெண்டுகளும் நின்னாங்க...
வந்த சனங்களின் முன் ஒரு வீரன் பேசவந்தான்...
வெண்கல மணி ஒண்ணு முழங்குறது போல...
வெண்கல மணி ஒண்ணு முழங்குறது போல...
‘உங்கள் வேர்வையில், கண்ணீரில், ரத்தத்தில்
உண்டு களிச்சிருந்த ஒருத்தன் மடிஞ்சுவிட்டான்
கள்ள வட்டிக் காசாலே காணி நிலத்தையெல்லாம்
கொள்ளை அடிச்சிக் குபேரனாய் ஆகிவிட்டான்...
பண்ணைச் சனத்தையெல்லாம்
பள்ளென்றும் பறையென்றும்
சின்னப்படுத்தியவன்... செருப்படியும் சவுக்கடியும்
கூலியாய்க் கொடுத்தவன் குமருகள் மானத்தைக்
கேலிபடுத்தியவன், கேட்டவங்க குச்சையெல்லாம்
நெருப்பை மூட்டிவிட்டு நிம்மதியாய்த் தூங்கியவன்
ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு வப்பாட்டி
பகலெல்லாம் பெரிய பக்திமான்போல் வேஷம்...
தண்ணீரில் இவன் தனது மந்திரம் சபித்தால்
அண்டாதாம் பேயும்... அண்டாதாம் நோயும்...
என்ன மடமை? பேயும் நோயும் வேறேயார்?
ஊர் சனங்க ரத்தமெல்லாம்
உறிஞ்சுற பேய் இவன்தான்...
பண்ணைச் சனங்களைப் பாதிக்கும் நோயும் இவன்தான்...
மத்தவங்க கோயிலில் போய்க் கும்பிட்டால் தனக்கு
ஒத்துக் கொள்ளாதாம்... அதனால் வீட்டுக்குள்ளேயே
கட்டிவச்ச கோயிலுக்குப் பக்கத்துப் புளியமரம்
கட்டிவச்சு அடிபட்ட ஏழைகள் கதை சொல்லும்...

ஓலமிட்ட உங்கள் குரல் உலகையே உலுக்கினாலும்
பாலாபிஷேகம் பெற்ற பரமனுக்குக் கேட்கலையே
நம்பிக்கை எல்லாம் தகர்ந்து நடுக்கடலில் தத்தளிச்சோம்
கும்பிட்ட சாமி எல்லாம் கூக்குரலைக் கேட்கலையே
நீண்ட வயல் தந்த நெல்லும் இவனுக்கு...
ஆண்டவனும் இவனுக்கு அரசும் இவனுக்கு...

உட்கார்ந்தபடியே ஊரை அதிகாரம் செய்தான்
சர்க்கார் இவன் சர்க்கார் கோர்ட்டும் இவன் கோர்ட்டு
ஏழைசொல் நீதிமன்றம் ஏறியது எப்போது?
களத்துமேடுகள்தாம் இனிநமக்கு நீதிமன்றம்
சர்க்கார் இவன் சர்க்கார் கோர்ட்டும் இவன் கோர்ட்டு
ஏழைசொல் நீதிமன்றம் ஏறியது எப்போது?
களத்துமேடுகள்தாம் இனிநமக்கு நீதிமன்றம்
இவனை ஒழித்துவிட்டோம்... இவனுக்குள்ளே இருந்து
அச்சுறுத்தி வந்த ஒரு அதிகாரத்தை ஒழித்தோம்...
இவனை ஒழித்துவிட்டோம்... இவனால் மிதிபட்டோர்
இவன் சாவில் புலம்பவில்லை... எதிரி புலம்பிடுவான்...
இவனை ஒழித்துவிட்டோம்... இச்செயல் சிறுபொறிதான்
சிறுபொறிகள் பெருங்காட்டுத் தீயாய்ப் பரவட்டும்...
அஞ்சாம வாங்க... ஆண்டையின் வீட்டுக்குள்ள
கொஞ்சமல்ல இவன் கொள்ளை அடிச்சதெல்லாம்
செந்நெல் பட்டறை திறந்து கிடக்கிறது
பங்குபோடுங்கள் உங்கள் உழைப்பின் பயனைஎல்லாம்’

என்று சொன்னபின்பும் எதிரில் உள்ள சனமெல்லாம்... அசையாமல் நின்னாங்க ஆண்டவன் சிலை போல...
‘மந்திரம் சபிச்சவன் மாயப் பிசாசுருவாய்
வந்தாலும் வருவான்... என்றா மயங்குகிறீர்?
மந்திரங்கள் ஏமாற்று... மந்திரங்கள் இவனோட
மண்டை சாய்ஞ்சப்ப உதவிக்கு வரவில்லை...’
என்று சொன்னபின்பும் எதிரில் உள்ள சனமெல்லாம்
அசையாம நின்னாங்க ஆண்டவன் சிலைபோல...
வந்தாலும் வருவான்... என்றா மயங்குகிறீர்?
மந்திரங்கள் ஏமாற்று... மந்திரங்கள் இவனோட
மண்டை சாய்ஞ்சப்ப உதவிக்கு வரவில்லை...’
என்று சொன்னபின்பும் எதிரில் உள்ள சனமெல்லாம்
அசையாம நின்னாங்க ஆண்டவன் சிலைபோல...
அப்பொழுது கூட்டத்தில் இருந்தொருவன் ஓடிவந்து
‘பக்கத்தில் போலீஸ் முகாமிட்டிருக்கிறது...
இங்கே புகுந்தால் எங்களை எல்லாம்
அடிச்சி நொறுக்கிவிடும் அதனால தயக்கம்’ என்றான்.
‘பக்கத்தில் போலீஸ் முகாமிட்டிருக்கிறது...
இங்கே புகுந்தால் எங்களை எல்லாம்
அடிச்சி நொறுக்கிவிடும் அதனால தயக்கம்’ என்றான்.
‘அடிக்க உயரும்கை அறுந்து விழும்படிக்கு...
திருப்பி அடிக்கின்ற துணிவு நமக்குண்டு.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் அக்கூட்டம்.
கொள்கைக்கு மார்பிளக்கும் கூட்டம் நம்கூட்டம்
அடிபடுவதால் நமது அங்கம் கிழிபடலாம்.
கொடுமைக்கு எதிரான கொள்கை சாய்ந்திடுமோ
வலியோருக்கு ஏவல் நாயாய் வளர்ந்திட்ட
அரசாங்க ரௌடிகள் முன் அஞ்சி ஒடுங்காதீர்
காக்கிக் சட்டைகளைக் கண்டாலே தாக்குங்கள்
தோக்கைப் பிடுங்கித் துரத்தி அடியுங்கள்’
என்றவனும் சொன்னபின்பு ஒரு கிழவர் எழுந்து வந்தார்.
தள்ளாடித் தள்ளாடித் தண்டை ஊன்றி வந்தார்.
மூட்டை நெல்லைக் குனிந்து முக்கி முணங்கித்
தூக்கியபடியே இதைச் சொன்னார் எனது
உயிரே போனாலும் ஒருபோதும் என் உழைப்பின்
பயனாய் வந்த இதைப் பறிபோகவிடமாட்டேன்
சொன்னதைக் கேட்டபின்பு சுத்திநின்ற சனமெல்லாம்
அஞ்சாமல் நுழைஞ்சாங்க ஆண்டையின் வீட்டுக்குள்
பங்குபோட நுழைஞ்சாங்க பண்ணையின் வீட்டுக்குள்
குரவையிட்டாங்க - கொடுமை ஒழியுதென்று
கும்மி அடிச்சாங்க - கொத்தடிமை சாயுதென்று

நட்ட நடுநிசியும் நடுநடுங்க - மின்னும்
நட்சத்திரங்களும் நடுநடுங்க
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - பூமி
குலுங்கட்டும் கும்மி கொட்டுங்கடி.
திக்கெல்லாம் மூடும் இருள் நொறுங்க - நாங்க
தேடுற பாதை வெளிச்சம் வர வந்த
செக்கச் சிவந்த பொழுதுகளே - உங்க
தங்கச்சிகள் கும்மி கொட்டுகிறோம்.

எங்க பரம்பரைத் தோள்களில் ஏறி
இருந்த பண்ணைப் பெருமலையைச்
சங்காரம்செய்யும் சகோதரரே - உங்க
தங்கச்சிங்க கும்மி கொட்டுகிறோம்.
இருந்த பண்ணைப் பெருமலையைச்
சங்காரம்செய்யும் சகோதரரே - உங்க
தங்கச்சிங்க கும்மி கொட்டுகிறோம்.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - நம்
கொத்தடிமைத் தனம் தீருதுன்னு.
கொட்டுங்கடி கைகொட்டும் ஒலி - மறு
கோடிக்கும் கேட்கட்டும் கொட்டுங்கடி!
கொத்தடிமைத் தனம் தீருதுன்னு.
கொட்டுங்கடி கைகொட்டும் ஒலி - மறு
கோடிக்கும் கேட்கட்டும் கொட்டுங்கடி!
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 16 - 31)