ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரை விஜய் மல்லையா அன்டு கோ என பெயர் மாற்றம் செய்!
நாட்டை விட்டு ஓடிப்போய்விட்ட விஜய் மல்லையாவுக்கு ரூ.1200 கோடி, வேறு பல பல கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பதை விஜய் மல்லையா அன்டு கோ என பெயர் மாற்றம் செய் என்ற முழக்கத்துடன், 22.11.2016 அன்று சென்னை பாரிமுனையில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வணிகக் கிளையின் அலுவலகத்தை வழக்கறிஞர்கள், மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலப் பொறுப்பாளர் தோழர் கே.பாரதி தலைமை தாங்கி நடத்தினார். சென்னை மாவட்ட இகக மாலெ மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் ஜி.முனுசாமி ஆர்.மோகன், ஆர்ஒய்ஏ பொறுப்பாளர்கள் தோழர்கள் செந்தில், கே.ராஜேஷ், இ. ஸ்டாலின் அய்சா மாநிலச் செயலாளர் தோழர் வி.சீதா, மாவட்டப் பொறுப்பாளர் வி.கோகுல், வழக்கறிஞர் சங்க தலைவர்கள் தோழர்கள் சுரேஷ், சங்கர், பிரபாகர், டைமன்ட் இஞ்சினியரிங், டோபாஸ் டூல்ஸ், மினாமி மெட்டல்ஸ், டீகே இஞ்சினியரிங் ஆலைகளின் கிளை சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தரதர வென இழுத்துச் சென்று கைது செய்து, பிறகு மாலை விடுவித்தனர்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறு!
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து, மோடி அரசு, மக்கள் மீது பொருளாதார நெருக்கடி நிலையை திணித்துள்ளதோடு கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு பெருவாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அரசு அறிவித்ததை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.7,200 கோடி கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் படும் இன்னல்களுக்கு ஆட்சியில் உள்ளவர்கள் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியும் இகக மாலெ தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தியது.
நவம்பர் 13 அன்று அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 14.11.2016 அன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவை தொழிலாளர்கள் இகக மாலெ தலைமையில் திரண்டு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஜி.முனுசாமி தலைமை தாங்கி நடத்தினார். சென்னை மாவட்ட இகக மாலெ மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் கண்டன உரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் பொன்ராஜ், ஆர்.குப்பாபாய் கே.வேணுகோபால், ஆர்மோகன், எஸ்.பாலகிருஷ்ணன், ஜி.புகழ்வேந்தன், அய்சா மாவட்டப் பொறுப்பாளர் வி.கோகுல், மங்களபுரம் கட்சி கிளைச் செயலாளர் தோழர் தனலட்சுமி, ஆன் லோட் கியர்ஸ், விஏபி இன்டக்சன், ஸ்டான்டர்டு கெமிக்கலஸ், ஜெய் இஞ்சினியரிங், இன்னோவேட்டர்ஸ், மினாமி மெட்டல்ஸ், டீகே இஞ்சினியரிங் ஆகிய ஆலைகளின் கிளை சங்கங்களின் தலைவர்கள், முன்னோடிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு இந்தப் பகுதியில் இயங்கிய இரண்டு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்பட்டது.
நவம்பர் 28, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அரசு அறிவித்ததை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் விடுத்திருந்த போராட்ட அழைப்புக்கேற்ப தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் சிபிஅய்(எம்எல்) சிபிஅய்(எம்), சிபிஅய், எஸ்யூசிஅய் (கம்யூனிஸ்ட்) இடதுசாரிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு வணிகர் சங்க அமைப்பும் இணைந்தன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாநிலத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி தலைமையில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர் எ.எஸ்.குமார், தோழர் மஞ்சுளா, தோழர் எஸ்.ஜவகர், தோழர் கே.பாரதி, தோழர் தேன்மொழி, தோழர் சொ.இரணியப்பன், தோழர் கே.பழனிவேல், மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், கட்சி மாநகரக் கமிட்டி உறுப்பினர்கள், ஏஅய்சிசிடியு தலைவர்கள், அம்பத்தூர், சென்னை, திருபெரும்புதூர் பகுதிகளின் ஆலைகளின் தொழிலாளர்கள், காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, இசபெல்லா மருத்துவமனை தொழிலாளர்கள், கொடிகள், கேலிச் சித்திரங்களுடனான அட்டைகள், பதாகைகள், பிரசுரங்களுடன் பங்கேற்றனர். அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். முன்னதாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரச்சாரம் நடத்தப்பட்டு அணிதிரட்டல் மேற்கொள்ளப்பட்டது. இககமாலெயின் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதே நாள் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சிபிஅய்(எம்எல்), சிபிஅய், சிபிஅய் (எம்) கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் நடத்தின கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் கண்டன உரையாற்றினார். முன்னதாக அழிஞ்சிவாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் நவம்பர் 17 அன்று பெண்கள் குழந்தைகள் உள்பட மக்களை திரட்டி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது, நவம்பர் 15 அன்று செங்குன்றம் இந்தியன் வங்கி கிளையை ஏஅய்சிசிடியு தலைமையில் நடைபாதை வியாபாரிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே நாள் புதுக்கோட்டையில் சிபிஅய்(எம்எல்), சிபிஅய், சிபிஅய் (எம்), எஸ்யூசிஅய் (கம்யூனிஸ்ட்), விசிக கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்எல் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி கண்டன உரையாற்றினார். இந்தப் போராட்டதிற்கு முன்பாக சிபிஅய் எம்எல் சார்பில் நவம்பர் 17 அன்று கந்தர்வகோட்டையில் மோடி அரசைக் கண்டித்தும் டெல்டா விவசாயிகள் தற்கொலைகள் பற்றி தமிழக அரசு வெளிப்படுத்தும் குற்றமய அலட்சியத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 19 அன்று குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நவம்பர் 29 அன்று கரம்பக்குடியில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவையில் நவம்பர் 28 சிபிஅய்(எம்எல்), சிபிஅய், சிபிஅய் (எம்) கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கோவையில் நவம்பர் 17 அன்று பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரள் கணடன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார். மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நவம்பர் 19 அன்று சின்னியம்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் என்கே.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் கண்டன உரையாற்றினார்கள்.
நவம்பர் 28 அன்று தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் சிபிஅய்எம்எல், சிபிஅய், சிபிஎம், விசிக, மக்கள்அதிகாரம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் கண்டன உரையாற்றினார். கட்சி மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பழ.ஆசைத்தம்பி, எஸ்.இளங்கோவன், வளத்தான், கண்ணையன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் இராஜன் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கமும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் 25.11.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்ப்வா கிளைத் தலைவர் தோழர் சுலோச்சனா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அய்ப்வா மாவட்டச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் ஏழுமலை, கந்தசாமி, கலாமணி, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் நவம்பர் 22 அன்று இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அய்யந்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு பணத்தை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சந்திரமோகன், மோகனசுந்தரம், வேல்முருகன், கோ ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் விஸ்வநாதன், கட்டுமான சங்கத்தின் தோழர் நடராஜன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விழுப்புரம், நாமக்கல், ஈராடு, காஞ்சிபுரம், தருமபுரி, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் நவம்பர் 28 அன்று இககமாலெ, இகக, இககமா கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி, மதுரை மாவட்டங்களில் இககமாலெ ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
எல்லா மாவட்டங்களிலும் பிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டங்களும் அக்கம்பக்கமாக நடத்தப்பட்டன.
ஒடிஷா ஆந்திரா சட்டிஸ்கர் மாநிலங்களில் மாவேயிஸ்ட்டுகள் மீது நடத்தப்படும் போலி மோதல் படுகெலைகளைக் கண்டித்து நவம்பர் 19 அன்று வள்ளுவர் கோட்டம் அருகில் பல்வேறு மனித உரிமை ஜனநாயக அமைப்புக்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் இகக மாலெ மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் கண்டன உரையாற்றினார். மாநகர கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் முனுசாமி, கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து பட்டினிப் போராட்டம்
தமிழில் வழக்காடும் உரிமை கோரிப் போராடிய வழக்கறிஞர்களை மூன்றாண்டுகள் முதல் வாழ்நாள் வரை வழக்கறிஞர் பணிசெய்ய பார் கவுன்சில் தடை விதித்ததை கண்டித்து, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் நவம்பர் 18 அன்று பட்டினிப் போராட்டம் நடத்தியது. திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் தோழர் கார்க்கி வேலன் தலைமை தாங்கினார். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் கே.பாரதி கண்டன உரையாற்றினார். நெல்லை பொறுப்பாளர் தோழர் ஜி. ரமேஷ், திருச்சி பொறுப்பாளர் தோழர் கே.ஜி.தேசிகன், கோவை பொறுப்பாளர் தோழர் லூயீஸ், திருவள்ளூர் பெறுப்பாளர் தோழர் எம்.சங்கர், தோழர் கே.சுரேஷ், காஞ்சிபுரம் பொறுப்பாளர் தோழர் பிரபாகரன், மற்றும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பார்த்திபன், மில்டன், இககமாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பேசினார்கள். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)