COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, February 11, 2021

 

சாதியாதிக்க வெறியும் ஆணாதிக்க வெறியும் நடைபோடும் தமிழகம்

வெற்றி நடை போடும் தமிழகம் என்று யாரோ பாட முதலமைச்சர் பழனிச்சாமி நடந்து கொண்டே இருக்கிறார். தமிழக மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் பழனிச்சாமியாக உருமாற, பழனிச்சாமி அம்மா ஜெயலலிதாவின் கண்மணிக்குள் தெரிகிறார்.....

 

உச்சநீதிமன்றத் தடை விவசாயிகளுக்கு உதவாது

மோடி அரசுக்குத்தான் உதவும்

13 ஜனவரி 2021

எஸ்.குமாரசாமி

மோடியின் கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்களுக்கு 12.01.2021 அன்று உச்சநீதிமன்றம் தடை வழங்கியபோது, விவசாயிகள் அந்த தடையை கொண்டாடவில்லை. மாறாக போராட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசின் சட்டங்களை திணிப்பதற்குமே, மத்திய அரசு -  உச்சநீதிமன்ற ஊடாடல் மூலம் தடை வழங்கப்பட்டதாகவே, கருதுகின்றனர்.

 

டிரம்புக்கு நடந்தது மோடிக்கு நடக்காதா?

எஸ்.குமாரசாமி

தேர்தலில் தோற்ற பின்பு டிரம்ப் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து இறங்க தயாராக இல்லை. கேபிடோல் ஹில்லில் டிரம்ப் ஆதரவாளர்கள் கூட்டம் அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை, மேலவை மீது தாக்குதல் நடத்தின.

 

கார்ப்பரேட் லாப வெறிக்கு தடுப்பூசி போடும் நாள் எந்நாளோ அந்நாளே சாமான்ய மக்களுக்கு பொன்னாள்

கொள்ளை நோய் வந்தால் அதற்கு தடுப்பூசி வந்து விடாதா என்றுதான் பொதுவாக மக்கள் காத்திருப்பார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பூசிக்காக காத்திருந்தார்கள். அது வந்த பிறகு எழுந்துள்ள கேள்விகள் பாஜக ஆட்சி பற்றிய அவநம்பிக்கையை போதுமான அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

சங்கிகளுக்கு நாட்டுப் பற்று உண்டா?

தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது

தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று சொல்லி எதிரில் இருப்பவர் யாரையும் பேச விடாமல் கத்திக் கொண்டு மேசையை பேனாவால் குத்தி கொண்டிருக்கும் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோசுவாமிக்கும் பார்க் (ப்ராட்காஸ்டிங் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையில் நடந்த வாட்சப் உரையாடல்

 

டாக்டர் அம்பேத்கர் பக்கம்

இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள், இந்த சபை  கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.......

 (அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சாசனத்தின் மீது நடந்த விவாதங்களின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை. நவம்பர் 25, 1949. பக்கம் 280 - 284, தொகுதி 30 பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு)

.........1950ஆம் ஆண்டு ஜனவரி 26ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக ஆகிவிடும். அதாவது அந்நாளிலிருந்து இந்திய அரசு மக்களுடைய, மக்களால் ஆன, மக்களுக்கான அரசாக இருக்கும்.

 

பெரியார் சொல் கேளீர்.....

வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புகிறவர்கள் யார்?

நாம் போராடுவது சுயமரியாதைக்காகவே

குடி அரசு - சொற்பொழிவு - 15.08.1926

தற்காலம் இந்நாட்டிலுள்ள ராஜீய வேஷங்கொண்ட பல பார்ப்பனர்கள் என்னை வகுப்புத் துவேஷக்காரனென்றும் வகுப்புக் கலவரங்களை மூட்டிவிடுகிறவனென்றும் சொல்லியும் எழுதியும் ஆள்களை விட்டுப் பிரசாரம் செய்தும் வருகிறார்கள். வகுப்புத் துவேஷமும் வகுப்பு வேற்றுமைகளும் என்னால் ஏற்பட்டதா?

 

வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலையும் அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம்

"லூட் " (கொள்ளை அடித்தல்) என்கிற ஆங்கில வார்த்தை முதன் முதலில் இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் கீழ் கிழக்கிந்திய கம்பெனி கொள்ளை அடித்ததின் தன்மையை வைத்தே ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. தற்காலத்தில் மோடி ஆட்சியின் கீழ் கார்ப்பரேட் லூட்  என்பது அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்தியா என்பது ஏதோ அம்பானி , அதானி போன்றோருக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

 

தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூன்று பேரை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பிணையில் வெளியில் வர முடியாதபடி, தமிழக அரசின் காவல்துறை பிப்ரவரி 7 அன்று அதிகாலையில் சேலத்தில் கைது செய்துள்ளது.

 

கூண்டுக்கிளியாகி, ஏவலாளியாகி, களவாளியாகி

குற்றவாளியாகப் போகும் மத்திய புலனாய்வு துறை

காவல்துறை விசாரணையில் நம்பிக்கையில்லை, சிபிசிஅய்டி விசாரணையில் நம்பிக்கையில்லை, வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஅய்) மாற்றுங்கள் என்று குரல்கள் எழுப்பப்பட்டது ஒரு காலம். சிபிஅய் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று சொல்லப்படுவது மோடியின் காலம்.

 சென்னை மனமகிழ் மன்ற தொழிலாளர்கள் போராட்டம்

வெற்றி வெற்றி என கொட்டு முரசே!

சென்னையில் மிகப்பெரிய பணக்கார கூட்டத்தால் துச்சமாக மதிக்கப்பட்டு, கொரோனா காலம் வேலையில்லை ஓடிப் போ என வீசி எறியப்பட்ட ஏழை எளியவர்கள், துணிந்து நின்று போராடி வென்றார்கள்.

 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்

14 ஆண்டுகளாக மின்இணைப்பு தர மறுக்கும்

மின்வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

எஸ்.ஜானகிராமன்

திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர், மல்லையா நகர் மக்களுக்கு, அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு வருவாய் துறையினர் மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிக மின்சாரம் வழங்கலாம், குடியிருப்போர் மின் வசதி கேட்டு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 165 குடியிருப்புகளுக்கு மின் வசதி கேட்டுதனித்தனியாக விண்ணப்பிக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்பு மக்களின் அடிப்படை கோரிக்கை நிராகரிக்கப்படுவதை கண்டித்து டிசம்பர் 12 அன்று ஜனப்பன்  சத்திரம் கூட்டு சாலையில்  கண்டன கூட்டம் நடைபெற்றது.

 

வீட்டுமனை எங்கள் உரிமை

வண்டலூர், கீரப்பாக்கம் குடியிருப்போர் முழக்கம்

வண்டலூர், கீரப்பாக்கம் பகுதி குடியி ருப்பு மக்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு கம்யூனிஸ்ட் கட்சி காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர் ராஜ்குமார் தலைமையில் வட்டாட்சியரை (தாசில்தார்) ஜனவரி 4 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

 

சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட பெண் மாணவர்கள்!

மக்களுக்கான இளைஞர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் தலையீடு!

2018ஆம் ஆண்டு படித்து முடித்த பெண் மாணவர்களுக்கு மடிக்கணினி தராத தமிழக அரசை கண்டித்தும், பொறுப்பேற்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், அரசுப் பள்ளி பெண் மாணவர்கள், அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Search