வீட்டுமனை எங்கள் உரிமை
வண்டலூர், கீரப்பாக்கம் குடியிருப்போர் முழக்கம்
வண்டலூர், கீரப்பாக்கம் பகுதி குடியி ருப்பு மக்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு கம்யூனிஸ்ட் கட்சி காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர் ராஜ்குமார் தலைமையில் வட்டாட்சியரை (தாசில்தார்) ஜனவரி 4 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
வண்டலூர் கிராமம் சர்வே நம்பர் 131ல் ஏழு ஏக்கர் ருத்ர பூமி நிலம் உள்ளது. இதில் மூன்று ஏக்கர் நிலப் பரப்பளவு 1978ஆம் ஆண்டு கிராம நத்தம் ஆக மாற்றப்பட்டு, அங்கு வசித்த வந்தவர்களுக்கு அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வருவாய் ஆவணத்தில் பதிவேற்றம் செய்யப் படவில்லை. ருத்ரபூமி என குறிப்பிடப் பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக வருவாய் ஆவணத்தில் பதிவேற்ற கிராம மக்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள் ளனர். பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் ஆவணத்தில் பதிவேற்றம் செய்ய வருவாய் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
செங்கல்பட்டு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் முன்முயற்சியில், வண்டலூர் மற்றும் கீரப்பாக்கம் குடியிருப்பு மக்களை அணிதிரட்டப்பட்டனர். கட்சியின் காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்குமார் மற்றும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கோபால் தலைமையில் வண்டலூர் வட்டாட் சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கோபால், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பு குழு தோழர் ராஜகுரு, செங்கல்பட்டு மாவட்ட குழு தோழர் மோகன்ராஜ், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்குமார், வண்டலூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் திரு.வேதகிரி, சமூக ஆர்வலர் திரு.பாலகிருஷ்ணன், அரிமா சங்கத்தை சார்ந்த திரு.உதயகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் முன் திரண்டிருந்த பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றினர்.