மோசடி மோடியின் முகத்திரையை கிழிப்போம்!
உழைக்கும்
மக்கள் தக்க பதிலடி கொடுப்போம்!
(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)
மோசடி மோடியின் முகத்திரையை கிழிப்போம், உழைக்கும் மக்கள் தக்க பதிலடி
கொடுப்போம் என்ற முழக்கத்துடன் மோடியின்
பணமதிப்பகற்றும் மோசடித் திட்டத்தை அம்பலப்படுத்தி
கடன் நிலுவை வைத்துள்ள கார்ப்பரேட்
நிறுவனங்களின் பட்டியலை வெளியிடு. அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்,
பணமதிப்பகற்றும்
நடவடிக்கையால் உயிரிழந்த, வாழ்வாதாரம் இழந்த, கூலி, வேலை
வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கு. ஜன்தன் கணக்குகளில்
தலா ரூ.1 லட்சம் செலுத்து.
பணமதிப்பகற்றும்
நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடி காலத்துக்கு
கல்வி கட்டணத்தையும், மருத்துவ கட்டணத்தையும் தள்ளுபடி செய்.
ஆகிய கோரிக்கைகள் மீது தமிழ்நாட்டில், பரப்புரை
இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னை
அம்பத்தூர்,
வரதராஜபுரம் பகுதியில் 27.12.2016 அன்று தோழர் புகழ்வேந்தன்
தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாலை
6 மணிக்கு அம்பத்தூர் கனரா வங்கியிலிருந்து ரயில்
நிலையம் வரை வழி நெடுகிலும்
மோடியின் திட்டத்தை அம்பலப்படுத்தி முழக்கங்களுடன், கைகளில் செங்கொடி ஏந்தி
கணிசமான கட்சி உறுப்பினர்களும், தொழிலாளர்களும்
அணிவகுத்துச் சென்றனர். மக்கள் மத்தியில் துண்டுப்
பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. எழுச்சியுடன் நடைபெற்ற இந்தப் பிரச்சார இயக்கத்தில்
இகக (மாலெ) மாநிலக் கமிட்டி
உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், பழனிவேல், வித்யாசாகர்
ஆகியோருடன் மாநிலச் செயலாளர் தோழர்
குமாரசாமியும் கலந்துகொண்டார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலரும்
ஈடுபட்டனர். தோழர்கள் முனுசாமி, பசுபதி, வேணுகோபால் ஆகியோர்
தெருமுனைக் கூட்டங்களில் பேசினர்.
கிராமப்புறங்களில்
இரவு நேரங்களில் ஊர் கூட்டங்கள் போடுவதுபோல்
சென்னையில் வறிய மக்கள், அமைப்புசாரா
தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மாலை நேரங்களில் அவர்கள்
வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்
நடத்தி அவர்களை பகுதியின் மய்ய
இடத்துக்கு வரச்செய்து அந்த இடத்தில் கூட்டங்கள்
நடத்தப்பட்டன.
28.12.2016 அன்று அம்பத்தூர்
85வது வார்டு காமராஜபுரத்தில் இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர்
தோழர் மோகன் தலைமையில் பிரச்சார
இயக்கம் நடைபெற்றது. ஆலைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா
தொழிலாளர்கள், இந்தி பேசும் இடம்
பெயர்ந்த தொழிலாளர்கள் என கணிசமானோர் பங்கெடுத்தனர்.
தோழர்கள் ராஜேந்திரன், புகழ்வேந்தன், பழனிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
100 பேர் கொண்ட பிரச்சார குழுவினர்,
டோபி காலனி, குடிசை மாற்றுவாரிய
குடியிருப்பு, தூய்மைப் பணியாளர் குடியிருப்பு என உழைக்கும் மக்கள்
வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்து பிறகு ஆர்ப்பாட்டத்திலும்
ஈடுபட்டனர்.
29.12.2016 அன்று
இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர்
தோழர் முனுசாமி தலைமையில் அம்பத்தூர், மங்களபுரம் ஆதிதிராவிடர் காலனியில் துவங்கி பிரச்சாரம் நடைபெற்றது.
பல இடங்களில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டங்களில் ஆன்லோடு கியர்ஸ் நிர்வாகி
தோழர் ஜெகந்நாதன், தோழர் புகழ்வேந்தன், தோழர்
குப்பாபாய், தோழர் லில்லி ஆகியோர்
உரையாற்றினர். இப்பகுதியில் மேல்நிலைப் பள்ளி, ரேசன் விநியோக
முறைகேடு கோரிக்கைகளும் பிரச்சாரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் பள்ளி மாணவர்களின் அணிவரிசை
ஒன்றும் பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. பிரச்சாரப்
பயணம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடி பிடித்து, பேட்ஜ்
அணிந்து துண்டுப் பிரசுரங்களுடன் மக்களை சந்தித்தனர். தங்களின்
துயரங்களை வெளிப்படுத்திய பிரச்சார இயக்கத்துக்கு மக்கள் பேராதரவு தந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர்
மாவட்டத்தில் 28.12.2016 அன்று ஆட்டோவில் ஒலிபெருக்கியுடன்
இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து
செல்ல 11 ஊராட்சிகளில் கிட்டத்தட்ட 10,000 மக்களை சென்றடையும் வகையில்
19 மய்யங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியில் துண்டுப்
பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. பிரச்சார இயக்கம் மக்களின் கவனத்தை
ஈர்ப்பதாக அமைந்தது. இந்தப் பிரச்சாரப் பயணத்தில்
இகக(மாலெ) மாவட்டச் செயலாளர்
தோழர் ஜானகிராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் அன்புராஜ், திருநாவுக்கரசு, ஜெயராஜ், மலைச்சாமி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
கோவை
கோவையில்
மத்தம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில்
இகக(மாலெ) பரப்புரை இயக்கத்தில்
ஈடுபட்டது. அதிகாரிகளை கைது செய்தால் மட்டும்
போதாது அவர்களின் அரசியல் எஜமானர்களையும் கைது
செய் என பரப்புரையில் வலியுறுத்தப்பட்டது.
மோடியின் முகத்திரையை கிழிக்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்களோடு இந்த
வாகனப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில்
இகக(மாலெ) மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், முன்னணித்
தோழர்கள் வேல்முருகன், நடராஜன், ஜெயப்பிரகாஷ்நாராயணன், வரதராஜன் ராமசந்திரன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
அகில இந்திய மாணவர் கழக
தோழர்கள் சாஸ்திரி
பவன் முற்றுகை
29.12.2016 அன்று
அய்சா மாநிலச் செயலாளர் தோழர்
சீதா தலைமையில் சென்னை சாஸ்திரி பவனை
முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நாணய மதிப்பகற்றும் அறிவிப்பு
வெளியிட்டு 50 நாட்களாகியும் மக்கள் படும் அவதி
தீராததால் தூக்குக் கயிற்றுடன் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 50 நாட்களுக்குள் பிரச்சனை தீரவில்லை என்றால் என்னைத் தூக்கில்
போடுங்கள் என்று மோடி சொல்லியிருந்தார்.
மாணவர்கள் கேலிச்சித்திர பதாகைகளுடன் போக்குவரத்தை மறித்து ரோட்டில் அமர்ந்து
போராட்டம் நடத்தினர். 13 பேரை காவல்துறையினர் கைது
செய்தனர்.
இகக(மாலெ) மத்தியக் கமிட்டி
அறைகூவலை ஏற்று தமிழகத்தின் பல
இடங்களில் மோடி
ஆட்சிக்கு எதிராக 30.12.2016 அன்று பல்வேறு இயக்கங்கள்
கட்டமைக்கப்பட்டன. வலுவான லோக் ஆயுக்தா
அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சென்னையில்
நடந்த ஆர்ப்பாட்டத்திலும் திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் நடந்த தெருமுனைக் கூட்டத்திலும்
இகக மாலெ மாநிலச் செயலாளர்
தோழர் எஸ்.குமாரசாமி பங்கேற்று
கண்டன உரையாற்றினார். மாவட்ட கட்சிச் செயலாளர்களின்
தலைமையில் இந்த எதிர்ப்பு நிகழ்ச்சிகள்
நடந்தன. தஞ்சையில், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை தோழர்கள்
கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர்
பாலசுந்தரம் கண்டன உரையாற்றினார். கோவை,
நெல்லை, நாமக்கல், விழுப்புரம், கரூர், சேலம் ஆகிய
மய்யங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்பட்டன. கட்சியின் மாநில, மாவட்டக் குழு
உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு
உரையாற்றினர்.