வளரும் இளந்தலைமுறையினர்
எப்படி கம்யூனிசம் கற்றறிய வேண்டும்?
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
(1920, அக்டோபர் 2 அன்று, ரஷ்யாவின் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்றாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் லெனின் ஆற்றிய உரையில் இருந்து)
.......நமக்கென ஒரு தனி அறநெறி கிடையாது என்பதாய் அடிக்கடி பேசப்படுகிறது; ஒழுக்கநெறி அனைத்தையுமே நிராகரிப்பவர்கள் என்பதாய் கம்யூனிஸ்டுகளாகிய நம்மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனையைக் குழப்புவதற்கான - தொழிலாளர், விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான - ஓர் உபாயமே இது.
எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை, ஒழுக்கநெறியை நிராகரிக்கிறோம்?
முதலாளித்துவ வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அர்த்தத்தில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறிக்கு அடிப்படையாக்கிக் கொள்கிறார்கள். இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம். மதகுருமார்களும் நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் சுரண்டலாளர்கள் என்ற முறையில் தமது சொந்த நலன்களைக் கருதி கடவுளின் பெயரை இழுக்கிறார்கள், இதை நாங்கள் நன்கு அறிவோம் என்று சொல்கிறோம். அல்லது, ஒழுக்கக் கட்டளைகளுக்குப் பதிலாய் - கடவுள் கட்டளைகளுக்குப் பதிலாய் - அவர்கள் கருத்துமுதல்வாத அல்லது ஓரளவு கருத்து முதல்வாதத் தொடர்களை அறநெறிக்கு அடிப்படையாக்கிக் கொண்டனர். இந்தத் தொடர்களும் மிகப் பெருமளவுக்குக் கடவுள் கட்டளைகளைப் போன்ற ஒன்றையே குறிப்பவை.
மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்க நெறியையும் நாம் நிராகரிக்கின்றோம். அது ஏமாற்று வித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.
எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் உதிக்கிறது.
பழைய சமுதாயம், எல்லாத் தொழிலாளர்கள், விவசாயிகள் மீதும் நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் புரிந்த ஒடுக்குமுறை யின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க வேண்டியிருந்தது. அவர்களை வீழ்த்த வேண்டியிருந்தது. ஆனால் இதைச் செய்யும் பொருட்டு நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டியிருந்தது. அது கடவுளால் உண்டாக்கப்படக் கூடிய ஒன்று அல்ல.
இந்த ஒற்றுமையைத் தொழிற்சாலைகளால் மட்டும்தான் அளித்திட முடியும்; நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகே வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி, மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைந்திருப்பதை இப்பொழுது காண்கிறோமே, இந்த வெற்றிக்கு வழி செய்துள்ளது. இந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சி அனைத்து உலகின் முதலாளித்துவ வர்க்கத்தாரின் கடுந்தாக்குதலை மூன்று ஆண்டுகளாய் எதிர்த்தடித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. ஒற்றுமையின்றிச் சிதறுண்டுள்ள விவசாயிகளைத் தன்னைப் பின்பற்றி வரச் செய்துள்ளோம், சுரண்டலாளர்களது எல்லாத் தாக்குதல்களையும் சமாளித்து நிற்பதுமான திடமிக்க இச்சக்தியைப் பாட்டாளி வர்க்கத்தால் அல்லாமல் வேறு எதனாலும் தோற்றுவித்திருக்க முடியாதென இப்பொழுது நாம் அனுபவ வாயிலாய்க் கூறலாம். இந்த ஒரு வர்க்கத்தால் மட்டும்தான் உழைப்பாளி வெகுஜனங்கள் ஒன்றுபடவும், தமது அணிகளை ஒன்று திரட்டிக் கொள்ளவும், கம்யூனிச சமுதாயத்தை முடிவாய்ப் பாதுகாத்துக் கொள்ளவும், முடிவாய் உறுதி பெறும்படிச் செய்யவும், முடிவாய்க் கட்டியமைத்திடவும் துணை புரிய முடியும்.
எனவேதான் மனித சமுதாயத்துக்கு மேலானதான ஒழுக்கநெறி என்பதாய் நமக்கு எதுவும் இல்லை என்று கூறுகிறோம். அது ஏமாற்று சூழ்ச்சியே ஆகும். நமக்கு ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்குக் கீழ்ப்பட்டதே ஆகும்.........
.....கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு; ஏனையோருக்கு வேலை செய் அல்லது ஏனையோரை உனக்கு வேலை செய்யும்படி வை; அடிமையுடைமையாளனாய் இரு அல்லது அடிமையாகு - இந்த விதிதான் பழைய சமுதாயத்துக்கு அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமையுடைமையாளன் அல்லது அடிமை, இல்லையேல் சிறு உடைமை யாளன், சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறை யாளன் - அதாவது சுருங்கக் கூறின் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து ஏனையவர் யாரைப் பற்றியும் கவலைப்படாத ஆள் என்கிற மனப் பான்மையை, பழக்கத்தை, கருத்தோட்டத்தை இத்தகைய ஒரு சமுதாயத்தில் வளர்ந்தவர்கள் இயற்கையாகவே கிரகித்துக் கொண்டு விடுகிறார்கள், தாய்ப் பாலுடன் சேர்த்து உட் கொண்டு விடுகிறார்கள் என்று சொல்லலாம்.
எனக்குரிய இந்த நிலத்தை நான் உழுது பயிரிட்டால் போதும், ஏனையோரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனையோர் பட்டினி கிடந்தால் கிடக்கட்டுமே, நல்லது தானே, என்னுடைய தானியத்துக்கு இன்னும் அதிகப் பணம் கிடைக்குமே. எனக்கு மருத்து வர் அல்லது பொறியாளர் அல்லது ஆசிரியர் அல்லது குமாஸ்தா வேலை கிடைக்கிற வரை ஏனையோர் யாரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அதிகாரத்தில் இருப்போருக்கு அணிபடிந்து நடந்து அவர்களைத் திருப்தி செய்தால் என் வேலையை நான் பாதுகாத்துக் கொள்ளலாம், ஏன் வாழ்க்கையில் முன்னேறி ஒரு முதலாளியாகவும் கூட ஆகலாம். இது போன்ற மனப்பான்மையையும் இவ்வகைய உணர்ச்சிகளையும் ஒரு கம்யூனிஸ்டு கொண்டிருக்க முடியாது. தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது சொந்த முயற்சிகளாலேயே தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒரு புதிய சமுதாயத்தை அமைத்திடவும் முடியுமென்று நிரூபித்துக் காட்டியபோது - அது புதிய, கம்யூனிஸ்டுப் போதம் பெறுதலின், சுரண்டலாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் வாயிலாகப் போதம் பெறுதலின் தொடக்கமாயிற்று. சுயநலமிகளையும் சிறு உடைமையாளர் களையும் எதிர்த்து - எனக்கு வேண்டியது என்னுடைய லாபம்தான், வேறு எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை என்பதாய்க் கூறும் மனப்பாங்கையும் பழக்க வழக்கங்களையும் எதிர்த்து - பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டணி கொண்டு பெறும் போதத்தின் தொடக்கமாயிற்று.
வளரும் இளந்தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.
இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்து பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே, கம்யூனிசத்தைக் கற்றறிய முடியும். ஒழுக்க நெறி குறித்து நம்மிடம் பேசுவோருக்கு நாம் கூறுவது இதுதான்; கம்யூனிஸ்டு ஒழுக்கநெறி அனைத்தும் சுரண்டலாளர்களுக்கு எதிரான இந்த ஒன்றுபட்ட கட்டுப்பாட்டிலும் உணர்வுபூர்வமான வெகுஜனப் போராட்டத்திலும்தான் அடங்கியுள்ளது. என்றும் மாறாத நிரந்தர ஒழுக்கநெறியில் நமக்கு நம்பிக்கை இல்லை. ஒழுக்கநெறி பற்றிய எல்லாக் கட்டுக்கதைகளின் பொய்மையையும் நாம் அம்பலப்படுத்துகிறோம். மனித சமுதாயம் மேலும் உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும், உழைப்பு சுரண்டப்படுவதை ஒழித்துத் தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் ஒழுக்கநெறி பணி புரிகிறது.
இந்த நோக்கம் ஈடேற முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான கட்டுப்பாடு வாய்ந்த உக்கிரமான போராட்டத்தின் போது அரசியல் முதிர்ச்சி பெற்ற இளம் மக்களின் தலைமுறை நமக்குத் தேவைப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் இத்தலைமுறை மெய்யான கம்யூனிஸ்டுகளைப் பயிற்றுவிக்கிறது. அது தனது படிப்பு, கல்வி, பயிற்சி இவற்றின் ஒவ்வொரு படியையும் இந்தப் போராட்டத்துக்குக் கீழ்ப்படியச் செய்து இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். நல்லுரைகளும் நன்னெறி விதிகளும் போதிப்பதல்ல கம்யூனிஸ்டு இளைஞர்களுக்கான கல்வி போதனை. இதல்ல கல்வியின் உள்ளடக்கம். நிலப்பிரபுக்கள், முதலாளிகளது ஒடுக்குமுறையில் தம் தாய் தந்தையர் வாழ்ந்த முறையைக் கண்டுணரும்போது, சுரண்டலாளர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியோர் பட்ட துன்பங்களைத் தாமே நேரில் அனுபவித்துள்ளபோது, வென்று கொண்டதை இழக்காது பாதுகாப்பதற்காகப் புரிய வேண்டியிருந்த தியாகங்களையும் நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் எவ்வளவு கொடிய பகைவர்கள் என்பதையும் காணும்போது - இந்நிலைமைகளாலேயே இம் மக்கள் கம்யூனிஸ்டுகளாய் போதனை பெறுகின்றனர். கம்யூனிஸ்டு ஒழுக்க நெறி கம்யூனிசத்தை உறுதியாக்குவதற்கும் நிறைவுறச் செய்வதற்குமான போராட்டத்தை அடிப்படையாய்க் கொண்டதாகும். கம்யூனிஸ்டுப் பயிற்சி, கல்வி, போதனை ஆகியவற்றின் அடிப்படையும் இதுவேதான், கம்யூனிசத்தைக் கற்றறிவது எப்படி என்னும் கேள்விக்கு இதுதான் பதில்.
நம்மைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறோம். கம்யூனிஸ்டு என்றால் என்ன? கம்யூனிஸ்டு என்பது லத்தீனச் சொல். லத்தீன் மொழியில் ‘கம்முனிஸ்’ என்றால் ‘பொதுவான’ என்று பொருள். கம்யூனிச சமுதாயம் என்பது நிலம், ஆலைகள் ஆகிய யாவும் பொதுவுடை மையாய் இருந்து மக்கள் பொதுவில் கூட்டாய் வேலை செய்யும் சமுதாயமாகும். இதுதான் கம்யூனிசம் எனப்படுவது............
..........ஒவ்வொருவரும் அவருடைய சொந்த நிலத்தில் தனியே வேலை செய்வாராயின் பொதுவில் கூட்டாய் வேலை செய்வது எப்படி சாத்தியம்? பொதுவில் வேலை செய்யும் முறையை திடுமெனத் தோன்றச் செய்துவிட முடியாது. இது இயலாத காரியம். விண்ணில் இருந்து இது குதித்து விடுவதில்லை. அருமுயற்சிகளின் வாயிலாகவும் இன்னல்களின் விளைவாகவுமே இது வர முடியும். பழைய புத்தகங்கள் இங்கு நமக்குப் பயன்பட மாட்டா. யாரும் அவற்றை நம்ப மாட்டார்கள். அவரவருக்கும் நேரடியான வாழ்க்கை அனுபவம் அவசியமாகும். கல்ச்சாக்கும் தெனீக்கினும் சைபீரியாவிலிருந்தும் தெற்கிலிருந்தும் முன்னேறி வந்தபோது விவசாயிகள் அவர்களுடைய பக்கம்தான் இருந்தனர். விவசாயிகளுக்குப் போல்ஷ்விசம் பிடிக்கவில்லை. ஏனென்றால் போல்ஷ்விக்குகள் அவர்களுடைய தானியத்தை நிலையான நிர்ணய விலைகளுக்கு வாங்கிக் கொண்டனர். ஆனால், சைபீரியாவிலும் உக்ரேனிலும் விவசாயிகள் கல்ச்சாக், தெனீக்கினது ஆட்சியை அனுபவித்த பின் அவர்கள் தமக்குள்ளது இரண்டில் ஒரு வழியேதான் என்பதை உணரலாயினர். ஒன்று முதலாளிகளுடன் சேர்ந்து கொள்வது - அப்படிச் செய்தால் முதலாளிகள் உடனே அவர்களை நிலப்பிரபுக்களின் கீழ் அடிமை வாழ்வில் வதையும்படி இருத்திவிடுவார்கள். இரண்டாவது வழி தொழிலாளர்களைப் பின்தொடர்வது. தொழிலாளர்கள் தேனும் பாலும் பெருகியோடும் சொர்க்கம் கிடைக்கச் செய்வதாய் வாக்களிக்கவில்லை, உக்கிரமான ஒரு போராட்டத்தில் உருக்குக் கட்டுப்பாடும் வைராக்கியமும் காட்டும்படியே அவர்கள் கோருகின்றனர் என்பது மெய்தான். ஆனால், முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அடிமைப்பட்டு வாழ்வதில் இருந்து அவர்கள் தம்மை விடுவிப்பார்கள். அறியாமை இருளில் மூழ்கியிருந்த விவசாயிகள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாய் இதை உணர்ந்து கொண்டதும், கடுஞ்சோதனையின் வாயிலாய்ப் பாடம் பயின்றதும், அவர்கள் கம்யூனிசத்தின் உணர்வு பூர்வமான ஆதரவாளர்களாயினர். இது போன்ற அனுபவம்தான் இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் எல்லாச் செயல்பாடுகளுக்குமான அடிப்படை ஆதல் வேண்டும்........