பீகாரில் இகக மாலெ தலைவர்கள்
இரண்டு பேர் படுகொலை
இரண்டு பேர் படுகொலை
அராரியாவில் மகாதலித்துகள் மீது தாக்குதல்ஆளும்கட்சியின், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அரசியல் பாதுகாப்பு பெற்ற அடியாட்கள், அராரியா தாலுகாவின் பர்காமா ஒன்றியத்தில் உள்ள ரஹாரியா கிராமத்தில் முஷாஹர் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இகக மாலெ தலைவர்களான, அராரியா மாவட்டச் செயலாளர் தோழர் சத்யநாராயண் பிரசாத், தோழர் கமலேஷ்வரி ரிஷிதேவ் ஆகியோரை படுகொலை செய்துள்ளனர்.
பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று தோழர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த கொடுமைக்கு எதிராக இககமாலெ விடுத்த அழைப்பின் பேரில் ஜனவரி 4, 2017 அன்று சீமான்சல் முழுஅடைப்பு நடத்தப்பட்டுள்ளது.
சமூகநீதிக்காக நிற்பதாகச் சொல்லும் அய்க்கிய ஜனதா தள - ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம், தலித்துகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருகிறது. ரஹாரியாவின் மகாதலித்துகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பக்கத்து கிராமமான பேல்சராவைச் சேர்ந்தவர்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள். அராரியாவில் நடந்துள்ள தாக்குதல் தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த ஆண்டு பாகல்பூரிலும், சில நாட்களுக்கு முன்பு சஹார்சாவிலும் மகாதலித்துகளை அவர்கள் வாழும் இடங்களில் இருந்தும் அவர்கள் விளைநிலங்களில் இருந்தும் வெளியேற்ற தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
ரஹாரியா கிராமத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மகாதலித் முஷாஹர் பிரிவினரின் 35 - 40 வீடுகள் உள்ளன. 1975லேயே நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ், இந்த நிலத்துக்கான பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் நிலத்தில் அவர்கள் வசிக்கின்றனர். 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். மீதமுள்ள நிலம் தரிசு நிலம். இந்த நிலத்தை ஒட்டி 1000 ஏக்கர் உச்சவரம்பு நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான பட்டாக்களும் வறிய மக்கள் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாத்யதை மறுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மேல்சாதிக்காரர்கள், நிலஉடைமையாளர்களுடன் சேர்ந்துகொண்டு, அந்த நிலத்தை தங்கள் பெயரில் சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளனர். மகாதலித்துகளின் 7 ஏக்கர் நிலத்தில் இருந்த பயிரை பலவந்தமாக அறுவடை செய்துள்ளனர். இப்போது தலித்துகள் குடியிருக்கும் 3 ஏக்கர் நிலத்தில் இருந்தும் அவர்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக முஷாஹர்கள் நடத்திய கூட்டத்தில் தோழர்கள் சத்யநாராயண் பிரசாத்தும் கமலேஷ்வரி ரிஷிதேவும் கலந்துகொள்ளச் சென்றபோது கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில அடிகள் தொலைவில்தான் பர்காமா காவல்துறை பொறுப்பாளர் இருந்துள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்க அவர் முயற்சி ஏதும் செய்யவில்லை. காவல்துறையும் இந்தத் தாக்குதலில் உடந்தை என்பது இதில் இருந்து தெரிகிறது. போராட்டங்களை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் தயானந்த் யாதவ் என்று நேரில் பார்த்த சாட்சிகள் சொல்கின்றனர். அவர் ராஷ்ட்ரிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அனில் யாதவுக்கு நெருக்கமானவர். மனிஷ் யாதவ், ராம யாதவ், பவுவா யாதவ், மனோஜ் ராய், சகல் தியோ யாதவ் ஆகியோர் குற்றச்சாட்டப்பட்டவர்கள். இவர்களில் சகல் தியோ யாதவ் மட்டும்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.