ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விகளும்
சென்ற ஆண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம், கட்சி/இயக்க வேறுபாடுகள் தாண்டி, பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, ஜல்லிக்கட்டுக்கான அறிவிப்பாணை கொண்டு வந்ததற்குப் பாராட்டி மகிழ்ந்தனர். பின்னர் உச்சநீதிமன்றம் அறிவிப்பாணையைத் தடை செய்தது. கடைசி வரை வாடிவாசல் திறக்கவே இல்லை.
2016 ஜனவரியில், தமிழ்நாட்டின், திருநாள் கொண்டசேரியின் தலித் முதியவர் சடலத்தை சாதி இந்துக்கள் பொது வழியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்று, அதன்படி பொதுப் பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல தலித்துகள் முயன்றபோது, ஜெயலலிதாவின் பொறுப்பில் இருந்த காவல்துறை, சாதி ஆதிக்க சக்தியினரோடு சேர்ந்து கொண்டு தலித் மக்கள் மீது தடியடி நடத்தி, சடலத்தைக் கைப்பற்றி தாங்களே கட்டாயமாக இறுதிச் சடங்கு நடத்தினர்; பொதுப் பாதை உரிமையை, நீதிமன்ற உத்தரவையும் மீறி மறுத்தனர்; சாதி ஆதிக்கத்தின் ஆணையை நிறைவேற்றினர்.
2016ல், ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும், அரசும் சாதி ஆதிக்கமும் கைகோர்த்துக் கொண்டு, திருநாள் கொண்டசேரி பிரச்சனையை பின்னுக்குத் தள்ளி, ஜல்லிக்கட்டு விவகாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர். பொங்கல் நாட்கள் நெடுக, டெல்டாவிலும் தென் மாவட்டங்களிலும் தலித்துகள் மீது தாக்குதல்கள் நடந்தன.
இப்போது உச்சநீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் சில உரசல்கள் இருக்கும் பின்னணியில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்குத் தடை வழங்கி உள்ள பின்னணியில், அரசியல்ரீதியாக விவரம் அறிந்த அனைவர்க்கும், மத்திய அரசு அவசரச் சட்டம் போட வாய்ப்பில்லை என்றும், அப்படி ஒருவேளை போட்டால் திரும்பவும் தடை வழங்கப்படும் என்றும், நன்றாகவே தெரியும். இருந்தும் ஜல்லிக்கட்டு பிரச்சனை மேல் எழுந்து வந்தது.
நவம்பர், டிசம்பர் 2016, ஜனவரி 2017ல், தமிழ்நாட்டில் விவசாய நெருக்கடி முற்றி, பாசனம் பிரச்சனையாகி, பயிர் கருகி, விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்காமல், கடன் சுமை கழுத்தை நெறித்து, கொத்து கொத்தாய் விவசாயிகள் உயிரிழந்தனர்.
மோடியின் பணமதிப்பகற்றுதலும் சேர்ந்து கொண்டு, விவசாய/கிராமப்புற தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சுய உதவிக்குழு பெண்கள் என அனைவரையும் பதம் பார்த்தது.
நாளும் கிழமையும் நலிந்தவர்க்கில்லை என்பது தமிழ் பழமொழி. இந்த ஆண்டு, பொங்கல் பானையில், மக்கள் துயரம்தான் பொங்கிப் பொங்கி வந்தது. குற்றமய அலட்சியத்துடன் இருந்த மத்திய மாநில அரசுகளை, தமிழ்நாட்டு மக்கள் பொங்கலுக்கு முன்பே, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தயாராகி வந்தார்கள். பன்னீர்செல்வம் அரசும் அமைச்சர்களும் சொரணையற்று இருந்ததுடன் கேலியும் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினர். மக்கள் சீற்றம் போராட்டங்களாக மாற வாய்ப்பு இருந்தது. இந்த நேரம்தான், ஜல்லிக்கட்டு பிரச்சனை முதன்மைப் பிரச்சனையாக முன்நகர்த்தப்பட்டது. ஆட்சியையும் ஆளும் கட்சியையும், ஒரு சூறையாடல் கும்பல் கைப்பற்றி விட்டது என மக்கள் வெறுப்புற்றிருந்தபோது, இந்தக் கும்பல் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு பிரச்சனை முன்நகர்த்தப்பட்டது. ஜனவரி 17க்கு பிறகு இதுபற்றிப் பேசுவது கிட்டத்தட்ட நின்றுவிடும்.
தமிழ்நாட்டில், ஆளும் கட்சியில், ஆட்சியில், எண்ணிக்கை பெரும்பான்மை சாதியினரே செல்வாக்கு செலுத்துகின்றனர். அமைச்சர் பதவிகளில், கட்சிப் பொறுப்புக்களில், முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் சாதியினரே பெருமளவில் உள்ளனர் என்பதும் நன்கறியப்பட்ட செய்தி. இந்த எண்ணிக்கை சாதிப் பெரும் பான்மையினரின் மீது சாதிய அரசியல் மூலம் செல்வாக்கு செலுத்த விரும்புபவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற விஷயத்தை விவாதத்தில் முதன்மை நிலைக்குக் கொண்டு வந்தனர்.
விவசாய/கிராம சமூகம் பிளவுண்ட ஒன்று. அது வர்க்க சாதி பால் பேதம் கடந்த, அன்பும் அறமும் அரசாட்சி புரியும், அற்புதங்கள் நிறைந்த ஒன்றல்ல. அங்கே, ஆதிக்கக் கொலைகள் உண்டு. அங்கே, ஆதிக்கம் உண்டு. அங்கே, வர்க்க சுரண்டல் உண்டு. அங்கே, ஆதிக்க சக்திகள், பொது செல்வங்களையும் அரசு பணத்தையும் சூறையாடுவது சகஜம். ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டு கிராமப்புற வர்க்க/சாதி ஆதிக்கத்துக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள். ‘நாங்க ஆளணும், நீங்க வாழணும்’ முழக்கத்திலிருந்து ஜல்லிக்கட்டைப் பிரித்துப் பார்ப்பது முடியாது.
களத்தில், இளைஞர்கள் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இறங்குகின்றனரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 2015 - 2016ன் இந்தியா, மண்டலுக்குப் பிந்தைய இந்தியா, ஜாட்டுகள், படேல்கள் மற்றும் மராத்தாக்கள் என்ற எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளின் பிரும்மாண்டமான, 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் என்ற அணிதிரட்டல்களைக் கண்டது. மராத்தா அணி திரட்டலில் கணிசமானவர்கள் பெண்கள். இந்த மூன்று சமூகங்களும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்க, அரசு பதவிகள், அரசியல் சமூக செல்வாக்கு ஆகிய எந்த விஷயத்திலும் பின்தங்கியவை அல்ல. முன் வரிசையிலேயே உள்ளன. அதே நேரம், இந்த சமூகங்களின் மிகப் பெரும்பான்மையினர் பாடுபட்டு உழைத்துப் பிழைப்பவர்களே. வளர்ச்சி, முன்னேற்றம் வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த சரியான எதிர்பார்ப்பை, ஆதிக்க சக்திகள், தவறான கோரிக்கையுடன் திறம்படக் கோர்த்து விடுகிறார்கள். எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடு, இல்லாவிட்டால் இட ஒதுக்கீடே வேண்டாம் என்பது இவர்களின் பொது முழக்கம். ஜாட்டுகளும் மராத்தாக்களும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். பெண்கள் உட்பட பல லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் இந்த அணிதிரட்டல்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகளைக் கரிசனம் கொள்ள வைக்கின்றன. இவை மகிழ்ச்சி தருபவை அல்ல.
தமிழ்நாட்டிலும், கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர் சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையினர் பாடுபட்டு உழைப்பவர்கள். வளர்ச்சி முன்னேற்றம், அவர்களுக்கும் கைகூடவில்லை. அவர்களது கோபத்தை, தலித்துகள் மீது வெறுப்பு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்த வடிகால் அமைக்கப்படுகிறது. நாகரிக நவீன சமூக ஊடகங்களில், சாதியாதிக்க நஞ்சும் குப்பைகளும் நிறைந்து வழிகின்றன. இந்தப் பின்னணியில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தைக் காண வேண்டியுள்ளது.
மிருக வதை தடை அமைப்புக்கள், மனிதர்களைக் காட்டிலும் மிருகங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி மனிதர்களையும் மிருகங்களையும் எதிர் எதிராய் நிறுத்தலாம். அவர்களில் சிலருக்கு மேல் நாட்டுப் பணம் கிடைக்கலாம். மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். இருந்தும், அவர்களது கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும்தானே.
பன்மைத்துவத்தை நாம் எப்போதும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். பசு எனக்கு வழிபாட்டுக்குரியது என்று சொல்பவர்களுக்கு அக்கம்பக்கமாக, பசு மாட்டு இறைச்சி எங்க ளுக்கு உணவு எனச் சொல்லும் பல கோடி பேரும் வாழ்ந்து வருகின்றனர். இந்துத்துவா பசுவை முன்நிறுத்துவது போல், தமிழ் பண்பாடு என்று சொல்லி காளையை முன்னிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல.
தமிழ்மொழி உரிமை, தமிழ்நாட்டு நீர் உரிமை, மத்திய, மாநில அரசு உறவுகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம், இந்தி சமஸ்கிருத ஆங்கில மொழி திணிப்பு எதிர்ப்பு என்பவற்றை உயர்த்திப் பிடிப்போம். தலித்துகளுக்கும் பெண்களுக்கும் அச்சமற்ற சுதந்திரம், சமத்துவம் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது, ஜல்லிக்கட்டு அரசியலில் உள்ள ஆதிக்கமே கண்ணுக்குத் தெரிகிறது. அதே நேரம், தொப்புள் கொடி உறவு, பண்பாடு, வீரம் என்ற பெயர்களால் எந்த வர்க்க, சாதி, பால் ஆதிக்கத்தையும் சுமக்க முடியாது, துணை போகக் கூடாது எனவும் சொல்வோம்.
சில பதில்களும்
(2017 ஜனவரி
16 – 31 மாலெ தீப்பொறி)
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகைக்கு முன் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்த விசயங்களை எப்படி பார்க்கலாம்?
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2016 முழுவதும் எந்த இயக்கமும் நடக்கவில்லை. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை,
உச்சநீதிமன்றம் இது தொடர்பான நிலுவையில் இருந்த வழக்கில் உடனடியாய் தீர்ப்பு வழங்க மறுத்த பிண்ணனயில், உரத்த குரலில், பரவலாக எழுப்பப்படுகிறது.ஜல்லிக்கட்டு தொடர்பாக 2016 முழுவதும் எந்த இயக்கமும் நடக்கவில்லை. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை,