COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 26, 2017

தமிழக விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சியில் உயிரிழப்பு
விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
குற்றவாளிக் கூண்டில் மாநில மத்திய அரசுகள்
ஜனவரி 9, நியாயம் கோரும் நாள்
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தரப்பட வேண்டும். பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் நட்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வேண்டும். விவசாயக் கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

வேலை உறுதித் திட்ட கூலி பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் வேலை, ரூ.500 நாள் கூலி வழங்கப்பட வேண்டும். ஜன்தன் கணக்குகளில் தலா ரூ.1 லட்சம் செலுத்தப்பட வேண்டும். ரேசன் அட்டைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் உணவுப் பொருட்களை 2016 நவம்பர் 1க்கு முந்தைய பழைய முறையில் குறைக்காமல் வழங்க வேண்டும்.
இந்தக கோரிக்கைகளை வலியுறுத்தி இகக மாலெ மாநிலம் முழுவதும் ஜனவரி 9 அன்று நியாயம் கோரும் நாள் அனுசரித்தது.
சென்னையில் இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமையில் கண்கவர் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழர்கள் மோகன், ஜவகர், வேணுகோபால் ஆகியோரோடு மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
ஜனவரி 9க்கு முன்னதாகவே தோழர் வித்யாசாகர், டாக்டர் அரவிந்தன், தொழிலாளர் கூடம் இணைய இதழாசிரியர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் உட்பட அகில இந்திய மக்கள் மேடையின் குழுவினர் தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளின் வீட்டிற்கு சென்று உண்மை நிலவரம் பற்றி அறிந்து வந்தார்கள். 
ஜனவரி 9 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பொது விசாரணையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அகில இந்திய மக்கள் மேடை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் தமிழக விவசாயிகளின் மோசமான நிலை பற்றி பத்திரிகையாளரிடம் எடுத்துரைத்தார். அவிகிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், இககமாலெ மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், ஆசைத்தம்பி, இளங்கோவன், கன்னையன், வளத்தான், தேசிகன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர். 
ஜனவரி 9 அன்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பிரிக்கால் பிளாண்ட் 1ல் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் நடராஜ், சாமிநாதன், முன்னிலை வகித்தனர். பிளாண்ட் 3ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ரத்திஷ், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுப்பிரமணியன், என்.கே.நடராஜன், மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர் வேல்முருகன், தோழர் நடராஜ், தோழர் சாமிநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
குமாரபாளையத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கே.ஆர்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பொன்.கதிரவன் கலந்து கொண்டு உரையாற்றினர். சேலத்தில் தோழர் அய்யந்துரை தலைமையில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 23 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரத்தில் அவிகிதொச தோழர் வேணு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் திருநாவுக்கரசு, சீதா, மலைராஜ், ஜெயராஜ் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். 
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ரவி டேனியல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் உரையாற்றினார். மாட்டக்குழு உறுப்பினர் தோழர் கணேசன், தோழர் கருப்பசாமி, தோழர் அப்துல் ரகுமான், தோழர் ஷேக் ஆகியோருடன் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் நிறைவுரையாற்றினார். 
கரூரில் ஜனவரி 10 அன்று இகக(மாலெ) நகரச் செயலாளர் தோழர் சாலமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் கே.பி.ராஜன், தோழர் சந்திரசேகர், தோழர் அப்துல் ரகுமான், தோழர் ராமச்சந்திரன், தோழர் பால்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, செண்பகவள்ளி, ஏழுமலை, அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கு கொண்டனர். 

விவசாயிகள் சாவுகளுக்கு நியாயம் கோரி, 
இககமா தோழர்கள் மீதான காவல்துறை தாக்குதலை கண்டித்து 
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஜனவரி 6 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு, விவசாயிகள் சாவுகளுக்கு நியாயம் கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர் கார்க்கி வேலன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க (எஅய்எல்யு) பொருளாளர் சிவக்குமார், தேசிய துணைத் தலைவர் இளங்கோ, தோழர் ரஜினிகாந்த், முற்போக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் சீனிவாசராவ், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யத்தின் தோழர் மில்டன், தமிழ் தேச நடுவம் அமைப்பின் தோழர் பார்வேந்தன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கோபு, தாரா உள்ளிட்ட இடது, ஜனநாயக, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டனம் செய்தனர்.
அம்பத்தூரில் மேல் நிலைப் பள்ளிக்காக தொடரும் போராட்டம்
அம்பத்தூர் காமராஜபுரத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை, அருகிலுள்ள 4 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தி பகுதி தலித் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி இகக(மாலெ), அம்பேத்கர் பொது நல மன்றம் அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன. காவல்துறையினருக்கு வீடு கட்ட அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்ட பின்னணியில், இகக(மாலெ) தோழர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவலில் அந்த இடம் காவல்துறைக்கு ஒதுக்கப்படவில்லை என்ற பதிலைப் பெற்ற பின்னணியில், மீண்டும் ஜனவரி 6 அன்று நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி, புகழ்வேந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)

Search