தோழர்
எஸ்.குமாரசாமியிடம் ஒரு கேள்வி
கேள்வி:
வெளியாட்கள் நிர்வாகத்திற்கு எதிராக சுமுக உறவுக்கு எதிராக வேலை செய்வதாக, நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்புவதாக,
கட்சி வளர்ப்பதற்காக
தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக, பிரிக்கால்
நிர்வாகம் புகார் சொல்கிறதே?
பதில்: நாங்கள்
வேலை செய்யும் எல்லா இடங்களிலும் கட்சி வளர்க்கப் பார்க்கிறோம். கட்சிப் பணிகள்
போதுமானதல்ல என்பதே எங்கள் சுயவிமர்சனம். 2010 முதல் 2017 வரை நிறுவன பேலன்ஸ் ஷீட் அறிக்கைகள் யாவும்
சுமுக உறவுகள் நிலவுவதைப் பற்றி, நிர்வாகம்
சொல்வதைக் காட்டும். 8 நாட்கள் சம்பளப்
பிடித்தத்திற்குப் பிறகும், ஜ÷ன் மாதம் கோவை தொழிலாளர் உதவி ஆணையர் துணை
ஆணையர் முன்பு, தொழிற்சாலையில்
உற்பத்தியில் தொழில் உறவுகளில் சகஜ நிலை நிலவுவதாக இரு தரப்பினரும்
ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதே
சங்கத்துடன்தான் 2012, 2014 ஒப்பந்தங்கள்
போடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி பல முறை மாற்று வேலை நடந்துள்ளது. நிர்வாகம்தான்
சங்கத்தை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது.
சட்டப்படி
ஒப்பந்தப்படி நடக்க, சிக்கல்கள்
எழுந்தால், தொழிலாளர் துறை
ஆலோசனைப்படி நடக்க, சுமுகமான உறவுகள்
பேண, சங்கம் தயார். சங்கம்
சுயமரியாதையை விட்டுவிட வேண்டும், தற்கொலை செய்து
கொள்ள வேண்டும் என நிர்வாகம் எதிர்பார்க்கக் கூடாது.
சங்கமும் நிர்வாகமும்
பேசித்தான் எல்லா விசயங்களும் தீர வேண்டும் என விரும்புகிறோம். நம்புகிறோம்.