COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

செப்டம்பர் 10, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் இகக(மாலெ) தோழர்கள்

இதுவரை இல்லாத அளவு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் பொருள்களின் விலை உயர்வு, அதன் விளைவாக சரக்குப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், வேலையின்மை, ஊழல், ஒடுக்குமுறை, நிலப்பறி ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஒரணியில் திரண்டார்கள்.
இகக(மாலெ), இகக(மா), இகக, ஆர்எஸ்பி, எஸ்யுசிஅய்(சி) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் செப்டம்பர் 10, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. தமிழ்நாட்டில் இகக(மாலெ) தோழர்கள் மறியல் போராட்டத்தில் பிற இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து பங்கெடுத்தனர். சென்னை, கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், குமரி, திண்டுக்கல் ஆகிய மய்யங்களில் சாலை மறியலில் தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு  மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Search