தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உயிர்களை விலை கேட்கும்போது, தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சீர்குலைவுக்கு உள்ளாக்கியிருக்கும்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் எழுப்பப்படும்போது, நேரெதிராக
, 69% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றை, போக்கை தாங்கிக் கொள்ள முடியாத இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு உறுத்திக் கொண்டிருக்கும் பல ஜனநாயக அம்சங்களில் ஒன்றான 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சட்டம் இடம் பெற்றுவிட்டது, எனவே சட்டத்தை ரத்து செய்ய முடியாது, அதனால் யாரும் அதை அசைக்க முடியாது என்று இனி சொல்ல முடியாது. அரசியல்சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக இருந்தால் ஒன்பதாவது அட்டவணையில் இருந்தாலும் ஒரு சட்டத்தை ரத்து செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் வேறு ஒரு வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போது அந்தத் தீர்ப்பை செல்லாததாக்க அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வர வேண்டியுள்ளது.
69% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை வழங்க முடியாது என்று சொல்லியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான வழக்கை அய்ந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது பற்றி முடிவு செய்யும் இறுதி விசாரணையை 2018 நவம்பருக்கு தள்ளிப் போட்டுள்ளது. சம்பளம் குறைவு என்று கருதினால் வேலையை விட்டுப் போ என்று சொன்ன சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் இருந்த அமர்வுதான் இப்போது இடைக்கால தடை தர மறுத்துள்ளது. ஆனால், வழக்கில் இறுதி விசாரணை என ஒன்று இருப்பதாகச் சொல்லி உள்ளது. அரசியல்சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையின் பாதுகாப்பில் இருக்கிற ஒரு சட்டத்தை நாங்கள் பரிசீலிக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. நிலவுகிற பாசிசச் சூழலுடன் சேர்த்துப் பார்க்கும்போது, சில நீதிபதிகள் பெயர்கள் நமக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டால், போகிற மாநிலத்திலும் பட்டியல் பிரிவினருக்கான சலுகைகளை பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுஉறுதி செய்துள்ள பின்னணியில், தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள நேரலாம்.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 50% இடஒதுக்கீடு மட்டுமே தமிழ்நாட்டிலும் இருந்திருந்தால் அரசு மருத்துவ கல்லூரியில் தங்களுக்கு இடம் கிடைத்திருக்கும், 69% இருப்பதால் அந்த வாய்ப்பு பறி போயுள்ளது, எனவே தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இரண்டு மாணவர்கள் இந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் தடை தர உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் 1994ல் இருந்து அமலில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டம் அரசியல்சட்டரீதியாக பாதிப்பு உருவாக்குகிறது என்று அந்த மாணவர்களின் வழக்கு சொல்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் முன்னேறிய பிரிவினரையும் (கிரீமி லேயர்) தமிழ்நாடு அரசு இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் வழக்கு வாதிடுகிறது.
69% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படுவதுடன், மருத்துவப் படிப்புக்கான கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு தங்களுக்கு இந்த ஆண்டிலேயே மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் கோரியுள்ள இந்த வழக்கில், இதற்கு முந்தைய விசாரணையில், கூடுதல் இடம் உருவாக்க நீதிமன்றம் உத்தரவிடும் பேச்சுக்கு இடமில்லை என்று சொன்ன நீதிபதி அருண் மிஸ்ரா, இட ஒதுக்கீட்டை 50%க்குள் கொண்டு வருவது பற்றி வேண்டுமானால் யோசிக்கலாம் என்று சொல்லியுள்ளார்.
எந்த ஒரு மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதத்தை விட கூடுதலாக இருக்குமென்றால் அது ரத்து செய்யப்படும் என்று 1992ல் இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்தது. அதன் பிறகுதான், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில், பணிக்கமர்த்துவதில், பதவிகளில் இட ஒதுக்கீடு) சட்டம், 1993, தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் ஒடுக்குமுறை ஆட்சி காலத்தில் சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டப்பட்டு, இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கு அரசியல்சாசன திருத்தமும் நிறைவேற்றப்பட்டு சட்டமாவதற்கு தமிழக மக்களின் கடுமையான போராட்டங்கள் அடிப்படையாக இருந்தன. ‘சூத்திரர்களுக்கான’ இந்த இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மராத்தா பிரிவினரின் போராட்டங்களால் மகாராஷ்டிரா பற்றி எரிகிறது. முதலமைச்சர் பார்ப்பனர் என்பதால் அவர் போதுமான அக்கறை காட்டவில்லை என்று போராட்டங்கள் தீவிரமாகின்றன. மராத்தா பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு தர தற்போதுள்ள 52% இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க முந்தைய மகாராஷ்டிரா அரசால் எடுக்கப்பட்ட முயற்சி பயன் தரவில்லை. தற்போதைய பாஜக அரசு வருகிற அக்டோபரில் இதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் முன்வைக்கப் போவதாகச் சொல்கிறது. அதற்கு தமிழ்நாட்டை முன்னுதாரணமாகவும் காட்டுகிறது. மகாராஷ்டிராவின் இன்னும் சில பிரிவினரின் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் கணக்கில் கொண்டால் அங்கு 75% இடஒதுக்கீடு தர வேண்டியிருக்கும். (இடஒதுக்கீடு கேட்கிறீர்களே, வேலை வாய்ப்பு எங்கு இருக்கிறது என்று கேட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா பாஜக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடை போட முடியுமா?) ராஜஸ்தான், ஒடிஷா மாநிலங்களில் 50 சதத்துக்கு கூடுதலாக இடஒதுக்கீடு தர எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 50 சதத்துக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு தர ஆந்திர, தெலுங்கானா மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றன. கர்நாடகாவில் 70% இடஒதுக்கீடு என்பது தற்போதைய முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அங்கும் அதை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்தாக வேண்டும். ஆக, சமூகநீதியைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறதே தவிர சமத்துவ மீறல் எதுவும் இங்கு நடந்துவிடவில்லை.
தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி உரிமையை நீட் பறித்தெடுத்துவிட்டது. தமிழ்நாட்டின் அடிமை அமைச்சர்கள் நீட் பயிற்சி மய்யங்களை திறந்துவைக்கும் வேலைகளை நிறுத்தி விட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
சமூக நீதி, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு என எல்லா முனைகளிலும், நிலவுகிற பாசிசச் சூழலுக்கு, பிற்போக்குச் சூழலுக்கு முறிவு மருந்தாக அமையும் கருத்தாக்கத்தின் சொந்தக்காரரான பெரியாரின் பிறந்த நாளை அனுசரிக்கும்போது, ஒவ்வொன்றாகப் பறிபோய் கொண்டிருக்கிற தமிழ்நாட்டின், தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டியுள்ளது.