வலதுசாரி அரசியலின் பரிணாம வளர்ச்சியில்
வாஜ்பாயை எங்கு நிறுத்தலாம்?
நாடோடி
நாடாளுமன்ற ஜனநாயகம் நாகரிக அரசியலை விரும்புகிறதாம்! வெறுப்பு அரசியலை எதிர்ப்பவர்களுக்கு, அரசியல் நாகரிகம், மிக மிக அவசியமாம்!
உயிரோடு இருக்கும்போது, கறாராக காத்திரமாக விமர்சனம் செய்யலாமாம்; ஆனால் ஒருவர் இறந்த பிறகு, அவரைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டுமாம். அதுதான் உயர்ந்த அரசியல் பண்பாடாம்!
சீமான்களே, சீமாட்டிகளே, எமக்கு அந்த உயர்ந்த அரசியல் பண்பாடு வேண்டவே வேண்டாம் என உரத்து சத்தம் போட்டுச் சொல்லத் தோன்றுகிறது. இந்தியாவில் மூன்று முறை, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக 15 நாட்கள், 13 மாதங்கள், 5 வருடங்களுக்கு சற்று கூடுதலாக பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் 16.08.2018 அன்று இறந்தார். சொத்து குவித்து குற்றம் பல புரிந்த, எந்த முற்போக்கின் சுவடும் இல்லாத ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியவர்கள், சங் பரிவாரின் முகமூடியான வாஜ்பாயிக்கும், சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, சிறந்த ராஜதந்திரி என்றெல்லாம், புகழ் மாலை சூட்டினார்கள். தோழர்களும் புகழ் மாலை சூட்ட, முற்போக்காளர்களும் இசுலாமியர்களும் ஜனநாயக சக்திகளும் திகைத்துப் போனார்கள். வருந்தினார்கள். நல்ல வேளை, வாஜ்பாய் ஆட்சிக் காலம், தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு பெண்களுக்கு, தலித்துகளுக்கு, சிறு பான்மையினருக்குப் பொற்காலம் என்றெல்லாம், அரசியல் நாகரிகம் என்ற பெயரால், சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
வாஜ்பாய் மற்றும் வலதுசாரி அரசியலின் பரிணாம வளர்ச்சி
ஆர்எஸ்எஸ் என்ற இந்துத்துவா வலதுசாரி அமைப்புக்கு இந்தியாவில் பல பத்தாண்டுகளுக்கு ஏற்புடைத் தன்மை எதுவும் கிடையாது. தேச விடுதலைக்கு எதிரானவர்கள், காந்தியைக் கொன்றவர்கள் என்பதுதான், அவர்களைப் பற்றிய சாமான்ய மக்களின் புரிதலாக இருந்தது. ஹிட்லர், முசோலினி என்ற சர்வாதிகாரிகள் போல், ஆர்எஸ்எஸ்சும் வெறுப்பரசியல் பரப்பும் மரண வியாபாரி என்பதே, மக்களின் மனதில் பதிந்திருந்த கருத்து.
சோசலிச சோவியத் முகாம் சரிந்த பிறகு, உலகெங்கும் நடந்ததுபோல், இந்தியாவிலும் வலதுசாரி சக்திகள் எழுச்சியுற்றன. அதற்கு முன்பே, ஜனசங்க காலத்தில், ஜனதா கட்சி காலத்தில், பின்னர் பாரதிய ஜனதா கட்சி காலத்தில், ஆர்எஸ்எஸ்சின் கொடூர முகத்தை மறைக்கும், அரசியல் முகமூடியாக வாஜ்பாய்தான் இருந்தார். சங்பரிவாரின் முக்கியத் தளபதியாக இருந்த கோவிந்தார்ச்சார்யாதான், வாஜ்பாய் முகமூடியாக இருந்ததைப் பற்றி, முதலில் சொன்னவர் என்பதையும், நினைவில் வைப்போம்.
அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் சந்தித்த நெருக்கடியை, ஜனதா வகைப்பட்ட கட்சிகளின் திவாலாத்தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது. அப்போதும், பாரதிய ஜனதா கட்சி அத்வானி, வாஜ்பாய் காலத்தில், ஓர் அகில இந்திய அளவில் காலூன்றிய, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேர் கொண்ட முக்கியக் கட்சியாக மாறவில்லை. பாஜக, அரசியல் தனிமைப்படுதலில் இருந்து மீண்டு வர, ஒரு மெகா கூட்டணி அமைப்பது பெரிதும் உதவியது. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நடத்திய கட்சிகளுக்கு, பாஜகவோடு உறவாடுவதில் பெரிய சிரமம் வரவில்லை. உரிய காலமும் தருணமும் வரும்போது தன் நிகழ்ச்சி நிரலை முழுமையாக அமல்படுத்திக் கொள்ளலாம் என்ற தொலைநோக்கு திட்டத்துடன், தன் சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்ள, கூட்டாளிகளின் கவலையைப் போக்க, பாஜக, ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சிநிரலில் இருந்த சில முக்கிய அம்சங்களை வலியுறுத்தவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, நாடெங்கும் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சிவில் சட்டம் போன்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனப் பின்னுக்கு அனுப்பியது. அப்போதெல்லாம், கவிஞர், பேச்சாளர், நாடாளுமன்றவாதி என்ற வாஜ்பாயியின் பிம்பங்கள் பாஜகவுக்குப் பேருதவியாக இருந்தன.
கவிஞர், பேச்சாளர்
என்னவெல்லாம் பேசினார்?
இன்று அசாமில் 40 லட்சம் பேர் நாடற்றோர் ஆவார்களா என்பது, பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. வாஜ்பாய் கவி உள்ளத்துடன் 1983ல் அசாமில் பேசினார்: ‘இங்கு அந்நியர்கள் வந்துள்ளனர். அவர்கள் அசாமுக்கு வராமல், பஞ்சாபுக்கு வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மக்கள் அவர்களைத் துண்டு துண்டாக வீசி எறிந்திருப்பார்கள்’. கவி மனம், துண்டு துண்டாக மனிதர்களை வெட்டி வீசச் சொன்னது. 18.02.1983 அன்று அசாமின் நெல்லியில், இசுலாமியர்கள் 2000 பேர் கொல்லப் பட்டனர். காவு கேட்டுப் பெற்றது, கவிமனம்.
தலைசிறந்த பேச்சாளர் என்ற இயல்பு மட்டும் என்ன பின்தங்கிவிடுமா? பாப்ரி மசூதி இடிப்பு நேரத்தில், அயோத்தி பக்கம் போக வேண்டாம் என வாஜ்பாயிக்கு சங் பரிவார் உத்தரவிட்டிருந்தது. பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்பு, கடப்பாரை கூட்டமான கர சேவகர்களை வாஜ்பாய் லக்நோவில் சந்தித்தார். ‘இடித்துத் தகர்க்கும் சாதனங்கள் நமக்கு அயோத்தியில் தேவை, பூமியை சமப்படுத்தப்பட வேண்டி உள்ளது’ என்றார். கர சேவகர்களுக்கு, வாஜ்பாய், தமது பேச்சாற்றல் மூலம், மசூதியை முடிக்கச் சொல்கிறார் என நன்றாகவே புரிந்ததால், கைதட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
சிறந்த நாடாளுமன்றவாதி, ராஜதந்திரி என்ற வேலை மட்டும் இல்லாமல் போகுமா? முகமூடிக்குப் பின்னால் இருந்த நிஜ முகம், நரேந்திர மோடி குஜராத்தில் ஆட்சி செய்தபோது தெரிந்தது. அப்போதுதான், குஜராத்தில் இசுலாமியர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடியிடம் ‘ராஜ தர்மப்படி’ நடந்து கொள்ளச் சொன்னார். பிரதமர் வாஜ்பாயின் ராஜ தர்மம், இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது. மோடி அரசுக்கு எதிராக சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. மோடி, 2002 குஜராத் இசுலாமியப் படுகொலை, இந்து ராஷ்டிரா அமைப்பதற்கான தமது ராஜ தர்மம் என, நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். 2014ல் மோடி முன்னேறிப் புறப்பட்டபோது, அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் எல்லாம், பின்வரிசைக்குத் தள்ளப்பட்டனர். கார்ப்பரேட் அதிபர்களின் ஆசியை, ஆதரவை பெற்றிருந்த மோடி, வாஜ்பாய் முகமூடியை வீசி எறிந்து, துணிந்து மதவாத துருப்புச் சீட்டை, பாகிஸ்தானியர், இசுலாமியர்கள், பாகிஸ்தான் பகை நாடு, இசுலாமியர்கள் பகைவர்கள் என்ற துருப்புச் சீட்டை, சர்வ சாதாரணமாக தேர்தல் அரசியல் விளையாட்டில் பயன்படுத்தினார். பயன்படுத்துகிறார்.
2014 வெற்றிக்குப் பிறகு 2019ல் திரும்பவும் வெற்றி பெற்று இந்து ராஷ்டிரா நோக்கிச் செல்ல, மோடி தலைமையில் சங் பரிவார் தயாராகிவிட்டது. கும்பல் படுகொலைகள், சங் பரிவார் கொலையாளிகளும் படுகொலை செய்பவர்களும் ஆளும் கட்சித் தலைவர்களால், அமைச்சர்களால் பகிரங்கமாக கொண்டாடப்படுவது, அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் உள்ள சங் பரிவார்கார்கள் நேரடியாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பது ஆகியவை நடக்கும் காலங்களில், பாஜகவுக்கு மோடியும் யோகியும் அமித் ஷாவும் முகங்களான பிறகு, அவர்களுக்கு வாஜ்பாய் முகமூடிகள் அவசியம் இல்லை.
மசூதியை இடித்துத் தள்ளியவர்கள் வன்முறையாளர்கள், ஏதோ சங் பரிவாரின் ஓரஞ்சாரத்தில், விளிம்புகளில் இருப்பவர்கள் என சில அறிவாளிகள், நம்பினார்கள். அவர்கள் சங் பரிவாரின் கருவான மய்ய நீரோட்டமே, இந்து ராஷ்டிரா நோக்கி அவர்கள் எதுவும் செய்வார்கள் என்பது அவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது.
முகத்தை மறைத்தது முகமூடி, அந்த வகையில் ஆறுதல் தந்தது என்ற சொல்லப் போகிறார்களா? அல்லது முகத்தை மறைத்து ஆபத்தை உணரவிடாமல் தடுத்தது முகமூடியின் குற்றம் என பார்க்கப் போகிறார்களா? சங் பரிவார் வெறும் இந்திய பாணி வலதுசாரி கட்சியாக இல்லை. அது மூர்க்கமான கார்ப்பரேட் மதவெறி சாதி ஆதிக்க ஆணாதிக்க ஆட்சியே தரும்.
ஒளிவுமறைவற்ற சங் பரிவார் மூர்க்கத்துடன் வேகம் பெறும் நேரம், வாஜ்பாயின் மறைவு, நடந்துள்ளது. ஹிட்லர் பாணியில், மோடி கொலைச் சதி பற்றிப் பேசுகிறார்.
ஜ÷ன் 2 அன்றும் ஆகஸ்ட் 28 அன்றும் அரை மாவோயிஸ்ட்கள், நகர்ப்புற நக்சலைட்கள் மீது துவக்கப்பட்டுள்ள தாக்குதல்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் எல்லாம், மக்கள் மீதான போராகக் குவியும் நேரம், வாஜ்பாய் இறந்துள்ளார். அவரது மரணத்தை நினைவில் கொண்டு வரும்போது, அவர் இறந்த காலங்களும், அவர் தலைமையிலான அரசியலுமே நமக்கு நினைவில் வரும். அவை நல்ல காலங்களோ, அது மக்கள் நன்மைக்கான அரசியலோ அல்ல.
சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது, வர்க்கங்களை கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, கட்சிகளுக்கு தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்றார் லெனின். இந்தியாவின் ஆகப் பிற்போக்கான ஆளும் வர்க்கங்களின் ஆகப் பிற்போக்கான அரசியல் கட்சியின் ஆகச் சிறந்த தலைவர்களில் ஒருவர், அந்த கட்சியின் சமகாலத் தேவைக்கு பொருந்தாதவராகக் காலாவதியாகி மறைந்தார்.