தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில்
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க பங்கேற்பு
பாரதி
இந்தியாவில் மேல்பூச்சு மட்டத்திலேயே ஜனநாயகம் நிலவுவதாகவும், அடிஆழத்தில் ஜனநாயகம் இல்லை என்றும், அம்பேத்கர் சொன்னார்.
கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த வரை, இந்தியாவின் சமூகம், அரசியல், பொருளாதாரம் அனைத்தும், முழுமையாகவும் அடி ஆழம் வரையும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என, புரட்சிக்கு இலக்கணம் சொல்வார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமியற்றும் துறை, நீதித்துறை, அரசுத்துறை இருக்கின்றன. நீதித்துறையை ஜனநாயகப்படுத்துவதில், நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், திரும்ப அழைக்கப்படுவார்கள் என்பது, ஓர் உயர்ந்த கட்டமாகும்.
இன்றளவில், நாடெங்கும் பாசிச ஆபத்து பரவும்போது, அரசுத்துறையிலிருந்து நீதித்துறையின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய விஷயமாகும். மோடி அரசின் தலையீட்டிற்கெதிராக, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பேட்டி தந்ததும், நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனம் மற்றும் பணி மூப்பு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்ததும், ஆளுநர் மாளிகை அவமதிப்பிற்கெதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் விருந்தைப் புறக்கணித்ததும், நம்பிக்கை தரும் அறிகுறிகள். எட்டு வழிச்சாலை மற்றும் தூத்துக்குடி படுகொலைக்கு அடுத்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு வரவேற்கத் தக்கதே.
ஆனால் எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் போல் நீதித்துறையிலும், ஆகப் பிற்போக்கான, ஆணாதிக்க, சாதி ஆதிக்க, மதவாத, ஜனநாயக விரோத, மக்கள் விரோத, வழக்கறிஞர்கள் விரோத கருத்துக்களையும், காண முடியும். குருமூர்த்தி போன்ற இந்துத்துவா சக்திகள், கேரள மழை வெள்ளம் பேரிழப்புகளைக் காட்டி, அய்யப்பன் கோவிலில் பெண்களை நுழைய விடாதீர்கள் என உச்சநீதிமன்றத்தையே மறைமுகமாக மிரட்டுவார்கள். ஆட்சி யாளர்கள், அடங்கிப் போ, உன் வேலையைப் பார் என, பல சமிக்ஞைகள் தருவார்கள். சமூக அக்கறையுடைய, சமூக நீதிக்கு உகந்த, மக்கள் நலன் காக்கும், ஊழலற்ற நீதிபதிகள் நியமனம் என்பதும், அச்சமற்ற வழக்காடும் உரிமையும் துணிச்சலும் உள்ள வழக்கறிஞர்கள் என்பதும், நீதித்துறையில் ஜனநாயகம் நிலவ, மிகமிக அவசியமானவையாகும். இந்தத் தேவைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னுக்கு வந்த 2014க்குப் பிறகு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. பிரிக்கால் தொழிலாளர்கள், தொழிலாளர் தலைவர்கள் மீது பொய்யாகக் கொலை வழக்கு போடப்பட்ட 2009ல், ஜனநாயகம் காக்க களம் இறங்கி செயல்படத் துவங்கியது.
பார் கவுன்சில்கள்
அகில இந்திய பார் கவுன்சில், மக்கள் உரிமைகளுக்காக ஜனநாயகத்துக்காகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை. திரு.பிரபாகரன் போன்றோர், இல்லாத பதவியில் அங்கு நீடிக்க முடிகிறது. அகில இந்திய மற்றும் மாநில பார் கவுன்சில்கள், பணம் காய்க்கும் மரங்கள். அதிகாரம் ஊழல்படுத்தும். முழுமுற்றூடான அதிகாரம் முழுமுற்றூடாக ஊழல்படுத்தும். பார் கவுன்சிலில் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துப் போவார்கள். அடக்குமுறைக்கு எதிராக நிற்பவர்களை, அடக்கி ஒடுக்குவார்கள். சங்பரிவார் கூட்டம், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடைகளுடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களையும், உச்சநீதிமன்றம் அனுப்பிய வழக்கறிஞர்களையும் தாக்கியதை நாடே கண்டது. அகில இந்திய பார் கவுன்சில் குற்றவாளிகள் பக்கம்தான் நின்றது. உச்சநீதிமன்றத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
தமிழ்நாட்டில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை வழக்கறிஞர்கள் கேள்விக்குள்ளாக்கினர். ஏதேதோ பிரச்சனைகளில் வடிவங்களில் எதிர்ப்பு வெளிப்பட்டது. இந்த நேரத்தில், சில சக்திவாய்ந்த நீதிபதிகளும், அகில இந்திய பார் கவுன்சிலின் அவப்புகழ்பெற்ற மிகப் பெரிய மனிதரும், தமிழ்நாடு பார் கவுன்சிலும் வழக்கறிஞர்களுக்கெதிராக சர்வாதிகார சாட்டைகளைச் சுழற்றினார்கள். சாமரம் வீசிய பாமர சாதிகளிடம் மெரிட்ஸ் இருக்குமா? அவர்கள் நீதிபதிகள் ஆகலாமா? சாமானியர் வீட்டுப் பிள்ளைகள், எளிய சாதியினர் கூட்டம் கூட்டமாக வழக்கறிஞர்கள் ஆனபோது, போச்சு போச்சு என்று துடித்தார்கள். வழக்கறிஞர் தொழிலுக்கே களங்கமானவர்கள், சில நீதிபதிகளிடம் அண்ட் கோ உள்ளவர்கள் துணையுடன் வழக்கறிஞர் தொழிலை சுத்தப்படுத்தப் புறப்பட்டார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக வெடித்தது போராட்டம். அதே பார் கவுன்சிலுக்கு தேர்தலும் வந்தது.
தமிழ்நாட்டின் 80,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களில் சுமார் 55,000 பேர் தகுதியுடைய வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள், பார் கவுன்சிலால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தேர்தலில் பங்கேற்க கூடாது என நீதிபதி கிருபாகரன் இடைக்கால உத்தரவு போட்டார். அவரது தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய, ஒருவழியாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் 29.03.2018 அன்று நடந்து முடிந்தது.
தேர்தல் பங்கேற்பு
ஊழல் மலிந்த, கோடி, கோடியாய் பணம் புரளுகிற, மில்லியன்களும் கோடிகளும் செலவழிக்கப்படுகிற, பார் கவுன்சில் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டுமா? பார் கவுன்சிலில் என்ன ஜனநாயகம் இருக்கிறது? அங்கே போய் நாம் என்ன செய்ய முடியும்? அது ஆளை மூழ்கடிக்கும் புதைகுழி அல்லவா? நல்ல, தடுத்தாட்கொள்ளும் கேள்விகள்தான்.
நாடாளுமன்றம், வெறும் பேச்சு மடமாக இருந்தாலும், நாம் அதில் பங்கு கொள்கிறோம். ஆனால் மக்கள் போராட்டங்களின் மூலம்தான் மாற்றங்கள் வரும் என நம்பி, அவற்றை கட்டமைக்கப் பார்க்கிறோம். முதலாளித்துவத்தை வீழ்த்த விரும்புபவர்கள், முதலாளித்துவ நிறுவனங்களுடன் ஊடாடியாக வேண்டும். வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம்தான் நீதித்துறையில், பார் கவுன்சிலில் மாற்றம் வரும் என்றாலும், பார் கவுன்சிலுக்கு உள்ளேயும், வெளியேயும், தேர்தல் களத்திலும், தேர்தல் அல்லாத காலத்திலும் ஜனநாயகத்தின் குரலை ஒலிக்கச் செய்தாக வேண்டும்தானே? போராளிகளும் பார் கவுன்சில் தேர்தலில் நிற்பார்கள், மாற்றத்திற்கான கருத்துக்களை பரப்புரை செய்வார்கள், வாய்ப்பும், சூழலும் அமைந்தால் உள்ளேயும் நுழைவார்கள் என காட்ட வேண்டி இருந்தது.
என்ன சொல்லி தேர்தலில் நின்றோம்?
கட்டுக் கட்டாய் கரன்சி நோட்டுகள் புரண்ட தேர்தலில், வெகுமதி பொருட்கள் சுற்றி வந்த தேர்தலில், வெறும் ரூ.2,25,000 செலவழித்து போட்டியிட்டோம். நெருக்கமான நண்பர்களும் தோழர்களும் பணம் தந்தனர். நேரம் தந்தனர். உழைப்பு தந்தனர். நல்ல பல ஆலோசனைகள் தந்தனர். பிரச்சாரத்தில் இளம் தோழர்கள் இணைய உற்சாகம் கரை புரண்டோடியது. தொழிலாளர்களுக்காக போராடுகிற தோழர் பாரதிக்கு, அவர் சார்ந்துள்ள அமைப்புக்கு, அமைப்பாக்கப்பட்ட அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களும் நிதி அளித்ததில் வியப்பு ஏதும் இல்லை. பார்த்த மாத்திரத்தில், வழக்கறிஞர்களுக்கு, நாம் வேறு என்று, தெரிந்தது. நாம் பேசுவதை கேட்ட மாத்திரத்தில், நமது பிரசுரத்தை பார்த்த, படித்த மாத்திரத்தில், நமது கொள்கை பிடிப்பும் லட்சிய வேட்கையும் பளிச்சென புலப்பட்டது.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், உயர்ந்தபட்ச உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில் இருந்து, பல்வேறு போராட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல களங்கள் கண்டதும், அதன் பார் கவுன்சில் வேட்பாளர் தோழர் பாரதி வழக்கறிஞர்களுக்காக இரண்டு முறை சிறை சென்றதும், வழக்கறிஞர் உரிமை போராட்டத்தில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்ததும், வழக்கறிஞர்களின் முன்னணி பிரிவினருக்கு கவனம் இருந்தது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து துயருற்றவர்களுக்கு நிதி திரட்டுவது வரை, எப்போதும் களத்தில் நிற்கிறது என்ற உண்மையும் பதிவாகி இருந்தது. அந்த துணிச்சலில் நம்பிக்கையில்தான், தேர்தலில் போட்டியிட்டோம். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சென்னையில் மட்டும்தான் அமைப்பு செயல்பாடு கொண்டிருந்தது. நெல்லை, திருச்சி, கோவையில் தனித் தோழர்கள்தான் இருந்தனர். நேரடியாக அறிவித்தும், அறிவிக்காமலும், திமுக, பாமக இகக(மா), விசிக, பாஜக, எஸ்டிபிஅய், மக்கள் அரசு கட்சி போன்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஏதோ ஒரு விதத்தில் அவர்களது கட்சிகளின் வழக்கறிஞர்கள் மாநிலம் முழுவதும் இருந்தனர். தேர்தல் நாள் அன்று மாலெ கட்சியின், வழக்கறிஞராக உள்ள தோழர்கள் வாக்களிக்க முடியாமல் பிரச்சாரம் செய்யவும் முடியாமல், கட்சியின் 10ஆவது மாநாட்டிற்கு பஞ்சாப் சென்று விட்டனர்.
நமது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சுற்றியுள்ள மாநகர பகுதிகளிலும் விரிவாக பிரச்சாரம் செய்தோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, சேலம், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, விழுப்புரம், தேனி, ஈரோடு, கோவை, திருப்பூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பிற கீழமை நீதிமன்றங்களிலும் சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையிலும், உரையாற்றியும் ஊடாடியும் பிரச்சாரம் செய்தோம். 100 பேருக்கு சற்று கூடுதலான தோழர்கள் அர்ப்பணிப்புடன் அயராமல் பாடுபட்டனர்.
வாக்கெண்ணிக்கையும்
நாம் பெற்ற வாக்குகளும்
தகுதி பெற்ற 55,000 வாக்காளர்களில் 46,051 பேர் வாக்களித்தனர். கற்றறிந்த வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து 389 செல்லாத வாக்குகள் விழுந்தன. மேலே உள்ளவர்களில் எவருக்கும் இல்லை என்ற நோட்டாவுக்கு, 108 வாக்குகள் விழுந்தன. வாக்கு எண்ணிக்கையில் துவக்க முதலே தில்லுமுல்லுகள் தெரிய ஆரம்பித்தன. அட்வகேட் ஜெனரல் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் காரணம் சொல்லாமலே விலகிக் கொண்டார்கள். பார் கவுன்சில் தேர்தலில் மட்டும் அல்லாமல் வாக்கு எண்ணிக்கைகளிலும் தில்லுமுல்லு செய்ய முடியும் என அகில இந்திய பார் கவுன்சில் பிரமுகர் ஊரறிய வைத்துள்ளார். இங்கேயும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் தோழமை சக்திகளோடு கரம் கோர்த்து கடைசி நிமிடம் வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
192 பேர் போட்டியிட்டுள்ள தேர்தலில் 25 பேர் மட்டுமே வெற்றி பெற முடியும். முதல் வாக்கு, இரண்டாம் வாக்கு, மூன்றாம் வாக்கு, முதல் வாக்கில் கீழே உள்ளவர்களின் இரண்டாம் வாக்கு எண்ணப்படுதல் என்ற சிக்கலான முறையில் 1,697 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். இது வரை 25ல் ஒரு சிலரது வெற்றி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தோழர் பாரதி அரியலூரில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளும் சென்னையின் கணிசமான வாக்குகளும் (தமிழகத்தில் சுமார் 25%) எண்ணப்பட்டபோது, 192 பேரில் 18ஆவது இடத்தில் 150 வாக்குகள் பெற்றிருந்தார். திருவள்ளூர், காஞ்சி, திருச்சி, சேலம், கடலூர், குமரி, தூத்துக்குடி, ஈரோடு, மதுரை, விழுப்புரம், கோவை, திருப்பூர், தஞ்சை, நாகை, வேலூர் மற்றும் கரூரில் 55 வாக்குகள் என மொத்தம் 205 முதல் வாக்குகள் பெற்றார். 111 இரண்டாவது வாக்குகள் பெற்று, 192ல் 65ஆவது இடத்தில் இருக்கும்போது மொத்தம் 316 வாக்குகளுடன் போட்டியில் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அடுத்து என்ன?
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், ஒரு மனித உரிமை அமைப்பல்ல. கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகளின் வழக்கறிஞர் அலுவலகமும் அல்ல. அது இந்தியாவை, தமிழ்நாட்டை, நீதித்துறையை ஜனநாயகப்படுத்த போராடுகிற அமைப்பாகும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களின் கூட்டமைப்பான ஜாக் அமைப்பு மற்றும் சில போராட்டக்காரர்கள் தோழர் பாரதிக்கு வாக்களிக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். சிவப்பு, நீலம் போன்ற நெருக்கமான அடையாளங்களோடு நாம் நேர்மையானவர்கள், போராளிகள் என்ற எண்ணங்களும், பொதுவான வழக்கறிஞர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
வலுவாகப் பரப்புரை செய்வோம்.
அமைப்பை விரிவுபடுத்துவோம்.
அனைத்தும் தழுவிய ஜனநாயகத்திற்காக, விடாப்பிடியாய் போராடுவோம்.