அடிமை பழனிச்சாமி அரசின்
அனைத்தும் தழுவிய துரோகம்
வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அல்லாமல், இந்த முறை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அஇஅதிமுக அமைச்சர் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.
அந்தச் செய்தியாளர்களை அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மிரட்டியுள்ளார்கள். பழனிச்சாமி, பன்னீர்செல்வம் வரிசையில் எஸ்.பி.வேலுமணி உறவினர்கள், ஒப்பந்தங்கள் பெற்று கோடிகோடியாய் சொத்து சேர்த்துள்ளார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. நிற்க.
புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப கொள்கை 2018அய் இந்த அரசு அறிவித்திருக்கிறது. மாவட்ட வகை பிரித்தலில் சிறு மாற்றம் தவிர தகவல் தொழில்நுட்ப கொள்கை 2008ன் அம்சங்கள் இந்தக் கொள்கையிலும் தொடர்கின்றன. இரண்டு ஆண்டுகள் முதல் அய்ந்து ஆண்டுகள் வரை மின்வரி விலக்கு, ரூ.30 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம், விரிவாக்கப்படும் தொழில்களுக்கு 25% மூலதன மானியம், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 50% திருப்பித் தருவது, தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு என அதே அம்சங்கள் தொடர்கின்றன.
இவை தவிர சிறுதொழில் நிறுவனங்கள், அதாவது ரூ.5 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலான முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 100 தொழிலாளர்கள் பயிற்சி செலவை அரசு ஏற்கும். அதாவது வேலையை நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஊதியம் அரசாங்கம் தரும். வாடகைக்கு ஆண்டில் ரூ.2 லட்சம் வரை மானியம் தரப்படும். அரசு - தனியார் பங்கேற்பில் ஆய்வு பூங்காக்களும் உண்டு. நிற்க.
ஊழல் மலிந்திருக்கும் இன்றைய சூழலில், இந்த புதிய நிறுவனங்களை, அமைச்சர்களின், அதிமுக பிரமுகர்களின் உறவினர்கள் துவங்குவார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம். விரிவாக்கம் செய்பவர்களிடம் பெற வேண்டியதை பெற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.
இந்தப் புதிய கொள்கையே வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று கொள்கை சொல்கிறது. அடிமை பழனிச்சாமி அரசுக்கு வேலை உருவாக்கும் நோக்கம் உள்ளது என்பதை நம்மால் நம்பவே முடியாது. எத்தனைப் பொய்கள், பொய்ச் செய்திகள் வந்தாலும் தமிழக மக்கள் இந்த ஆட்சி மேல் கொண்டுள்ள அவநம்பிக்கையை அசைத்துவிட முடியாது.
அந்த அவநம்பிக்கையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை ரெனோ நிசான் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்திய கார் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் ரெனோ நிசான் உள்ளது.
ரெனோ நிசானின் 3,750 தொழிலாளர்களுக்கு 2016ல் மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. தொழிலாளர்கள் 57% உயர்வு பெற்றதாகச் சொல்லப்பட்டது. சராசரியாக ரூ.33,000 என்று இருந்த ஊதியம் இந்த ஒப்பந்தத்தால் சராசரியாக ரூ.52,000 வரை உயர்ந்தது என்றார்கள். 2019ல் புதிய ஒப்பந்தம் போட வேண்டும். அதற்கு முன் தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க ரெனோ நிசான் நிறுவனம் திட்டமிடுகிறது. 2009ல் இருந்து ஆளெடுப்பு நடத்தி, 2010ல் முழுமையான உற்பத்தி திறனை எட்டிய நிறுவனம், 2013 வரை கூட ஆளெடுப்பு நடத்தியது. கடைசியாக வந்தவர்கள் ரூ.28,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். பேட்டரி கார் ஆலை துவக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்தை வாங்கப் போவதாகச் சொல்லப்படும்போது, 1,500 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கப் போவதாகவும் சொல்லும்போது, தன்னார்வ பணி விலகல் திட்டம் என்ற அறிவிப்பு ரெனோ நிசான் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.
செப்டம்பர் 7 முதல் 28 வரை திட்டம் அமலில் இருக்கும். விண்ணப்பம் கொடுத்தால் கொடுத்ததுதான். திரும்பப் பெற முடியாது. 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலத்துக்கு ரூ.1 லட்சம், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் பணி முடித்திருந்தால், ரூ.1.35 லட்சம், 7 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் என்றால் ரூ.1.50 லட்சம் என ஆரம்ப கால விண்ணப்ப சலுகை கிடைக்கும். இத்துடன் ஆண்டுக்கு மூன்றரை மாதச் சம்பளம் கிடைக்கும். இந்தத் தொகை குடும்ப எதிர்காலத்தை எப்படி பாதுகாக்கும்? தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்கள். பத்தாண்டுகள் பணிக் காலம் நிறைவுறாதவர்கள். நிரந்தரத் தொழிலாளர்களை 30 வயதுக்குள் வேலையை விட்டு விரட்டுகிறது பன்னாட்டு நிறுவனம். அதையும் அவர்கள் தன்னார்வமாக செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
ரெனோ நிசான் நிறுவனம் ரூ.4500 கோடி முதலீடு செய்து அதே ரூ.4,500 கோடி, தனக்கு சலுகைகளாக, விலக்குகளாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது என்றும் அது தரப்படவில்லை என்று புகார் செய்தும் அது உடனடியாக தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. இப்போது பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி நீதிமன்றத்துக்கு வெளியே பேசியதில் தன்னார்வ பணி விலகல் திட்டம் அறிவிக்கும் துணிச்சல் நிறுவனத்துக்கு வந்திருக்குமா?
தகவல்தொடர்பு தொழில்நுட்ப கொள்கை 2018, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டால்தான் சலுகைகள், விலக்குகள், மான்யங்கள் என்று சொல்கிறது. ரெனோ நிசான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு எட்டப்பட்டபோதும், வேலைவாய்ப்பு ஓர் அம்சம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் தருவதற்கு வேலைவாய்ப்பு காரணமாகக் காட்டப்படுகிறது. ரெனோ நிசான் நிறுவனம், ஆட்குறைப்புக்கு முயற்சி செய்கிறது. தமிழக அரசு இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் 2,60,000 மாணவர்களில் 90,000 பேர் தகவல்தொடர்பு தொழில்நுட்ப பாடங்களில் சேருகிறார்கள் இவர்களில் 18,000 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் அளவில்தான் துறை உள்ளது என்றும் 2018 தகவல்தொடர்பு தொழில்நுட்ப கொள்கை சொல்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களின் இன்றைய நாளைய வாழ்க்கை பற்றிய, தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத, அனைத்தும் தழுவிய துரோகம் இழைக்கிற, முதலமைச்சர் முதல் காவல்துறை தலைவர் வரை ஊழல் புகார்களில் சிக்கியுள்ளவர்கள் நடத்துகிற ஆட்சி உடனே வெளியேற வேண்டும்.