மேற்கு தொடர்ச்சி மலை
டி.குணசேகரன்
உலகமயமாக்கத்தால் உலகெங்கும் குறுக்கும் நெடுக்கும் விரவிக் கிடக்கும் நிலமற்ற வறிய மக்களின் துயரங்களை
எடுத்துச் சொல்லும் யதார்த்தமான ஒரு நிகழ்வாகவே மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் உள்ளது. நிலம் என்ற சாதாரண உரிமை வாழ்வின் ஏக்கமாக இறுதி வரை நின்று விடுகிற வலியை பார்வையாளர்களுக்கு கடத்த இயக்குநர் லெனின் பாரதி முயற்சி செய்திருக்கிறார். தொழிற்சங்க தலைவர்கள் ஒரு சிலர் தவறாக நடந்துகொள்வதை அனைவரும் அப்படியே என்பதுபோல் காட்டுவது திரைப்படங்களில் நிறுவப்பட்ட மொழி. அந்த மொழி விளிம்புநிலை மக்கள் வாழ்வைச் சொல்லும் இது போன்ற ஒரு கதையிலும் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது.
பேரிடர் காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று உளறும் ஊடகங்களை பார்க்கையில் மனதில் பெருங்கோபம் இயல்பாகவே நமக்கு வந்து விடுகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவனுக்கு ஏது இயல்பு வாழ்க்கை? அப்படி ஒரு வாழ்க்கைதான் இந்த நிகழ்வின் நாயகன் ரங்கசாமியின் வாழ்க்கை. மலையடிவாரத்தில் இருந்து மலை மேலே இருப்பவர்களுக்கு பொருட்களை சுமந்து செல்வதும், கீழிறங்கும்போது தன் முதலாளியின் ஏலத்தோட்ட மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வருவதுமான வாழ்க்கை அவருடையது. எதார்த்த வாழ்வில் விளிம்பு நிலை மனிதர்கள் படும் அன்றாட துயராகவே அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பாத்திரமான சங்க நிர்வாகி தோழர் சாக்கோவிடம் தொழிலாளர் ஒருவர் மரத்திலிருந்து இறங்கி வந்து யூனியன் சந்தா தரும் நிகழ்வு சங்கத்திற்கும் தொழிலாளிக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை காட்டுகிறது. தொலைத் தொடர்பு வசதிகள், கணினி போன்றவை இல்லாத மனிதர்கள் மத்தியில் நிலவும் பிணைப்பு அது.
ஏலக்காய் தோட்ட முதலாளியின் மகன் தொழிலாளர்களுக்கு வேலை தரும்போது மலையாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர்களிடம் பாகுபாடு காட்டும்போது, தோழர் சாக்கோ யாராயிருந்தாலும் அவர்கள் தொழிலாளர்கள் என்று சொல்வது.... ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், இயல்பான வர்க்கப் பாசம் ஆகியவற்றை திரையில் பார்க்கும்போது பெருமிதமாகவே இருக்கிறது.
தமிழகம் மற்றும் கேரள எல்லைகளில் உள்ள கோம்பை, பண்ணைபுரம், காத்காதி, கரியணம்பட்டி, தேவாரம், அம்மாபட்டி, புத்தடி, உடுப்பன்சோலை, சதுரங்கப்பாறை, வட்டப்பாறை, தலையங்காவல் போன்ற மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, அன்பு காட்டுவது என அவர்கள் மத்தியில் நிலவுகிற இணக்கமான சூழல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் கண்கலங்கச் செய்கிறது.
ஒரு சிறு துண்டு நிலம் தன் குடும்பத்தின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றும் என்று எதிர்ப்பார்த்து, தன்னிடம் உள்ள சேமிப்புக்கு மேல் பணம் தேவைப்படுவதால், ஏலக்காய் மூட்டை வாங்கி கைமாற்றும் யோசனையை பெரியவர் ஒருவர் சொல்ல அதை செய்யத் துவங்குகிறார் ரங்கசாமி. கிடங்கில் இருந்து ஏலமூட்டை எடுத்து வரும்போது மலை உச்சியில் தவறி விழுகிறது. பல இன்னல்களுக்குப் பிறகு தன் தந்தையின் நண்பர் நட்பின் மூலம், நிலம் கிடைத்தாலும், நிலத்திற்கான கடனை சிறுகச்சிறுக அடைப்பதாக ஒப்புக்கொண்ட பின்பே அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார் ரங்கசாமி.
ரங்கசாமியின், அவரது குடும்பத்தினரின் அந்த மகிழ்ச்சி நீடித்து நிலைக்க வேண்டுமென படம் பார்ப்போரின் மனமும் விரும்புகிறது.
ஒரு நாள் கனமழையில் பயிர் முற்றிலும் நாசமடைகிறது. அதைத் தொடர்ந்து ரங்கசாமி, லோகு உரக்கடையில் கலப்பு விதைகள், உரங்கள், பூச்சிக் கொள்ளி எல்லாம் கடனில் வாங்க ஆரம்பிக்கிறார். லோகுவின் நம்பிக்கை வார்த்தைகளை நம்புகிறார். உரக்கடையிலும் வளர்ச்சி இல்லை. சாமை, வரகு, சோளம் பயிர் வைக்காமல் குறுகிய காலத்தில் விளையும் கலப்பு விதைகள் வந்துவிட்டன, அவற்றை விளைவித்தால் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என லோகு ஆசை காட்டுகிறார்; ஏமாற்றும் நோக்கம் எதுவும் இல்லாமல் நல்லது சொல்வதாக கருதி இயல்பாகவே சொல்கிறார்.
இந்தச் சூழலில் ஊருக்குள் புதிதாக சாலை வருகிறது என்ற செய்தியை தோழர் சாக்கோ, கட்சி தோழர் சசியிடம் தெரிவிக்கும்போது பார்த்துக் கொள்ளலாம், புதிய விஷயங்களுக்கு முட்டுக் கட்டை போடாதீர்கள் என்கிறார். தோழர் சாக்கோ ஊருக்குள் சாலை வந்தால் புதிதாக மெஷின்கள் வரும், தொழிலாளர்கள் வேலை இழப்பர் என்று சொல்ல தோழர் சசி அக்கறை காட்டவில்லை.
ஏலக்காய் தோட்ட முதலாளியின் மறைவிற்குப் பிறகு தோட்டம் 2 ஏக்கர், 3 ஏக்கர் என உறவினர்களுக்கு பிரித்துத் தரப்பட்டதாக நீதிமன்ற உத்தரவு ஒட்டப்படுகிறது. 5 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால் யூனியன் என சொல்லிக் கொண்டு வருவீர்கள் என தோழர் சாக்கோவை முதலாளியின் மகன் கேலி செய்கிறான். ஊருக்குள் செல்லும் தோழர் சாக்கோவிடம், வேலை மறுக்கப்பட்டதை தொழிலாளர்கள் தெரியப்படுத்துகிறார்கள். தோழர் சசி ஏலத்தோட்ட முதலாளியின் மகனுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார். தோழர் சாக்கோ, ரங்கசாமி உட்பட 4 தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு முதலாளியின் வீட்டுக்கு சென்றால், அங்கு அவருடன் தோழர் சசி மது அருந்திக் கொண்டிருக்கிறார். தோழர் சாக்கோ தோழர் சசியை அரிவாளால் வெட்ட, மற்றவர்கள் முதலாளியின் மகனை தாக்கிக் கொல்கின்றனர்.
சிறை வாசம் முடிந்து வெளியில் வரும் போது ரங்கசாமியின் கடைசிப் பிடிப்பான சிறு துண்டு நிலமும் உரக்கடை முதலாளிக்கு சொந்தமாகி விடுகிறது. அவனுடைய நிலத்தைப் போலவே எண்ணற்றவர்களின் நிலத்தை காற்றாலை கோபுரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. தன் நிலத்திற்கே செக்யூரிட்டியாய் ரங்கசாமி வேலையில் அமர்கிறார். பிறந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுவிட்ட உணர்வு அது.
சமூகப் பிரச்சனைகள், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், திரைப்படம் போன்ற ஒரு வலுவான ஊடகத்தில் இடம் பெறுவது மிகவும் ஆரோக்கியமான மாற்றமே. அது போன்ற படங்களை எடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வதாலேயே அது இறுதி ஆகிவிடாது. உண்மையை தெரிந்து கொள்ள, ஆழப் பார்க்கத் தவறும்போதும், இதுபோன்ற விமர்சனங்கள் எழலாம். இது போன்ற படம் எடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்தால்தான் தங்கள் அறிவாற்றல் முழுமையாக வெளிப்பட்டதாக கருதுவார்கள் என்றால் அது அவர்கள் பிரச்சனை. விமர்சனம் செய்வதற்கும் கொச்சைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு கூட போதுமனாது. அந்த எல்லைகள் பற்றிய கவனத்துடனும் அக்கறையுடனும் மேலும் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற, சாமான்ய மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தும் திரைப்படங்கள் வரட்டும்.