தோழர் ராஜகுருவுக்கு கொலை மிரட்டல் விடுத்த
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை வேண்டும்
ஊழல் செய்ததாக மத்திய புலனாய்வு துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிற முதலமைச்சரும் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள காவல்துறை தலைவரும் பதவி விலக வேண்டும் என்று தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.
அவர்கள் கேள்விகள் எழாமல் இருக்க ஒடுக்குமுறையை ஏவுகிறார்கள். தாக்குதல் அவர்களுக்கு சிறந்த தற்காப்பாக இருக்கிறது. மூலதனத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள திருபெரும்புதூர், ஒரகடம் பகுதி தொழிலாளர்கள் அந்தத் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியிருக்கும் போது, அவற்றை காவல்துறை கொண்டு ஒடுக்கி விட முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மீதே குற்றச்சாட்டு இருப்பதால், எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறையிடம் விட்டுவிட்டார். காவல்துறை நரிக்கு நாட்டாமை கிடைத்தவுடன் கிடைக்கு எட்டு ஆடு கேட்கிறது.
தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களில் தலையிட்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய தொழிலாளர் துறை முதலாளிகள் துறையாக இயங்கும்போது, தலையிடக் கூடாத காவல்துறை தொழிலாளர் போராட்டங்களில் தலையிடுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறையாக செயல்படுவதை விட பன்னாட்டு நிறுவனங்களின் காவல்துறையாக செயல்படுவதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாண்டூர் கிராமத்தில் கிரவுன் வேர்ல்ட்வைட் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தொழிலாளர்கள் சட்டபூர்வ உரிமைகள் கேட்டு சட்டபூர்வ போராட்டம் நடத்துகிறார்கள். அங்கு காவல்துறைக்கு என்ன வேலை? புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவரும் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் ராஜகுரு, அந்தத் தொழிலாளர்களைச் சந்திக்க அங்கு சென்ற போது, அவர்களைச் சந்திக்கக் கூடாது என்று அங்கு இருந்த காவல்துறையினர் தோழர் ராஜகுருவை தடுக்கின்றனர். தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை தலையிடுவது தவறு என்று தோழர் ராஜகுரு அறிவுறுத்துகிறார். முதலாளிகள் முன், அரசியல்வாதிகள் முன் பவ்யம் காட்டினாலும், நியாயம், நீதி, உரிமை கோரும் விதத்தில் சாதாரண அறிவுறுத்தலால், அதிகாரம் படைத்த காவல்துறையின் சுயம் காயப்பட்டுப் போகிறது. அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் அதிகாரத்தின் உதவியுடன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தார்கள் என்று கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அதுவும் காவல்துறை அதிகாரம் நல்லது செய்யுமா? உன்னை தூக்கிவிடுவேன், பொய் வழக்கு போடுவேன், கொலை செய்துவிடுவேன் என்றது காவல்துறை அதிகார ஆணவம்.
கொலை மிரட்டல் விடுப்பது குற்றம். கூடுவாஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் சரவணன் குற்றம் புரிந்துள்ளார். போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆதரவு தரச் சென்ற ஒருவரை தடுத்தது மட்டுமின்றி, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்று போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தும் அதிகாரம், மக்கள் பணியாற்றுபவர்கள் அந்தப் பணி செய்ய விடாமல் அவர்களைத் தடுக்கிறது.
தோழர் ராஜகுருவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அக்டோபர் 11 அன்று கூடுவாஞ்சேரியில் இககமாலெயும் புரட்சிகர இளைஞர் கழகமும் ஆர்ப்பாட்டம் நடத்தின.