மூலதன ஆதிக்கத்தை நோக்கி பாயும் தோட்டாக்கள்
அன்பு
வாகன, வாகன உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.
ராயல் என்பீல்ட் தொழிலாளர்கள் புல்லட் இரு சக்கர வாகனம் தயாரிக்கிறார்கள். இந்த புல்லட்கள் சாலைகளில் சீறிப் பாயும். புல்லட்டை தோட்டா எனத் தமிழில் சொல்கிறோம். தமிழ்நாடெங்கும் தொழிலாளர் போராட்டத் தோட்டாக்கள் இன்று மூலதன ஆதிக்கத்தை நோக்கிப் பாய்கின்றன.
நில உடைமை எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராளி தோழர் சுப்பு கொல்லப்பட்டபோது, கவிஞர் பிச்சமுத்து எழுதினார்.
கண்ணீர் கூட அமிலமாகிக் கரைக்கும் உங்களை
கசிந்த ரத்தம் பெட்ரோல் ஆகிக் கொளுத்தும் உங்களை
எச்சரிக்கை எதிரிகளே எழுதி வையுங்கள்
எரிமலைக்குப் பூட்டு போட வந்து பாருங்கள்
அடங்க மறுத்து, அடிபணிந்து கெஞ்சிட மறுத்து, ஆர்த்தெழுந்து போராடுகின்றனர் ஆட்டோ, ஆட்டோ காம்பனன்ட் தொழிலாளர்கள். பிரிக்காலில், யமஹாவில், என்பீல்டில், எம்எஸ்அய்யில் உயர்ந்து எழுந்துள்ளன போராட்டச் செங்கொடிகள்.
சோவியத் சோசலிச முகாம் சரிந்த பிறகு, பாட்டாளிகளின் ஆட்சி வீழ்ந்த பிறகு, தாராளவாத சிந்தனையாளர், பிரான்சிஸ் பூகியாமா, தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அண்ட் தி லாஸ்ட் மேன் (வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்) என்ற நூலை எழுதினார். அவர் அந்த நூலில் முதலாளித்துவம் வந்துவிட்டதோடு, நின்றுவிட்டது, வென்றுவிட்டது என்றார். வர்க்கப் போராட்ட வரலாறு முடிந்துவிட்டது, ஏனெனில் இனி வர்க்கப் போராட்டங்கள் இருக்காது என்றார். முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகமே, மானுட சமூகத்தின் இறுதி அரசாங்க வடிவம் என முடிவாய்ச் சொன்னார். அதன் பின்னர், முதலாளித்துவம் திரும்பத் திரும்ப நெருக்கடியில் சிக்குகிறது.
2018ல் பிரான்சிஸ் பூகியாமா, கட்டற்ற செல்வ வருமான ஏற்றத்தாழ்வுகளைக் களைய எடுக்கப்படும் மறுவிநியோக திட்டமே சோசலிசம் என்றால், அந்த சோசலிசம் வரலாம், வந்தாக வேண்டும் என்கிறார். முதலாளித்துவ மிகை உற்பத்தி, வறுமைமயமாதல், வாங்கும் சக்தி குறைவால் தேவை குறைவது பற்றி எல்லாம் மார்க்ஸ் சொன்னவை சரியே என்கிறார்.
நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்கு உள்ளேயும் மலையென செல்வமும் வருமானமும் குவிந்து, கடலென வறுமை பரவியுள்ளது. ஒரே வேலையைச் செய்யும் இந்திய மெக்டொனால்ட் தொழிலாளியைக் காட்டிலும் அய்க்கிய அமெரிக்க தொழிலாளி 16 மடங்கு கூடுதல் சம்பளம் பெறுகிறார். அவரைக் காட்டிலும் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆயிரம் மடங்கு கூடுதல் சம்பளம் பெறுகிறார். அதனால்தான் முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என்ற முழக்கத்தில், இப்போதும் உயிர்துடிப்பு உள்ளது.
வரலாறும் வாழ்க்கையும் நிச்சயம் வர்க்கப் போராட்டம் மூலம் மார்க்சியத்தை விடுதலை செய்யும்.
மூலதனம் கூலியைக் குறைத்துச் சுரண்டுகிறது. அதற்கு கூலி குறைந்தால் லாபம் அதிகமாகும். வேலையின்மை, பயிற்சியாளர், ஒப்பந்தத் தொழிலாளர் முறை, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலாகவும் முன் நிபந்தனையாகவும் இருக்கும். ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, மண்ணூர், வல்லம், திருபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் நெடுக லட்சக்கணக்கான இளைஞர்கள், திரும்பத் திரும்ப நிரந்தர மற்ற வேலைகளில் 20 வயது முதல் பணியமர்த்தப்பட்டு கரும்பைப் போல் பிழியப்பட்டு, ஒட்டச் சுரண்டப்பட்டு 30 வயதாகும்போது சக்கையாக வீசி எறியப்படுகிறார்கள். என்ஈஈஎம், நேஷனல் எம்ப்ளாயபிலிடி என் ஹான்ஸ்மென்ட் ஸ்கீம் மூலம் வேலை பெறுவதற்கான திறனை உயர்த்துகிறோம், அது உயர்த்தப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் வேலை தர மறுக்கிறார்கள்.
நெடுநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு என நிலையாமை பற்றி, நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதே மனித வாழ்க்கை என்றது திருக்குறள். ஆனால் முதலாளித்துவமோ, நேற்றும் இன்றும் நாளையும் நிரந்தரமற்றவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்கிறது.
நியாயமான கூலி, கவுரவமான, நிரந்தரமான பாதுகாப்பான வேலை, உரிமைகள் காக்க ஜனநாயகம் தழைக்க தொழிற்சங்க உரிமை, இவையே இன்றைய போராட்டங்கள் ஒலிக்கின்ற வாழ்வின் இசை ஆகும். மூத்த போராளிகள் பிரிக்கால் தொழிலாளர்கள். 2007ல் துவங்கியது போராட்டம். 4 பெண்கள் உட்பட 27 பேர் மீது கொலை வழக்கு. இரண்டு பேர் 03.12.2015 முதல் ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ளனர். விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து 8 நாட்கள் தண்டனை சம்பள பிடித்தத்திற்கு ஆளானார்கள் 804 பிரிக்கால் தொழிலாளர்கள். இப்போது 6 வருடங்கள் சம்பளம் உயர்வு கிடையாது, சைக்கிள் டைம் உற்பத்தி தா, 26.5 நாள் கிராஜ÷விடி, செர்வீஸ் வெயிட்டேஜ் 15 நாட்களாக குறைத்துக் கொள் என மிரட்டும் நிர்வாகம், போராடும் தொழிலாளிக்கு தீபாவளி போனஸ், லாபத்தில் பங்கு தொகையை ரூ.36,000 முதல் ரூ.46,000 வரை குறைத்துள்ளது. பிரிக்காலில் 21.08.2018 முதல் வேலை நிறுத்தம் நடக்கிறது. இன்று 71ஆவது நாள். (30.10.2018)
எம்எஸ்அய்யில் ரூ.14,500 சம்பள உயர்வுக்கு மினிட்ஸ் போட்டு, ரூ.13,500தான் என நிர்வாகம் பின்வாங்குகிறது. 12 பேர் இடைநீக்கம். யமஹாவில் ஜ÷லை மாதம் சங்கம் துவங்கப்பட்டது. கோரிக்கை அனுப்பப்பட்டு தொழில் தகராறு எழுப்பப்படுகிறது. 21.09.2018 அன்று சமரசப் போச்சுவார்த்தைக்கு விடுப்பு கேட்டு சென்ற 2 தோழர்கள் வேலை நீக்கத்தை ரத்து செய், வேலைக்குத் திரும்ப எடு என்ற ஒற்றைக் கோரிக்கையில் 22.09.2018 முதல் வேலை நிறுத்தம். என்பீல்டில், பாதிப்புக்கள், அதிகமாக இருந்ததால் சங்கம் அமைத்தனர். வேலை நீக்கம். வேலை மறுப்பு. 24.09.2018 முதல் வேலை நிறுத்தம். இங்கேயும் எட்டு நாட்கள் சம்பளம் தண்டனையாய்ப் பிடித்தம். தொழிலாளர் துறை ஆலோசனைகளை, இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் டாய்லட் பேப்பராகக் கருதுகின்றன.
தோழர் குசேலர், தோழர் சவுந்தரராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் செல்லும் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
மத்திய, மாநில ஆட்சியாளர்களைப் போல் முதலாளிகளும் கோழைகளே. மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். காவல் துறையின் காக்கிச் சட்டைக்குப் பின்னாலும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்கிறார்கள். நேருக்கு நேர் மோதினால் யார் வெற்றி பெறுவார்?
எல்லா புரொடக்ஷனும் செய்கிற நாம், பாப்புலேஷனில் ஏகப்பெரும்பான்மையாய் எம்எல்ஏக்களை எம்பிக்களைத் தேர்ந்தெடுக்கும் நாம், பிராப்பர்டியும் பவரும் இல்லாமல் இருக்கிறோம். அதனால்தான் கம்யூனிஸ்டுகள் சொல்கிறோம். நாமின்றி நாடில்லை. நாடோ நமதில்லை. நாமே நாடாவோம் நாட்டை நமதாக்குவோம்.
விவசாய நெருக்கடியும் வேலையின்மையும் நம்மை இரட்டை நுகத்தடியாய் அழுத்தும் பிணச்சுமைகள். ஜனநாயக வேட்கையால் எதிர்க்கிறோம். ஆளும் வர்க்க சேவகர்கள் ஜனநாயகம் மறுக்கிறார்கள். நமது குறைகூலி, நிரந்தரமற்ற நிலைமைகளுக்கும் விவசாய நெருக்கடிக்கும் உள்ள உறவை நாம் கவனமாகக் காண வேண்டும். தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் காவிரி பாசனப்பகுதி 44 ஆயிரம் சதுர கி.மீ. காவிரி படுகையான நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், திருச்சி, புதுக் கோட்டை அரியலூரில் பாசனப் பகுதி 12000 சதுர கி.மீட்டர். 1 சதுர கி.மீ, 247 ஏக்கர் ஆகும். காவிரி படுகை பகுதியில் 28 லட்சம் ஏக்கர் விளைநிலம் 15 லட்சம் ஏக்கர் ஆகி உள்ளது. கரும்பு சாகுபடி 4 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1 லட்சம் ஹெக்டேராகச் சுருங்கி உள்ளது. 11 லட்சம் ஏக்கர் நிலம் வேதாந்தாவுக்கும், 2 லட்சம் ஏக்கர் நிலம் ஓஎன்ஜிசிக்கும் சென்றால், விவசாயம் நம் கண் முன்னாலே அழியும். விவசாயம் விளைநிலம் போனால் உணவுப் பாதுகாப்பும் பொது விநியோகமும் அடிவாங்கும். ஏற்கனவே கர்நாடகாவிலிருந்து, ஆந்திராவிலிருந்து அரிசி வாங்கும் நிலை உள்ளது. இனி விலை இல்லா அரிசிக்கு வம்பு வரும். விவசாய நெருக்கடி, ஒட்டுமொத்த சமூக நெருக்கடி. மானுடப் பெரும் துயரம். பேரழிவு. அது கூலியைப் பிடித்து கீழே இழுக்கும். கூட்டுபேர உரிமையை அரித்து அழிக்கும்.
ஆகவேதான், தொழிலாளர்கள் சமூகத்தின் தலைவர்களாக வேண்டும். நாட்டுப்புற பாட்டாளிகளை உள்ளடக்கிய பாட்டாளிகள், ஒரு கையை துயருற்ற விவசாய சமூகம் நோக்கியும், மறு கையை ஜனநாயகப் போராட்டத்தை நோக்கியும் ஒருமைப்பாடு தெரிவித்து நீட்டியாக வேண்டும்.
அன்று மேரா நாம் துமாரா நாம் ஹமரா நாம் வியத்நாம் என இந்தியா எங்கும் முழங்கினோம். அய்க்கிய அமெரிக்கா தோற்றது. சின்னஞ்சிறு வியத்நாம் வென்றது. இன்று பிரிக்கால் தொழிலாளர் போராட்டம், எம்எஸ்அய் தொழிலாளர் போராட்டம், யமஹா தொழிலாளர் போராட்டம், என்ஃபீல்ட் தொழிலாளர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், சத்துணவுத் தொழிலாளர் போராட்டம் எங்கள் வர்க்கப் போராட்டம் என முழங்குவோம். இறுதி வெற்றி நமதே.
ஜனவரி 8, 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டத் திருத்தம், நிரந்தரமற்றோர் நலன்காக்கும் புதிய மாதிரி நிலையாணைகள், சம வேலைக்குச் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம், குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.26,000 என்ற கோரிக்கைகளுடன் வெற்றி பெறச் செய்தாக வேண்டும்.