மீ டூ... தனிப்பட்ட பிரச்சனையல்ல
ஓர் அரசியல் பிரச்சனை
பணியிட பாலியல் துன்புறுத்தலை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கம் உலகெங்கும் துவங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இப்போது இந்தியாவில் பத்திரிகை மற்றும் திரைத் துறை பெண்கள் அதைத் துவங்கியுள்ளனர்.
ஆண்கள் தண்டனை பற்றிய அச்சம் எதுவுமின்றி, பெண்களை துன்புறுத்தலாம், அச்சுறுத்தலாம், தவறாகப் பயன்படுத்தலாம் என்ற கலாச்சாரத்துக்கு இந்த இயக்கம் இப்போது சவால் விடுக்கிறது. இப்போது துணிச்சலாக பேச முன் வந்திருக்கும் பெண்களுக்கு அனைத்து விதங்களிலும் ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்ற கேள்வி, பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும், புகார் சொன்னவரை வாயடைக்கச் செய்யும் ஆணாதிக்க அணுகுமுறையின் வெளிப்பாடே. இன்று இருக்கிற இந்தச் சூழலிலேயே இப்படி ஆணாதிக்கக் கேள்விகள் எழுப்பி புகார் எழுப்புபவரை மிரட்ட முடியும் என்றால், பின்னுக்குத் தள்ள முயற்சி செய்ய முடியும் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலைமைகள் மேலும் பாதகமானவையாகவே இருந்திருக்கும். உன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உன் அதிகாரத்துக்கு உட்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாயா, நீ குற்றம் செய்தாயா என்று குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து கேள்வி எழுப்பாமல், புகார் எழுப்புபவரை பார்த்து கேள்வி எழுப்புவது குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாப்பதாகவே அமையும்.
இப்போது புகார் எழுப்பும் பெண்களுக்கு அவர்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பணி, பாதுகாப்பு, அடுத்தடுத்த வாய்ப்புகள் ஆகியவை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று தெரிந்துதான், புகார் எழுப்புகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நிலவுகிற பொறியமைவுகள் எல்லா விதங்களிலும் பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் பெண்கள் பணியாற்றும் எல்லா இடங்களிலும் சூழல்களிலும் அந்தந்த பணிநிலைமைகளுக்கு ஏற்ப அமலாக்கப்படுவதை அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இப்போது அந்தப் பெண்கள் எழுப்பிக் கொண்டிருப்பது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது ஓர் அரசியல் பிரச்சனை.