மக்கள் வாழ்வுக்கு திட்டம் போடுவதற்கு பதிலாக
இருக்கிற வாழ்வை அழிக்க திட்டம் போடும் பழனிச்சாமி அரசு
(இகக மாலெ சென்னை மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆர்.மோகன், என்.ஜேம்ஸ் ஆகியோர் 22.09.2018 அன்று புதுப்பேட்டையில் கூவம் பகுதியில் கடைகளும் வீடுகளும் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர். அவர்கள் கண்ட, கேட்டறிந்த விசயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பு: என்.ஜேம்ஸ்)
சென்னை நகரின் மய்யப் பகுதி.
இந்தப் பக்கம் எழும்பூர் ரயில் நிலையம். சென்ட்ரல் ரயில் நிலையம். அந்தப் பக்கம் அண்ணாசாலை. புதுப்பேட்டை. ஒரு காலத்தில் புதிதாக அந்த இடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். அன்றைய சென்னை நகரவாசிகள் தங்கள் புதிய பகுதிக்கு தங்கள் பாணியில் வைத்த அழகான பெயர். சென்னையின் எல்லா பகுதிகளில் இருந்தும் ரயில், பேருந்து மூலம் எளிதில் வந்து போக முடியும்.
புதுப்பேட்டை என்றால் கிரீஸ் கறை படிந்த ஆடைகளுடன், 12 வயது சிறுவர்கள், சில சமயங்களில் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்கள், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வரை குறுக்கும் நெடுக்குமாக, கைகளில் ஸ்பானருடன், வேறுவேறு கருவிகளுடன் ஒலிகள் (மேட்டுக்குடியினர் இதை நாய்ஸ் என்பார்கள்) எழுப்பிக் கொண்டிருப்பார்கள். முகத்தில், கைகளில், கால்களில் கரி பூசிக்கொண்டதுபோல் இருக்கும் அவர்களது தோற்றம், உழைப்பின் மேன்மை அறிந்தவர்களுக்கு அழகு. இனி அந்த அழகு காணப் பெறாது என்றாக்கிவிட்டார்கள் அடிமை ஆட்சியாளர்கள்.
புதுப்பேட்டை விளிம்புநிலை மனிதர்கள் புழங்கும் இடம். நகரின் மய்யத்தில் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கலாமா? நவதாராளவாத கொள்ளை பார்த்துக் கொண்டிருக்குமா? அவர்களை இப்போது நகரின் விளிம்புக்குக் கூட அல்லாமல், நகருக்கு வெளியே 56 கி.மீக்கு அப்பால் போகச் சொல்கிறது பழனிச்சாமி அரசு.
சாமான்ய மக்கள் பயன்பாட்டில் உள்ள இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இன்றைய ஷேர் ஆட்டோக்களின் உதிரிபாகங்கள் விற்பனை, பெயின்டிங், டிங்கரிங், வெல்டிங் என பழுது பார்ப்பது ஆகிய வேலைகளில், கூவம் நதியோரத்தில் புதுப்பேட்டையில் 40 ஆண்டுகளாக, மூன்று தலைமுறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்குள்ள 2,000 கடைகளில் கடைக்கு 4 முதல் 5 பேர் வேலை செய்கிறார்கள். நாள் கூலி ரூ.500 முதல் ரூ.600 வரை பெறுகிறார்கள். அதில் பிழைப்பு நடத்துகிறார்கள். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து தொழில் கற்று செல்பவர்கள், இங்கேயே வேலை செய்பவர்கள் என சில ஆயிரக்கணக்கானவர்கள், அவர்களது குடும்பங்கள் இந்தப் பகுதியில் நடக்கும் வேலைகளை நம்பியுள்ளன.
சென்னையில் ஏழு லட்சம் ஆட்டோக்கள் ஓடுவதாக சொல்லப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு குறைந்த செலவில் உதிரிபாகங்கள் மாற்றுவது, பழுது பார்ப்பது ஆகியவற்றுக்கு இந்தப் பகுதியைத்தான் ஆட்டோ ஓட்டுநர்கள் நம்பி இருக்கிறார்கள். இந்த வேலைகளை பிற இடங்களில் பார்ப்பதற்கும் இங்கு பார்த்துக் கொள்வதற்கும் செலவில் 30% வித்தியாசம் உண்டு. இவர்கள் தவிர ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை ஏற்றிச் செல்லும் சிறிய வகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் என இந்தப் பகுதியை நம்பி இருக்கிறார்கள்.
இப்படியாக, சென்னையின் பெரிய மக்கள் பிரிவு பிழைப்பு நடத்தும், பிழைப்புக்காகச் சார்ந்திருக்கும் இந்தப் பகுதியை சென்னையின் மய்யத்தில் இருந்து அகற்றி சிங்கபெருமாள்கோயில் அருகில் அப்பூர் மற்றும் தங்கம்பெருமாள் ஆகிய கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு ஆட்டோ நகர் என்று பெயரும் வைத்துள்ளார்கள். சென்னை பெருநகரின் மய்யத்தில் இருப்பவர்களை அங்கிருந்து தொலைதூரத்துக்கு விரட்டுகிறார்கள்.
ஆட்டோ நகர் சிங்கபெருமாள்கோயில் அருகில் அமையும்போது, அவர்களுக்கான குடியிருப்பு பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் எந்த வழியில் சென்றாலும் 30 கி.மீக்கு மேல், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்ய வேண்டும். அமைச்சர்கள், பசுமைவழிச் சாலையில் இருந்து நேராக ஒரே சாலையில் தலைமைச் செயலகம் வர வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்துக்கு மிக அருகில் விடுதி. இந்த போக்குவரத்துக்கு அரசு செலவில் வாகனங்கள் உண்டு. இந்த அளவுக்கு அனுபவிப்பவர்களுக்கு சாமான்ய மக்கள் படும் அல்லல் சற்றும் புரிவதே இல்லை என்பதற்கு பெரும்பாக்கம் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ஒதுக்கீடுகளே சாட்சி. இந்த ஒட்டுமொத்த திட்டமும் அவர்களுக்குச் சொல்லப்பட்ட போது அந்தத் தொழிலாளர்களின், மக்களின் மனதில் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் அச்சமும் தந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த சாமான்ய மக்கள் பிரிவினருக்கு அது நடந்தேவிட்டது. முதலில் நட்டம், பிறகு கூடுதல் செலவு, பிழைப்பு இழப்பு என சங்கிலித் தொடர் இழப்புகளை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்.
ஆகஸ்ட் 7 அன்று அதிமுக அரசு, அந்த சிறுகடை வியாபாரிகளுக்கு, அந்தக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவகாசம் தராமல் தங்கள் பொருட்களை கூட எடுத்துக்கொள்வதற்கு முன்பு வேகவேகமாக இடித்துத் தள்ளியது. இந்த வேலை துவங்கப்பட்ட நாளிலேயே பலர் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். இன்னும் பலரை இந்த நிலைக்கு பழனிச்சாமி அரசு தள்ளப் போகிறது. அரசு என்றால் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த அரசு இருப்பதை பறிக்கிறது.
2018 ஜனவரியிலேயே அந்தப் பகுதியில் உள்ள 300 கடைகளுக்கு அகற்றுதலுக்கான அறிவிப்பு தரப்பட்டதாக, இப்போது 1076 வீடுகள் ‘ஆக்கிரமிப்பில்’ உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். சாஸ்த்ரா கல்வி நிறுவனம் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது பற்றி செய்தி வந்தது. அந்த நிலம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக இது வரை செய்தி இல்லை. ஒரே ஒரு கல்வி நிர்வாகத்திடம் நிலத்தை திருப்பி எடுக்க முடியாதவர்கள் 1076 குடும்பங்கள், அவர்கள் வாழ்க்கை என தெரிந்தும் அவர்களை அடியோடு அப்புறப்படுத்த நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி தீவிரப்படுத்துகிறார்கள். பல்லாயிரக்கணக்கான சாமான்ய மக்கள் வாழ்க்கையை புதைத்துவிட்டு அதன் மீது கூவத்தை அழகுபடுத்துகிறார்கள். இந்த மக்கள் போய்விட்டால் பிறகு கூவத்துக்குத்தான் அழகு ஏது?
1970களில் பொதுப் பணித்துறை இந்த இடத்தை இந்தத் தொழிலுக்கு ஒதுக்கியது. ஒதுக்கீடு பெற்றவர்களில் பர்மாவில் இருந்து திரும்பிய தமிழர்கள், இசுலாமியர்கள் கணிசமானவர்கள். பலர் வாடகை செலுத்தி வருகிறார்கள். சிலர் சொந்தமாகவும் கடைகள் வைத்திருக்கிறார்கள். அப்பூரில் மொத்தம் 44 ஏக்கரில் உருவாகவுள்ள ஆட்டோ நகரில் ரூ.12.27 கோடி செலவில் 534 மனைகள் தயாராகியுள்ளன. ஒருவருக்கு 350 சதுர அடி வீதம், 300 சதுர அடி கட்டணமின்றியும் 50 சதுர அடி, சதுர அடிக்கு ரூ.629 என்ற விலையிலும் கடைகள் வைக்க நிலம் தரப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் சொல்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. மனை ஒதுக்குவதுதான் எங்கள் வேலை, அடிப்படை வசதிகளை குடிசை மாற்று வாரியம்தான் செய்ய வேண்டும் என்று கை கழுவும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என தெரிகிறது என அவர்கள் சொல் வதில் தெரிகிறது. அப்படியிருக்க, இங்கிருப்பவர்களை அகற்றுவதில் ஏன் இந்த அவசரம்?
இரண்டாவது கட்டத்தில் 1199 மனைகள் தயாராகும் என்றும் 200 முதல் 700 சதுர அடி என மனைகள் இருக்கும் என்றும் இதற்கு செலவு ரூ.11.39 கோடி என திட்டமிடப்பட்டு இப்போது ரூ.19.64 கோடியாகியுள்ளது என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சொல்கின்றனர். கூடுதல் செலவு எப்படியானது என்பது நமக்கு எளிதில் விளங்கிவிடும் விசயம்தான். இந்த கூடுதல் தொகையாவது செலவிடப்பட்டதா, வேறு எங்காவது போய்விட்டதா என பார்க்க வேண்டும்.
புதுப்பேட்டையில் எல்ஜி ரோடில் 2ஆம் எண் கடையில் மாதவரத்தில் இருந்து வரும் 67 வயது தொழிலாளி (67 வயதிலும் தொழிலாளி) வி.ஜி.நாகராஜன், நான் இங்கு சுமார் 25 வருட காலம் கூலி வேலை செய்து வருகிறேன், நான் வேலைக்கு சேரும்போது ரூ.15 சம்பளத்தில் சேர்ந்தேன், இப்போது ரூ.500 நாள் ஒன்றுக்கு கிடைக்கிறது, இப்போது கடைகளை இடித்து வருவதால் ரூ.500 வரை கூலி கிடைக்கும் வேலை செய்பவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். செங்கல்பட்டு அருகில் எஸ்பி கோயிலில் மாற்று இடம் தருவதாக சொல்கிறார்கள். இதனால் இங்கு வேலை செய்தவர்கள் குடும்பத்தினர் சுமார் 10000 பேருக்கும் மேல் பிழைப்பு போய்விட்டது என்றார்.
43 வயதுள்ள அபிப், வெல்டிங் செய்யும் தொழிலாளி. அவர் 33 ஆண்டுகளாக இங்கு வேலை செய்கிறார். ரூ.5 கூலிக்கு வேலைக்கு சேர்ந்தவர், இப்போது ரூ.650 கூலி பெறுவதாகச் சொன்னார். ‘இங்கு சுமார் 10000 பேர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். 35 வயது முதல் 45 வயது வரை, பல பொறுப்புகள் உள்ளவர்கள், இங்கு வேலை செய்கிறார்கள். இப்போது எங்களை எஸ்பி கோயில் போகச் சொல்கிறார்கள். நாங்கள் சென்னை மய்யப் பகுதியில் வாழ்ந்து கூலி வேலை செய்து பிழைத்தவர்கள். எப்படி 100 கி.மீ. தொலைவில் சென்று வேலை செய்து திரும்பவும் சென்னைக்கு வர முடியும்?’ என தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
ராஜ்குமார், ஆட்டோ மெக்கானிக், வயது 35. சிந்தாதிரிபேட்டையை சார்ந்தவர். அவரை சந்தித்தபோது, ‘எங்கள் பிழைப்பு பறிபோய் விட்டது. இன்று நடுத்தெருவில் இருக்கிறோம். இந்த அரசு மக்களுக்கான அரசு இல்லை. எங்கள் குடும்பங்களும் இந்த இடத்திலிருந்து விரட்டப்படுவதால் எங்களுக்கு உணவுக்கே பிரச்சனை வந்துவிட்டது’ என்றார்.
சந்திரன் (வயது 67), மாரிமுத்து (வயது 63) ஆகியோர் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வேலை செய்து வருவதாகச் சொன்னார்கள். ஆட்டோ டிங்கரிங் வேலை செய்கின்றனர்.‘ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அரசு பெரும் துரோகம் செய்துள்ளது. எங்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் நாங்கள் தொழில் செய்த இடத்தை இடித்துத் தள்ளி எங்கள் பொருட்களை சேதப்படுத்தி தூக்கி வீசியது. நாங்கள் பெரும்துயரத்திற்கு ஆளாகியுள்ளோம். இப்போது தொழிலே பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகிவிட்டது. நாங்கள் எஸ்பி கோயிலுக்கு எப்படி போக முடியும்? அருகில் கோயம்பேடு உள்ள இடத்தில் எங்காவது இடத்தை அரசு ஒதுக்கினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காது’. அடிமை பழனிச்சாமி அரசு இவர்கள் குமுறல்களுக்கு பதில் சொல்லுமா?
பூந்தமல்லி, அம்பத்தூர், புழல் போன்ற இடங்களுக்கு தொழிலாளர்களும் சில கடை உரிமையாளர்களும் அவர்களே மாறுவதாக மாரிமுத்து சொன்னார். ஆட்டோ நகர் போக அவர்கள் தயாராக இல்லை. ‘ஒரு நட்டு, ஒரு போல்ட் மாத்த, சின்னசின்ன ரிப்பேருக்கு அம்பது கிலோ மீட்டர் தாண்டி அவ்ளோ தூரம் ஆட்டோ ஓட்டுறவங்க, மத்தவங்க வர மாட்டாங்க. பக்கத்துல ஏதாவது இடம் தந்தா நல்லது’ என்றார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் பயன் படுத்தப்படாமல் இருக்கும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், புதுப்பேட்டைக்கு மிக அருகில்தான் உள்ளது. இந்தத் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் அங்கே மாற்றினால் என்ன?