அகில இந்திய விவசாயிகள் மகாசபை
முதல் மாநில மாநாடு
அக்டோபர் 27, தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் நினைவு தினத்தன்று கும்பகோணத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபை (ஏஅய்கேஎம்)யின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.
தோழர்கள் ராம்நரேஷ் ராம் - டிகேஎஸ் ஜனார்த்தனன் அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில், தோழர் நாராயணன் கொடியேற்றினார். அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தேசியச் செயலாளரும் மாநாட்டின் மத்திய பார்வையாளருமான தோழர் ஹரிநாத் துவக்கவுரை ஆற்றினார்.
மாநாட்டில் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் வாழ்த்துரையாற்றினர். தோழர் பாலசுந்தரம் தோழர் சுப்பு நினைவு பாடல் பாடினார்.
தோழர் சிம்சன் மாநிலத் தலைவராகவும் தோழர் கன்னையன் மாநிலத் துணைத் தலைவராகவும் தோழர் சந்திரமோகன் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தோழர்கள் அய்யந்துரை, சக்திவேல் மாநிலச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 17 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் திட்டங்களை, வேதாந்தாவுக்கும் ஓஎன்ஜிசிக்கும் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை, உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டுமென, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாநாடு கோருகிறது.
2. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்கும், சுற்றுச் சூழலை, இயற்கையை சீரழிக்கும் எட்டு வழி, ஆறு வழி விரைவுச் சாலைத் திட்டங்களை கைவிட வேண்டுமென, மத்திய அரசின் பாரத் பரியோஜன மாலா, சாகர்மாலா திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்கள் மீதும் விவசாயிகள் மத்தியில் பொது விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென மாநாடு கோருகிறது.
3. கோவில்கள், மடங்களின் நிலங்களில் பல ஆண்டுகளாக நேரடியாகப் பயிரிடும் குத்தகை விவசாயிகளை குத்தகை உரிமை பதிவேடு சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டுமென, கோவில், மடங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாநாடு கோருகிறது.
4. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் (உதாரணமாக பவர் கிரிட் திருப்பூர் - சத்திஸ்கர், ரெய்கார்) திட்டத்தை அமலாக்க மேற்கொள்ளும் கெடுபிடிகளை, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று மாநாடு கோருகிறது.
5. விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி செலவுடன் + அரை மடங்கு தொகையை சேர்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி, கட்டமைக்கும் நவம்பர், 28, 29, 30 பேரணியில் பங்கேற்க, பேரணியை வெற்றிகரமாக்க பாடுபட மாநாடு தீர்மானித்தது.
6. எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், பவர் கிரிட் மின்கோபுரங்கள், ஸ்டெர்லைட் என பல்வேறு விவசாய விரோத திட்டங்களை எதிர்க்கிற விவசாயிகள், செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது; அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என மாநாடு கோருகிறது.
7. தமிழ்நாட்டில் தற்சமயம் நடைபெற்று வருகின்ற அனைத்து தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள், ஜனநாயக போராட்டங்களுக்கு மாநாடு ஒருமைப்பாடு தெரிவிக்கிறது.
8. காவிரி நீர்ப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்ததற்காக பழிவாங்கப்பட்ட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளுக்காக 66 நாட்களுக்கு மேலாக நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற மாநாடு வாழ்த்து தெரிவிக்கிறது.
9. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென மாநாடு கோருகிறது.
10. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என மாநாடு கோருகிறது.
11. எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் போன்ற கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக, குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காக, விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை போன்ற கோரிக்கைகளுக்காக தொடர் பிரச்சாரம், கிளர்ச்சி நடவடிக்கைகளைக் கட்டமைக்க மாநாடு தீர்மானிக்கிறது.
12. 2019 இறுதிக்குள், 50,000 சங்க உறுப்பினர்கள், பத்து மாவட்டங்களில் மாவட்ட மாநாடுகள் என்ற அமைப்பு கடமைகளை நிறைவேற்ற மாநாடு தீர்மானிக்கிறது.
13. தமிழகத்தில் விவசாய நெருக்கடியால் தொடரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள், விவசாய நிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மூலக்காரணமான மத்திய பாஜக ஆட்சி, அதன் பினாமியாக செயல்படும், மாநில அதிமுக பழனிச்சாமி ஆட்சிகளை வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலில், தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தோற்கடிக்க வேண்டும் என்று மாநாடு அழைப்பு விடுக்கிறது.