COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

மகிழ்ச்சியும் வருத்தமும் தரும் 
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள்

அக்டோபர் 29 அன்று பாப்ரி மசூதி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருந்தது, சங்பரிவாருக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்திருந்தது.
அக்டோபர் 29 அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் அமர்வம் முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி, வழக்கு ஜனவரி மாதம் ஓர் அமர்வத்திற்கு ஒதுக்கப்படும், அந்த அமர்வம் விசாரணை தேதியை முடிவு செய்யும் என்று சொல்லிவிட்டார். மே 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பாப்ரி மசூதி வழக்கின் தீர்ப்பு வர வாய்ப்பில்லை. தேர்தலில் தீர்ப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பு சங்பரிவாருக்கு மறுக்கப்பட்டுவிட்டது. (சங் கும்பல், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் போடு, அய்யப்பன் கோயில் விஷயத்தில் நீதிமன்றத் தலையீடு தவறு என்றெல்லாம் கூப்பாடு போடுகிறது). ஜனவரியில்தான் விசாரணை அமர்வம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத் தக்கது.
பீமா கொரேகான் வழக்கில் மகாராஷ்டிரா அரசு 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. கூடுதல் அவகாசம் கேட்ட அரசின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம், சரியான காரணங்கள் சொல்லி நிராகரித்தது. கட்லிங் மற்றும் நால்வர் பிணை பெறும் வாய்ப்பு உருவானது. இப்போது உச்சநீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 90 நாட்கள் அவகாசம் தந்துள்ளது. சுதா பரத்வாஜ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரேரா ஆகியோர் கைதுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.  குடிமக்களின் உரிமைகள் என்று வரும்போது, அரசு, பயங்கரவாதம் தீவிரவாதம் எனப் பயம் காட்டும்போது, உச்சநீதிமன்றமும் தயங்குகி றது; அல்லது வன்மையான அரசு, கடுமையான சட்டங்கள் பக்கம் நிற்பதுதான் தன் கடமை எனக் கருதுவதாகத் தெரிகிறது. அய்வர் வழக்கில் நீதிபதி சந்திரசூட் அணுகுமுறையை, முடிவுகளை உச்சநீதிமன்றம் ஏற்காதது, இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

Search