COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 15, 2018

அய்எல்&எப்எஸ்அய் காப்பாற்றவும் வேண்டாம்! 
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்கச் செய்யவும் வேண்டாம்!

ஜி.ரமேஷ்

உள்கட்டமைப்பு அல்லது அடிப்படை வசதி குத்தகை மற்றும் நிதிச் சேவை, அய்எல்&எப்எஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம்.
இந்த நிறுவனம் இப்போது மூழ்கும் நிலையில் இருக்கிறது. இதைக் காப்பாற்ற மோடி அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. முதலாளித்துவ பத்திரிகைகள், காலந்தாழ்ந்துதான் என்றாலும் தேவையான நடவடிக்கை என்று சிலாகித்துக் கொண்டிருக்கின்றன.
அய்எல்&எப்எஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,15,000 கோடி. அதேவேளை, இந்த நிறுவனத்தின் கடன் ரூ.91,000 கோடி. சொத்தை விற்று  கடனை அடைத்தால் என்னாகும்? கம்பெனி காணாமல் போகும். நிறுவனத்திடம் கையிருப்பு ரொக்கம் இல்லை. அதனால், மோடி, அருண் ஜெட்லி வகையறாக்கள் வழக்கம்போல் மக்கள் வரிப்பணத்தை அள்ளித் தந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
எல்அய்சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணத்தைக் கொண்டு, அய்எல்&எப்எஸ் பங்குகளை வாங்கி அந்தத் தனியார் நிறுவனத்தைக் காப்பாற்றுகிறார்கள். அதாவது,  எல்அய்சி, ஸ்டேட் பாங்க், சென்டல் பாங்க் ஆகியவற்றில் உள்ள ஏழை, நடுத்தர உழைக்கும் மக்கள் உழைத்துச் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கொடுத்து தனியார் முதலாளிகளைக் காப்பற்றப் போகிறார்கள்.
நீரவ் மோடி, முகுல் சோக்சி போன்றவர்கள் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் ஓடிவிட்ட தால் நஷ்டத்தில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் பாங்க், அய்டிபிஅய் வங்கி போன்றவற்றைக் காப்பாற்ற ஏற்கனவே எல்அய்சியின் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 31 மார்ச் 2018 நிலவரப்படி அய்எல்&எப்எஸ்சில் மட்டுமே 25.34% பங்குகளை வாங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் 6.42% பங்குகளையும் சென்டரல் பாங்க் 7.67% பங்குகளையும் அய்எல்&எப்எஸ்சில் வாங்கியுள்ளன. ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் ஜப்பான் நிறுவனம் 23.54% பங்குகளை வைத்துள்ளது.
அய்எல்&எப்எஸ் ஒரு தனியார் நிறுவனம் என்ற போதிலும் குறைந்த அளவில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளும் அதில் இருக்கும். அதுவும் காரணத்தோடுதான். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக அய்எல்&எப்எஸ் ஃபைனான்சியல் சர்வீஸ் லிட், அய்எல்&எப்எஸ் டிரான்ஸ்போர்ட் நெட் ஒர்க் லிட், அய்எல்&எப்எஸ் என்விரோன்மென்டல் இன்ஃபிராக்ஸ்டெக்சர் அன்டு சர்வீஸ் லிட் என உள்ளன. இந்த நிறுவனங்கள் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும். எப்படி கடனாளியானது இந்த அய்எல்&எப்எஸ் நிறுவனம் என்று பார்ப்பதற்கு முன், எப்படி பணம் பார்க்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம். மோடியின் குஜராத்தில் என்ன நடந்தது என்று பார்ப்பதன் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம்  சுருக்கமாக கிப்ட் சிட்டி என்கிற மெகா திட்டத்தை குஜராத் அரசு உருவாக்கியது. ரூ.70,000 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை குஜராத் அரசு, தனியார் நிறுவனமான அய்எல்&எப்எஸ் நிறுவனத்திடம் கொடுத்தது. இந்த கிப்ட் சிட்டியின் முதல் சுதந்திரமான இயக்குநரும் முன்னாள் தணிக்கைக் குழுத் தலைவருமான திரு.அஞ்சாரியா, இப்போது குஜராத் அரசுக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்துள்ளார். (வழக்கு எண் 260/2015) குஜராத் அரசு, இந்தத் திட்டத்தை அய்எல்&எப்எஸ் நிறுவனத் திடம் கொடுத்ததன் வாயிலாக அரசுக்கும் மக்களுக்கும் ரூ.70,000 கோடி நஷ்டம் என்கிறார். அஞ்சாரியாதான் கிப்ட் சிட்டி திட்டத் தினையே உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்சிப் (பிபிபி) என்ற பெயரில், திட்டத்தின் பெரும் பகுதி தனியார் நிறுவனமான அய்எல்&எப்எல் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது. திட்டம் முடிவடையாமல் பிந்திக் கொண்டி ருக்க, பணம் மட்டும் போய்க் கொண்டேயிருக்கிறது. திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் அனைத்து நிர்வாக ஒப்பந்தங்களும் இந்த அய்எல்&எப்எஸ் நிறுவனத்திடம்தான் உள்ளன. ஒப்பந்தங்களை அதிகமான கட்டணங்களுக்கு போட்டுள்ளது இந்த நிறுவனம். இதில், வெளிப் படைத்தன்மையோ, அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ தெரியப்படுத்தவேண்டிய பொறுப்போ கிடையாது. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக திரு.அஞ்சாரியா கேள்வி கேட்டார் என்பதற்காக, அய்எல்&எப்எஸ் நிறுவனம் இத்திட்டத்தின் சுதந்திரமான இயக்குநர் பதவியை அஞ்சாரியாவிற்கு புதுப்பிக்கவில்லை.
இந்த நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே கொள்ளையடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது.  கிப்ட் சிட்டி உருவாக்கத்தின் போது, குஜராத் அரசுக்குக் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு (நட்ஹம் கஹய்க் ஈங்ஹப்) எடுத்து கிப்ட் சிட்டி திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த கிப்ட் சிட்டி திட்டத்தில் குஜராத் அரசும் அய்எல்& எப்எஸ் நிறுவனமும் பாதி பாதி கூட்டாளிகள். ஒட்டுமொத்த நிர்வாக உரிமைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அய்எல்&எப்எஸ் நிறுவனத்தி டம். அரசாங்கம் பணம் மட்டும் போட வேண்டும். அரசாங்கத்திடம் எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. எப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை மோடி வகையறாக்கள் போட்டுள்ளார்கள்? இப்போது, அய்எல்&எப்எஸ் நிறுவனம் இந்த திட்டத்திற்குத் தேவையான 880 ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற விதத்தில் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கிப்ட் திட்டம் தொடங்கும்போது ரூ.5 கோடி மூலதனம் போடப்பட்டது. குஜராத் அரசாங்கம் ரூ.2.5 கோடி, அய்எல்& எப்எஸ் நிறுவனம் ரூ.2.5 கோடி போட்டார்கள். அதற்குப் பிறகு இந்த நிறுவனம் எந்த முதலீடும் போடவில்லை. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பல கோடிகள் மதிப்புள்ள 880 ஏக்கர் நிலத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்துக் கொண்டது நிறுவனம். அந்த நிலம், ஏக்கர் இரண்டு கோடி மதிப்பு உள்ளது. வெறும் 2.5 கோடி ரூபாய் போட்டுவிட்டு 440 கோடி ரூபாயை இந்த நிறுவனம் கொள்ளை அடித்து விட்டது. இது முதல் வளர்ச்சி.
அடுத்து, தங்கம் பூசப்பட்ட ஒப்பந்தங்கள் (எர்ப்க் ல்ப்ஹற்ங்க் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ள்) மூலம் பல ஆயிரம் கோடிகள் பணம் பார்த்தது. திட்டத்திற்கு நிலம் அரசாங்கம் கொடுத்துவிட்டது. திட்டத்திற்கு தன் நிர்வாகத்தின் கீழுள்ள நிபுணர்களை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், அவர்களை பயன்படுத்திக் கொள்ள தனியாக ஓர் ஒப்பந்தம் போட்டது. தன்னிடம் உள்ள நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் திட்டத்தில் இருந்து அய்எல்&எப்எஸ் நிறுவனத்திற்கு, வரி தவிர்த்து, அன்றாடச் செலவுகள் தவிர்த்து ரூ.20 லட்சம் மாதம் தரப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் திட்ட இயக்குநர்களும் அஞ்சாரியா தலைமையிலான தணிக்கை குழுவும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஒப்பந்தம் போட்டு பணம் பார்க்க வழி வகை செய்து கொண்டது இந்த வளர்ச்சிக்கான நிறுவனம்.
திட்டத்தின் முதலாண்டு இறுதியிலேயே தான் போட்ட முதலை, நிர்வாகக் கட்டணம் என்ற பெயரில் திருப்பி எடுத்துக் கொண்டது அய்எல்&எப்எஸ். தான் அமர்த்திய நிபுணர்கள் கட்டணமாக மட்டும் ரூ.400 கோடி வரை கடந்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் இருந்து பெற்றுள்ளது இந்த நிறுவனம். இது இரண்டாம் கட்ட வளர்ச்சி ஏற்பாடு.(தொடரும்)

Search