விவசாயத்தை அழிக்கும் நாசகரத் திட்டங்களை
விவசாயிகள் போராட்டங்களால் முறியடிப்போம்!
நாட்டின் தலைநகர் டில்லியில் நூறு நாட்களுக்கும் மேல் காத்திருந்தும் விதவிதமான போராட்டங்கள் நடத்தியும் நாட்டின் பிரதமரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல கடைசி வரை முடியாமல் வீடு திரும்பினார்கள் தமிழக விவசாயிகள்.
மத்தியபிரதேசத்தின் மான்ட்சாரில் கடன் தள்ளுபடியும் விளை பொருளுக்கு கட்டுப்படியாகும் விலையும் கேட்டுச் சென்ற விவசாயிகள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள். விவசாயிகளை டில்லிக்குள் வரவிடாமல் அவர்கள் மீது கொடூரமான காவல்துறை வன்முறை ஏவப்பட்டு பலரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியது மோடி அரசின் மிகச் சமீபத்திய சாதனை. மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிற விவசாய நெருக்கடியில் இருந்து மீள, விவசாயத்தை, விவசாயிகளை ஒழித்துவிடுவது என்ற ஆகச்சிறந்த தீர்வை மோடி அரசாங்கம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஹைட்ரோகார்பன் எக்ஸ்பளரேஷன் அண்டு லைசன்சிங் பாலிசி. ஹெல்ப் என்று இதைச் சொல்கிறது மோடி அரசு. 2016 மார்ச்சில் இந்தக் கொள்கை வெளியிடப்பட்டது. இப்போது, விரும்புகிற நிலத்துக்கான உரிமக் கொள்கை (ஓபன் ஏக்கரேஜ் லைசன்சிங் பாலிசி) அடிப்படையில் நாடெங்கும் மிகப்பெரும் நிலப்பரப்பு வேதாந்தா உள்ளிட்ட தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான ஹைட்ரோகார்பன் பொருட்களும் எடுக்க தரப்படுகிறது. 2022ல் எண்ணெய் இறக்குமதியை 80 சதத்தில் இருந்து 67 சதமாக, 2030ல் 50 சதமாக குறைப்பது இந்தக் கொள்கையின் நோக்கம் என மோடி அரசு சொல்கிறது. தேசிய தரவு களஞ்சியத்தின் உதவியுடன் ஒதுக்கப்பட்ட பகுதியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பதை கண்டறிவது, உற்பத்தி செய்வது ஆகியவற்றில் கண்டறியும் நிறுவனங்களுக்கு, உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் ஏற்பாடு இது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அக்டோபர் 1 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 59,282 சதுர கி.மீ நிலப்பரப்பு கொண்ட 55 பகுதிகள் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் விடப்பட்டதாகவும் அவற்றில் 41 பகுதிகளை, தூத்துக்குடியில் தமிழக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதற்குக் காரணமான, வேதாந்தா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த 41ல் மூன்று பகுதிகள், அல்லது மண்டலங்கள் தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் உள்ளன. கதிராமங்கலம், நெடுவாசல் பகுதி மக்கள் விடாப்பிடியான போராட்டம் நடத்தி தங்கள் பகுதியில் இருந்து விரட்டியடித்த ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் தமிழக விவசாயத்தை அழிக்க வருவது, ஏற்கனவே பல உயிர்களை பலி கொண்டுவிட்ட வேதாந்தா தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பை பெறுவது என்ற பெரும் இரட்டை அதிர்ச்சிக்கு, இந்தச் செய்தி தமிழக மக்களை உள்ளாக்கியிருக்கிறது.
காவிரிப் படுகையில் வேதாந்தாவுக்கு 4,368 சதுர கி.மீ அளவுக்கும் ஓஎன்ஜிசிக்கு 731 சதுர கி.மீ அளவுக்குமான நிலப்பரப்பில் ஹைட்ரோகார்பன் கண்டறிய, உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வேதாந்தா போட்டுள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3,934 கோடி. மரக்காணம் முதல் கடலூர் வரை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கும் பரங்கிபேட்டை முதல் வேளாங்கண்ணி மற்றும் குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை என இரண்டு மண்டலங்கள் வேதாந்தாவுக்கும் இந்த ஏலத்தில் தரப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகள் என்று துவங்கி 20 ஆண்டுகள் வரை நிலம் வேதாந்தாவிடம் இருக்கும்.
ஒரு சதுர கி.மீ, 247 ஏக்கர். இந்த ஏலத்தில் வேதாந்தா கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட 11 லட்சம் ஏக்கர் நிலங்களை தந்துவிட்டார்கள். ஓஎன்ஜிசி கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் நிலங்களை எடுத்துக்கொள்கிறது. எல்லாம் விவசாயம் நடக்கிற காவிரிப் படுகையில். இதனால் பிரச்சனை வராது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்கிறார். மோடி ஆட்சியின் அமைச்சர்கள் பொய்யர்கள் என்று தெரிகிறது. முட்டாள்களுமா? ஓஎன்ஜிசி 3,000 மீட்டர் ஆழத்துக்கும் வேதாந்தா 4,000 மீட்டர் ஆழத்துக்கும் கிணறுகள் எடுக்கும். நீரியல் விரிசல் முறை பயன்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயம் நிலம் இருக்கும் பகுதி முழுவதும் பாலைவனம் ஆகிவிடும். இது பிரச்சனை இல்லையா? இவை கூட இந்த நட வடிக்கைகள் துவங்கிய பிறகு ஏற்படும் விளைவுகள். முதலில் விவசாயம் அழிக்கப்பட்டுவிடும். அது பிரச்சனை இல்லையா?
இவ்வளவு பெரிய ஆபத்து தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு வரவுள்ளபோது, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சரை சந்தித்து, வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.5,776 கோடி நிதி வேண்டும் எனக் கேட்டு, சில திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு என்பதில் இருந்து விலக்கு வேண்டும் என்கி றார். சில நாட்கள் முன்புதான் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்து ரூ.4,500 கோடி நிதி கேட்டார். அதை விட கூடுதல் நிதி கேட்கும் சுற்றுச் சூழல் அமைச்சர், கருத்துக் கேட்பு நடக்கக் கூடாது என்று சொல்லும்போது, யாருக்கு, என்ன பங்கு என்று நமக்கு கேள்வி எழுகிறது.
வேதாந்தா நிறுவனம் பெறும் ஒரே உரிமத்தில் மரபு வகை மற்றும் மரபுசாரா ஹைட்ரோகார்பன்களை கண்டறிய, எடுக்க முடியும். இங்கு எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்கள் விலையை அந்த நிறுவனம் நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளுக்கான வகை பிரித்தலில், காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருட்கள் இருப்பது உறுதியாகி இருப்பதால் இது முதல் வகையினத்தில் வருகிறது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நாளொன்றில் 1 மில்லியன் டாலர் முதல் 4.5 மில்லியன் டாலர் வரை வருமானம் வரும் என மதிப்பிடப்படுகிறது. அரசுக்கு சற்றுக் கிள்ளித் தந்துவிட்டு மொத்தமும் வேதாந்தா அள்ளிக் கொண்டு போகும். ஆட்டோமொபைல் நிறுவனங்களை பொது பயன்பாட்டுச் சேவை என அறிவித்து, தொழிலாளர்களைச் சுரண்ட அந்த நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தருவதுபோல், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு பொதுப் பயன்பாட்டுச் சேவை என்ற அடிப்படையில் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று கேட்கிறாரா அமைச்சர்?
விவசாய நிலங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட செய்தி வந்ததும் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தபோது, தமிழ் நாட்டில் அந்தத் திட்டங்களை வரவிட மாட்டோம், யாரும் இங்கு வந்து நிலத்தை தொட்டு விட முடியாது என்று துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சவடால் பேசுகிறார். அவர் பொறுப்பில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 19.07.2017 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணை, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர் காழி, தரங்கம்பாடி தாலுகாக்களின் 45 கிராமங்கள் அடங்கிய 22,938 ஹெக்டேர் நிலப்பரப்பை பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவித்துவிட்டது. விவசாய மண்டலம் பெட்ரோல் மண்டலமாகிவிட்டது. பசுமை வெளி பாலைவனமாகப் போகிறது.
இந்த 45 கிராமங்களின் 22,938 ஹெக்டேர் நிலமும் இப்போது வேதாந்தாவுக்கும் ஓஎன்ஜி சிக்கும் தரப்பட்டுள்ள கிட்டத்தட்ட 13 லட்சம் ஏக்கர் நிலமும் ஒன்றா, வெவ்வேறா என்ற விவரம் வரக் காத்திருக்கலாம். ஆனால், விவசாய நிலங்களின் பெரும்பகுதியை ஏற்கனவே பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவித்துவிட்டு, ஹைட்ரோகார்பன் திட்டத்தில் யாரும் நிலங்களை தொட்டுவிட முடியாது என்ற வீரவசனம் யாரை ஏமாற்ற? தற்போதைய ஆட்சியில் 3100 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் யாரை ஏமாற்ற?
வாழ்விடங்களில் இருந்து மக்களை விரட்டுகிறார்கள். சென்னையின் கொரட்டூர் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி 589 குடும்பங்களை, அவர்கள் வீடுகளை புல்டோசர்களால் இடித்து, வெளியேற்றுகிறார்கள். மறுபக்கம் ஆட்கொல்லி வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசுடன் ஒத்திசைந்து செயல்பட்டு மிகப்பெருமளவுக்கு விவசாய நிலத்தையே தருகிறார்கள்.
தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்துவிடும் ஹைட்ரோகார்பன் திட்டம் ஆட்கொல்லி வேதாந்தா மூலம் வருவது, ஆட்சியாளர்களின் வஞ்சகத்தையும் தமிழக மக்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தையும் முன்னறிவிக்கும்போது, வாழ்வாதாரத்தை, விவசாயத்தை, விவசாயிகளை காக்க கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் காட்டுகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டம் விரட்டியடிக்கப்பட்டதுபோல் விவசாயத்தை நாசமாக்கும் எட்டுவழிச் சாலை திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எட்டு வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை இந்த சவாலான சூழலில் அக்டோபர் 27 அன்று கும்பகோணத்தில் முதல் மாநில மாநாடு நடத்தவுள்ளது. விவசாய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிற மத்திய, மாநில ஆட்சியாளர்களை விவசாய சமூகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளபோது, விவசாயத்தை அழிக்கும் நாசகரத் திட்டங்களை முற்றிலுமாக விரட்டியடிக்க உழைக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டியுள்ளது.