செங்கோட்டையை பரிசோதனை கூடமாக்கும்
பாசிச சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்
தோழர் ஜி.ரமேஷ் (அகில இந்திய மக்கள் மேடை), தோழர் சுந்தர்ராஜ் (புரட்சிகர இளைஞர் கழகம்) செப்டம்பர் 25, 26 தேதிகளில் செங்கோட்டை பகுதி மக்களை சந்தித்து உரையாடிய விசயங்களின் தொகுப்பு. தொகுப்பு: ஜி.ரமேஷ்
‘உள்ளூர்காரவுக யாரும் இல்லையாம் மேலப் பாளையத்தில இருந்து வந்திருக்காங்களாம்’
‘மறைஞ்சு நின்னு கல்ல வீசுதாங்க’
‘எங்கூட்ல கூட இரண்டு கல் விழுந்துச்சு’
‘25 வருஷமா பிள்ளையார் ஊர்வோலம் போயிட்டுருந்த பாதையில இப்ப போகக் கூடாதுங்கறாக முசுலீமு. அதெப்பிடி விட்டுக் கொடுக்க முடியும்’
‘இந்துக்கள் வீட்டுல ஒருத்தரும் கிடையாதுல்லா யல்லாரும் தாலுகாபீஸ்ல இருக்காங்க. அவங்க ஒன்னாருக்காங்க நாம இந்துக்கள் ஒன்னாருக்கமுனுல்லா’
பிள்ளையார் சதுர்த்தி நாட்களில் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டையில் சொன்னவை இவை. சரியாகச் சொன்னால் அவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி ஆகஸ்ட் 13 அன்று செங்கோட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம். வழக்கம் போல் விஷம் கக்கும் பேச்சு. இது இந்துக்களின் நாடு, இந்துக்கள்தான் ஆள வேண்டும், இசுலாமியர் பாகிஸ்தானுக்குப் போகட்டும், நாம் நம் விநாயகரை எங்கு வேண்டுமானாலும் வைப்போம், எல்லா தெரு வழியாகவும் கொண்டு செல்ல வேண்டும், பிள்ளையார் ஊர் வலத்தில் வருபவர்கள் மீது வழக்குப் போடக் கூடாது என்றே பேசியுள்ளார். எச்.ராஜா வருவார் முன்னே. கலவரம் வரும் பின்னே. இந்தப் பொதுக் கூட்டத்தின் நோக்கமும் விளைவும் தெரிந்திருந்தும் பாஜக எடுபிடி அதிமுக அரசும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை.
சில மாதங்கள் முன்பு சங்கிகளின் ரத யாத்திரை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் செங்கோட்டை வழியாகத்தான் நுழைந்தது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அது ரதத்தை இழுத்து வந்த கூட்டத்திற்குக் கிடையாது. ரதயாத்திரை மதவெறிக் கலவரத்திற்கான வெள்ளோட்டம், இதை அனுமதிக்க முடியாது என்று இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் ரத யாத்திரையைத் தடுக்கக் கூடாது என்பதற்காக போடப்பட்டதுதான் 144 தடையுத்தரவு. காவல்துறைப் பாதுகாப்புடன் காவிகள் கூட்டம் ரதத்தை இழுத்து வந்தார்கள். மத வெறிக் கூச்சலிட்டார்கள். அவர்களை அனும திக்க கூடாது என்றவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார்கள். மீற, மறிக்கச் சென்ற தலைவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அப்போதே இந்து மதவெறியர்களுக்கு செங்கோட்டை இலக்காக ஆக்கப்பட்டுவிட்டது.
எதிர்பார்த்ததுபோல், விநாயகர் சதுர்த்தியின்போது வீதி வீதியாக புதிது புதிதாக பிள்ளையார் முளைத்தார். வழக்கத்தைவிடக் கூடுதலாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டன. 45க்கும் மேற்பட்ட இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. தலித் மக்கள் குடியிருப்பு உட்பட. அதிக அளவில் விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவதன் மூலம் கலவரம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, செங்கோட்டை மேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள், ஆகவே, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு பல்வேறு இஸ்லாமிய மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடிதம் கொடுத்தன. காவல்துறை சில கட்டுப்பாடுகள், கட்டளைகள் மட்டும் அறிவித்தது.
காவிகள், இதுவரை இல்லாத பகுதிகளிலும் பாதைகளிலும் பிள்ளையாரைக் கொண்டு செல்ல முயற்சித்தார்கள். இதற்கு இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. செப்டம்பர் 13 அன்று பிள்ளையாரை தூக்கிக் கொண்டு காவல்துறை சொன்ன வழியில் காவிகள் சென்றாலும் செங்கோட்டை பெரிய பள்ளிவாசல் அருகில் வரும்போது, ஓம் காளி, ஜெய் காளி என்று வேண்டுமென்றே கோஷம் போட்டுள்ளனர். தொடர்ந்து அந்த வழிகளில் இருந்த இசுலாமியர்கள் வீடுகளும் கடைகளும் காவிக் கும்பல்களால் அடித்து நொறுக்கப்பட்டன. பிரச்சனை வரும் என்று தெரிந்திருந்தும் பாதுகாப்பிற்கு உரிய எண்ணிக்கையில் போலீஸ் காவல் போடப்படவில்லை. ஒப்புக்கு சில காவலர்கள் மட்டுமே இருந்தனர்.
அந்தக் காவலர்கள் கண்முன்னேயே கல்லெறிந்தார்கள் காவிகள். சிறுவர்களை ஏவி விட்டு வேடிக்கை பார்த்தனர். இதைக் கண்டு பொறுக்க முடியாத இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், திட்டமிட்டரீதியில் வந்திருந்த காவிகள் கையில் வைத்திருந்த கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கினார்கள். கார்களை, பைக்குகளைக் கொளுத்தினார்கள். கோவை சசிக்குமார் ஊர்வலத்தில் இசுலாமியர் கடை புகுந்து பிரியாணி அண்டாவைத் தூக்கிச் சென்றவர்கள், செங்கோட்டையில் இசுலாமியர் மருந்துக் கடையில் இருந்து ஆணுறை களைத் தூக்கிச் சென்றனர்.
உள்நோக்கத்தோடு, கலவரத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு, பொதுக்கூட்டம் பிரச்சாரம் எல்லாம் நடத்தப்பட்டு வேண்டுமென்றே பிள்ளையார் சிலைகளை புதிய இடங்களில் வைக்க முயற்சிகள் நடக்கும்போதே, காவல்துறை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக, கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, கலவரம் ஏற்பட்ட பின்னர் காவல்துறை பட்டாளம் குவிந்தது.
தென்மண்டல காவல்துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸôர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். சில கைது நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர், அடாவடியில் ஈடுபடாத இசுலாமிய மக்களிடம் போய் அமைதி காக்க வேண்டினார். செப்டம்பர் 14 அன்றும் முதல் நாள் சென்ற அதே பாதையில் ஊர்வலம் சென்றது. மாவட்ட ஆட்சியர் பிள்ளையார் ஊர்வலத்தை தானே வீதியில் நின்று ஒழுங்குபடுத்தினார். ஆனால், காவிகள் பெண்களை, தலித் இளைஞர்களை பிள்ளையார் ஊர்வலத்தில் முன்னிறுத்தினார்கள். கொட்டு மேளம் கொண்டாட்டம், இசுலாமியர் எதிர்ப்பு கோஷம். பிள்ளையார் சிலைக்குக் கீழேயே டாஸ்மாக் உற்சாக பானம் ஊற்றித் தரப்பட்டது. மீண்டும் கல்லெறி, கலவரம், கைது நடவடிக்கைகள்.
ஊர்வலத்தில் போனவர்களை விட ஓரமாக நின்ற இசுலாமிய இளைஞர்களே அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். உணர்ச்சிவயப்பட்ட இசுலாமிய இளைஞர்களும் ஒன்று திரள, கடும் மோதல் சூழல் உருவானது. இரு தரப்பும் தெரு வில் திரண்டு நிற்க அவர்களுக்கிடையில் அரசாங்க அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் சமாதானம் பேச வந்தபோது அவர் மீது முட்டையைத் தூக்கி காவிகள் எறிய அவர் பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டார். ஆனால், முட்டை வீசியதைச் சொல்லாமல் எல்லாருக்குமான எம்எல்ஏ பள்ளி வாசலுக்குள் சென்றுவிட்டார் என அவதூறு பரப்பியது காவிக்கூட்டம். செப்டம்பர் 14 அன்று இரவு 7 மணியளவில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
சாதாரண நேரங்களில் சலவைத் தொழிலாளர், தலித்துகள் வீடுகளை எட்டிக் கூட பார்க்காத ஆதிக்க சாதியைச் சேர்ந்த காவிகள், வீடு வீடாகச் சென்று எல்லாரும் தாலுகா அலுவலகம் வாருங்கள், நம் இளைஞர்களை கைது செய்துள்ளார்கள், நாமெல்லாம் இந்துக்கள், ஒற்றுமையாக இருக்க வேண்டும், இசுலாமியருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
எல்லோரும் போகும்போதுதான் மட்டும் வீட்டில் இருந்துவிட்டால் பின்னாளில் பிரச்சனை வரலாம் என்ற பயத்திலேயே தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூடினார்கள். பெரும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு. அவர்களை அமைதிப்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் பேசியது போதாதென்று, காவிக் கூட்டத்தைச் சேர்ந்த, பாஜக, இந்து முன்னணி தலைவர்களை அழைத்து வந்து பேச வைத்தார்கள். மக்களை அமைதிப்படுத்த வந்ததாகச் சொல்லும் காவிக்கூட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம், நள்ளிரவில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
‘எங்கும் பார்க்காத இந்துக்கள் ஒற்றுமையை நான் இந்த ஊரில் பார்க்கிறேன். நாம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். நம் இளைஞர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார் கள். எங்க ஊரில் இது மாதிரி பிரச்சனை வந்தபோது முஸ்லீம்கள் இருக்கும் பகுதியைத் தவிர சுற்றியிருக்கக்கூடிய எல்லா பகுதிகளிலும் இளைஞர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தோம். அதில் பாஜக இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தலைவராகக் கிடையாது. 11 கிராமத்திலயும் ஒவ்வொரு கமிட்டி அமைச்சுருக்கோம். சாதி வேறுபாடு இருக்கக் கூடாது. நாமெல்லாம் ஒரு கலாச்சாரத்தை பின்பற்றக் கூடியவர்கள், ஒரு பண்பாட்டை பின்பற்றக் கூடியவர்கள், ஒரு கடவுளை வழிபடக் கூடிய வர்கள் என்கிற ஒற்றுமை நமக்குள் இருக்க வேண்டும். எந்த சாதியா இருந்தாலும் யாரா இருந்தாலும் ஒரே சாமியைத்தான் கும்பிடுறோம். கமிட்டியின் நோக்கம் என்னென்னா இது மாதிரி நேரத்துல ஒட்டு மொத்தமா எல்லா கிராமங்களும் நமக்கு ஆதரவா நிக்கனும்ங்கிறது ஒன்னு, இரண்டாவது அந்த கமிட்டியின் நோக்கம் என்னென்னா, இங்க செங்கோட்டையைப் பொறுத்தவரை 80% இஸ்லாமியர்களுடைய கடை அப்படித்தானே. நம்ம பாட்டி பேசுன மாதிரி மாசாமாசம் கூட்டம் போட்டு அதைச் செயல்படுத்தினால் போதும். (இந்துக்கள் யாரும் இஸ்லாமியர் கடையில் பொருள் வாங்கக் கூடாது என முன்னதாக ஒரு மூதாட்டியை பேச வைத்துள்ளார்கள். அதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்). அப்புறம் தானா உங்களுக்கு அடிமையாயிருவான். அடிக்கிறதும் வெட்டுறதும் அவங்களுக்கு மட்டும்தான் முடியுமா? நம்மளாள முடியாததுல்ல. எல்லாம் கட்டுப்படுத்தறது நம்மதான். ரத்தம் கொடுக்கவிட்டு ரத்தம் காட்டலாம். முடியாதுங்கறதுக்கப்புறம் நாம் பார்த்துக்கலாம். நம்மளால முழுசும் முடியாதபடி ஒரு சூழ்நிலை வரும் போது ஒட்டுமொத்தமா பார்த்துக்கலாம். நேரம் வரும்போது குஜராத்தில எப்படி நடந்துச்சு, மற்ற மாநிலங்களில் எப்படி நடந்திருக்கு அத உதாரணமா எடுத்துக்கிட்டு பார்த்துக்கலாம். இனிமேலும் பொறுமையாக இருக்கவிட மாட்டோம். கட்டுப்பாடா இருக்கனும். காவல் துறைக்கு தொந்தரவு தரக் கூடாது. காவல் துறை நமக்கு தொந்தரவு கொடுக்கட்டும். இது நம்ம நாடு. அவங்க நாடு அல்ல. பொறுமையா இருக்கனும். வீரத்துல விலைபோனது இந்த மண்ணு. அருவா புடிக்கத் தெரியாதவங்க இல்ல. எல்லாமே நம்மதான் கத்துக் கொடுத்தோம். இன்னைக்கு அவன் புடிக்கிறான். அவ்வளவுதான். இருந்தாலும் அத பிறகு பாத் துக்கலாம்’. அவர் விஷப் பேச்சு பேசுகிறார்.
இது அமைதிப்படுத்துவதற்கான பேச்சா? அடுத்தகட்ட கலவரம் ஏற்படுத்துவதற்கான பேச்சா? மறுபக்கம், உணர்ச்சிகரமாக இருக்கும் இளைஞர்களை இசுலாமிய தலைவர்கள் கட்டுப்படுத்துவதை காணொளிகளில் காண முடிகிறது.
சங்கிகள் வீடுவீடாக சென்று இஸ்லாமியர் கடைகளில் இந்துக்கள் பொருள் வாங்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், தான் வண்டிமறிச்சம்மன் கோவிலில் சத்தியம் செய்துவிட்டேன் இனி முஸ்லீம்கள் கடையில் பொருள் வாங்க மாட்டேன், நீங்களும் அதுபோல் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். செங்கோட்டையில் தனது உறவினர் வீட்டில் நின்று கொண்டிருந்த தோழர் சுந்தர்ராஜ் முன்னேயே, அவர் உறவினர்களிடமும் சொல்லியுள்ளார்.
ஆனால், மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. இவ அவங்க கட்சிக்கு ஆள் சேர்க்கிறா. நாங்க காலங்காலமா முஸ்லீம் கடைலதான் சாமான் வாங்கறோம். அத எப்படி மாத்த முடியும். எங்க வூட்டுல முஸ்லீம் கடைலதான் வேலை பாக்கிறாங்க. எங்க பொழப்புல மண்ணைப் போடச் சொல்றாங்க என்றாராம் மாரியம்மாள் என்கிற பெண்.
செங்கோட்டையில் இசுலாமியர் கடைகள் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. இசுலாமிய இளைஞர்கள் ஊரில் தங்கவில்லை. 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எல்லாரும் இரவு 10 மணிக்குள் வீடுகளுக்கு வந்து விடுகிறார்கள். இந்துக்களோ இசுலாமியர்களோ அய்ந்து பேருக்கு மேல் ஒன்று சேர்ந்து சென்றால் அவர்கள் மீது வழக்குப் போடப்படுகிறது. காவலர்கள் குவிக்கப்பட்டு பதட்ட நிலையையே தொடர்ந்து இருக்கச் செய்கிறார்கள்.
செப்டம்பர் 16 அன்று ஜெயமூர்த்தி என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து சபரிமலை பக்தர்கள் சென்ற இரண்டு பேருந்துகள் செங்கோட்டை கோட்டான்குளம் வழியாக சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லெறிந்துள்ளார்கள். பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி வந்து அவர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்கள். முதலில் தங்கள் பெயர்களை இசுமாயில், அப்துல் காதர் என்று சொன்னவர்கள் பின்னர் உண்மையில் தங்கள் பெயர் அருண், முருகேசன் என்றும் தாங்கள் இந்து முன்னணி உறுப்பினர்கள் என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள்தான் பிள்ளையார் சிலைகளையும் சேதப்படுத்தினார்களா என்று விசாரித்துக் கொண்டிருப்பதாக காவல் ஆய்வாளர் கூறுகிறார். ஆனால், இவர்களே பிள்ளையார் சிலையை உடைத்தவர்களாக இருந்தாலும் மேலிடத்து உத்தரவால் அவர்கள் மீது பிள்ளையார் சிலை உடைப்பு வழக்கு பதிவு செய்யப்படாது ஏனென்றால், அப்படி பதிவு செய்யப்பட்டால் காவிகளின் காலித்தனமும் பாஜக அதிமுக அரசுகளின் கள்ளத்தனமும் அம்பலமாகிவிடும். சிலையை உடைப்பது, குண்டு வைப்பது பின்னர் இசுலாமியர் மீது பழி போடுவது ஆகியவை காவிகளுக்கு கை வந்த கலை. தென்காசி இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு தயாரித்து அது வெடிக்க, பழியை இசுலாமியர்கள் மீது போட்டவர்கள்தான் காவிக் கூட்டங்கள்.
அவர்களைக் காப்பாற்ற பாஜக தலைவர் தமிழிசை, பாதிக்கப்பட்ட இந்துக்கள் குடும்பங்களைச் சந்திக்க போகப் போவதாக அறிவித்து புறப்பட்டார். காவல்துறை மறுத்துவிட்டதால் அவர்களை ஆலங்குளத்தில் சந்தித்துவிட்டு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார். தமிழிசைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த எப்பொழுது வேண்டுமானாலும் அனுமதி தரப்படுகிறது. இதே பிரச்சனைக்கு மற்ற கட்சிகள், அமைப்புகள் கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்துச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கிறார். அவர்களை கல்லெறியச் செய்துவிட்டு போலீஸ் கைது செய்யும் போது அது கூடாது என்கிறார். தமிழகத்தில் திட்டமிட்டு இந்து, முஸ்லீம் கலவரத்தை உருவாக்கி தேர்தல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள் மோடி பக்தர்கள். அவர்களது முயற்சி பலிக்கப் போவதில்லை. துவக்கத்தில் ஆதரவு அளித்த செங்கோட்டை மக்களே இவர்கள் கட்சிக்கு ஆள் பிடிக்கிறார்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
வீட்டிற்குள், கோவிலுக்குள் இருந்த விநாயகரை வீதிவீதியாகக் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு பிள்ளையார், ராணுவப் பிள்ளையார் போலீஸ் பிள்ளையார் என்று கெமிக்கல்களால் பெரிய சிலைகளாக வைத்து கலவரத்தை உருவாக்கி பின்னர் ஆற்றில், கடலில் கொண்டு போய் போட்டு, சுற்றுக்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட காவிகளின் தலைவன் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று தமிழிசை கூறுவதும் சுற்றுச்சூழலுக்கான அய்நா விருது வழங்கப்பட்டுள்ளதும் விந்தை முரண். செங்கோட்டையை பரிசோதனை கூடமாக்கும் பாசிச சக்திகள் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.