மத்திய புலனாய்வுத் துறையில் நடந்த
நள்ளிரவு நாடகம் நாட்டுக்கு நல்லதல்ல
காம்ரேட்
காங்கிரசிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா, காங்கிரஸ் என்றாலே ஊழல், ஆகவே ஊழல் இல்லாத இந்தியா. இவை மோடியை, பாஜகவை, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்த முழக்கங்கள்.
மோடியும் பாஜகவும் 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடெங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், விதிவிலக்காக தொழில்துறையினரை விசாரிக்கிற, அவர்கள் வீடுகளில் அலுவலங்களில் சோதனை நடத்துகிற, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஅய்) அலுவலகத்திலேயே, அதிரடிச் சோதனைகள்!
சிபிஅய் தலைமை அலுவலகம் அக்டோபர் 24 அன்று டெல்லி காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. ஆள்வோரின் கூண்டுக்கிளி என்று உச்சநீதிமன்றத்தால் அழைக்கப்பட்ட சிபிஅய், இன்று தலையில்லாத உடல் என்று சொன்னால், அது தவறாகாது. எண்சாண் உடலுக்கு தலையே முதன்மையானது. நாட்டின் முக்கிய ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஅய், இன்று ஊழல் புகார்களில் சிக்கி, தலையில்லாமல் இருக்கிறது. இயக்குனர், சிறப்பு இயக்குனர், கைகளிலிருந்து வேலைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இடைக்கால இயக்குனர் கைகள் கட்டப்பட்டுள்ளன. சிபிஅய் நிறுவனத்தைக் கண்காணிக்க வேண்டிய சிவிசி, அதாவது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தையும், இப்போது உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறது. மத்திய அரசு, சிபிஅய், சிவிசி என்ற ஊழல் தடுப்பு, ஊழல் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதால், வேறு வழியின்றி, இன்று சிவிசி மற்றும் சிபிஅய் உச்சநீதிமன்றத்தால் வழிநடத்தப்படுகின்றன.
இதற்கு முன் என்ன தான் நடந்தது?
நாடகத்தின் இறுதியான இறுதிக் காட்சி, இன்னமும் அரங்கேறவில்லை. ஆனால், இந்தக் கட்ட உச்சபட்ச இறுதிக்காட்சி அக்டோபர் 23 நள்ளிரவு மற்றும் அக்டோபர் 24 அதிகாலையில் நடந்தேறியது. அதன் தொடர்ச்சியே, 25.10.2018 அன்றைய உச்சநீதிமன்ற நடப்புகளாகும். அக்டோபர் 23 - 24ன் பரபரப்பான, விறுவிறுப்பான நிகழ்ச்சிகளை விரிவாகக் காணும் முன், நாடகத்தை துவக்கம் முதல் காண்போம்.
காட்சி 1
28.06.2011 அன்று வருமான வரித்துறை, குஜராத் நிறுவனங்களான ஸ்டெர்லிங் பயோடெக் மற்றும் சன்ட்ரேசா குழுமங்களில் அதிரடி சோதனை நடத்துகிறது. அப்போது, ‘2011 டைரி’ ஒன்று கைப்பற்றப்படுகிறது. அந்த டைரியில் தற்போதைய சிபிஅய் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா பெயர் பல இடங்களில் உள்ளது. அவருக்கு ரூ.3.88 கோடி லஞ்சம் தரப்பட்டதாக ஒரு குறிப்பும் உள்ளது.
காட்சி 2
டிசம்பர் 2016ல் சிபிஅய் இயக்குநர் பதவி காலியாகிறது. சிறப்பு இயக்குநர் பதவி ஒன்று உருவாக்கப்படுகிறது. பணி மூப்பில் முன்னவரான ஆர்.கே.தத்தா இடத்தில், மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கமான ராகேஷ் அஸ்தானா வர வேண்டும் என திட்டமிடப்படுகிறது. அதற்காக, உள்துறை அமைச்சகத்தில் சிறப்புச் செயலர் பதவி ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு, ஆர்.கே.தத்தா அங்கே அனுப்பப்படுகிறார். மத்திய அரசின் (ஆஸ்தான) அரசவை இடைக்கால இயக்குநராக, அஸ்தானா நியமிக்கப்படுகிறார்.
காட்சி 3
முறையான சிபிஅய் இயக்குநராக 01.02.2017 அன்று அலோக் வர்மா நியமிக்கப்படுகிறார்.
காட்சி 4
30.08.2017 அன்று டெல்லி சிபிஅய், ‘டைரி 2011’ தொடர்பாக அஸ்தானா மற்றும் பிறர் மீது, முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆர்) பதிவு செய்கிறது.
காட்சி 5
21.10.2017 அன்று, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில், சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா, அஸ்தானா பதவி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
காட்சி 6
இயக்குநரின் எதிர்ப்பை மீறி, 22.10.2017 அன்று அஸ்தானா சிபிஅய்யின் சிறப்பு இயக்குநராக்கப்படுகிறார்.
காட்சி 7
22.09.2018 அன்று சிபிஅய் பத்திரிகை குறிப்பு, அஸ்தானா மீது அரை டஜன் வழக்குகள் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
காட்சி 8
முன்னாள் பாஜக அமைச்சர்கள் அருண் ஷோரி, யஸ்வந்த் சின்ஹா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும், சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவை 05.10.2018 அன்று நேரடியாகச் சந்தித்து, ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பான 132 பக்க புகார் தந்து, நடவடிக்கை கோருகின்றனர்.
காட்சி 9
15.10.2018 அன்று சதிஷ்பாபு சனா என்பவர் புகார் அடிப்படையில் அஸ்தானாவை ஊழல் வழக்கில் முதல் குற்றம் சுமத்தப்பட்டவராக்கி, முதல் தகவல் அறிக்கை பதிவாகிறது.
காட்சி 10
அஸ்தானா கையூட்டு பெற்றார் என்ற புகாரில், சிபிஅய் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் 22.10.2018 அன்று கைது செய்யப்பட்டார்.
நடுவில் தொலையாத ஒரு பக்கம்
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியுடன் சட்ட விரோத செயல்களுக்காகத் தொடர்பு கொண்டிருந்தார் என்ற புகாரின் அடிப்படையில்தான் முன்னாள் சிபிஅய் இயக்குநர் எ.பி.சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இப்போது மொயின் குரேஷி வழக்கு, துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் இடம் பெற்றுள்ள அஸ்தானா தலைமையிலான குழுவால் விசாரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2018ல், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா தம்மிடம் ரூ.2கோடி லஞ்சம் கேட்டார் என தொழிலதிபர் சனா வாக்குமூலம் தந்ததாக, அஸ்தானா, அலோக் வர்மாவிற்கு எதிராக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் தந்தார். இதே மொயின் குரேஷி வழக்கில் சிபிஅய், இடைத்தரகர் மனோஜ் பிரசாத்தை கைது செய்தது. அவர், சனாவை விடுவிக்க அஸ்தானாவுக்கும் தேவேந்திரகுமாருக்கும் ரூ.5 கோடி தரப்பட்டது என்றும், அலோக் வர்மாவுக்கு எதிரான சனாவின் வாக்குமூலம் தேவேந்திரகுமாரால் ஜோடிக் கப்பட்டது என்றும், சனா வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்படும் நாளில் அவர் அங்கேயே இல்லை என்றும் விசாரணையில், சொல்லி உள்ளார். தேவேந்திரகுமார் மற்றும் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஅய், தேவேந்திர குமாரை கைது செய்துள்ளது. (30.10.2018 அன்று உச்சநீதிமன்றம் சனாவுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது).
காட்சி 11
அக்டோபர் 23 நள்ளிரவு 24 அதிகாலை: சிபிஅய் இயக்குநர், சிறப்பு இயக்குநர் பொறுப்புகள், அவர்களிடமிருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன. இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்படுகிறார்.
காட்சி 12
அஸ்தானா வழக்கை விசாரிப்பவர் அக்டோபர் 24 அன்று அந்தமானுக்கு மாற்றப்பட்டார். சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவின் கீழ் பணியாற்றிய அனைவரும், டெல்லியிருந்து மாற்றப்பட்டனர்.
நள்ளிரவு நாடகம்
1. அக்டோபர் 23 மாலை, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் டென்மார்க் நாட்டிற்குச் செல்ல இருந்தார். பயணத்தை ரத்து செய்து நள்ளிரவில் ஆணையர் சிவிசியின் கூட்டம் நடத்தினார்.
2. மத்திய ஊழல் தடுப்பு ஆணைய உத்தரவை எதிர்நோக்கி சிபிஅய் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ், சிபிஅய் தலைமையகத்துக்கு இரவு 11 மணிக்கு அனுப்பப்படுகிறார்.
3. இரவு 11.30 மணியளவில், டில்லி காவல் ஆணையர், தனக்குக் கீழிருப்பவர்களுக்கு, சிபிஅய் தலைமையகம் இருக்கிற கான் மார்கெட் பகுதியில் நள்ளிரவு நடவடிக்கைக்குத் தயாராகச் சொல்கிறார்.
4. 12.30 மணிக்கு சிபிஅய் தலைமையகத்தைக் கைப்பற்ற டில்லி காவல்துறை முயற்சி செய்கிறது. வளாகக் காவலில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஅய்எஸ்எஃப்) தடுக்கிறது. டில்லி காவல் ஆணையர் சிஅய்எஸ்எஃப் தலைவரிடம் பேசுகிறார். அவருக்கு பிரதமர் அலுவலக தொலைபேசி உத்தரவும் வருகிறது. காவல்துறை, சிபிஅய் தலைமை யகத்தைக் கைப்பற்றுகிறது.
5. அக்டோபர் 24 அதிகாலை 1 மணி வாக்கில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி), சிபிஅய் இயக்குநரை நீக்கும் உத்தரவை தயார் செய்தனர். அதனை பிரதமர் அலுவலக உத்த ரவுப்படி காத்திருந்த, பணியாளர் துறை செயலர், சந்திரமவுலியிடம் எடுத்துச் சென்றனர். பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, அலோக் வர்மாவின் சிபிஅய் இயக்குநர் அதிகாரம் பறிக்கவும், நாகேஸ்வர் ராவிடம் இடைக்கால அதிகாரம் வழங்கவும், ஒப்புதல் தருகிறது. விடியற்காலை 2.30 மணி அளவில், உத்தரவு அலோக் வர்மாவிடம் சார்வு செய்யப்படுகிறது.
மனிதர்கள் பொய் சொல்லலாம், சூழ்நிலைமைகள் பொய் சொல்லாது என்பது, சாட்சியம் தொடர்பான சட்டக் கோட்பாடாகும். ரபேல் விமான பேர ஊழலை ஒட்டிய விசாரணையை முளையிலேயே கிள்ளி எறிய அவசர அவசரமாக, நள்ளிரவு நாடகத்தை மோடி அரசு அரங்கேற்றியுள்ளது.
லோக்பால் சட்டப்படி, சிபிஅய் இயக்குநர், பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் நியமிக்கும் நீதிபதியால் தேர்வு செய்யப்பட வேண்டும். அவரை மாற்றுகிற, நீக்குகிற அவரிடம் உள்ள அதிகாரத்தைப் பறிக்கிற உரிமை, இந்த மூவர் தேர்வுக் குழுவுக்கே உண்டு. 1992ல் உச்சநீதிமன்றம், வினீத் நாராயண் வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி, சிபிஅய் இயக்குநரின் பதவிக்காலம் 2 வருடங்கள் இருந்தாக வேண்டும். 01.02.2017ல் அலோக் வர்மா சிபிஅய் இயக்குநராக தேர்வானார். அவரது பதவிக்காலம் 31.01.2019 அன்று தான் முடிவு பெறும். ஆகவே, அவரிடமிருந்து, மூவர் தேர்வுக்குழு ஒப்புதல் இல்லாமல் 24.10.2018 அன்று அதிகாரத்தைப் பறித்தது, தீய உள்நோக்கம் கொண்ட, சட்டவிரோத நடவடிக்கையாகும்.
இந்தப் பிரச்சனையில் 24.10.2018 உத்தரவுக்குப் பிறகு சிபிஅய் ஒரு வினோதமான தெளிவுபடுத்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘அலோக் வர்மா சிபிஅய் இயக்குநராகவும் அஸ்தானா சிறப்பு இயக்குநராகவும் தொடர்வார்கள். மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் புகார்கள் எதிர் புகார்களை விசாரிக்கும் வரை, இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், இயக்குநரின் பொறுப்புகளை நிறைவேற்றுவார்’.
உச்சநீதிமன்றம், 1.நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட பிறகு, எடுத்த எல்லா முடிவுகளையும் மூடப்பட்ட உறைக்குள் தன் பரிசீலனைக்காக ஒப்படைக்க வேண்டும். 2. புகார்கள் பற்றிய சிவிசி விசாரணை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எ.பி.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெறும். 3. நாகேஸ்வர் ராவ், எந்த கொள்கை முடிவையோ முக்கிய முடிவையோ எடுக்க முடியாது, என உத்தரவிட்டுள்ளது.
மோடி 3டி ஆட்சி நடத்துகிறார். டிவைட் அண்ட் ரூல் (பிரித்தாளுதல்), டைவர்ட் அண்ட் ரூல் (திசை திருப்பி ஆளுதல்), டெஸ்ட்ராய் அண்ட் ரூல் (அழித்து ஆளுதல்) ஆகியவை அவரது பாசிஸ்ட் ஆட்சி முறை ஆகும். எல்லா நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களையும், உள்புகுந்து அரித்து அழிக்கிற, வெளியிலிருந்து தாக்கி ஒழிக்கிற, மோடி ஆட்சி, ஊழல் ஒழிப்பு நிறுவனங்களான சிபிஅய் மற்றும் சிவிசியை அழிக்கும் முயற்சியில் கையும் களவுமாகச் சிக்கியுள்ளது.
கார்ப்பரேட் சூறையாடல், கூடா நட்பு முதலாளித்துவம், ஊழல், ஆகிய மூன்றும் மோடி அரசின் அடையாளச் சின்னங்களாகும்.