அய்எல்&எப்எஸ்அய் காப்பாற்றவும் வேண்டாம்! கார்ப்பரேட்டுகளைக் கொழுக்கச் செய்யவும் வேண்டாம்!
ஜி.ரமேஷ்
....சென்ற இதழ் தொடர்ச்சி
மூன்றாம் கட்ட வளர்ச்சி ஏற்பாடு என்ன தெரியுமா?
இந்த கிப்ட் சிட்டி திட்டம் முடியும் போது திட்ட மதிப்பில் 1% “வெற்றி கட்டணம் (நன்ஸ்ரீஸ்ரீங்ள்ள் ஊங்ங்ள்)” என அய்எல்&எப்எஸ் நிறுவனத்திற்குக் தந்துவிட வேண்டும். அதாவது, 2007ல் இது தொடங்கும் போது இந்தத் திட்டத்தின் முதற்கட்ட மதிப்பு ரூ. 70,000 கோடி. அதில் 1% என்றால், ரூ.700 கோடி இந்தத் திட்டம் முடியும் போது அய்எல்&எப்எஸ் நிறுவனத்திற்குக் தந்துவிட குஜராத் பாஜக அரசு ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துள்ளது. திட்டத்திற்கான எந்தவொரு வேலையையும் தன் பணத்தில் செய்யாமல், திட்டம் முடியும்போது ரூ.700 கோடி முதலிலேயே உத்தரவாதம். ஆண்டுகள் ஆக ஆக இதன் திட்ட மதிப்பும் கூடும். வெற்றிக் கட்டணமும் கூடும்.
இப்படி பல தங்க முலாம் பூசப்பட்ட ஒப் பந்தங்கள் மோடியின் குஜராத் அரசால் அய்எல் &எப்எஸ் நிறுவனத்திற்கு இந்த ஒரு திட்டத்தில் மட்டுமே போட்டுத் தரப்பட்டுள்ளது. பிறகு, எப்படி திட்டத்தின் வேலையை சீக்கிரம் முடிப்பது? கிப்ட் திட்டத்தை முறைப்படி ஏற்படுத்துவதற்கு முன்பே, குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே திட்டத்திற்கு கட்டிடக் கலை மற்றும் பொறியியல் பணிகளைச் செய்ய ஃபயர் உட் கன்சல்டன்ட் நிறுவனத்துடன் அய்எல்&எப்எஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது; முறையாக திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, இயக்குநர்கள் கூட்டத்தில். அந்த ஃபயர் உட் நிறுவனத்திற்கே வேலையைக் கொடுக்கச் சொன்னது. குஜராத் அரசாங்கமும் இதில் பாதி பங்குதாரராக இருந்தும் வெளிப்படையாக எந்தவொரு வேலைக்கான ஒப்பந்தமும் கோரப்படவில்லை. எந்தவொரு முக்கியமான கட்டிடக் கலை வேலையையும் பொறியியல் வேலையையும் செய்யாமலேயே வெறும் புகைப்படங்களை, கட்டிட மாதிரி வரைபடங்களை மட்டும் காண்பித்துவிட்டு இந்த ஃபயர் உட் நிறுவனம் ரூ.400 கோடி பெற்றுக் கொண்டுள்ளது. தணிக்கை குழு பணத்தைத் திருப்பி கேட்ட போது, அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் குழுவினர். தரப்பட்ட வேலைகள் செய்யப்படாவிட்டாலும், கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாது என்று ஒப்பந்தத்திலேயே சரத்து சேர்க்கப்பட்டுள்ளதாம். இந்த ஃபயர் உட் நிறுவனம் வெறும் நாற்காலிகளையும் தொலை பேசிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு அய்எல்&எப்எஸ் நிறுவன அலுவலத்தில் ஓர் ஓரத்தில் இருக்கிறதாம். மட்டுமின்றி, அய்எல்& எப்எஸ் அலுவலகம் சர்ச்சைக்குரிய நோய்டா டோல் கம்பெனி வளாகத்தில் இருக்கிறதாம்.
முன்னதாக, தனியார் நிறுவனத்தை திட்டத்தில் இணைப்பதற்கு என்று எந்தவொரு விளம்பரமும் குஜராத் அரசாங்கத்தால் தரப்படவில்லை. மேலும், குஜராத் உள்கட்டுமான வளர்ச்சிச் சட்டம் 1999ன் கீழ் இந்த கிப்ட் சிட்டி திட்டம் குஜராத் அரசாங்கத்தால் மட் டுமே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தனியார் செய்கிறார்கள். எந்தவொரு பணிக்கும் ஏலம் விடப்படவில்லை. இயக்குநர்கள் கூட்டத்தில் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் கிடையாது. திரு.அஞ்சாரியாவை தணிக்கை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, நடவடிக்கைக் குறிப்புகளைத் திருத்தியுள்ளார் கள். கிப்ட் சிட்டி திட்டத்தில் இப்படி பல தகிடுத்தித்தங்கள் செய்து அரசாங்கப் பணத்தை விரயம் செய்தது மட்டுமின்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிக் கொண்டுள்ளது இந்த அய்எல்&எப்எஸ் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின், அதன் துணை நிறுவனங்களின் ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்ய வேண்டும், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிப்ட் சிட்டி கொண்டு வரப்பட வேண்டும் என்று 2015ல் திரு.அஞ்சாரி யாவாலும் வேறு பலராலும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு ஊடகமும் பத்திரிகையும் இந்த ஊழல்கள் பற்றி வாய் திறக்கவில்லை. இந்த அய்எல்&எப்எஸ் நிறுவனத்தைத்தான் இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி - நோய்டா டோல் திட்டத்தில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, தலைமை தணிக்கை அதிகாரியினுடைய துல்லியமான தணிக்கைக்கும் உத்தரவிட்டது.
இப்படி ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை பல வழிகளில் ஒதுக்கிய ஒரு நிறுவனம் இப்போது கடனில் தத்தளிக்கிறது என்று சொல்வது விந்தையல்லவா? பிபிபி என்பதே தனியாரும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்க உருவாக்கப்பட்டதுதான். அந்தக் கூட்டுக் கொள்ளைக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த உள்கட்டுமானம் குத்தகை மற்றும் நிதிச் சேவை நிறுவனம். கிப்ட் சிட்டி திட்டம் மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது தொடங்கப்பட்டது. அதனால்தான் ராகுல் காந்தி, அய்எல்& எப்எஸ் என்றால், ஐ லவ் பினான்சியல் ஸ்கேம் என்கிறார்.
ஒரு கிப்ட் சிட்டி திட்டத்தில் போட்ட ஒப்பந்தத்தில் இருந்தே பல ஆயிரம் கோடிகள் பணம் சம்பாதித்த அய்எல்&எப்எஸ் நிறுவனம் இப்போது கையில் பணமே இல்லாமல் கடனில் இருக்கிறதாம். ஏற்கனவே கடனில் இருந்த இந்த நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு ரூ.91,000 கோடி அளவுக்கு எல்அய்சி, ஸ்டேட் பாங்க் மற்றும் சென்டரல் பாங்க்கை கடன் கொடுக்கச் செய்துள்ளார் மோடி. கடன் கொடுத்த பின்னரும் அதையும் திருப்பித்தர முடியவில்லை. பல்வேறு திட்டங்களை ஏற்று நடத்தியத்தில் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் எங்கே? அந்த நிறுவனத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், இயக்குநர்கள், அவர்களுக்கு அனுசரணையாக இருந்த அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆதாயம் பெற்றுள்ளார்களா? கம்பெனியின் நிர்வாகிகள் லட்சக்கணக்கில் சம்பளம் எடுத்துக் கொண்டார்கள், நிர்வாகத் திறனின்மை என்று ஏதேதோ சப்பைக் காரணங்கள் சொல்லி பழைய நிர்வாகிகளை, இயக்குநர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஆறுபேரை, கோடாக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான உதய் கோடாக் தலைமையில் நிர்வாகிகளாக நியமித்திருக்கிறது மத்திய அரசு.
எல்அய்சியின் நிர்வாக இயக்குநர் ஹேமந் பார்கவாதான் சமீபத்தில் அய்எல்&எப்எஸ் நிறுவனத்தின் தலைவரானார். எல்அய்சியில் இருந்து மேலும் அதிகமான பணத்தை அய்எல் &எப்எஸ் நிறுவனத்தில் போடுவதற்காகவே அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பணம் போடப்போட புதை குழிக் குள் போவதுபோல் போய் கொண்டிருக்கும்போது மேலும் எல்அய்சியில் இருந்து பணம் போடுவது அவ்வளவு இயலாத காரியம் என்கிற போது மோடி மற்றும் அய்எல்&எப்எஸ் ஆட்டங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இன்னும் பல்வேறு வகைகளில் வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு ஆகியவற்றில் உள்ள பணத்தையெல்லாம் மடை மாற்றம் செய்து அய்எல்&எப்எஸ் நிறுவனத்தைக் காப்பற்றத் துடிக்கிறார்கள் மோடியின் பக்தர்கள். இந்த நிறுவனத்தைக் காப்பாற்றவில்லை என்றால், பல்வேறு வங்கிகள் அல்லாத சிறிய நிதி நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் இருக்கிறது. நாட்டில் வளர்ச்சி முன்னேற்றம் வேண்டும் என்றால், அதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த அய்எல் &எப்எஸ் நிறுவனம் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும் என்று முதலாளித்துவ ஊடகங்கள், பத்திரிகைகள் ஒட்டுமொத்தமாகக் கூச்சல் போடுகிறார்கள். அம்பானி நிறுவனம் பணம் பார்த்தால் மொத்தமும் அம்பானிக்கு. அதானி நிறுவனம் பணம் பார்த்தால் அது அதானிக்கு. மிட்டல் பார்த்தால் அது மிட்டலுக்கு. ஆனால், அய்எல்&எப்எஸ் பணம் பார்த்தால் அது மோடிக்கு, அருண் ஜெட்லிக்கு, அமித் ஷாவுக்கு, விஜய் ரூபானிக்கு, ரவி பார்த்தசாரதிக்கு (இவர் 25 ஆண்டுக்கும் மேலாக அய்எல்&எப்எஸ் தலைவராக இருந்தவர்) என பலருக்கும் பயன்படும். அதனால்தான், அவர்களுக்கு ஏற்றமாதிரி செயல்பட கோடாக் வங்கியின் உதய் கோடாக், உறுப்பினர்களாக முன்னாள் அரசு அதிகாரி ஜி.சி.சதுர்வேதி, பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பின் முன்னாள் தலைவர் ஜி.என். பாஜ்பாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது எல்லாமே மக்களை ஏமாற்றவே. இது, கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட் கைக் கூலிகள் நடத்தும் ஆட்சி.
மோடி அவர்களே... அய்எல்&எப்எஸ் நிறுவனத்தை மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு, வங்கி சேமிப்பைக் கொண்டு காப்பாற்றி கார்ப்பரேட்டுகளை மீண்டும் கொழுக்கச் செய்ய வேண்டாம். அரசு தனியார் கூட்டு என்பதை கைவிட்டு மக்கள் பணத்தைக் கொண்டு அரசாங்கமே நேரடியாக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.