கண்ணாமூச்சி ஏனடா?
மத்திய அரசு தொடர்ந்து தடுமாறுகிறது. எல்லா முனைகளிலும் தோல்வி அடைந்த மோடி அரசை மக்கள் நம்பத் தயாரில்லை.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்கள் தங்கள் பிரசுரங்கள், பிரச்சாரம் மூலம் இந்தியாவுக்கு எதிராகப் போர் நடத்தினார்கள் என்றும் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தேசவிரோத சக்திகள் என்றும் அவர்களைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குமுறிக் குமுறி கொந்தளித்தார். ரபேல் விமான ஊழல் பற்றிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சராலும் பிரதமராலும் பதில் தர முடியவில்லை. இவர்க ளது தேசபக்திதான், விஜய் மல்லய்யா, நீரவ் மோடி, சோக்சி ஆகியோரிடம் ஆயிரம் ஆயிரம் கோடியாய் இந்திய வங்கிப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தப்ப வைத்தது என்பதை நாடறியும். ரபேல் விமானம் வாங்கியதே அம்பானிக்குக் கொட்டிக் கொடுக்க எனவும் அம்பலமாகி உள்ளது.
2014 மார்ச் மாதம் மன்மோகன் காலத்தில் பிரான்சின் தஸ்úஸô நிறுவனமும், இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் போட்ட ஒப்பந்தப்படி, பறக்கத் தயாராயுள்ள நிலையில் உள்ள 18 ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்குத் தரும். இந்தியாவில் 108 விமானங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் தரும். ஒரு விமானத்தின் விலை ரூ.520 கோடி.
2015ல் மோடி பிரான்ஸ் போனபோது, அனில் அம்பானி அவரோடு கூடவே சென்றார். அந்தப் பயணத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் துவங்கினார். அந்த பிரான்ஸ் பயணத்தில், பழைய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்றும் புதிதாக 36 ரபேல் விமானங்கள் வாங்கப்படும் என்றும் ஒரு விமானம் ரூ.1670 கோடி என்றும், 2016ல் ஒப்பந்தம் ஆனதாகவும் மோடி சொன்னார். ரூ.520 கோடி என்ற பழைய விலையின் இடத்தில் ஒரு விமானத்திற்கு ரூ.1670 கோடி என்ற புதிய விலை வந்தது. ஒரு விமானத்துக்கு ரூ.1150 கோடி வித்தியாசம் என்றால் 36 விமானங்களுக்கு ரூ.40,400 கோடி வித்தியாசம் என இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பாகாதா? பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்க்கு தொழில்நுட்ப ஒப்பந்தம் கிடையாது, அது அனில் அம்பானிக்கே என்றாகியுள்ளது.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒல்லாந்து, ரபேல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை மோடிதான் அம்பானிக்குத் தரச் சொன்னார் என்றார். மோடி பக்தர்கள் ராகுல் காந்தியும் ஒல்லாந்தும் சேர்ந்து சர்வதேச சதி என்கிறார்கள். ரபேல் பற்றிக் கேள்வி கேட்டால் சர்வதேச சதி. பழங்குடியினர் தலித்துகள் பக்கம் நின்றால், மோடியைக் கொல்ல சதி செய்யும் நகர்ப்புற நக்சல்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், எபி விபியைத் தோற்கடித்ததோடு, விடாப்பிடியாய் ஜனநாயகத்திற்காக நிற்பவர்கள் தேச விரோதிகள். மக்களைக் கண்டு மத்திய அரசு அஞ்சுவதால், மோடியின் கூட்டாளிகள் குழம்புவதால், பிணம் விறைப்பதுபோல் அவ்வப்போது பழனிச்சாமி அரசாங்கத்தில் யாராவது நிமிர்ந்து நிற்பார்கள். 2019ல் மத்திய அமைச்சரவையில் இடம் தருகிற கட்சியுடன்தான் தேர்தல் கூட்டணி என்பார்கள். அங்கும் இங்குமாய் முணு முணுப்பார்கள். முணுமுணுத்த மறுநாளே ரெய்டு வரும். அடக்கி வாசிப்பார்கள். இப்போது தம்பிதுரை 2019ல் தமது கட்சி நாடாளுமன்ற தேர்தலை தனித்து சந்திக்கும் என்றும் தமது கட்சிக்கு அதற்கான வலிமை உண்டு என்றும் பேசியுள்ளார்.
ஆனால், சேலம் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் பட்டியல் படித்ததைப் பற்றி பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, பழனிச்சாமி அரசு பற்றி பேசினால், குட்கா ஊழல் அரசு என்றால் நாக்கை அறுப்போம் என்கிறார். அமைச்சர் துரைக்கண்ணு வகையறாக்கள் ஸ்டாலின் எழுப்பும் சில கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முறைகேடாக சம்பாதித்த பணத்தை அய்க்கிய அமெரிக்கா, இந்தோனேஷியா, துருக்கி என பல நாடுகளில் முதலீடு செய்துள்ளார். (வெளி நாட்டில் முதலீடு செய்தால் ரெய்டு நடத்த மாட்டார்கள்).
முதலமைச்சர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறையின் ரூ.3,120 கோடி டென்டரை தனது சம்பந்தி சுப்ரமணியன், தமக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்கள் செய்யாதுரை, நாகராஜன் ஆகியோருக்கு முறைகேடாகத் தந்துள்ளார். வருமான வரித்துறை செய்யாதுரை, நாகராஜன் வீடுகளில் சோதனை நடத்தி ரூ.180 கோடி பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றியது.
அமைச்சர் காமராஜ் பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல் செய்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக மதிப்பெண் ஊழலில் அமைச்சர் அன்பழகன் ரூ.200 கோடி பார்த்துள்ளார். பேருந்து வாங்கியதில் ரூ.500 கோடி ஊழல், முட்டை டெண்டரில் ரூ.1000 கோடி ஊழல், காவல்துறை வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.84 கோடி ஊழல் என அமைச்சர் விஜயபாஸ்கர் விசேஷமானவராகவே இருக்கிறார். வேலுமணி, தங்கமணி மேல் மணிமணியான புகார்கள். எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி. வேலு மணிக்கு நெருக்கமான கேசிபி இன்ஜினியர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இந்தியன் கம்பனி, வரதன் உள்கட்டமைப்பு கம்பனிகள் பிரம்மாண்டமாய் சொத்து குவித்துள்ளனர். கோவை மாநராட்சியின் ரூ.53 கோடி ஒப்பந்தம், ரூ.49 கோடி ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தம் எல்லாம் இவர் பினாமிகளுக்கே தரப்பட்டுள்ளன. 10 மாநகராட்சிகளிலும் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி மின்னணு நிர்வாக ஒப்பந்தம் இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தரப்பட்டுள்ளது. தங்கமணி தரப்பில் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் ரூ.12,250 கோடி ஊழல், மின் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல். விஜயபாஸ்கர், குட்கா, குவாரி, அரசு ஊழியர் பணியிட மாற்றம் என்ற வகையில் மட்டுமே ரூ.620 கோடி ஊழல் என ஸ்டாலின் பட்டியல் தந்துள்ளார். மத்திய அரசுக்கு 10% கமிஷன் என்றும் சொல்கிறார். உரிமைகளை விட்டுக் கொடுப்போம், ஊழலில் பங்கு கொடுப்போம் என்கிறார்கள் அஇஅதிமுக அமைச்சர்கள்.
இந்தக் கூட்டம்தான், சட்டப்படி விதிகள் இயற்றக் கோரியவர்களை, பிரிக்கால், யமஹா, என்பீல்ட், எம்எஸ்அய் தொழிலாளர் போராட்டங்களில் விரைந்து தலையிடக் கோரியவர்களை தீவிரவாதிகள் எனச் சொல்லி பகத்சிங் பிறந்த நாளில் சிறைக்கு அனுப்பியது. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது தீவிரவாதம் என்பார்கள். ஆட்கொல்லி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, உயிரையும் காவு வாங்கும் நிலை. திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றோர் மீது சிறைக்குத் தள்ளும் வழக்குகள்.
ஊடகத் துறையிலுள்ள பெண்களை பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் கருத்தைப் பகிர்ந்து கொண்ட பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகரை காவல்துறையால் பிடிக்கவே முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என ஊருக்கே தெரியும். எச்.ராஜா, பாஜகவின் தேசிய செயலாளர். அவர் பெரியார் சிலையை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னபோது இந்த மானம் மரியாதை இல்லாத அரசு சும்மா இருந்தது. அதனால் இன்று சாதி வெறியர்கள் பலர் பெரி யார் சிலையை அவமதிக்கிறார்கள்.
செப்டம்பர் 15 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சாக்காக்கி தமிழ்நாடு முழுவதும், மதக் கலவரம் உருவாக்க சங்பரிவார் முயற்சிக்கிறது. புதுக்கோட்டையில் எச்.ராஜா, உயர்நீதிமன்றம் என்ன மயிரா மண்ணாங்கட்டியா என பொது இடத்தில் காவல்துறையை மிரட்டுகிறார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. காவல்துறையை சீருடையைக் கழட்டு என்று சொன்ன எச்.ராஜா, செப்டம்பர் 17 அன்று வேடசந்தூர் இந்து முன்னணி கூட்டத்தில், இந்து அறநிலையத் துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை விலை பேசி விற்பவர்கள் எனப் பேசுகிறார். நாகை மாவட்டம் சீர்காழி திருக்கடையூரில், டிஎஸ்பி சேகர் தலைமையில் 100 போலீசார் புடைசூழ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்கிறார். எச்.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 22 அன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு சொல்லப்பட்டுள்ளது. அது வரை அவர் கைது செய்யப்பட எந்த வாய்ப்பும் இல்லை. முதல் தகவல் அறிக்கை போட்டால் கைது செய்ய வேண்டுமா என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்.ராஜா பேசுவது, தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இருப்பதற்கு அடையாளம் என்கிறார். பாஜகவினர் மேல் கை வைப்பது அவர்கள் தமது ஆட்சியின் மீது கை வைத்து விடக் கூடும் என்ற அச்சம் அஇஅதிமுகவைப் பிடித்தாட்டுகிறது.
ராம் மனோகர் ராவ், சேகர் ரெட்டி, பன்னீர் செல்வம் தொடர்பு ரெய்டுகள் நடந்தன. அதற்கு மேல் என்ன நடந்தது? ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தனர். பாஜக, அஇஅதிமுக கண்ணா மூச்சி ஆட்டம் தொடர்கிறது.
திமுக, பாஜக எதிர்ப்பில் நிற்கவே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. பாஜக, அஇஅதிமுக பொறுத்தவரை, பழனிச்சாமி குதிரைமேல் பந்தயம் கட்டுவதா தினகரன் குதிரைமேல் பந்தயம் கட்டுவதா எனப் பார்த்து முடிவு செய்ய வாய்ப்புள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழப்பு வழக்கு தீர்ப்பு வேறு வர வேண்டியுள்ளது. இதுபோக, பரந்த அஇஅதிமுக ஒற்றுமையை, ரெய்டுகள் மூலம் மத்திய அரசு உருவாக்கும் வாய்ப்பும் வரவே வராது எனச் சொல்ல முடியுமா?
இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் மக்களுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும். ஏரோட்டும் உழவரெல்லாம், தொழிலாளர், மாணவர், இளைஞர் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே கண்ணாமூச்சி ஏனடா என, தமிழ்நாட்டு மக்கள் 2019ல் மத்திய மாநில ஆட்சியாளர்களை தண்டிப்பார்கள்.