பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்
சுற்றி நில்லாதே போ! பகையே!
துள்ளி வருகுது வேல்!
ரத்தீஷ்
கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான போர் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
பிரிக்காலில் தொழிலாளர் போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. ஏஅய்சிசிடியு தலைமையிலான தொழிற்சங்கத்தோடு 2018 ஒப்பந்தம் போடக் கூடாது, டிஸ்மிஸ் மற்றும் கொலை வழக்கில் உள்ள தொழிலாளர்களுக்கான போராட்டத்தில் சங்கம் இருக்கக் கூடாது என்று கருதுகிற பிரிக்கால் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொழிலாளர் போராட்டம் துவங்கியிருக்கிறது. நான்கு பெண் தொழிலாளர்கள், தோழர் குமாரசாமி உள்ளிட்ட 25 பேருக்கு ஆயுள் தண்டனை கோரி பிரிக்கால் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதும், விடுதலையாகியுள்ள 7 பேருக்கு இப்போது உச்சநீதிமன்றம் அறிவிப்பு தந்துள்ளதும் காணத் தக்கவையாகும். 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் சங்கத்தோடு ஊதிய ஒப்பந்தம் செய்து கொண்ட நிர்வாகம் ஏன் 2018ல் ஒப்பந்தம் போட மறுக்கிறது? ஏன் சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைக்கிறது?
ஏஅய்சிசிடியு வழிகாட்டுதலில் நடக்கும் இணைப்புச் சங்கமான கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கம் தனது 2018க்கான ஒப்பந்த கோரிக்கைகளில் 750 புதிய நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறது. ரூ.50,000க்கு குறையாத மாதச் சம்பளம், 01.07.2018 முதல் மூன்றாண்டு ஒப்பந்தம், மாறுகிற பஞ்சப்படி, மனம்போன போக்கில் உற்பத்தியை உயர்த்தக் கூடாது என கோரிக்கைகள் வைக்கிறது. கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் விசாரணை இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வேலை நீக்க வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு நடுவே மேல்முறையீடு செய்து உள்ளதைத் தொடர்ந்தும், மனம் போன போக்கில் உற்பத்தி உயர்வு கேட்பதை தொழிலாளி எதிர்ப்பதாலும், கூலி உயர லாபம் குறையும் என்ற மார்க்சிய தத்துவத்தின்படி தொழிலாளர் கூலி உயர்வதை சகித்துக் கொள்ள முடியாததாலும், நிர்வாகம் சங்கத்திற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை பிரிக்கால் தொழிலாளர்கள் உணர்ந்துள்ளதும் போராட்டத்தை தீவிரமடையச் செய்துள்ளன.
29.07.2018 தேதியிட்ட வேலை நிறுத்த அறிவிப்பு கடிதத்தை பிரிக்கால் நிர்வாகத்திற்கு சங்கம் அனுப்பியது. தொழிலாளர் துறை முதலான பல்வேறு துறைகளுக்கும் சங்கம் அறிவிப்பு தந்தது. 14.08.2018 அன்று அடையாள வேலை நிறுத்தம் என்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்றாற் போல் எந்தவொரு நாளிலிருந்தும் காலவரையற்ற வேலை நிறுத்தம் என்றும் சங்கம் அறிவிப்பு தந்தது.
பெண் தொழிலாளர்களுக்கும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பணி ஓய்வு பெறுபவர்களுக்கும் வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளித்ததும், இன்கிரஸ் எக்ரஸ் தடுக்க மாட்டோம், வேலை நிறுத்தம் அறவழிப்பட்டதாக, சட்டபூர்வமானதாக நடக்கும் எனவும் வேலை நிறுத்த அறிவிப்பு கடிதத்தில் சொல்லப்பட்டது.
இத்தகைய போராட்டம் எப்படி வெற்றி பெறும் என கேள்விகள் எழுகின்றன. காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது. ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிலில் முன்னணி நிறுவனமான பிரிக்காலில் பலநூறு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது ஏற்படும் உற்பத்தி தட்டுப்பாட்டால், போட்டியாளர்கள் நிறைந்த சூழலில் ஏற்படும் நெருக்கடியை தீர்க்க, சுமுகமான பேச்சுவார்த்தைகளை நிர்வாகம் நிச்சயமாக முன்எடுக்கும், மாறாக, வரலாற்றுப் பிழைகளை மீண்டும் செய்யாது என கருதுகிறோம்.
22.07.2018 தேதிய சங்க பொதுக்குழு தீர்மானத்தின்படி 14.08.2018 அன்று அடையாள வேலை நிறுத்தம் நடந்தபோது, கோவையில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்ட பட்டினிப் போராட்டமும், சென்னையில் பிரிக்கால் தொழிலாளர்கள் உட்பட தமிழகமெங்கும் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இளைஞர்கள் முற்றுகை போராட்டமும் நடந்தன. போராட்டக் கனலின் உக்கிரம் தமிழக அரசை, பிரிக்கால் நிர்வாகத்தை பதறச் செய்தது.
14.08.2018 அடையாள வேலை நிறுத்தத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பெரும்பான்மை தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 16.08.2018 அன்று அனைவரும் வேலைக்குத் திரும்பியபோது, உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வீர்கள், வன்முறையில் ஈடுபடுவீர்கள் என நம்பகமான தகவல் உள்ளது என்று இல்லாத, பொய்யான காரணம் சொல்லி, 144 தொழிலாளர்களை பகையாக வேறுபடுத்தி, உழைத்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினப் பரிசாக, பகுதி கதவடைப்பு செய்திருப்பதாக நிர்வாகம் அறிவிப்பு தந்தது. இந்த பகுதி கதவடைப்பு, அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்து 14ன்படி சமத்துவ கோட்பாட்டிற்கு எதிரானது.
இத்தகைய சூழலில் பகுதி கதவடைப் பிற்கு எதிராக 18.08.2018 அன்று மாலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய சங்கம் முடிவு செய்தது. பகுதி கதவடைப்புக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்கள் 144 பேரில் சுமார் 90க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வழக்கம்போல் அனுமதி மறுக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயர் தெரியவர தோழர்கள் ஆர்பாட்டத்துக்குப் பதிலாக கோவை காந்திபுரம் பகுதியில் வெள்ள நிவாரண நிதி திரட்டலில் ஈடுபட்டனர். பிரிக்கால் ஆலை வாயிலுக்கு அருகில் வர நீதிமன்றத் தடை இருக்கிற சூழலில், தோழர் எஸ்கே, வழக்கறிஞர் சுரேஷ், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் பி.நடராஜன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன் உட்பட முன்னணி தோழர்கள் பிரிக்கால் ஆலை வாயில் அருகில் தொழிலாளர்களிடமும் பொது மக்களிடமும் ரூ.35,000 வெள்ள நிவாரண நிதி திரட்டினர்.
தொழிலாளர் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் பிரிக்கால் நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனும் கோரிக்கை நிர்வாகத்துக்கு உள்ளுக்குள் உதறல் தந்து கொண்டிருந்தது. அது அதன் கோபத்தை ஆற்றாமையை வெளிப்படுத்தியது. நிர்வாகம் எங்களது கோரிக்கைகளில் மூன்றை,
1. 144 பேரை நிபந்தனையின்றி பணிக்கு திரும்ப எடுப்பது,
2. 2018ல் செய்யப்பட்டுள்ள பிடித்தங்களை, தரப்பட்டுள்ள தண்டனைகளையும் நிறுத்தி வைப்பது,
3. தொழிலாளர் துறை சார்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை சங்கத்தை தேர்ந்தெடுத்து நிபந்தனை இல்லாமல் உடனடியாக ஒப்பந்தம் பேசுவது
ஆகியவற்றை நிர்வாகம் கொள்கை முடிவாக அறிவிக்கும் பட்சத்தில், அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
21.08.2018 முதல் பிரிக்கால் தொழிலாளர் களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது. ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகள், அவர்களின் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரையும் பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் பாட்டாளி வர்க்க போராட்டம் என உணரச் செய்துள்ளது. செப்டம்பர் 3 அன்று நாடெங்கும் பிரிக்கால் தொழிலாளர் ஒருமைப்பாடு தினம் அனுசரிக்க ஏஅய்சிசிடியு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நல அமைச்சருடனான சந்திப்பில் சென்னையிலேயே தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அநீதிக்கெதிரான போரட்டமே அறப் போராட்டம். நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில், உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், தடியடிக்கெதிராக அணி அணியாய் திரளுதல் என அநீதிக்கெதிராக நெஞ்சுறுதியோடு நடந்த போராட்டங்களே சுதந்திரத்துக்கு அழைத்துச் சென்றன.
அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்த ரோசா பார்க்ஸ் அறம் சார்ந்த வலிமையோடு பேருந்தில் எழ மறுத்ததால் கோடிக்கணக்கான கருப்பின மக்கள் இனவெறிக்கெதிராக, அநீதிக்கெதிராக திரண்டெழுந்தனர். ரோசா எழ மறுத்ததால் கோடிக்கணக்கான கருப்பின மக்கள் பேருந்தில் உட்கார முடிந்தது.
வெற்றிக்கான உத்தரவாதத்துடன் போராட்டம் என்பது, போராட்டமே நடக்காது என்பதற்கான உத்தரவாதம் என்பதை பிரிக்கால் தொழிலாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எல்லோரும் சாத்தியமானதை செய்யும்போது பாட்டாளி வர்க்க முன்னோடிகளான பிரிக்கால் தோழர்கள் அவசியமானதைச் செய்கிறார்கள். கொள்கை பிடிப்பும் இலட்சிய வேட்கையும் கொண்ட பிரிக்கால் தோழர்களது பிரதான முழக்கமாக முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என்பது மாறியுள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள் 2007 முதல் இந்த உறுதியை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
இப்போது சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் என்ற பாரதியின் வரிகளுடன் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
பாதகம் செய்பவரைக் கண்டால், நாம் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என பிரிக்கால் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை இனியும் பொறுப்பதற்கில்லை என சூளுரைத்துள்ளார்கள்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என, பிரிக்கால் தொழிலாளர்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். முதலாளித்துவ அத்துமீறல்கள், அராஜகங்கள், அநீதிகள் எனும் காட்டை வெந்து தணிக்கிற பாட்டாளி வர்க்க அக்கினிக் குஞ்சுகளாக பிரிக்கால் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற நெஞ்சுரத்தோடு நம்பிக்கையோடு, போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம், அடிபணிந்து கெஞ்ச மாட்டோம் என முதலாளித் துவத்துக்கு செய்தி சொல்கிறார்கள்.