பெட்ரோல், டீசல் விலைஉயர்வும்
மோடி அரசின் வரி பயங்கரவாதமும்
செப்டம்பர் 8 அன்று பெட்ரோல் விலை ரூ.82, டீசல் விலை ரூ.75 என அதிகரித்துவிட்டன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கழுத்தை நெறிக்கிறது எனக் கேட்டால் மத்திய அரசு அதை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர விரும்புகிறது, மாநில அரசுகள் மத்தியில் கருத்தொற்றுமை வேண்டும் என்று சொல்வதை நிதியமைச் சர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்திரா காந்தியை விட தாம் திறமையான பிரதமர் என்று சொல்ல மோடி 18அய் விட 19 பெரியது என்றார். அதாவது அவர் பிரதமராக இருக்கும்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றும் ஆக வலிமையான பிரதமர் என்று கருதப்படுகிற இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 18 மாநிலங்களில்தான் இருந்தது என்றும் சொல்கிறார். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் மத்தியில் கருத்தொற்றுமை உருவாக்குவது, 56 இன்ச் பிரதமரான நரேந்திர மோடிக்கு முடியவில்லை என்றா ஒப்புக்கொள்கிறார்கள்? பாஜக ஆட்சியினர் கொலைகாரர்கள் மட்டுமல்ல. கொள்ளைக்காரர்களும்தான். பெரிய கொள்ளைகளுடன் மட்டும் அவர்கள் நின்று விடுவ ல்லை. அவர்கள் பிக் பாக்கெட்டுகள் கூட. சாமான்ய இந்தியன் சட்டைப் பையில் இருக்கிற ஒரு ரூபாயை கூட விட்டுவைப்பதில்லை.
பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட்டால் மக்களுக்கு விலை குறையும் என்று சொல்லப்பட்டபோது, வரி வசூலிப்பது பிரச்சனையாக உள்ளது, வரி ஏய்ப்பு நிறுத்தப்பட வேண்டும், மக்கள் தங்கள் வரிகளை நேர்மையாக செலுத்தினால் வரிக்காக எண்ணெய் உற்பத்தி பொருட்களை நம்பியிருக்கும் நிலை மாறும் என்றும் ஜ÷ன் 2018ல் அருண் ஜெட்லி சொல்கிறார். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் முறையாக வரி செலுத்திவிடுவதாகவும் மற்ற விதங்களில் வரி வரத்தில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சொல்கிறார். கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தாலும் அரசுக்கு ரூ.13,000 கோடி நட்டம் ஏற்படும் என அரசு சொல்கிறது.
பெட்ரோல் விலை உயர்ந்தால் தொடர்ந்து எல்லா விலைகளும் கட்டணங்களும் உயரும், மக்களுக்கு மேலும் மேலும் சுமை ஏறும் என்று 2014 மே மாதம் முன்பு வரை பேசியவர்கள், 2014க்குப் பிறகு பெட்ரோல் மேலும் மேலும் உயர்வதற்கான நடவடிக்கைகளையே தீவிரப்படுத்துகிறார்கள். 2014 அக்டோபரில் டீசல் விலை கட்டுப்பாடும் அகற்றப்பட்டது. 2017 ஜ÷ன் 16 முதல் தினமும் விலை மாற்றியமைக்கும் முறை அமலானது.
ஏப்ரல் 1 2014 அன்று பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் வரி ரூ.9.48. டீசலுக்கு அது ரூ.3.56. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 15 மாதங்களில், பெட்ரோல் மீதான வரி ரூ.11.77, டீசல் மீதான வரி ரூ.13.47 அதிகரிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக அரசுக்கு 2016 - 2017ல் ரூ.2,42,000 கோடி வந்தது. 2014 - 2015ல் இது ரூ.99,000 கோடியாக இருந்தது. அதாவது மக்கள் கையில் இருந்து 2016 - 2017ல் ரூ.1.43 லட்சம் கோடி கூடுதலாகப் பறிக்கப்பட்டுவிட்டது. இந்த நிதி ஆண்டில், உணவு, உரம், பெட்ரோலியம் மூன்றுக்குமாகச் சேர்த்து திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.2.32,704.68 கோடி. பெட்ரோல், டீசல் கலால் வரி வருமானத்தை விடவும் குறைவாக மானியத்துக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு 2018 - 2019ல் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் வரும் வரி ரூ.4,93,335 கோடி என்று எண்ணெய் நிறுவனங்கள் கொடுக்கும் விவரங்கள் அடிப்படையில் அரசாங்கம் சொல்கிறது. இந்த ஆண்டு இந்த வகையில் மத்திய அரசுக்கு ரூ.2,84,442 கோடி வரி வரும். (2014 - 2015 நிதியாண்டில் இந்த வகையிலான வரி வருமானம் ரூ.1,26,025 கோடி). இது ஜ÷ன் மாத விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. செப்டம்பரில் இது இன்னும் அதிகரிக்கும். சாமான்ய மக்களிடம் இருந்துதான் வரி என்ற பெயரிலும் பெரிதும் பறித்தெடுக்கப்படுகிறது. மக்கள் மீது வரி பயங்கரவாதத்தை ஏவி அவர்களிடமிருந்து வலிக்க வலிக்கப் பிடுங்கி அதில் மானியம் அறிவித்து, மானியம் தந்தோம் என அரசு வெட்கமின்றி அறிவிக்கிறது.
2018 மார்ச் நிலவரப்படி பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரி ரூ.21. மாநிலத்துக்கு மாநிலம் மாறும் மதிப்பு கூட்டு வரி ரூ.15. (20% முதல் 25% வரி போடும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு வருகிறது). மொத்தம் ரூ.36. வரி மட்டுமே கிட்டத்தட்ட 50% வந்து விடுகிறது. டீலர் கமிஷன் 5%. நடப்பு நிதிநிலை அறிக்கையில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது; ஆனால், சாலை மற்றும் உள்கட்டுமான நலவரி என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8 வரி என புதிதாக ஒரு வரி சேர்க்கப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் சாமானிய இந்தியனுக்கு பெட்ரோல் விலை குறையாது; வரியை குறை என்று குரல் எழுப்பப்பட்டு வரி குறைக்கப்பட்டாலும், புதிய வரி விதிக்கப்பட்டு பெட்ரோல் விலை குறையாது. இந்த புதிய வரி மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.1,13,000 கோடி கூடுதல் வரி வருவாயை அரசுக்கு கொண்டு வரும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சாமான்ய இந்திய மக்கள் பைகளில் இருந்து இந்த நிதியாண்டில் பெட்ரோல் பெயரால் ரூ.1,13,000 கோடி பறித்தெடுக்கப்படும்.
நிதிநிலை அறிக்கை வாசித்தபோது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தந்து, இந்த வகையில் ரூ.7,000 கோடிதான் நட்டம் வரும் என்றும், ஆனால், இதனால் ஆதாயம் பெரும் நிறுவனங்கள் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாக்கும் என்றும் நிதியமைச்சர் சொன்னார். ஏப்ரல் 2017 முதல் நவம்பர் 2017 வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு ரூ.85,026 கோடி போய்விட்டது. இப்படியே போனால் இந்த நிதியாண்டில் இந்த வகை வரி விலக்கு ரூ.1,13,368 கோடி வரை வரும். மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டுத்தரப்பட்டு கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது.
பெட்ரோல் அதிகம் இறக்குமதி செய்தால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படும், ரூபாய் மதிப்பு வீழும் என்றெல்லாம் விளங்காத பொருளாதாரம் சொல்லி நியாயப்படுத்துபவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படும் கோடி கோடி ரூபாய் சலுகைகளில், விலக்குகளில் இருந்து அதை சரிகட்டச் சொல்லட்டும். பெட்ரோலுக்கு மேலும்மேலும் கூடுதல் வரி விதித்து மக்களிடம் இருப்பதைப் பிடுங்குவதுதான் அரசாங்கங்களின் உண்மை நோக்கமே தவிர பொருளாதாரத்தை கட்டுக்குள் வைப்பதல்ல.
சமையல் எரிவாயு விலையை மாதம் ரூ.4 என உயர்த்தி, 2018 இறுதிக்குள் எரிவாயு மானியத்தையும் ஒழித்துக்கட்டி விடுவது என்று ஒரு திட்டத்தை ஜ÷லை 2017ல் மோடி அரசாங்கம் முன்வைத்தது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பின் அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இன்றைய நிலைமைகளிலேயே, நேரடி மானியம் தருவது என்ற பெயரில் எரிவாயு உருளைக்கு மானியம் பெறுவதில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். எரிவாயு உருளை விலையும் திடீரென்று உயர்த்தப்படுகிறது. மே 1 2014ல் சென்னையில் எரிவாயு விலை மானியத்துடன் ரூ.401. மார்ச் 1 2018 அன்று ரூ.482. மோடியின் ராஜ்ஜியத்தில் நான்காண்டுகளில் ரூ.81 உயர்வு. 2014 மே 1ல் ரூ.401 கொடுத்து அந்த எரிவாயு உருளையை வாங்கியிருக்க முடியும். ஆனால், இப்போது மானியம் உண்டு என்று பெயருக்கு இருந்தாலும் முதலில் சந்தை விலையை, இன்று ரூ.668, கொடுத்து வாங்கிவிட வேண்டும். பிறகு மானியம் வங்கிக்கு வர காத்திருக்க வேண்டும். சிலருக்கு வந்துவிடும். பலருக்கு வராமல் நின்று விடும். நேரடி மான்யத்தால் அரசுக்கு வருவாய் என்று சில பத்தாயிரம் கோடி ரூபாய் கணக்கு தனியாகக் காட்டப்படும். இந்த விலையும் மேலும் உயர்த்தப்பட்டுவிட்டது. இன்றைய நிலைமைகளில் ஜிஎஸ்டி வந்த பிறகு சமையல் எரிவாயுவுக்கு வரி போடாத மாநிலங்களிலும் வரி விதிப்பு வந்துவிட்டது. ஏற்கனவே சில மாநிலங்களில் இருந்த மதிப்பு கூட்டு வரி 2% முதல் 4% வரை இருந்தது. இப்போது வரி போடாத மாநிலங்களுக்கும் சேர்த்து ஜிஎஸ்டி 5% எரிவாயு உருளை விலையில் சேர்ந்து கொள்கிறது. சேர்ந்து கொல்கிறது. இந்த 5% ஜிஎஸ்டி 12 உருளைகளுக்குத்தான். அதற்கு மேல் வாங் கும்போது அது 18% ஆகிவிடுகிறது. பொருளாதார அரங்கில் தான்தோன்றி நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, அவற்றால் ஏற்பட்ட பாதக விளைவுகளுக்கு தீர்வு காண முடியாமல், பதில் சொல்ல முடியாமல் 56 இன்ச் தவிக்கிறது.
தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள் என்று தனித்தனிப் பிரிவினர் மீது மதவெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி தாக்குதல்கள் நடத்தி மட்டும் மோடி அரசாங்கம் சாமான்ய மக்களை படுகொலை செய்வதில்லை. விலை உயர்வு, வரி உயர்வு, புதிய வரி என்று திணித்தும் சாமான்ய மக்கள் மீது போர் தொடுத்து, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறது. இது மோடி அரசாங்கம் இந்திய மக்கள் மீது தொடுத்துள்ள ஒட்டுமொத்த போரின் ஒரு பகுதி.
இந்தக் கட்டுரை வாசகர்களைப் போய்ச் சேரும்போது பெட்ரோல் விலை ரூ.90அய்த் தாண்டவும் வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு சங்கிலித் தொடராக அத்தியாவசியப் பொருட்களின் அடுத்தடுத்த விலை உயர்வுக்கு இட்டுச் செல்லும். பணமதிப்பகற்றத்தின் விளைவுகள், ஜிஎஸ்டியின் விளைவுகள் என எதையும் சமாளிக்க முடியாமல், ஏற்கனவே மிக மோசமாக சரிந்து விட்ட சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் அடுத்தடுத்து மேலும் சரியும். சாமான்ய இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் சரிவதைத் தடுக்க வேண்டுமானால், பாசிச பாஜக எந்த விதத்திலும் மீண்டும் எழ முடியாத அளவிலான சரிவை உறுதி செய்தாக வேண்டும்.
இதுவரை இல்லாத அளவு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் பொருள்களின் விலை உயர்வு, அதன் விளைவாக சரக்குப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், வேலையின்மை, ஊழல், ஒடுக்குமுறை, நிலப்பறி ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஒரணியில் திரண்டார்கள். இகக(மாலெ), இகக(மா), இகக, ஆர்எஸ்பி, எஸ்யுசிஅய்(சி) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் செப்டம்பர் 10, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. தமிழ்நாட்டில் இகக(மாலெ) தோழர்கள் மறியல் போராட்டத்தில் பிற இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து பங்கெடுத்தனர். சென்னை, கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், குமரி, திண்டுக்கல் ஆகிய மய்யங்களில் சாலை மறியலில் தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.