செப்டம்பர் 17ல்,
பெரியார் பெயரால் உறுதியேற்போம்!
‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆக்கும் தொண்டை மேல் போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்’.
அய்யா, நீங்கள் சொன்னதைச் செய்தீர்கள். சாமான்ய மக்கள் மத்தியில், பகுத்தறிவின் சுயமரியாதையின் வெற்றிக்காக, அயராது களமாடினீர்கள். சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடிக்கச் சொன்னீர்கள். ஒரு பக்கம், சமூகநீதி இயக்கமும் திராவிட இயக்கமும் போராடின. மறுபக்கம், சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் காரணமான நிலஉடமையின் நெஞ்சுக்குழியில் செங்கொடி இயக்கம் காலால் மிதித்தது.
மேல் கீழ் சமூகம், கலைத்து போடப்பட் டது. பெரும்பான்மை மக்கள், எளியவர்கள், சாமரம் வீசிய பாமரர்கள், கல்வியில் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் சமூகத்தில் அரசியலில் முன்னுக்கு வந்தனர். அய்யா, தமிழ்நாட்டு மக்கள், உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
அய்யா, நீங்கள் உங்கள் காலத்தின் மிகச் சிறந்த நவீன சிந்தனையாளராக இருந்தீர்கள். பெண்ணடிமைத்தனம் ஒழிய, ஆண்மை தத்துவம் அழிய, நீங்கள் முன்வைத்த கருத்துகளே, இன்றும் ஆகப்புரட்சிகரமான கருத்துகளாகும்.
அய்யா, நீங்கள் பொதுஉடமையை, சோவியத் சோசலிசத்தை வாழ்த்தி வரவேற்றீர்கள். அதே நேரம், இந்தியாவில், இந்துத்துவாவின் உயிர்நாடியான பார்ப்பனியத்தை வேரறுக்க, சாதியை ஒழித்திட, மூடநம்பிக்கைகளை எதிர்த்திட, கடவுள் மறுப்புக்காக, வாழ்நாள் நெடுகப் போராடினீர்கள். இந்தித் திணிப்பை எதிர்ப்பதும், மாநில உரிமைக்குக் குரல் கொடுப்பதும், உங்கள் பொது வாழ்க்கையின் இரண்டறக் கலந்த பகுதிகளாகும்.
அய்யா, உங்கள் பெயர் சொல்லி தமிழ்நாட்டில் ஆண்டவர்கள் ஆள்பவர்கள், மானமும் அறிவும் மனிதர்க்கு இழிவு என்கிறார்கள். சாதி இறுக, மேல் கீழ் நிலை தொடர, சுரண்டல், ஒடுக்குமுறை ஆதிக்கம் அரியாசனத்தில் அமர, பெண்ணடிமைத்தனம் தலைவிரித்தாட, அயராது பாடுபடுகிறார்கள். நம் மொழியை, பண்பாட்டை, உரிமைகளை அவர்களது சுயநலத்திற்காக, மத்திய ஆட்சியாளர்களின் காலடிகளில் காணிக்கையாக்கி விட்டார்கள்.
2025ல், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டில் இந்து ராஷ்டிரா அமைத்திடுவோம், 2019ல் அதற்கு அடித்தளம் போட்டிடுவோம் என, பாஜக தலைமையில் சங் பரிவாரங்கள் புறப்பட்டுவிட்டன. கும்பல் கொலைகாரக் கூட்டங்கள், குறி வைத்துக் கொல்பவர்கள், கருத்துரிமையை, ஜனநாயக உரிமைகளை நசுக்குபவர்கள், பகுத்தறிவின், சுயமரியாதையின் விரோதிகள், தமிழ்நாட்டில் கால் ஊன்றத் துடிக்கிறார்கள்; அந்தக் கூட்டம், பெண்களை, சிறுபான்மையினரை, உழைப்பவர்களை திரும்பவும் ‘சூத்திர’, ‘தீண்டத்தகாத’ இழிவில், இருளில் தள்ளி விட வெறிகொண்டு திரிகிறது.
அய்யா, நீங்கள் முன்வைத்த, காலாகாலமாய் சூரியனைச் சுமந்த உழைப்பின் கருப்பும், சாதியை அழிக்க சீற்றம் கொண்டு புறப்படும் நீலமும், அனைத்து வகை சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் சுட்டுப் பொசுக்கும் சிவப்பும், இந்தச் சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட, ஒன்றிணைந்து களமாடியாக வேண்டும்.
இந்து ராஷ்டிரா வந்துவிட்டால், மீண்டும் பார்ப்பனியம் பல்லக்கில் பவனி வரும். கார்ப்பரேட் கொள்ளை கோலோச்சும்.
மானமும் அறிவும் மேலோங்க தமிழ்நாடு எங்கும் உரிமைப் போரை தீவிரப்படுத்த ஆழப்படுத்த, வலுப்படுத்த,
அய்யா,
உங்கள் பெயரால் உறுதியேற்கிறோம்!