தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமை
COMMUNIST PARTY
COMMUNIST PARTY
Tuesday, August 4, 2020
ஆகஸ்ட் 15ல் அனைவரும் முழங்குவோம்
சுதந்திரம் வேண்டும்! நீதி வேண்டும்!
நமது அன்பிற்குரிய தாய்நாடு, வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆகஸ்ட் 15 2020ல் 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. நாடு கொரோனாவிடம் இருந்தும் கார்ப்பரேட் கொள்ளையரிடம் இருந்தும் சுதந்திரம் அடையவில்லை
சுதந்திரம் வேண்டும்! நீதி வேண்டும்!
ஜனநாயகம் வேண்டும்!
எஸ்.குமாரசாமி
தோழர் நாகராஜன் மறைவுக்கு
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
28.07.2020 அன்று தோழர் நாகராஜன் மறைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது தொழிற்சங்கம் செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் நாகராஜன் இண்டோடெக் ட்ரான்ஸ்பார்மர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். சிஅய்டியுவிலிருந்து வெளியேறி 1995 காலகட்டத்தில் நம்மோடு இணைந்தார். எல்லா போராட்ங்களிலும் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியை உறுதியாக நேசித்தார். அரசியலை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். விருதுநகரைச் சேர்ந்த தோழர் நாகராஜன் தனது 64 ஆவது வயதில் கொரோனா நோய் பாதிப்பால் இறந்தார்.
சிறந்த, முக்கியமான தோழரை இழந்தது கட்சிக்கும். சங்கத்திற்கும் பேரிழப்பே. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
(அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினாவில் 20 மேற்பட்ட தொழிலாளர்கள் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 மேற்பட்ட தொழிலாளர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இயங்குகிறது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை).
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தோழர் ராஜா குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்
அமைப்புசாரா தொழிலா ளர் கூட்டமைப்பு சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்று கஞ்சி பானையுடன் 22.07.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உழைப்போர் உரிமை இயக்கத் தின் மாநிலத் துணைத் தலை வர் தோழர் ஜி.முனுசாமி, தோழர்கள் ராஜேந்திரன், லூயிஸ், சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நிவாரணப் பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சான்மினா தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சான்மினா தோழர்கள் (தியாகராஜன், ரமேஷ், ரஹீம், சைமன், வெங்கடேசன், குருநாத், கோலப்பன், பாலமுருகன், ரவி) மளிகை பொருட்களை தந்து உதவி செய்தனர்.
கொரட்டூர் லஷ்மி ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.சந்திரசேகர் 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினார்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக வழக்கறிஞர்கள் நலன் காக்க சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட வலியுறுத்தி ஜுலை 24 அன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்வரும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:
தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும்
திறக்கப்பட வேண்டும்
தமிழக மக்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக
தொடர்ந்து குரல் எழுப்பும்
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர் கு.பாரதி வீட்டின் முன்பு
காவல் துறையினர் குவிந்து அச்சுறுத்தல்!
கொரானா காலத்தில் தமிழக வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் கோருதல்,ம் நீதிமன்றங்கள் திறக்க கோருதல், வறிய மக்களுக்கு நிவாரணம் கோருதல், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் நலன்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவது என செயல்பட்டு வரும்
தொடர்ந்து குரல் எழுப்பும்
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர் கு.பாரதி வீட்டின் முன்பு
காவல் துறையினர் குவிந்து அச்சுறுத்தல்!
கண்டிக்கின்றோம்!
Subscribe to:
Posts (Atom)