COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

மத்திய மாநில அரசுகளை கண்டித்து
ஜுலை 3 நாடு தழுவிய போராட்டம்

தொழிலாளர் சட்டங்களை முற்றாக நீக்கும், நான்கு தொகுப்புகளாக சுருக்கும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்,
கொரோனா காலத்தில் பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணுஆற்றல், காப்பீடு, வங்கி, ரயில்வே உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்,
பொதுமுடக்கத்தால் வேலை வருமானம் இழந்து வாடும் குடும்பங்களுக்கு மார்ச், ஏப்ரல் மே மாதங்களுக்கு தலா ரூ.7500 என மூன்று மாதங்களுக்கு ரூபாய் 22,500 நிவாரணம் வழங்க வேண்டும்,
கட்டுமானம், ஆட்டோ, அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆன்லோட் கியர்ஸ் ஆலை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் ஜி.முனுசாமி கண்டன உரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஜேம்ஸ், மாதவன், பாலகிருஷ்ணன், சுகுமார் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஆவுத்திபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் இடது தொழிற்சங்க மய்யம் உள்பட அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்களை சேர்ந்த தோழர்கள் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அனைத்து தொழிற்சங்கங்கள் அகில இந்திய எதிர்ப்பு நாளான ஜுலை 3 அன்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் செல்லியம்மன் நகர், எல்டியுசி மற்றும் ஏஅய்டியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்டியுசி முன்னணி தோழர்கள் பசுபதி, வேணுகோபால், வீரப்பன் கலந்துகொண்டனர்.
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஜி. முனுசாமி கண்டன உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் ராஜ்குமார் தலைமையில் வண்டலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கோபால், யுடியுசி மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் உரையாற்றினர். கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக்குழு தோழர்கள் மோகன்ராஜ், குமார், பூமிநாதன் கலந்துகொண்டனர்.

Search