கண்டிக்கின்றோம்
09.07.2020 அன்று நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் தோழர்கள் வீட்டிலிருந்தபடியே பதாகை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்
மக்களுக்கான இளைஞர்கள் மாநில பொதுச் செயலாளர் தோழர் மோகன்ராஜ் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின் தோழர் மோகன்ராஜ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். காலை 10:30 மணிக்கு அவரது வீட்டிற்கு லத்தியுடன் காயார் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவலர்கள் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த தோழர் மோகன்ராஜ் அவர்களின் இணையரிடம் மோகன் ராஜ் எங்கே என விசாரித்துள்ளனர். வீட்டில் இல்லை என கூறியும் அதை ஏற்க மறுத்த காவலர்கள் உள்ளேதான் இருப்பார் வெளியே வரச் சொல்லு என மிரட்டும் தொனியிலும், ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசியுள்ளனர்.
காவலர்கள் வந்த விசயத்தை அலைபேசி மூலம் அறிந்து அந்த காவலர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை துண்டித்துள்ளனர்.
மக்களுக்காக ஜனநாயக வழியில் போராடி வரும் தோழர் மோகன்ராஜ் வீட்டிற்கு சென்று அவரது இணையரை மிரட்டிய காவல்துறையின் அராஜக போக்கை மக்களுக்கான இளைஞர்கள் மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. மக்களுக்கான இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மன்னிப்பு கோரினர்.
ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கும் காவல் துறையை, தமிழக அரசை எதிர்த்து பொது மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
மாநில குழு
மக்களுக்கான இளைஞர்கள்(SFP)மக்களுக்கான மாணவர்கள்(YFP)