பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்!
மாநிலம் தழுவிய போராட்டம்
மத்திய மாநில அரசுகளே!
இந்தியா முழுவதும் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்!
நோய் தொற்று, குடும்ப வறுமை, மன உளைச்சல், கொரோனா பரவும் அபாய சூழ்நிலை என்ற நிலைமைகளில் மாணவர் களின் உயிரோடு விளையாடாதே!
தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திடு!
என்று வலியுறுத்தி 19.07.2020 அன்று,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், கோவை மாவட்டங்களிலும், அம்பத்தூரின் பல இடங்களிலும் முகப்பேர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், வேப்பம்பட்டு ஆகிய இடங்களிலும் ஜுலை 9 அன்று மக்களுக்கான மாணவர்களின் போராட்டம் நடத்தப்பட்டது. மக்களுக்கான மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் தோழர் சுகுமார் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களுக்கான மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.