தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும்
திறக்கப்பட வேண்டும்
மத்திய, மாநில அரசுகளே,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலே,
1.ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும், சென்னை உயர்நீதி மன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களையும் தகுந்த பாதுகாப்புடன் திறக்க நடவடிக்கை எடு!!
2. கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனாக ரூ. 3 லட்சம் வழங்க நடவடிக்கை எடு!!
3. தெலுங்கானா அரசு மற்றும் ஆந்திர அரசு வழக்கறிஞர்களின் நலன் கருதி ரூ.25 கோடி, ரூ.15 கோடி, என நிதி ஒதுக்கிய தைப்போல் தமிழக அரசும் பாண்டிச்சேரி அரசும் வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்க நடவடிக்கை எடு!!
4. கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.15,000 பாதிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடு!
5. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, இளம் வழக்கறிஞர் உதவி நிதி மாதம் ரூ.3000 வேண்டி விண்ணப்பிக்கும், உதவி தேவைப்படும் வழக்கறிஞர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி மாதம் ரூ.3000 வழங்க நடவடிக்கை எடு!