தொடர்ந்து குரல் எழுப்பும்
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர் கு.பாரதி வீட்டின் முன்பு
காவல் துறையினர் குவிந்து அச்சுறுத்தல்!
கண்டிக்கின்றோம்!
மக்களுக்கான இளைஞர்கள் (வஊட), மக்களுக்கான மாணவர்கள் (நஊட), 02.08.2020 அன்று நடத்தும், உஐஅ வரைவு 2020, புதியக் கல்விக் கொள்கை ஆகியவற்றை திரும்பப் பெறுக என்ற கோரிக்கையோடு நடத்தும் போராட்டத்துக்கு தோழர் பாரதி ஆதரவு தெரிவித்து கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வந்ததாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்ததாகவும் தெரிவித்தனர். கைது செய்யும் நோக்கத்தோடு அவரது வீட்டிற்கு வந்து, வீட்டின் வாசலை மறித்து சூழ்ந்துகொண்டு விசாரணை செய்து விட்டு பின் கலைந்து சென்றுள்ளனர்.
தோழர் கு.பாரதி மற்றும் அவரோடு செயல்படும் முன்னணிகளை காவல்துறையினர் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.
தமிழக அரசு, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்!
கருத்துரிமை, அரசியலமைப்பு உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் தோழர் கு.பாரதி மீதான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்!
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கருத்துரிமை, அரசியலமைப்பு உரிமைகளுக்காக அச்சமின்றி குரல் எழும்புவோம்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்
02 ஆகஸ்ட் 2020