கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள்
1. வேலை, வருமானம் இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கட்டுமான அமைப்பு ôரா தொழிலாளர் நல வாரியங்கள் தரும் நிவாரணம் சீர் செய்யப்பட வேண்டும். மாதம் ரூ.5000, 15 கிலோ அரிசி, 3 கிலோ பருப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய தரமான மளிகை பொருட்கள், முகக் கவசங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவினாலும் அரசின் வரி உயர்வினாலும் மத்திய அரசு கூடுதலாக பெற்ற பல லட்சம் கோடிகளுக்கு மேலான தொகையை வறுமை பட்டினி, கடன் என அவதிப்படும் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 மாதந்தோறும் தரப்பட வேண்டும்.
3. 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யும் தொழிலாளர் வரைவு தொகுப்பு சட்டங்களினால் அனைத்து கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்பட்டுவிடும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வரைவு தொகுப்பு சட்டங்களை இந்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.