COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, January 4, 2021

 

ட்ரம்ப் தோற்றுவிட்டாலும்

ட்ரம்புக்கு பிரம்மாண்டமாகவே ஆதரவு உள்ளது

எஸ்.குமாரசாமி

அய்க்கிய அமெரிக்காவின் வரலாற்றில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் 59ஆவது முறையாக, நவம்பர் 3, 2020ல் நடந்து முடிந்தது. தோற்றுப் போன ட்ரம்ப், தானே வெற்றி பெற்றதாகவும், உண்மையில் வெற்றி பெற்றவர் தோற்றுப் போனதாகவும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொன்னார்.

ஜோ பைடன் 8,12,31,288 வாக்குகளும், ட்ரம்ப் 7,42,23,851 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 70 லட்சம். வாக்காளர் அவையிலும் ஜோ பைடன் 306 வாக்குகளும் ட்ரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர். 59 முறை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜோ பைடன் பெற்ற எட்டு கோடியே பன்னிரண்டு லட்சம் வாக்குகள்தான், ஆக அதிகமானது. இன்று வரை (03.01.2021) ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை. குடியரசு கட்சியில் ஒரு பிரிவும் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறது. தபால் வாக்குகளில் தேர்தல் முறைகேடுகள் என்று ட்ரம்ப் எழுப்பிய கூப்பாடுகளை, வாக்காளர் அவையும் மாநில நீதிமன்றங்களும் வன்மையாக நிராகரித்தன. ட்ரம்ப் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்த வலதுசாரி சாய்வு கொண்ட உச்சநீதிமன்றமும், ட்ரம்ப்பின் வாதங்களை நிராகரித்தது. தபால் வாக்குகள் சட்டப்படி முறையாக பதிவாகி எண்ணப்பட்டிருப்பதாக, பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஜார்ஜியா மாநிலங்களின் வாக்காளர் அவைகளும் நீதிமன் றங்களும் தீர்மானித்தனர். மிகப்பெரிய பொய்யரான ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று, ட்ரம்புக்கு வாக்களித்த பெரும்பான்மையினர் நம்புவது, அய்க்கிய அமெரிக்க ஜனநாயகத்துக்கு நேர்ந்துள்ள மிகப் பெரிய சோகமாகும்.

ட்ரம்ப் வழக்கமாக நாம் காணும் அரசியல்வாதி அல்ல. பெரும்பணக்காரரான அவர், வியாபாரத்தில் பெரும் மோசடிகள் செய்வதுதான் தர்மம் என்று அடித்துப் பேசுகிற அவர், போட்டி அரசியலில் ஈடுபடாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி எதுவும் வகிக்காமல், 2016ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ட்ரம்ப்பை விட ஹிலாரி கூடுதல் மக்கள் வாக்குகள் பெற்றபோதும், வாக்காளர் அவை தேர்தலில், அதாவது கூடுதல் வாக்குகள் பெற்றவருக்கே அந்த மாநிலத்தின் அனைத்து வாக்குகளும் செல்லும் என்ற அடிப்படையில், 2016ல் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த முறை, 2020ல், மக்கள் வாக்குகளிலும் மாநிலங்களின் வாக்காளர் அவை வாக்குகளிலும் ட்ரம்ப் முன்னிலை பெறவில்லை. தோற்றுப் போனார்.

ட்ரம்ப் மூடர், முரடர், பொதுச் சொத்தில் கை வைப்பவர், பொய் மட்டுமே பேசுபவர், இன வெறியர், நிற வெறியர், பெண் வெறுப்பு பேசுபவர், அறிவியலுக்கு விரோதமானவர் என்றெல்லாம் நன்கு தெரிந்திருந்தும், குடியரசு கட்சி அவரையே வேட்பாளராக தேர்தலில் நிறுத்தியது.

வர்க்க அடிப்படையில், செல்வம், சொத்து அடிப்படையில் மட்டுமல்லாமல், நிறம், இனம் என்ற அடிப்படையிலும் அய்க்கிய அமெரிக்கா பிளவுண்டுள்ளது. உலகின் தலைவன் என்ற அதன் ஜாலம் எடுபடாமல் போனது. இந்தச் சூழலில்தான், நிறவெறி, இனவெறி, பெண் வெறுப்பு, பழைமைவாத, இருண்மைவாத ட்ரம்ப், அய்க்கிய அமெரிக்காவில் ஓர் அரசியல் சக்தியாக மாறினார்.

இருபத்தியோராம் நூற்றாண்டு பாசிஸ்டு கள் ராணுவ சதிகள் மூலம், ஆயுத கலகங்கள் மூலம் அல்லாமல், தேர்தல்கள் மூலமே வெற்றி பெறுகிறார்கள். ட்ரம்ப் 7 கோடி வாக்குகள் பெறுகிறார் என்பது, ஆட்கொல்லி முதலாளித் துவத்துக்கு எதிரான மக்கள் திரளின் வெறுப்பு, ஜனரஞ்சகவாத தேசியத்தையும் பலவீனப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தையுமே முன்கொண்டு வந்துள்ளதை காட்டுகிறது.

உலகில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் நலம்புரி அரசுகள் வந்தன. உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியால், ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதும், சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கூட உயர்ந்தது. ஆனால் 90 களுக்குப் பிறகு, வருமான, செல்வ ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையிலானவை போல் பெருகின. செல்வம் நிதிமயமானது. சந்தை சக்திகளையும் தனியார் மூலதனத்தையும் அரசு கட்டுப்படுத்துவது கைவிடப்பட்டது.

நவதாராளவாதத்தின் சிற்பிகளான மார்க் கரெட் தாட்சரும் ரொனால்ட் ரீகனும் முன் வைத்த கருத்துகள் காணத் தக்கவையாகும். தாட்சர் சொன்னார்: "மக்களில் பலர் அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அவற்றை அரசாங்கம்தான் தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்கின்றனர். எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அரசாங்கம் எனக்கு மானியம் தரும். எனக்கு வீடு இல்லை. அரசாங்கம் என்னை ஒரு வீட்டில் குடியேற்றும். இவ்வாறாக, அவர்கள் தம் பிரச்சனைகளை, சமூகத் தின் மீது திணிக்கிறார்கள். சமூகம் என ஒன்று கிடையாது என உங்களுக்குத் தெரியும். தனிநபர்களான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். குடும்பங்கள் இருக்கிறார்கள். தாட்சர் கூற்றுப்படி மனிதர்களுக்கு இடையில் கூட்டு, மனிதர்கள் மீது கவனம் செலுத்தும் அரசாங்கம் இருக்கக் கூடாது.

அய்க்கிய அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் சொன்னார்: "ஆங்கில மொழியிலேயே மிகவும் மோசமான சொற்கள் ஐ ஹம் ச்ழ்ர்ம் ற்ட்ங் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ஹய்க் ஐ ஹம் ட்ங்ழ்ங் ற்ர் ட்ங்ப்ல், அதாவது நான் அரசாங்கத்தைச் சேர்ந்தவன், நான் உங்களுக்கு உதவவே இருக்கிறேன். அவர் மேலும் சொன்னார்: "எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ண்ள் ய்ர்ற் ற்ட்ங் ள்ர்ப்ன்ற்ண்ர்ய் ற்ர் ர்ன்ழ் ல்ழ்ர்க்ஷப்ங்ம்ள் க்ஷன்ற் ஞ்ர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ண்ள் ற்ட்ங் ல்ழ்ர்க்ஷப்ங்ம், நமது பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வல்ல, அரசாங்கமே பிரச்சனை.

நலம்புரி அரசு சுருங்கியது. நல நடவடிக்கைகள் சரிந்து விழுந்தன. சந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முழக்கம் அரியணையில் அமர்ந்தது. மூலதனத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றானது. சிலரது செல்வம் மலையென உயர பலரது இல்லாமை கடலென பெருகியது.

இந்தப் பின்னணியில்தான், குடியேறுபவர்களால், அந்நிய போட்டியாளர்களால், சூறையா டும் மேட்டுக்குடியினரால் நாடு கைப்பற்றப்பட்டுள்ளது என்று பேசுகிற, தேசியவாத, கலாச்சார பழைமைவாத, நிறவெறி, இன வெறி, பெண் வெறுப்பு பேசுகிற ட்ரம்ப் போன்றோர் செல்வாக்கு பெறுவது நடந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, 2020ஆம் ஆண்டிலேயே, அய்க்கிய அமெரிக்காவில் உள்ள 7 கோடி குழந்தைகளில் வெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருப்பார்கள். 2040களில் லத்தீன் இனத்தவர், கருப்பினத்தவர், ஆசியர் என வெள்ளையர் அல்லாத பிற இனத்தவரே மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பார்கள். இத்தகைய காரணங்களின் பின்புலத்தில், அய்க்கிய அமெரிக்கா வெள்ளையர் அல்லாதோர் நாடாக மாறுவதன், கலாச்சார, சமூக, பொருளாதார விளைவுகளுக்கு எதிரான தடுப்புச் சுவராக ட்ரம்ப்தான் இருப்பார் என, மக்கள் திரளின் கணிசமான பகுதி நம்புகிறது. குடியரசு கட்சிக்கும் உடனடி எதிர்காலத்தில் ட்ரம்ப்பை தவிர மீட்பர் யாருமில்லை.

ட்ரம்ப் தோற்றுவிட்டாலும் ட்ரம்புக்கு பிரம்மாண்டமாகவே ஆதரவு உள்ளது. வால் ஸ்ட்ரீட் முற்றுகை, கருப்பு உயிர்களுக்கு பொருளுண்டு, மணிக்கு 15 டாலர் குறைந்த பட்ச சம்பளம், அமைதி நிலவ வேண்டும், பெண் சமத்துவம் வேண்டும் என நடந்த போராட்டங்களைக் கண்ட அய்க்கிய அமெரிக்காவில், முற்போக்கு திசையிலான போராட்டங்கள் நிச்சயம் வெடிக்கும்.

Search