COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 3, 2012

Mar-1-5

மக்கள் விரோத ஜெ ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

உழைக்கும் மக்கள் உரிமைகளை பாதுகாப்போம்!

மார்ச் 1 முதல் 30 வரை

அரசியல் பிரச்சார இயக்கம்

நிலத்துக்காக

வாழ்வாதாரத்துக்காக

ஜனநாயகத்துக்காக

மார்ச் 30

உழைக்கும் மக்கள் உரிமைப் பேரணி, பொதுக்கூட்டம்

தலைமை

தோழர் பாலசுப்பிரமணியன், கோவை மாவட்டச் செயலாளர்

சிறப்புரை

தோழர் ஸ்வதேஷ் பட்டாச்சார்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

தோழர் எஸ்.குமாரசாமி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, மத்தியக்கமிட்டி உறுப்பினர்

தோழர் கவிதா கிருஷ்ணன், மத்தியக்கமிட்டி உறுப்பினர்

தோழர் பாலசுந்தரம், மாநிலச் செயலாளர்

மற்றும் பலர்

பேரணி புறப்படும் இடம்: காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம்

பொதுக்கூட்டம் தோழர் அப்பு திடல் (சிவானந்தா காலனி) கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

 

ஜெயலலிதா அரசே!

O ஊராட்சி முதல் தலைமைச் செயலகம், முதலமைச்சர் வரையிலான ஊழல் முறைகேடுகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க ஊழல் எதிர்ப்பு மாநில சட்டம் இயற்று!

O விவசாய நெருக்கடிக்கு முடிவு கட்டி விவசாயத்தை முன்னேற்ற முழுமையான நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட விவசாய சீர்திருத்தம் கொண்டு வா! கோவில், மடம் அறக்கட்டளை, பஞ்சமி, 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம், சிறுதாவூர், காவேரிராஜபுரம் நிலங்களை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு குத்தகை விவசாயிகளுக்கு பங்கீடு செய்ய நிலச்சீர்த்திருத்த ஆணையம் ஏற்படுத்து!

O பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, வழங்கப்படுகிற சலுகைகளை திரும்பப் பெறு!

O விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள், சிறுகுறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோரென அறிவி!

O வீடற்ற கிராமப்புற, நகர்ப்புற வறியவர்களுக்கு 5 சென்ட் வீட்டுமனையுடன் அரசு செலவில் வீடு கட்டிக் கொடு!

O அனைத்து கிராமப்புற, நகர்ப்புற வறியவர்களுக்கும் மாதம் 50 கிலோ விலையில்லா அரிசி, லிட்டர் ரூ.3 விலையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய், மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கு!

O தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஆண்டுக்கு 250 நாட்களாக்கவும் நாளொன்றுக்கு கூலியை ரூ.300 ஆக்கவும் பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்து! மாநில நிதியிலிருந்து வேலை இல்லா காலப்படியை உறுதி செய்!

O விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட கிராமப்புறத் தொழிலாளர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வா! குறைந்தபட்ச கூலியை ரூ.400 ஆக அறிவி!

O புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மறுவாழ்வு நடவடிக்கைகளை விரைந்து நடத்து!

O தொழிற்சங்க அங்கீகார சட்டத் திருத்தம் இயற்று!

O பயிற்சியாளர் நலன் காக்க சட்டத் திருத்த மசோதா 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறு!

O பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகாரம் செய்து நிரந்தரப்படுத்து!

O சுமங்கலி திட்டத்தை தடை செய்! செயல்படுத்தும் முதலாளிகளை கைது செய்! அந்த தொழிலாளர்களின் நலவாழ்வை அரசே ஏற்றுக்கொள்!

O தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 85(1)ன் கீழ் விசைத்தறி கூடங்களை தொழிற்சாலைகள் என அறிவித்து ஆணையிடு!

O உழைப்பவர் எவரானாலும் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.15000 கொடு!

O பீடித் தொழிலாளர் பற்றிய கணக்கெடுப்பு நடத்து! மறைமுக கூலி வெட்டுக்கு முடிவு கட்டு!

O கட்டுமான தொழில்களுக்கான நலநிதியை 1% என உயர்த்து! 2% என உயர்த்த சட்டத்திருத்தம் இயற்று! பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகளை கைது செய்து தண்டனை வழங்கு! தலித்துகளை தீண்டாமை துவேஷத்துடன் பேசிய முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கு!

O இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த காவலர்களை கைது செய்! வழக்கை சிபிஅய்க்கு மாற்று!

O தலித், பெண் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து அரசு பாதுகாப்பு வழங்கு!

O கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி சட்டச்சபையில் தீர்மானம் நிறைவேற்று! கடற்கரையோரங்களில் வரும் அனல் மின்நிலையங்களை தடை செய்!

O கல்வி, மருத்துவத்தில் தனியார் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்து! கல்வி, மருத்துவத்தை அனைத்து மட்டத்திலும் அரசே ஏற்று நடத்து!

O வரும் ஆண்டில் இருந்து முழுமையான சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்து!

O உள்ளாட்சிகளுக்கு அரசு வருவாயில் 30% நிதி உதவி வழங்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகாரிகளின் தலையீட்டை தடுத்து நிறுத்த சட்டத் திருத்தம் இயற்று! அதிகாரிகள், ஆளுங்கட்சிக்காரர்களின் பிடியில் இருக்கும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்து!

Search