அப்புவின் தோழர்களே, கோவைக்கு வாருங்கள்!
கோடானுகோடி உழவர்களின் ரத்தத்தில் நீச்சலடிக்கும் நிலப்பிரபுத்துவத்தை
ஆயிரம் ஆயிரம் தொழிலாளி ரத்தத்தைக் குடித்துத் தள்ளாடும் முதலாளித்துவத்தை
அழிக்கப் போராடும் வீரர்கள் யாரோ, அவர்கள் எல்லாம் அப்புவின் தோழர்கள்!
- இன்குலாப்
நக்சல்பாரி, வசந்தத்தின் இடிமுழக்கம், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, சிம்ம
சொப்பனமானது. நக்சல்பாரியின் அழைப்பை
ஏற்ற தமிழக முன்னோடிகளின் முன்னோடி
தோழர் அப்பு. கட்சியின், முதல் தமிழ் மாநிலச்
செயலாளர். அவர் ஒரு தொழிலாளி. பேச்சாளர். எழுத்தாளர். அமைப்பாளர். எல்லாவற்றுக்கும் மேல் ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்ட்.
உலகம் முழுவதும், இந்தியா முழுவதும், தமிழகம் முழுவதும், கம்யூனிஸ்டுகள் சிறை
வைக்கப்பட்டனர். சித்தரவதை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். மாலெ
கட்சியின் முதல் பொதுச் செயலாளர் தோழர்
சாரு மஜ÷ம்தார், இரண்டாவது பொதுச் செயலாளர் தோழர் ஜாஹர், கட்சி மத்தியக்குழு
உறுப்பினர்கள், நிர்மலா சிநேகலதா, தமிழக
மாலெ இயக்கத் தோழர்கள் அப்பு, சுப்பு, சந்திரசேகர், சந்திரகுமார், பாலன், சீராளன், மச்சக்காளை படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு முன்பும் பின்பும், கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை
செய்யப்படுவார்கள். நக்சல்பாரி - தெலுங்கானா, தெபாகா, புன்னப்புரா வயலார், தஞ்சை
விவசாயப் போராட்டங்களின் தொடர்ச்சியே. நக்சல்பாரி, அரசியல் அதிகாரம் உழைக்கும்
மக்கள் கைகளில் வந்தாக வேண்டும் என
உரக்கச் சொன்னது.
உலக நிலைமைகள், நாட்டு நிலைமைகள்
மாற, இககமாலெயின் அரசியல்வழியும் மாறியுள்ளது. அராஜகவாத ராணுவ சாகசவாதத்தையும் நாடாளுமன்ற வால்பிடிவாதத்தையும்
மாலெ கட்சி நிராகரிக்கிறது. இடதுசாரி புத்தெழுச்சியில்தான் மாற்றம் சாத்தியம் என்றும், மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களே இடதுசாரி புத்தெழுச்சியைக் கொண்டு வரும்
என்றும் கட்சி நம்புகிறது.
கட்சியின் நம்பிக்கைகளை, வெகுமக்கள்
பங்கேற்பு அரசியல் வழியை, போராட்ட நெருப்பில் புடம் போட கோவை களம்
அமைத்துத் தந்தது. சின்னியம்பாளையம்
தியாகிகள், ஸ்டேன் மில்ஸ் போராளிகள்
ரத்தத்தை, தியாகத்தை, லட்சியங்களைச்
சுமந்து நிற்கும் கோவையில், சமகாலச் சூழலுக்கேற்ப, இடதுசாரிகளின் போராட்டப் பாரம்பரியத்துக்குப் புத்துயிரூட்ட வேண்டியுள்ளது.
இகக, இககமா கட்சிகள் இடதுசாரிகளின்
சுதந்திர அரசியலைத் தொலைத்துவிட்டதால், ஒரு கட்டத்தில், கோவை உழைக்கும் மக்களின் ஒரு கணிசமான பிரிவினரும், சங்பரிவார்
செல்வாக்குக்கு ஆளாயினர். அரசியல் சமரசங்களும் வர்க்க சமரசங்களும் கைகோர்த்துக்
கொள்ள, கோவை முதலாளிகள் தம் அழைப்பிற்கு, கோவை தொழிலாளர்களைத் திரட்டும்
அவலமும் நடக்கிறது. மின்வெட்டை எதிர்ப்பவர்களை, ஆபத்தான அணு மின்சாரம் கூடன்குளத்தில் இருந்து உடனே வந்தாக வேண்டும்
எனச் சொல்ல வைக்கப் பார்க்கிறார்கள்.
இந்த இருண்ட மேகங்கள் மத்தியில்
கோவை தொழிலாளர் இயக்க வானத்தில் ஒரு
சிவப்பு நட்சத்திரமாய் பிரிக்கால் தொழிலாளர்
போராட்டம் ஜொலிக்கிறது. 5 ஆண்டுகளில்
அதன் ஒளி மங்கவில்லை. புதிய வெளிச்சங்கள்
தரப்பார்க்கிறது. 2008ல் பிரிக்கால் தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தப் பங்களிப்பும், 2012 பொது வேலை நிறுத்தம் கூடுதல்
வீச்சும் செல்வாக்கும் பெறத் தூண்டுதலாய்
இருந்தது. சிறைவாசமும், வழக்குகளும்
போராட்டத்தில் நின்ற பிரிக்கால் தொழிலாளர்களை பின்வாங்கச் செய்யவில்லை. மற்ற
தொழிற்சங்கங்களையும் அவர்கள் போராட்டம் இயங்க வைத்துள்ளது.
இகக மாலெ 9ஆவது மாநில மாநாட்டு
நகல் அறிக்கை, கோவையில் ஏன் மாநில
மாநாடு நடத்தப்படுகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ள செய்திகளைப் பார்ப்பது மிகவும்
அவசியமானது.
‘பிரிக்கால் ஆலைக்குள் இருந்த வெடிப்புமிக்கச் சூழல், மிக முக்கிய காரணமாக இருந்தபோதிலும், அந்தச் சூழலை தொகுப்பான ஒரு
திட்ட வரையறைக்குள், பொருத்தமான வழிகளில், விடாப்பிடியான நடைமுறை மூலம்
கைப்பற்றி உள்ளோம் என்பது முக்கிய
அனுபவமாகும்’.
‘போர்க்குணம், பரந்த தொழிலாளர் ஒற்றுமை, பிற பிரிவு மக்கள் போராட்டங்களுக்கு
ஆதரவு என்ற புரட்சிகர குணாம்சங்களை
ஈட்டியுள்ளது. மிக முக்கியமாக, நிர்வாகம், காவல்துறை, அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்குதல்களை எதிர்
கொண்டு, தாக்குப் பிடித்து முறியடித்து
நின்றுள்ளது’.
‘கட்சி மாநில மாநாட்டை கோவையில்
நடத்துவதென்ற நமது முடிவே, இந்த நீண்ட
நெடிய போராட்டங்களுக்கும் மதிப்புமிக்க
அனுபவங்களுக்கும் முத்தாய்ப்பான அங்கீகாரமாகும்’.
தோழர் அப்பு நகரில், தோழர் சந்திரசேகர்
அரங்கில், கட்சியின் மாநில மாநாடு மார்ச் 31 - ஏப்ரல் 1 தேதிகளில் நடைபெறுகிறது.
தோழர் சந்திரசேகர் பகத்சிங்கின் உண்மையான வாரிசு. அகில இந்திய மாணவர் கழகம்
நிறுவ அடித்தளம் இட்டவர். ஜவஹர்லால்
நேரு பல்கலை கழகத்தில், மாணவர் மத்தியில்
புரட்சிகர அரசியல் வேரூன்ற விதை போட்டவர். புரட்சிகர அரசியலைக் கிராமப்புற வறியவர் மத்தியில் எடுத்துச் செல்லும்போது, பீகாரின் சிவான் மாவட்டத்தில், நிலப்பிரபுத்துவ
சக்திகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில், மார்ச் 1 அன்று
மீண்டும் தேர்தல் நடந்தது. பெருநிறுவனப்
பேராசை, சூறையாடல், அதற்குத் துணை
போகும் முதலாளித்துவ அரசியல், இரண்டுக்கும் இடையிலான பாலமான ஊழல், மதவாதம், அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக, மக்களின் வாழ்வுரிமைகள், ஜனநாயக
உரிமைகளுக்கு ஆதரவாக விடாப்பிடியாகப்
போராடும் அகில இந்திய மாணவர் கழகம்
பெற்ற பெருவெற்றி, தோழர் சந்திரசேகரின்
லட்சியங்கள் உயிர்துடிப்புடன் நீடிப்பதற்கு
சான்று கூறுகின்றன. நாமும் தோழர் சந்திரசேகர் நினைவை, அதன் மூலம் பகத்சிங்
நினைவைப் போற்றுவோம்.
நிலத்துக்காக, வாழ்வாதாரத்துக்காக, ஜனநாயகத்துக்காக, மக்கள் விரோத ஜெ ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம். உழைக்கும்
மக்கள் உரிமைகளைப் பாதுகாப்போம். 2012 மார்ச் 30 அன்று கோவையில் நடைபெறும்
உழைக்கும் மக்கள் உரிமைப் பேரணிக்கு, பொதுக் கூட்டத்துக்கு, போராட்டங்களைக்
கொண்டாட, கொண்டாட்டமாய் போராட
உறுதியேற்க,
அப்புவின் தோழர்களே, கோவைக்கு
வாருங்கள்!
பிப்ரவரி 28 பொது
வேலை நிறுத்தத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக
சுமைதூக்கும் தொழிலாளர்கள் நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் பிப்ரவரி 28 பொது
வேலை நிறுத்தத்தன்று தூத்துக்குடி, நெல்லை, கோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி
உட்பட பல மாவட்டங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் 27 கிட்டங்கிகள் மூடப்பட்டன. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம் சென்னை தனியார் மருத்துவமனை செவிலியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள்
கோரிக்கைகளை அரசு தலையிட்டு நிறைவேற்றக் கோரியும், பெண்களை இழிவாக பேசிய தேசிய மகளிர்
ஆணைய தலைவர் மம்தா சர்மாவை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும், பெண்கள் மீது
தொடர்ந்து நடந்து வரும் பாலியல் தாக்குதல்களை கண்டித்தும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு
வழங்க வலியுறுத்தியும், அய்முகூ அரசின் அனைத்து மட்டங்களிலும் நடந்து வரும் ஊழல்களை கண்டித்தும்
சென்னையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மார்ச் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் தேவகி தலைமை தாங்கினார். மாநிலத்
தலைவர் தோழர் தேன்மொழி, மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். முற்போக்கு பெண்கள் கழக மாநில நிர்வாகிகள் தோழர் குப்பாபாய், தோழர் ரேவதி, தோழர் ஜாக்குலின்மேரி கண்டன உரையாற்றினர். |
களச் செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர், எஸ்.சுஜாதா |