பிப்ரவரி
28 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏஅய்சிசிடியு, அவிதொச
பிப்ரவரி 28 வேலை நிறுத்த போராட்ட செய்தியை நாட்டுப்புற, நகர்ப்புற வறியவர்கள் மத்தியில் பல்வேறு கட்டங்களாக கொண்டு செல்வதில் ஏஅய்சிசிடியுவும் அவிதொசவும் முன்னணிப் பங்காற்றின.
கோவை: பிப்ரவரி 28 அன்று பிரிக்கால் ஆலை
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சங்கப்
பொதுப்பேரவையில் 700 பேர் கலந்து கொண்டனர். காவல்துறை அனுமதி மறுப்பால் திட்டமிட்டபடி
மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த முடியாமல்
போனது.
சென்னை: அம்பத்தூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் சேகர், அகில
இந்திய மாணவர் கழக தலைவர் தோழர் பாரதி, முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட தலைவர் தோழர்
தேவகி, ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள்
மோகன், பாலகிருஷ்ணன், பசுபதி, ஜீவானந்தம், எ.சேகர் மற்றும் டிஅய்டிசி தோழர்கள் பங்கேற்றனர்.
சென்னை தீவுத்திடலில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர், துணைத் தலைவர் தோழர் என்.குமரேஷ், அகில
இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டத் துணை
தலைவர் தோழர் குப்பாபாய், ஏஅய்சிசிடியு மாவட்ட
நிர்வாகிகள் தோழர்கள் பொன்ராஜ், பி.டி.ராஜசேகர், ஜேம்ஸ், ரவிச்சந்திரன், பரந்தாமன் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கங்கள்
நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் மற்றும்
டிஅய்டிசி தோழர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர்: காரனோடையில் நடந்த மறியல்
போராட்டத்தில் அவிதொச மாநில பொதுச்செயலாளர் தோழர் எஸ். ஜானகிராமன் தலைமையில் 300 பேர் கலந்துகொண்டனர். ஏஅய்சிசிடியு மாநில
துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி. முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட தலைவர் தோழர்
சாந்தி, ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள்
ராஜா, அன்புராஜ், பழனிவேல், திருநாவுக்கரசு, ஜெயராஜ், அவிதொச மாவட்ட தலைவர் தோழர்
வண்னை சந்திரன், நல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்
தோழர் வாசு பங்கேற்றனர். கைது செய்யப்பட்டு மாலை
விடுதலை செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரியில் அனைத்து
தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் சொ.இரணியப்பன். ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள்
பாலசுப்பிரமணியன், கோபால் பங்கேற்றனர். காஞ்சிபுரம் நகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய
பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு கைத்தறி
நெசவாளர் சங்க தலைவர் தோழர் முருகன் மற்றும்
சமையல் கலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
சேலம்: அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய
பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநில
துணைத்தலைவர் தோழர் அ.சந்திரமோகன், கோஆப்டெக்ஸ் சங்க தலைவர் தோழர் விஸ்வநாதன், ஏஅய்சிசிடியு மாவட்ட தலைவர் தோழர் நடராஜன் உட்பட
தோழர்கள் பங்கேற்றனர். குப்பனுரில் அவிதொச, கட்டுமான தொழிலாளர் சங்க மறியல் போராட்டத்தில் கட்சி
மாவட்ட செயலாளர் தோழர் மோகனசுந்தரம், தோழர்
அய்யந்துரை உட்பட தோழர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்: திருநாவலூரில் அவிதொச, கட்டுமான தொழிலாளர் சங்க மறியல் போராட்டத்தில்
கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன்
தலைமை தாங்கினார். செஞ்சியில் நடந்த மறியல்
போராட்டத்தில் அவிதொச மாவட்டச் செயலாளர்
தோழர் செண்பகவள்ளி, முற்போக்கு பெண்கள் கழக
மாவட்ட தலைவர் தோழர் சுசீலா பங்கேற்றனர்.
நாகை-தஞ்சை: தஞ்சையில் அனைத்து
தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ராஜன், தோழர் மணிபாரதி உட்பட தோழர்கள் பங்கேற்றனர். அவிதொச, மணலூர், திருவிடைமருதூர். புங்கனூர், திருமுல்லைவாசல் ஊராட்சிகளில் வேலை நிறுத்தம்
செய்து பேரணி ஆர்பாட்டங்கள் நடத்தியது. மாலெ
கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.இளங்கோவன், அவிதொச தலைவர் தோழர் டிகேஎஸ். ஜனார்
தனன், மாவட்ட தலைவர்கள், தோழர்கள் கண்ணையன், மாசிலாமணி, மாணவர் கழக மாநில பொதுச் செயலாளர் தோழர் ராமேஷ்வர்பிரசாத் பங்கேற்றனர்.
கடலூர்: காட்டுமன்னார்குடியில் அவிதொச
ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட பொறுப்பாளர்
தோழர் அம்மையப்பன், அவிதொச தலைவர் தோழர்
புலவேந்திரன். மாணவர் கழக தலைவர் தோழர்
ராஜசங்கர் உட்பட தோழர்கள் பங்கேற்றனர். விருதாச்சலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர்
அம்மையப்பன், புரட்சிகர இளைஞர் கழக தலைவர்
தோழர் தனவேல் உûயாற்றினார்கள்.
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் நடந்த
மறியல் போராட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்
தோழர் பழ.ஆûசைத்தம்பி, அவிதொச மாநில
நிர்வாகிகள் தோழர்கள் வளத்தான், ராஜாங்கம், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் தோழர்
முருகையன் உட்பட தோழர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல்: ஏஅய்சிசிடியு பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் மணிவேல் தலைமை தாங்கினார். மாநிலச்
செயலாளர் தோழர் கே.ஜி தேசிகன், கட்சி மாவட்ட
பொறுப்பாளர் தோழர் ஜெயவீரன் உட்பட 250க்கும்
மேற்பட்டவர் கலந்து கொண்டனர். பெண்கள் 150 பேர்
பங்கேற்றனர்.
நெல்லை: திருநெல்வேலி நகரில் தர்ணா
போராட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு மாநில
பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், துணைத் தலைவர் தோழர் தேன்மொழி, செயலாளர்
தோழர் ரமேஷ் உட்பட பீடி தொழிலாளர்கள், சுமை
தூக்கும் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் அனைத்து
தொழிற்சங்கங்கள் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், திருச்செங்கோட்டிலும், தோழர் கே.ஆர். குமாரசாமி நாமக்கல் நகரத்திலும் நடைபெற்ற பேரணி
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும்
ஆவத்திப்பாளையம் பகுதிகளில் 23.02.2012 முதல்
விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிற 3ஆம் கட்ட கூலி உயர்வு போராட்டத்தின்
தொடர்ச் சியாக, பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தம்
நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க இயக்கங்கள்
நகரத்தில் நடத்திய பேரணியில் மாவட்டச் செயலாளர்
தோழர் புகழேந்தி பங்கேற்று பேசினார்.
குமரி: குளச்சல், குளித்துறை நகரங்களில்
அனைத்து தொழிற்சங்க பேரணி ஆர்ப்பாட்டங்களில்
ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் தோழர்
அந்தோணிமுத்து, மாநிலச் செயலாளர் தோழர் மேரி
ஸ்டெல்லா, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் சுசீலா பங்கேற்றனர்.
???????????????
தமிழக அரசின் குற்றமயப் போக்கால் கட்டுமான தொழிலாளி விபத்தில் மரணம் கொரட்டூர் காவல் நிலையம் முற்றுகை
சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி
தங்கவேல் என்பவர் சென்னைக்கு கட்டுமான
வேலைக்காக வந்தார். சென்னை கொரட்டூரில் பாதாள
சாக்கடை திட்டப்பணிக்கு ஒப்பந்ததாரர் மூலம்
பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
18.02.2012 அன்று வேலையில் இருந்து விலக
அனுமதிக்காமல் வைத்திருப்பதாகவும், தன்னை
அழைத்துச் செல்ல மேஸ்திரியிடம் பேசுமாறும் தன்
மகன் சபரிநாதனுக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். அன்றைய தினமே அவர் மின்சாரம் தாக்கி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிறகு
இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நாள் கொரட்டூர் காவல் நிலையத்தில்
இருந்து தங்கவேல் மகன் சபரிநாதனுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அன்று காலை 6.30 மணிக்கு
காவல் நிலையத்திற்கு சபரிநாதன், தங்கவேல்
அவர்களின் மனைவி, அகில இந்திய மாணவர்
கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர்
பாரதி, தோழர் உமாசங்கர் ஆகியோர் சென்றனர். காவல் நிலையத்தில் ஏற்கனவே காவல்துறையினரால்
புகார் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில்
அந்தத் தொழிலாளியை சென்னைக்கு அழைத்து
வந்த மேஸ்திரி பெயரும், பாதாள சாக்கடை திட்ட
ஒப்பந்ததாரர் சார்பாக ஒரு மேற்பார்வையாளர்
பெயரும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
மாலெ கட்சி தோழர்கள் ஒப்பந்ததாரர் பெயரை
முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தினர். ஒப்பந்ததாரரின் பெயர், தொலைபேசி எண் முகவரி
எதுவுமே தெரியாது என்று மேற்பார்வையாளர்
சொன்னார். காவல்துறை தரப்பில் ஒப்பந்ததாரர்
பெயரை சேர்க்க தயாராகயில்லை.
ஒப்பந்ததாரர் பெயரை சேர்த்து முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அப்படிச்
செய்யாவிட்டால் இறந்தவரின் உடலை வாங்க
மாட்டோம் என்றும் மாலெ கட்சி தோழர்களின்
ஆதரவுடன் வந்த உறவினர் தெரிவித்தனர்.
காலை 11.00 மணி அளவில் அகில இந்திய
முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர்
தோழர் தேவகி, தோழர் லில்லி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் முனுசாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்
தோழர் ராஜா, உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் மோகன், கட்டுமான
தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர்
ஏ.சேகர் கட்டுமான சங்கத்தின் மாநில பொருளாளர்
தோழர் குப்பாபாய் மற்றும் இடம் பெயர்ந்த வட மாநில
தொழிலாளர் தோழர்கள் காவல் நிலைய வாசலிலேயே
அமர்ந்து வழி மறித்து முழக்கம் எழுப்பினர்.
ஒப்பந்ததாரர் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து கைது செய்யும் வரை போராட்டம்
தொடரும் என தோழர்கள் அறிவித்தனர். போராட்டம்
துவங்கிய 5 நிமிடத்தில் காவல்துறை துணை
ஆணையர், ஆய்வாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தாங்கள் செய்தது தவறுதான் என்றும், ஒப்பந்ததாரரின் பெயரை சேர்த்து கைது செய்வதாகவும் உறுதி
அளித்தனர்.
அதன் பிறகு அங்கு வந்த ஒப்பந்ததாரரின்
வழக்கறிஞர் ‘நீங்கள் பிரச்சனை செய்வதால்தான் நான்
இங்கு வந்துள்ளேன். ஏற்கனவே இதுபோல் திருமங்கலம், வில்லிவாக்கம் போன்ற இடங்களில் விபத்து
நடந்து செட்டில் செய்துள்ளேன். தங்கள் தரப்பில்
சம்மதித்தால் உடனே செட்டில் செய்ய தயாராக
இருக்கிறேன்’ என்றார். ஆனால் இந்திய தண்டனை
சட்டப் பிரிவு 304ஏயில் இருந்து 174 பிரிவாக முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார்.
இந்த பதிலால் அதிர்ச்சியுற்ற தோழர்கள்
வழக்கறிஞருடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். போராட்டம் துவங்கிய 10 நிமிடத்தில் ஒப்பந்ததாரர் பெயர் முகவரி கிடைத்தது. 1 மணி நேரத்தில்
ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர்
தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சென்னை, சேலம் மாவட்டங்களில் கட்டுமான
தொழிலாளி தங்கவேல் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம்
நிவாரணம் வழங்க வேண்டும், அவர் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், விபத்துக்களை தடுக்க தமிழக அரசும், தொழிலாளர்
துறையும் பொதுத் தணிக்கைக்கு உத்தரவிட
வேண்டும் என்ற கோரிக்கைகளோடு சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டன. தமிழகத்தில் அரசின் கவனக்
குறைவால் தொடர்ந்து ஏற்படும் தொழிலாளர் மரணங்கள், தீவிரமான, வலிமையான போராட்டங்களின்
அவசியத்தை வலியுறுத்துகின்றன
???????????????
எம்எல்ஏ, மந்திரிகளுக்கு லேப்டாப்பா? மாணவர்களுக்கு வெறும் பில்டப்பா?
+1, +2, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்
கணிணி என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறை
வேற்றக் கோரி அகில இந்திய மாணவர் கழகம்
30.01.2012 அன்று சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சட்டமன்றத்தில் மடிக்கணிணி பற்றிய கேள்விக்கு
பதிலளித்த தமிழக முதல்வர் 9 லட்சம் மடிக்கணிணிக்காக, தாய்லாந்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், தாய்லாந்தில் திண்பொருள் பிரச்சனை ஏற்பட்டதால் உடனடியாக தர முடியாது என்றும், சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு உடனே மடிக்கணிணி வழங்கப்படும் என்றும் தொகுதி நிதியில் எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார். எம்எல்ஏ, மந்திரிகளுக்கு
லேப்டாப்பா? மாணவர்களுக்கு வெறும் பில்டப்பா? என்று மாணவர்கள் முழக்கம் எழுப்பினர்.
லேப்டாப், கல்வி உதவித் தொகை கோரி
18.02.2012 அன்று சென்னையில் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்
நடத்தின. அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய
துணைத் தலைவர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட அகில இந்திய மாணவர்
கழக பொறுப்பாளர் தோழர் கோபாலகிருஷ்ணன், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர்
தோழர் மோகன், ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவஹர் கண்டன உரையாற்றினர்.
தடையற்ற மின்சாரம் கோரி அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் சென்னையில் 25.02.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். மாலெ
கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார்
கண்டன உரையாற்றினார். மாணவர் கழக மாநிலத்
துணைத் தலைவர் தோழர் சத்தியகிருஷ்ணன், பெண்கள் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் தேவகி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர்
தோழர் மோகன் கண்டன உரையாற்றினர்.
நாமக்கல், பள்ளிப்பாளையத்தில் அகில இந்திய
மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும்
27.02.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. தோழர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். விலையில்லா
மடிக்கணினி, இடைநிற்றலை தடுக்க ரூ.1000 முதல்
ரூ.5000
வரை உதவித் தொகை வழங்க வேண்டும்
என கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. குஜராத் மனிதப்
படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடியும், பாபர்
மசூதி இடிப்பு வழக்கில் லிபரான் கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றவாளிகளான
அத்வானி, ராஜ்நாத்சிங், ஆகியோர் உட்பட சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் வழக்கு பதிவு
செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும், தனியார்
பள்ளி, கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்
என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர்
வெங்கடாசலம், அகில இந்திய மாணவர் கழக மாநிலத்
தலைவர் தோழர் மலர்விழி, மாலெ கட்சி மாவட்டச்
செயலாளர் தோழர் கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு
மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் புகழேந்தி, ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
???????????????
ஊழலுக்கு எதிராக, விலைஉயர்வுக்கு எதிராக
கவுரவமான நிரந்தர வேலைவாய்ப்புக்காக, ஒப்பந்த முறைக்கு எதிராக
புரட்சிகர இளைஞர் கழகத்தின் இளைஞர் உரிமை மாநாடு
மார்ச் 3 அன்று விழுப்புரத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் இளைஞர் உரிமை மாநாடு நடத்தியது. மாநாட்டிற்கு தோழர் தனவேல் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் தோழர் அந்தோணிமுத்து, வெங்கடேசன், பாரதி, தேசிகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். அகில இந்திய பொதுச் செயலாளர்
தோழர் கமலேஷ்சர்மா சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் தோழர்கள் இளவரசன், ராமச்சந்திரன், விமல்ராஜ், பாரதிராஜா, சத்தியகிருஷ்ணன், வெங்கடாசலம், மலர்விழி, ரமேஷ்வர்பிரசாத், ராஜகுரு, ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் மாநில குழு உறுப்பினர்களாக
தோழர்கள் பாரதி, சுஜாதா, தண்டபாணி, சிவகுமார், பாலகிருஷ்ணன், கோபால், ராஜகுரு, தனவேல், ராஜசங்கர், வி.ஜி.ராஜன், வேல்முருகன், ராமச்சந்திரன், விவேக், கோபால், இளவரசன், ரமேஷ்வர்பிரசாத், மலர்விழி, வெங்கடாசலம், சக்திவேல், கோவிந்தராஜ், முத்துராஜ், பாரதிதாசன், கார்த்திகேயன், எஸ்.ராஜ்குமார், மணிகண்டன், நிம்மி, பிரபாகர், ரவி, மோகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில நிர்வாகிகளாக தோழர்கள் தனவேல், ராஜசங்கர், வெங்கடாசலம், இளவரசன், கோவிந்தராஜ், கோபால், பாரதி, சுஜாதா ஆகியோரும் தோழர் பாரதி மாநில அமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
O வேலையில்லா
கால உதவித் தொகை
மாதம் ரூ.5,000 வழங்க
வேண்டும்.
O தனியார்
பள்ளி கல்லூரிகளை
அரசே ஏற்று நடத்த
வேண்டும். ஆரம்பம்
முதல் ஆராய்ச்சி
கல்வி வரை தரமான
இலவச கல்வி வழங்க
வேண்டும். கல்வி,
வேலை அடிப்படை
உரிமையாக்க சட்டம்
இயற்ற வேண்டும்.
O ஊழலை
ஒழிக்க திறன்வாய்ந்த
லோக்பால் மசோதா
நிறைவேற்றப்பட
வேண்டும்.
O ஊழலில்
கொள்ளையடிக்கப்பட்ட,
வெளிநாட்டில்
உள்ள ரூ.25 லட்சம்
கோடி கருப்புப்
பணத்தை மீட்டு
கல்வி, மருத்துவம்,
சுகாதாரம், வேலை
வாய்ப்பு போன்ற
மக்கள் சார்ந்த
வளர்ச்சிப் பாதைக்காக
செலவிட வேண்டும்.
O தமிழில்
படித்தவர்களுக்கு
வேலை வாய்ப்பில்
முன்னுரிமை வழங்க
வேண்டும்.
O நோக்கியா,
ஹ÷ண்டாய்
போன்ற பன்னாடடு,
இந்நாட்டு நிறுவனங்களுக்கு
அளிக்கப்பட்ட
நிலம், வரிச்சலுகை
போன்றவற்றை ரத்து
செய்து வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு செய்துள்ள
70 லட்சம் இளைஞர்களுக்கு
நிரந்தர வேலை தர
வேண்டும்.
O ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு
சம வேலைக்கு, சம
கூலியை அரசியல்
அமைப்பு சட்டமாக்க,
O ஒப்பந்தமுறையை
ஒழிக்க சட்டமியற்ற
வேண்டும். தொழிற்சங்க
அங்கீகார சட்டம்
இயற்ற வேண்டும்.
O பயிற்சியாளர்கள்
மற்றும் நிரந்தரமற்ற
தொழிலாளர் நலன்
காக்கும் திருத்த
மசோதா 47/2008க்குக்
குடியரசுத் தலைவர்
ஒப்புதல் பெற வேண்டும்.
O தமிழக
மீனவர்கள் மீதான
தாக்குதலை தடுத்து
நிறுத்த வேண்டும்.
O கட்டாய
நன்கொடை தடை சட்டத்தை
அமல்படுத்த வேண்டும்.
O கல்வி
உரிமை மசோதாவை
நிறைவேற்றும்
அதே நேரம் அனைத்து
மாணவர்களுக்கும்
தரமான இலவச கல்வி
வழங்க வேண்டும்.
O பள்ளி,
கல்லூரிகளில்
வளாக ஜனநாயகத்தை
அமல்படுத்த வேண்டும்.
O அனைத்து
கல்வி நிறுவனங்களிலும்
மாணவர் பேரவை தேர்தல்
நடத்தப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்
நிறைவேற்றாதபட்சத்தில் புரட்சிகர இளைஞர்
கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும்
நடத்தவுள்ள அடுத்தக் கட்ட போராட்டங்களில்
பங்கேற்க மாணவர், இளைஞர்களுக்கு மாநாடு
அழைப்பு விடுக்கிறது.
???????????????