ஒரே நாடு ஒரே தேர்தல், முத்தலாக்குக்கு சிறை, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் விதி தொகுப்புகள், பொதுத்துறை நிறுவனங்களை மூடுவது என நாட்டு மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முதல் நூறு நாட்கள் திட்டமாகக் கொண்டுள்ள மோடி அரசு, சத்துணவு குறைபாட்டால் கடுமையான நோய் தாக்கி பீகாரின் குழந்தைகள் உயிரிழப்பது பற்றி அக்கறை காட்டவில்லை. மோடியின் முந்தைய ஆட்சியில் உத்தரபிரதேச குழந்தைகள் மடிந்தார்கள். குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்த மருத்துவரை சிறையில் அடைத்து துன்புறுத்தியதுதான் அதில் யோகி ஆட்சி எடுத்த நடவடிக்கை. அதை வேடிக்கை பார்த்ததுதான் மோடி செய்த சாதனை.இப்போதும் மோடி வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார். பீகாரில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள நிதிஷ், குழந்தைகளின் சாவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.