சாமான்ய மக்களுக்கு எந்த நம்பிக்கையும் தராத
கார்ப்பரேட் ஆதரவு நிதிநிலை அறிக்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 - 2020க்கான நிதிநிலை அறிக்கையை முன்வைப்பதற்கு முந்தைய நாள், செல்வங்கள் அனைத்தையும் தருகிற லஷ்மி கடவுள்போல் அவரை சித்தரித்து சங்கிகள் தரப்பில் படங்கள் வெளியிடப்பட்டன.
கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை மோடி ஆட்சியே லஷ்மி கடாட்சம் நிறைந்ததுதான். நிர்மலா சீதாராமன் மட்டும் வேறு என்ன செய்துவிடப் போகிறார்?
2019 - 2020க்கு, 2019 பிப்ரவரியில், கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தேர்தலைச் சந்திக்க நேர்ந்ததால், விவசாயிகளை ஏமாற்ற, அமைப்புசாரா தொழிலாளர்களை ஏமாற்ற சில அறிவிப்புகள் இருந்தன. இப்போது புதிய ஆட்சி வந்த பிறகு, நிதிநிலை அறிக்கை முன் வைக்கப்படும்போது, தேர்தலை சந்திக்கும் அவசியம் எதுவுமில்லை. எனவே மக்களை கவரும் அம்சங்கள் எதுவும் இல்லாமல், எதையும் பூசி மெழுகாமல், நேரடியாக, அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நிதிநிலை அறிக்கையாக முன்வைப்பது நிர்மலா சீதாராமனுக்கு சற்றும் சவாலற்றதாக இருந்திருக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
சட்டபூர்வமான முறைகளில் லாபம் ஈட்டுவதில் பிழையில்லை என்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இந்தியாவின் செல்வங்களை உருவாக்குகிறார்கள் என்றும் தனது நிதிநிலை அறிக்கை உரையில் நிர்மலா சீதாராமன் சொல்வதை நிதியமைச்சக இணையதள முகப்பு பக்கத்தில் பெரிய எழுத்தில் போட்டிருக்கிறார்கள். அம்பானியும் அதானியும் டாடாவும் எப்போது எந்த ஆலையில் எந்த உற்பத்தி பிரிவில் வேலை செய்தார்கள்? அதை நிர்மலா பார்த்தார்? நிதிநிலை அறிக்கையின் கார்ப்பரேட் ஆதரவு அழுத்தத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
2016 - 2017 நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே செல்வ வரி நீக்கப்பட்டுவிட்டது. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள செல்வத்துக்காக வரி கட்ட வேண்டியதில்லை என்று மோடி சொல்லிவிட்டார். இந்த ஆண்டும் அந்த வரி இல்லை.
ரூ.250 கோடி வரை விற்றுமுதல் வரும் நிறுவனங்களுக்கு 25% வருமான வரி என்ற வரம்பு, ரூ.400 கோடி வரை விற்றுமுதல் வரும் நிறுவனங்களுக்கு என விரிவாக்கப்பட்டுள்ளது.
28 விதமான சலுகைகள், விலக்குகள், ஊக்கங்கள் என விட்டுத்தரப்பட்ட வருவாய் 2018 - 2019ல் ரூ.1,08,785.41 கோடி. 2017 - 2018ல் ரூ.93,642.50 கோடி. இரண்டே ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி வகையில் விட்டுத் தரப்பட்ட வருவாய் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல். (ரூ.2,02,427.91 கோடி).
தொலைதொடர்பு துறையில் உரிமக் கட்டணம் என்ற வகையில் இன்னும் ரூ.57,871 கோடி அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும். 2014 - 2015க்குப் பிறகு 2017 - 2018 வரை வசூலிக்கப்படாமல் இருக்கும் உரிமக் கட்டணம் ரூ.53,713.87 கோடி.
உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு ஊக்கம் அளிப்பது, ராணுவத்துக்கான இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உற்பத்திக்கு மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது ஆகிய வகைகளில் தரப்படும் சுங்க வரி விலக்குகள் இந்த ஆண்டு ரூ.53,704 கோடி. அடுத்த ஆண்டு ரூ.74,356 கோடியாக உயரும். கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இந்த விலக்குகளை பெறுகின்றன.
உள்கட்டுமானத் துறையில் அரசு தனியார் பங்கேற்பில் 2014 - 2015 முதல் 2018 - 2019 வரை ரூ.87,728 கோடி மதிப்பீட்டில் 56 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு மக்கள் பணத்தை செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றி தனியார் லாபம் பார்க்கத் தருகிறது.
வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களின் தரப்பட்டியலில் உயர்நிலையில் உள்ள சொத்துகளை, இந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை வங்கிகள் வாங்கலாம். இந்த கொடுக்கல் வாங்கலில் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் முதல் முறை ஏற்படும் 10% இழப்புக்கான கடன் உத்தரவாதத்தை, ஒரே ஒரு முறை, ஆறு மாத காலத்துக்கு அரசு தரும். அதாவது ரூ.10,000 கோடி திரும்ப வந்துவிடும். வங்கி அல்லாத நிதி நிறுவனத்துக்கு அதற்கு மேல் இழப்பு ஏற்பட்டால் அது அந்த நிறுவனங்களின் சொத்துகளை வாங்கிய வங்கிகளைச் சாரும். ஆக, ரூ.90,000 கோடி வரை வங்கிகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வங்கிகளுக்கு மூலதனமாக ரூ.70,000 கோடி இந்த ஆண்டு தரப்படும். (கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த நிதியை கடன்களாகப் பெற்று ஏப்பம் விடலாம். ஏரோப்ளேன் ஏறி வெளிநாடு போகலாம்).
2017 - 2018 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, ரூ.4,68,668 கோடி கார்ப்பரேட் வரி வசூலிக்கப்படவில்லை. இதில் ரூ.3,99,188 கோடி தொடர்பாக அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களுக்கும் தாவாக்கள் உள்ளது. ரூ.69,480 கோடி கார்ப்பரேட் வரியில் தாவா ஏதுமில்லை என்றாலும் இன்னும் அந்த வரி வசூலிக்கப்படவில்லை. இதில், ரூ.44,857 கோடி பாஜக ஆட்சி காலத்தில், 2015 - 2016, 2016 - 2017 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, ஆனால், வசூல் செய்யப்படாமல் உள்ள கார்ப்பரேட் வரி. 2015 - 2016, 2016 - 2017 ஆண்டுகளில் தாவாவில் இருக்கும் கார்ப்பரேட் வரி ரூ.2,19,739 கோடி. இந்தத் தொகை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுபவித்த விலக்குகள், சலுகைகள் ஆகியவற்றுக்கு மேல் அரசாங்கமே கொடுத்தே ஆக வேண்டும் என்று சொல்லும் வரித் தொகை.
ரயில்வே உள்கட்டுமானத்துக்கு 2018ல் இருந்து 2030 வரை ரூ.50 லட்சம் கோடி தேவையாம். இப்போது ரயில்வே மூலதன செலவுகள் ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் கோடிதான் என்பதால் தேவைப்படும் மூலதனத்தை ஒதுக்க பல பத்தாண்டுகள் பிடிக்குமாம். எனவே அரசு - தனியார் கூட்டு மூலம் ரயில்வே துறையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுமாம். அம்பானிக்கு, அதானிக்கு ரயில்வே துறையை கூறுபோட்டுத் தர ஏதேதோ காரணம் சொல்கிறார்கள்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை, ஒரே ரக (இலச்சினை) பொருட்களுக்கான சில்லறை வர்த்தகத்தில் உள்ளூரில்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்கான விதிகள் தளர்த்தப்படும். உள்ளூர் உற்பத்தியாளர் தனது உற்பத்திப் பொருளை வைத்து காத்துக் கொண்டிருக்க வேறு எங்கிருந்தோ வரும் பொருள் சந்தையை கைப்பற்றும்.
சாமான்ய மக்களுக்கு மேலும் சுமை தவிர வேறேதும் இல்லை
யாருக்கு பதில் சொல்ல வேண்டும்? தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருந்தால் என்ன? மோடி ஆட்சியின் புதிய சகஜ நிலையில், அவர்கள் சொல்வார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
மோடியின் புதிய அரசு, பெட்ரோல், டீசலுக்கு, சிறப்பு கூடுதல் கலால் வரி மற்றும் சாலை மற்றும் உள்கட்டுமான நலநிதி என கூடுதல் வரியை தலா ரூ.1 என உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலும் டீசலும் வாங்க தலா ரூ.2 கூடுதல் விலையை மக்கள் தர நேர்ந்துள்ளது. பற்றியெரியும் காஷ்மீர் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் பீட்டிபுல் காஷ்மீர் என்று பாட்டு பாடிய அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், வறிய மக்கள் பெட்ரோல், டீசல் பயன்படுத்த மாட்டார்கள், எனவே அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார். பெட்ரோல் விலை உயர்ந்தால், அடுத்தடுத்து எல்லா அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும் என்ற சாதாரண அறிவு அதிகம் படித்த அவருக்கு இருக்க வாய்ப்பில்லை. இப்படி உளறிக் கொட்டியாவது சமாளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட பாஜககாரர்களுக்கு இல்லை.
நாட்டின் வறிய மக்களை பெரிதும் பாதிக்கும் வரி ஒன்றை கூடுதலாக்கி விட்டு யானை புக்க புலம் என்று புறநானூற்றுப் பாடல் பாடுகிறார் நிதியமைச்சர். ஆமை புகுந்த வீடு, யானை புக்க புலம், மோடியின் ஆட்சி அமையப் பெற்ற நாடு எல்லாம் நாசம்தான்.
மோடி அரசின் அய்ந்தாண்டு ஆட்சியில் 72,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று செய்திகள் வருகின்றன. கடந்த ஆட்சி காலத்தில் கடன் தள்ளுபடி, இடுபொருளுக்கு கட்டுப்படியாகும் விலை, விளைபொருளுக்கு லாபம் தரும் விலை கேட்டு பல போராட்டங்கள் நடத்தினார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6,000 என்று பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட திட்டம் தவிர, அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகளைத் தீர்க்க திட்டம் இல்லை. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் கடமையையும் 2022 வரை தள்ளி வைத்துவிட்டார் நிதியமைச்சர்.
பாசனத் திட்டங்களுக்காக மொத்தமாக ரூ.3,166.96 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. விவசாயம் பற்றிய மோடி அரசின் அக்கறை இவ்வளவுதான்.
விவசாயிகள் நலன் காப்பதில் விவசாய கிராமப்புற தொழிலை வளர்ப்பார்களாம். அதில் ஒரு திட்டமாக, மூங்கில், தேன், காதி போன்ற தொழில்களில் 100 புதிய கிளஸ்டர்கள் உருவாக்குவார்களாம். இதனால் 50,000 விவசாயிகள் தொழில் முனைவோர் ஆவார்களாம். 100 தொழில் இன்குபேட்டர்ஸ் உருவாக்கி இன்னும் ஒரு 75,000 விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்குவார்களாம். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளில் ஒண்ணே கால் லட்சம் விவசாயிகள் நலன்களை இப்படியாக பாதுகாத்துவிடுவார்கள் என்று நம்பச் சொல்கிறார்கள். மீதமுள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ என்ன வழி?
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய அமைச்சகத்தின் விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறைக்கு ரூ.1,30,485.21 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் பெரும்பங்கான ரூ.75,000 கோடி, விவசாயிகளுக்கு ஆண்டில் ரூ.6,000 தரும் வருமான ஆதரவு திட்டத்துக்கானது. இந்த ரூ.75,000 கோடி போக மீதம் ரூ.55,485.21 கோடி. இது சென்ற ஆண்டு ஒதுக்கீட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட ரூ.12,314.79 கோடி குறைவு. இன்னும் ஒரு ரூ.14,000 கோடி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கானது. இந்தத் திட்டத்தால் விவசாயிகளை விட காப்பீட்டு நிறுவனங்கள்தான் பெரும்பயன் அடைகின்றன என்பது ஏற்கனவே விவாதத்துக்கு வந்துள்ளது.
வேலை உறுதித் திட்டத்துக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட ரூ.5,000 கோடி கூடுதலாக ரூ.60,000 கோடி ஒதுக்கப்படுவதாக பட விளக்கம் தரப்படுகிறது. ஆனால், சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.61,084.09 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த ஆண்டு ஒதுக்கீடு உண்மையில் குறைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வேலை, கூடுதல் கூலி என விவசாயத் தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் மோடி அரசின் காதுகளுக்கு எட்டவே இல்லை.
மொத்தமாக மான்யத்துக்கான ஒதுக்கீடு ரூ.3,01,694 கோடி. தொகை என்ற அளவில் இது சென்ற ஆண்டை விட கூடுதல். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு என்று பார்த்தால் இது சென்ற ஆண்டு இருந்த அதே 1.4%தான். வரும் இரண்டு ஆண்டுகளில் இதை 1.3% என குறைக்க முயற்சி செய்கிறார்களாம்.
ஜிஎஸ்டியில் வரும் 1200க்கும் மேற்பட்ட பொருட்களில் 632 (46.8%) பொருட்களுக்கு 18% வரி. மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் இந்த வகையினத்துக்குள் வந்துவிடும். 235 பொருட்களுக்கு 12%. 296 பொருட்களுக்கு 5%. 2018 - 2019ல் ஒரு மாதத்தில் சராசரியாக ரூ.98,083 கோடி வசூல் செய்திருக்கிறார்கள். 2019 ஏப்ரலில் ரூ.1,13,865 கோடியும் மே மாதத்தில் ரூ.1,00,289 கோடியும் வசூல் செய்திருக்கிறார்கள். அதாவது மக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கியிருக்கிறார்கள்.
வருகிற நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.1,06,000 கோடி திரட்ட மோடி அரசு திட்டமிடுகிறது. பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளில் இருந்து வரக் கூடிய ஈவுத் தொகை மற்றும் லாபம் என்ற வகையில் இந்த ஆண்டு ரூ.1,77,239.67 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. சென்ற ஆண்டு இது ரூ.1,22,474.01 கோடி என மதிப்பிடப்பட்டு, ரூ.1,31,311.87 கோடி வரை வந்தது. 2017 - 2018ல் இது ரூ.1,04934.55 கோடி. இந்த வரத்து ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கிறது. 2017 - 2018ல் இருந்ததை விட 2018 - 2019ல் ரூ.26,377.32 கோடி கூடுதல். 2018 - 2019ல் இருந்ததை விட இந்த ஆண்டு ரூ.45,927.80 கோடி அதிகம் வரும் என மதிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு ஆண்டுகளும் தலா ரூ.80,000 கோடிக்கு பொதுத் துறை முதலீடுகள் அகற்றப்பட்ட ஆண்டுகள். தங்க முட்டையிடும் வாத்துகளை ஒரே நாளில் அறுத்துவிடும் புத்திசாலி ஆட்சி.
பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு அகற்றுபவர்கள், வேலை வாய்ப்பு உருவாக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று நேரடியாக சொல்லவில்லை. இளைஞர்கள் என்ற தலைப்பின் முதல் அம்சமே புதிய கல்விக் கொள்கை. மேக் இன் இந்தியா போல் ஸ்டடி இன் இந்தியா, இந்தியாவில் கல்வி பெறுங்கள் என்கிறார் மோடி. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கும்விதம் ஒரு கோடி பேருக்கு திறன் பயிற்சி என்று நிதிநிலை அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ன ஆனது என்று நாம் கேட்க முடியாது. அது போன ஆட்சிக்கான வாக்குறுதி. எரிவாயு மானியத்தை, வேறு பல ஓய்வூதியத் திட்ட ஓய்வூதியத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக விட்டுத் தர வேண்டுமாம். ஆனால் இது ஏன் இளைஞர்கள் என்ற தலைப்பில் வர வேண்டும்? இளைஞர்களுக்கு வேலை, வருமானம், வாழ்க்கை எதுவுமே இந்த ஆட்சியில் சரி வர கிடைக்கவில்லை. அவர்களிடம் விட்டுத் தர ஏதுமில்லை. இந்த ஆட்சியைத் தவிர.
2019 மார்ச் 31 நிலவரப்படி நாட்டின் கடன் ரூ.90,56,725.48 கோடி. 2020 மார்ச் 31ல் இது ரூ.98,67,921.44 கோடி என அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ரூ.8 லட்சம் கோடிக்கும் கூடுதல். 2019 - 2020ல் ரூ.6,60,471 கோடி வட்டி கட்டுவோம். சென்ற ஆண்டில் ரூ.5,87,570 கோடி வட்டி கட்டியுள்ளோம். இது நிச்சயம், நேரு சேர்த்து வைத்துவிட்டுப் போன கடன் அல்ல. (வட்டிக்கு அடுத்த பெரிய ஒதுக் கீடு ஊழல் குற்றச்சாட்டுகளால் பீடிக்கப்பட்டுள்ள ராணுவத்துக்கு. ரூ.3,05,296 கோடி).
விவசாயம், கல்வி, சுகாதாரம், சமூக நலன் என மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒதுக்கீடு கூடுதல் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையே, வரவு, செலவு என அனைத்துமே சென்ற ஆண்டை இந்த ஆண்டு கூடுதல். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல். (2018 - 2019ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.1,90,10,000 கோடி. 2019 - 2020ல் ரூ.2,11,00,607 கோடி என உயரும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்). அப்படியிருக்க மக்கள் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது இயல்பாக நடக்க வேண்டியதுதான். இப்போதும் புண்ணுக்கு புனுகு பூசும் நடவடிக்கைகளுக்குத்தான் கவனம் காட்டப்படுகிறதே தவிர மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் இல்லை.
அப்படியிருக்க வளர்ச்சி, நல்ல நாட்கள் என்றெல்லாம் பேசியவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள் இன்று மீண்டும் வளர்ச்சி என்கிறார்கள். அதற்கு இலக்கும் நிர்ணயிக்கிறார்கள். அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாக வளர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நிதியமைச்சர் சொல்கிறார்.
2014ல் அரசுப் பொறுப்பேற்றபோது, நமது பொருளாதாரத்தின் மதிப்பு 1.87 லட்சம் கோடி டாலராக (ரூ.1.27 கோடி கோடி) இருந்ததாகவும் அய்ந்து ஆண்டுகளில் அது 2.7 லட்சம் கோடி டாலர்களாக (ரூ.1.83 கோடி கோடி) உயர்ந்து இருப்பதாகவும் நிதியமைச்சர் சொல்கிறார். மோடியும் அவரது அமைச்சர்களும் கலப்பையையும் பிடிக்கவில்லை. டிராக்டரும் ஓட்டவில்லை. நட் போல்ட் என எதையும் முடுக்கவில்லை. இந் திய உழைக்கும் மக்கள் உழைப்பில் செல்வம் உருவானது. இவர்களுக்கு அதற்கான கணக்கு சொல்லும் அதிகாரத்தை தந்துவிட்டோம். அவ்வளவுதான். இப்போது இன்னும் அய்ந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக (ரூ.3.40 கோடி கோடி) அதை மாற்றப் போகிறார்களாம். நிதியமைச்சர் சொல்வதுபடியே, அய்ந்து ஆண்டுகளில் 0.85 லட்சம் கோடி டாலர்தான் (ரூ.0.57 கோடி கோடி) மதிப்பு உயர்ந்துள்ளது. அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இன்னும் 2.3 லட்சம் கோடி டாலர் (ரூ.1.56 கோடி கோடி) மதிப்பை, கிட்டத்தட்ட மூன்று மடங்கு மதிப்பை எட்டி விட்டால் நிதியமைச்சர் சொன்னது நடக்கும். கடந்த அய்ந்து ஆண்டுகளில் 0.85 லட்சம் கோடி டாலர் மதிப்பு அதிகரித்திருந்தும் மக்கள் வாழ்க்கையில் அதனால் முன்னேற்றம் வரவில்லை. வேலை இல்லை. வருமானம் இல்லை. வாழும் போதே நரகத்தை காண நேரும் வாழ்க்கை. மிகச் சிறிய பணக்கார பிரிவு வளர்ந்தது. மிகப்பெரிய மக்கள் தொகையிடம் இருந்து மேலும் மேலும் பறித்தெடுக்கப்பட்டது. இப்போதும் இந்த 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய பொருளாதாரத்தை எட்டும் வழி, சாமான்ய மக்களிடம் இருப்பதை பறித்தெடுப்பதாக, அவர்களது பிணங்களால் நிறைந்ததாக இருக்குமானால், அது வரவே வேண்டாம்.
மோடியின் முந்தைய ஆட்சியில் ஆரவாரமாக முன்வைக்கப்பட்ட வாய்வீச்சுகள் அனைத்தும் பொய்த்துப் போனதை பார்த்ததால்தான் இன்று 5 லட்சம் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உருவாக்குவது பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. அப்படி கேள்வி எழுப்புபவர்களை அவநம்பிக்கைவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்த சங்பரிவார் சக்திகள் துவங்கிவிட்டனர்.
நிதிநிலை அறிக்கையில், அதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள விவரங்கள் முரண்படுகின்றன, நிதிநிலை அறிக்கையிலேயே ஒரே அம்சம் பற்றி வேறு வேறு இடங்களில் மாறுபட்ட விவரங்கள் உள்ளன என்று சுப்ரமணியம் சாமி முதல் சிதம்பரம் வரை கேள்வி எழுப்பிவிட்டார்கள். ஒரு சதம் என்பது நிதிநிலை அறிக்கையில் மிகப் பெரிய தொகை என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டுகிறார். இந்த குளறுபடிகளுக்கு அப்பால், பெரும்பான்மை மக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்த ஆறுதலும் நிவாரணமும் தருவதாக இல்லை. பெட்ரோல், டீசல் வரி உயர்வும் அதைத் தொடர்ந்த விலை உயர்வும் வெறும் துவக்கம் மட்டுமே. இந்த நிதிநிலை அறிக்கை சாமான்ய மக்களிடம் இருப்பதை பறித்தெடுக்கும் போக்கை விரிவுபடுத்தி, துரிதப்படுத்தும்.