பாசிச மோடி அரசின் கார்ப்பரேட், காவி, இந்தி ஆதிக்கக் கல்விக் கொள்கையை எதிர்த்திடுவோம்
ஜி.ரமேஷ்
தாய்மொழிக் கல்வி பற்றியும் உள்ளூர் மொழி பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ரொம்பவே பேசுகிறது கல்விக் கொள்கை வரைவு.
குழந்தைகள் ஆரம்பத்திலேயே நான்கு மொழிகள் கற்றுக் கொள்வது நல்லது, அந்த வகையில் குறைந்தது மூன்று மொழிகள் கட்டாயம். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம். இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி என்று வரைவு கல்விக் கொள்கை முதலில் வெளி வந்தது. இது இந்தி மொழித் திணிப்பு இதை அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாட்டில் இருந்து முதலில் குரல்கள் வந்ததை அடுத்து கர்நாடகாவில் வந்தது. இப்படி மற்ற மாநிலங்களிலும் வந்தவுடன் இந்தி என்பதை எடுத்துவிட்டு ஏதாவது ஒரு மொழி என்று மாற்றப்பட்டுள்ளது. மூன்று மொழிகள் கட்டாயம் பள்ளிக்கூடத்தில் படித்தே ஆகவேண்டுமாம். எதிர்ப்புகளினூடே சந்தடிச் சாக்கில், எடப்பாடி பழனிச்சாமி, இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை கற்கச் செய்ய வேண்டும் என்று மோடிக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை வைத்தார். தமிழ் மொழியை வளர்க்க ஆலோசனை சொல்வதுபோல், மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார்.
இந்தி படித்தால் நல்லதுதானே, வடஇந்தியாவில் வேலை பார்க்க இந்தி தேவைதானே, அந்நிய ஆங்கில மொழியை படிக்கலாம், இந்தியாவின் இந்தியைப் படிக்கக் கூடாதா, வட மாநிலங்களில் இந்திதானே உள்ளது என்று இந்திப் படிப்புக்கு ஆதரவாக வும் சரி இந்தி வேண்டாம் மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியைப் படித்தால் நல்லதுதானே என்று மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவாகவும் பலர் தமிழ்நாட்டில் பேச ஆரம்பித்துள்ளார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது ஏழை, கிராமப்புற குழந்தைகள் இன்னொரு மொழி படிப்பதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி வேறு.
இந்தியாவில் இந்திதான் அதிகம் பேசுகிறார்கள் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய். தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு, கர்நாடகாவில் கன்னடம், மகாராஷ்ட்டிராவில் மராட்டி, ஒடிசாவில் ஒரியா, மேற்கு வங்கத்தில் வங்காளம், குஜராத்தில் குஜராத்தி, பஞ்சாபில் பஞ்சாபி, அசாமில் அசாமி, காஷ்மீரில் காஷ்மீரி, சத்திஸ்கரில் சத்திஸ்கரி என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசுகிறார்கள்.
பிஹாரில் அதிகம் பேசப்பட்ட பிஹாரி மற்றும் போஜ்புரி, ராஜஸ்தானில் பேசப்பட்ட ராஜஸ்தானி, மத்திய பிரதேசத்தில் பேசப்பட்டு வந்த பெகெலி மற்றும் உத்திரபிரதேசத்தில் பேசப்பட்டு வந்த பல்வேறு மொழிகள் இந்தி வரவால் வழக்கொழிந்து போய்விட்டன. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தாய்மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள, பிகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட பாஜக உறுப்பினர் தன் தாய்மொழியான போஜ்புரியிலும் மத்தியபிரதேசத்தில் இருந்து வந்த மற்றொரு பாஜக உறுப்பினர் தன் தாய் மொழியான பெகேலி மொழியிலும் உறுதி மொழி எடுக்க தங்கள் விருப்பத்தை தெரிவித்தபோது அவர்கள் இந்தியிலேயே உறுதி மொழி எடுக்க பணிக்கப்பட்டார்கள். போஜ்புரி மொழி எட்டாவது அட்டவணையில் இல்லை என்பதாலும் பெகேலி மொழி புழக்கத்தில் இல்லை என்பதாலும் அவர்கள் இந்தியிலேயே உறுதிமொழி எடுக்க நேர்ந்தது. இப்போதும் சிலர் பேசுவார்கள், அவர்களுக்கு இந்தி தெரிந் ததால்தானே அவர்களால் உடனே இந்தியில் பேச முடிந்தது என்று. ஆனால், அவர்கள் தங்கள் தாய் மொழியில் உறுதிமொழி கூட எடுக்க இயலவில்லை. இத்தனைக்கும் 2011ம் ஆண்டு கணக்குப்படி போஜ்புரியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் 5.05 கோடி பேர். ஆனால், சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகச் சொல்லிக் கொள்பவர்கள் வெறும் 24,821 பேர்தான். சமஸ்கிருதத்திற்கு இருக்கும் அந்தஸ்து போஜ்புரிக்கு இல்லை. இது எதனால்? பள்ளிக்கூடங்களில், பழக்கவழக்கங்களில் இந்திக்கு இடம் கொடுத்ததால்.
இந்தி இல்லை, மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே அதையும் ஏன் தடுக்கிறீர்கள் என்கிறார்கள் சிலர். மூன்று மொழி கட்டாயம் என்று சொல்லிவிட்டு, மூன்றாவது மொழிப் பாடத்திற்கு அரசுப் பள்ளிகளில் இந்தி ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்தினால், மலையாளத்தையோ, தெலுங்கையோ, ஜெர்மன் மொழியையோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியையோ மூன்றாவது பாடமாக எடுக்க விரும்பினால், அதற்கு ஆசிரியர் இல்லை என்றால், கட்டாயத்தின் பேரில் இந்தியைத்தான் படித்தாக வேண்டும். அடுத்த சில ஆண்டுகள் கழித்து, அடிமைகள் அரசு எஜமானர்கள் உத்தரவுப்படி தமிழ் பாடத்தை நிறுத்தி விடுவார்கள். குழந்தைகள் தாய் மொழி தமிழை கற்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இப்போதே பல்கலைக் கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இந்தி கட்டாயம் என்று உத்தரவு போடுகிறது. அதனால்தான் அரசின் கொள்கை முடிவாக மும்மொழி வேண்டாம் என்கிறோம். இந்தி மொழிப் பாடமாக உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் பணக்கார பள்ளிகள். ஒட்டுமொத்த மாணவர்களில் 1% மட்டுமே தற்போது அதில் படிப்பார்கள். அவர்கள் எந்த மொழி படித்தாலும் நாட்டிற்கு பயனோ பாதிப்போ இருக்காது. ஆனால், 99% மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும்தான் படிக்கிறார்கள். அவர்கள் மீது இந்தி மொழித் திணிப்பு என்பது வருங்காலத்தில் தமிழ் மொழி அழிப்பு.
யாரும் எந்த மொழியையும் எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அங்கு சென்ற பிறகு தேவையின்பொருட்டு சில மாதங்களிலேயே அந்த ஊர் மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். வேறு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்யும் போது, தொழில் நடத்தும் போது அவர்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தேவையின் அடிப்படையில் அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சாஃப்வேர் நிறுவனங்களில், கால் சென்டர்களில் வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள் எவரும் இந்தி தெரிந்து கொண்டு வேலைக்குச் செல்லவில்லை. ஆங்கில மொழி அறிவின் மூலம்தான் வேலையில் சேர்ந்தார்கள். வேலை பார்த்து வருகிறார்கள். அக்காலத்தில் ரங்கூனுக்கும் பர்மாவிற்கும் புனாவிற்கும் பம்பாய்க்கும் கல்கத்தாவிற்கும் சென்ற தமிழர்கள் எவரும் ஆங்கிலம், இந்தி, பர்மிய மொழி தெரிந்து கொண்டு செல்லவில்லை. இந்தி தெரிந்தால்தான் வட மாநிலங்களில் வேலை பார்க்க முடியும் என்கிற ஒரு மாயையை கட்டவிழ்த்து விடுகிறது இந்துத்துவ கோயபெல்ஸ் கும்பல்.
தேவையே இல்லாமல், 120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், நூற்றுக்கணக்கான மொழிகளை தாய் மொழியாகக் கொண்டுள்ள இந்தியாவில், வெறும் 32.22 கோடி பேர் (2011 கணக்குப்படி) மட்டுமே தங்கள் தாய்மொழியாகச் சொல்லும் இந்தியையும் வெறும் 24,821 பேர் மட்டுமே தாய் மொழியாகச் சொல்லும் சமஸ்கிருதத்தையும் நாடுமுழுவதுக்குமான மொழியாக மாற்றி ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சிமுறை, ஒரே அதிபர் என்கிற தனது பாசிசத் திட்டத்திற்கு கல்விக் கொள்கையின் மூலம் அடித்தளம் போடுகிறது ஆர்எஸ்எஸ் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு சில “இந்து சமஸ்”தர்களும் சாமரம் வீசுகிறார்கள். எப்படி தாய் மொழி கல்வி முக்கியம் என்று சொல்லி விட்டு, எல்லாருக்கும் தாய் மொழியாக இந்தி யையும் சமஸ்கிருதத்தையும் மாற்ற முயற்சிக்கும் கல்விக் கொள்கை போல, இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என ஒட்டுமொத்த இந்திய மக்களுடனும் உரையாடுவதற்காக நம் தமிழ்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இந்தி கற்க வேண்டும் என்கிறார் ஒருவர். காந்தியும் நேருவும் ஆங்கிலம் அறியாதவர்களாக இருந்திருந்தால் வரலாற்றில் அவர்களுடைய இடம் என்ன? அம்பேத்கர் ஆங்கிலத்தை அறியாதவராக இருந்திருந்தால், இந்தியாவில் தலித்துகளின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆங்கிலேயர்களின் ஆட்சி மொழி ஆங்கிலம் அதுபோல, இந்தியர்களின் ஆட்சி மொழி இந்திதான் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்தியாவில் எல்லாரும் இந்தி பேச வில்லை என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த இந்தியாவுடனும் உறவாட இந்தி வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்படவேண்டும் என்கிறார். இப்போது நாம் ஏன் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்பதை நம் பிரதிநிதிகள் இந்தியில் பேச வேண்டும், அடுத்து தமிழ்நாட்டு தண்ணீர் பிரச்சினையை இந்தியில் பேசினால்தான் ஆட்சியாளர்களுக்குப் புரியும் என்பார். டில்லி சென்று போராடும் விவசாயிகள் இந்தியில் பேசினால்தான் இந்தியா முழுக்க தெரியும் என்பார். ஆட்சி பீடத்தில் இருக்கும் மோடிக்கு அமித் ஷாவுக்கு ராஜ்நாத்திற்கு ஆங்கிலம் தெரியும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவுக்குத் தமிழே தெரியும். அவர் மூலமாகவே அனைத்தையும் சொல்ல முடியுமே. உலகம் முழுவதும் கணினியில் பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம். பின் எதற்காக நம் பிரதிநிதிகள் இந்தியில் பேச வேண்டும். ஆங்கிலம் என்கிற பெரிய வாசல் கதவு இருக்கிறபோது, இந்தி என்கிற சின்ன வாசல் எதற்கு என்று கேட்டாராம் அண்ணா துரை. இந்தி பயிலக் கூடாது, பேசக் கூடாது என்பதல்ல நம் வாதம். இந்தியில்தான் பேச வேண்டும், இந்தி படித்துதான் ஆக வேண்டும் என்று சொல்வது கூடாது என்கிறோம். இந்த சமஸ்தர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். காந்தியும் நேருவும் வருவதற்கு முன்பே வேலு நாச்சியாரும் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் மருது சகோதரர்களும் இன்னும் பலப் பல விடுதலைப் போராளிகளும் தலைவர்களும் சிப்பாய்களும் சுதந்திர எழுச்சியை ஆங்கிலம் தெரிந்து கொண்டு மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை. அவரவர் தாய் மொழியில்தான் விடுதலை வேள்வித் தீயை மூட்டினார்கள். இந்தியாவில் இந்திக்கு இணையான இடத்தில் ஏனைய தேசிய இனங்களின் மொழியை அமர்த்த நாம் எல்லாருடனும் உரையாட வேண்டும். அதற்கு இந்தி வேண்டும் என்பதில்லை.அவரவர் தாய்மொழியே போதும்.
இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒன்றைத் தன்மையை உருவாக்கிட காவிமயமாக்க மோடி அரசு முதலில் தெரிவு செய்துள் ளது கல்வியை என்றால், இரண்டாவதாக அந்தக் கல்வியை அரசின் பொறுப்பில் இருந்து முற்றிலும் விடுவித்துக் கொள்ளவிருக்கிறது. ஏற்கனவே கல்வியில் பெரும்பகுதி, குறிப்பாக உயர்கல்வி வணிகமயமாக்கப்பட்டும் தனியார்மயமாக்கப்பட்டும்விட்டது. தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு, கல்விதான் அநேகமாக சமூகத்திற்கு சிறந்த மூலதனம் என்று சொல்கிறது. ஆனால், அந்தக் கல்விக்காக இனி அரசு மூலதனம் எதுவும் போடப் போவதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% இந்திய அரசு கல்விக்குச் செலவு செய்கிறது. இந்தியாவைக் காட்டிலும் கென்யா, நெதர்லாந்து, பின்லாந்து, பூடான், ஜிம்பாவே, ஸ்வீடன் எல்லாம் 5%ம் மேலாகச் செலவு செய்கின்றன என்று இந்தக் கொள்கை வரைவு சொல்கிறது. அதற்காக நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் அதிகம் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளத்திற்கே அதிகம் போய்விடுகிறது, பள்ளிப் பராமரிப்பு, ஆய்வகம், மதிய உணவு போன்றவற்றிற்கு ஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் வரைவு அதை ஒழுங்குபடுத்த, தனியார் கைகளில் கொடுத்து விட வேண்டும் என்கிறது.
இந்தியாவில் ஆரம்பத்தில் கொடையாளர்கள்தான் கல்விப் பணியில் ஈடுபட்டார்கள், அது சுதந்திரத்திற்குப் பிறகு குறைந்து போய் அரசின் கட்டுப்பாடு அதிகரித்தது, அதன் பின்னர் 90களில் பொருளாதார தாராளமயமாக்கத்தின்போது மீண்டும் தனியார் கல்விக்கு வாய்ப்பு ஏற்பட்டது என்று தனியார் கல்விதான் சிறப்பானது என்று பேசுகிறது வரைவு. லாப நோக்கமற்ற, பொது அக்கறையுள்ள தனியார் நிதிதான் கல்விக்கு வேண்டுமாம். மத்திய மாநில அரசுகளின் நிதி கூடாதாம். பெரிய கொடையாளர்கள், பெரிய நிறுவனங்களை கல்வி நிதி கொடுக்க ஊக்கப்படுத்த வேண்டுமாம். கல்விக் கொடையாளர்கள், தனி நன்கொடையாளர்கள், டிரஸ்ட்டுகள் கல்வியில் ஈடுபடுத்தச் செய்ய வேண்டும். தேவை மற்றும் சாதனைகளின் அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும் கல்வி உதவித் தொகைகளுக்கு தனியாரிடமிருந்து நிதி பெற வேண்டும். ஆய்வு மாணவர்களுக்காக தனியாரிடம் நன்கொடைகள் பெற வேண்டும்.ஆய்வுகள் மற்றும் கண்டு பிடிப்புகளுக்கு அரசாங்கம் செலவு செய்யாது. கம்பெனிச் சட்டம் 2013ல் 5 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கான சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கு என 2% செலவிட வேண்டும் என்றுள்ளது. அதன்படி அந்நிறுவனங்களை கல்வியில் ஈடுபடுத்த வேண்டுமாம். முன்னாள் மாணவர்கள், உள்ளூர் மக்களிடம் கல்விக்கு நிதி பெற வேண்டுமாம். இதற்காக, குறிப்பாக உயர்கல்விக்கான நிதியை பெறுவதற்காக வளர்ச்சி அலுவலகங்கள் உருவாக்கப்படுமாம். இந்து மடங்கள், கிறிஸ்தவ சமய நிறுவனங்கள், இஸ்லாமிய டிரஸ்ட்டுகள், புத்த, ஜெயின், குருத்துவாராக்கள் ஆகியவற்றில் இருந்து கூடுதலாக கல்விக்கு ஆதாரங்கள் பெற வேண்டுமாம். லாப நோக்கமில்லாத தனியார் கல்வி நிறுவனங்கள் நடைமுறையில் சாத்தியமா? தனியார் என்றாலே லாபம்தான் நோக்கம். துவக்கப்படாத அம்பானியின் பல்கலைக் கழகத்திற்கு விருதும் கொடுத்து, நிதி மற்றும் இடச் சலுகைகளும் கொடுத்தது மோடி அரசு. நாட்டு வளங்களை மொத்தமாகச் சுரண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்றவர்களும் கூடங்குளம் அணுமின் நிலையமும் கல்விப் பணியில் ஈடுபட்டு கல்விக் கொடையாளர்களாகப் போற்றப்படுவார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். கொடையாளர்கள் அல்லவா? மேலும் பொதுத் தனியார் கூட்டு என்கிற அடிப்படை யில் கல்வி நிறுவனங்களை இவர்கள் நடத்துவார்கள். இந்தப் பொதுத் தனியார் கூட்டு நடவடிக்கையில், அரசு நிதியின் மூலம் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு செலவு செய்த பின்னர் வரும் வருமானத்தையும் லாபத்தையும் இந்தக் கொடையாளர்கள் அள்ளிக் கொண்டு போவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் கல்வியிலும் நடக்கும். தூத்துக்குடியை நாசமாக்கிய ஸ்டெர்லைட் நிறுவனம், தான் தூத்துக்குடி வளர்ச்சிக்காக ரூ.500 கோடி செலவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சொல் கிறது. தூத்துக்குடியின் வளத்தை நாசமாக்கி, பல தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பாழாக்கி பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டியது பற்றி அகர்வால் சொல்ல மாட்டார். தமிழக அரசாவது சொல்ல வேண்டுமல்லவா?
மாதிரிப் பள்ளிகளை அரசு மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்துமாம். அதில் உள்ள வசதிகளை மற்ற பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாம். 3ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூட பொதுத் தேர்வு. விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசும் வரைவு பள்ளிகளில் கட்டாயம் விளை யாட்டுத் திடல் இருப்பது பற்றிச் சொல்ல வில்லை. மாறாக, மாணவர்கள் விளையாட்டுத் திடலுக்குச் சென்றுவர போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறது. தற்போது இருக்கும் தனியார் பள்ளிகள் எதுவும் விளையாட்டுத் திடலுடன் இல்லை என்பதனாலேயே அதை மறைமுகமாக அங்கீகரிக்கிறது வரைவு.
இந்தக் கல்விக் கொள்கை தயாரிப்பதற்காக 2017ல் இருந்து கலந்து ஆலோசிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் வருபவர்கள் 1. அகா கான் பவுண்டேசன் 2. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் 3.அக்ஷய பத்ரா பவுண்டே சன். அகில பாரதிய வித்யாதி பரிஷத் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு, இந்த பவுண்டேசன் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் பணத்தில் சமூக சேவை(!) செய்யும் தொண்டு நிறுவனங்கள். அடுத்ததாக இந்திய வர்த்தகக் கழகம், அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம், இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு, இந்திய தொழில் கூட்டமைப்பு, இஸ்லாமிய கல்விக் குழுமம், பாஜகவிற்கு அணுசரனையான கல்வியாளர்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டு போகிறது. முதலாளிகளையும் முதலாளிகளின் சங்கத்தையும் மத நிறுவனங்களையும் பாஜகவின் மாணவர் அமைப்பையும் கலந்து ஆலோசித்து தயாரிக்கப்பட்ட, கஸ்தூரிரங்கன் தலைமையிலான இந்தக் தேசியக் கல்விக் கொள்கை எப்படியிருக்கும் என்று சொல்லாமலேயே தெரிந்து கொள்ள முடியும். ஆனால், வார்த்தை ஜாலங்களும் வர்ணனைகளும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் ஜோடனைகளும்தான் ஏராளம். மொத்தத்தில் கல்வியின் பொறுப்பில் இருந்து முற்றிலுமாக அரசு தன்னை விடுவித்துக் கொண்டு அம்பானி, அதானி கார்ப்பரேட்களிடமும் ராம்தேவ், ஜக்கி சாமியார்களிடமும் கல்வியைக் கொடுத்து விட்டு, தரம், போட்டி என்று சொல்லி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக ஆக்கவிருக்கிறது. இனி காசுள்ளவர்கள் பிள்ளைகளுக்கும் காவி அடிமைகளின் பிள்ளைகளுக்கும் மட்டுமே கல்வி. இந்தக் கல்விக் கொள்கையை 2020ல் இருந்து முழுமையாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. கல்வி உரிமையை, மாநில உரிமைகளை பறிக்கும் சனாதனத்தைத் திணிக்கும் புதிய கல்வி கொள்கை 2019 வேண்டாம். மும்மொழிக் கொள்கை திணிப்பு வேண்டாம்.
அணுக் கழிவு கிடங்கிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
கூடங்குளத்தில் அணுக்கழிவு கிடங்கு அமைக்க மத்திய அணு சக்தித் துறை முடிவு செய்து அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஜ÷லை 10ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடத்துவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு செய்திருந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நெல்லை மாவட்டத் தொழில் மையத்தில் கிடைக்கும் என்றும் அறிவிப்பு செய்திருந்தார்கள். அந்த அறிக்கை வேண்டும் என்று கேட்டுச் சென்றபோது, அதன் நகல் தங்களுக்குத் தர இயலாது.இங்கேயே வைத்து படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகள் இரண்டையுமே இழுத்து மூடச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அணு உலைப் பூங்கா அமைக்க திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியுள்ள நிலையில் அங்கேயே நிரந்தர அணுக் கழிவு கிடங்கும் அமைக்கவிருப்பது தென் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிற்கும் இந்து மகா சமுத்திரத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால், அணுஉலைப் பூங்கா மற்றும் அணுக் கழிவு கிடங்கிற்கு எதிரான இகக(மாலெ), இகக(மா), இகக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், அகில இந்திய மக்கள் மேடை, அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஜøன் 11ல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தோழர் சுப.உதயகுமாரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அவரைக் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் செய்தது காவல்துறை. கூட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் ஜøன் 15 அன்று பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் நல்லகண்ணு (இகக), தோழர் திருமாவளவன் (விசிக), தோழர் பாலசுந்தரம் (இககமாலெ), தோழர் ஆறுமுகநயினார் (இககமா), திரு எஸ்.ஆர்.பாரதி (திமுக), திரு ஜவஹிருல்லா (தமுமுக), திரு.தெக்லான் பாகவி (எஸ்டிபிஅய்), தோழர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), தோழர் ஜி.ரமேஷ் (அகில இந்திய மக்கள் மேடை), திரு.ஞானதிரவியம் (நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்) உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட பத்திகையாளர் சந்திப்பில் அணுக்கழிவு கிடங்கு கூடங்குளத்தில் அமைக்கக் கூடாது, கூடங்குளத்தில் ஏற்கனவே உள்ள இரண்டு அணு உலைகளையும் மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜøன் 25 அன்று நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் காரணமாக ஜøன் 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள இயலாது என்பதால், ஆர்ப்பாட்டம் ஜøன் 29க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.ஆனாலும் அணுக் கழிவு கிடங்கு அமைக்கும் முடிவை மாற்றாததால் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஜøன் 24 அன்று நெல்லை சந்திப்பில் சுப.உதயகுமார், ஜி.ரமேஷ், சுந்தர்ராஜ், பாஸ்கர், ஜப்பார் உள்ளிட்ட தோழர்கள் துண்டறிக்கை கொடுத்து பொது மக்களிடம் பரப்புரை செய்வதற்காக நின்று கொண்டிருந்தபோது காவல் துறையினர் சிலர் வந்து துண்டறிக்கைகளைப் பிடுங்கினார்கள். மேலும் நீங்கள் துண்டறிக்கை கொடுக்க அனுமதி வாங்கியுள்ளீர்களா என்று பரப்புரையைத் தடுக்க முயற்சித்தனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்து பின்னர் துண்டறிக்கை மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டது. துண்டுப்பிரசுரம் கொடுத்து முடித்த பின்பும் காவல் ஆய்வாளர் வந்து, என் ஏரியாவில் வந்து எப்படி நீங்கள் நோட்டீஸ் கொடுக்கலாம் என காட்டமாகச் பேசினார். மறுநாள் காலை புரட்சிகர இளைஞர் கழக தோழர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு காவலர்கள் சென்று, பொய்க் காரணங்கள் சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். நீதிமன்றத்தில் முறையிட்டு மீண்டும் போராட்டத்தை நடத்தலாம் என தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மோடியின் அடிமை எடப்பாடி அரசு மக்களிடத்தில் துண்டறிக்கை கொடுக்கக் கூட தடை விதிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
இந்தச் சூழலில் அணுக்கழிவு பாதுகாப்பானது என்று கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்திற்கு வந்த பாஜக தலைவர் தமிழிசை கூறினார். ஆனால், செட்டிகுளம் பாஜகவினரோ, கூடங்குளத்தில் அணுக் கழிவு கிடங்கு அமைக்கக் கூடாது என்று தமிழிசையிடமே மனு கொடுத்தார்கள். கர்நாடகாவில் கோலார் தங்கச் சுரங்கத்தில் அணுக் கழிவைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் தமிழ்நாட்டில் அணுக் கழிவு கிடங்கு அமைக்கும்போது அது பாதுகாப்பானது என்று இரட்டை வேடம் போடுகிறார்கள். கூடங்குளம் அணுஉலையை முதலில் எதிர்த்தவன் நான்தான் என்று சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது அணுக் கழிவினால் ஆபத்தில்லை என்கிறார். மக்கள் வாழ்வுக்கு அழிவு கொண்டு வரும் அத்தனை திட்டங்களையும் வளர்ச்சி என்று சொல்லி தமிழ்நாட்டில் அமல்படுத்தத் துடிக்கின்றனர் கார்ப்பரேட் கைக்கூலிச் சங்கிகள். தமிழக மக்கள் இந்த கோயபெல்ஸ் கூட்டத்தினரை ‘திரும்பிப் போ’ என்று திருப்பி திருப்பி அடித்து கொண்டிருக்கிறார்கள். அடிப்பார்கள்.