மக்கள் நலனே கட்சியின் நலன்
சாரு மஜும்தார்
நமது நாட்டில் ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தை அடைந்த பிறகு, நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
இப்போது கட்சியைக் காப்பது நம் கடமையாகும். கட்சியைக் காக்க, கட்சியைப் பரந்த தொழிலாளர் விவசாயிகள் மக்கள் திரள் மத்தியில், நாம் கட்டியாக வேண்டும். அரசியல்ரீதியாக ஒன்றுபட்ட ஒரு கட்சியைக் நாம் கட்ட முடிந்தால், நாம் இந்த பின்னடைவிலிருந்து மீண்டு இதுவரையில்லாத உயர்ந்த கட்டத்திற்கு, நமது போராட்டத்தை உயர்த்த முடியும். குறுகிய காலத்தில் இதனை நாம் செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.
இப்போதும் ஓர் உலகப் போருக்கான சாத்தியப்பாடு உள்ளது என்று தலைவர் சொல்லியுள்ளார். நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகாதிபத்தியமும் சமூக ஏகாதிபத்தியமும் வேறு வேறு நெருக்கடிகளில் சிக்கி உள்ளன. அரசியல் பொருளாதார நெருக்கடிகளால், அவை செய்வது அறியாமல் தடுமாறுகின்றன. அடுத்தவரின் சந்தையைக் கைப்பற்ற, தமது சந்தையை விரிவுபடுத்த, அவை வேறுவேறு முறையற்ற செயல்களில் ஈடுபடுகின்றன; விளைவாக அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மை அடைகின்றன. அவர்கள் தமது சொந்த நெருக்கடிகளின் சுமையை வளர்ச்சியடையாத குறைவளர்ச்சி கொண்ட நாடுகளின் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அந்த நாடுகளும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் எதிர்ப்பு நிலை பாத்திரம் வகிக்கிறார்கள். அவர்கள் தமது நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் வீண் முயற்சிகளில், ஓர் உலகப் போரைத் துவக்கலாம். உலகப் போர் துவங்கினால் நாம் துவக்கத்தில் நிச்சயம் சிரமப்படுவோம். ஆனால் அந்த சிரமம் வெகுகாலம் நீடிக்காது. ஒரு பரந்த, நன்கு பரவிய புரட்சிகர எழுச்சி நமது வெற்றியை பக்கத்தில் கொண்டு வரும்.
வெகுசீக்கிரமே நம் நாட்டில் ஒரு தன்னெழுச்சியான வெடிப்பு ஏற்படும். அது ஒரு தேசிய பேரெழுச்சியின் வடிவம் எடுக்கும். நமது இந்தியா மிகவும் பரந்த ஒரு நாடாகும். இந்த நாட்டின் மக்கள், சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறையால் துன்பப்படுகிறார்கள். சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்ற இரண்டு முகாம்களும் படிப்படியாக ஒரு மோதலை நோக்கி நகர்கின்றன.
சுரண்டப்பட்ட மக்கள் மத்தியில் அதிருப்தி கனன்று கொண்டு இருக்கிறது. நீண்ட காலத்திற்கு ஒடுக்குமுறைக்கு அடிபணிய அவர்கள் மறுப்பார்கள். மக்களின் அதிருப்தி வெவ்வேறு இடங்களில் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளாக வெடிக்கும். இந்த பரந்த நாட்டின் மக்களின் அதிருப்தி வெடிக்கும்போது, அதனை அடக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக எந்த பிற்போக்கு அரசாங்கமும் இருக்காது. அதனால்தான் பிற்போக்கு அரசாங்கத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகும். எனவே, பிற்போக்கு இந்திரா அரசாங்கம், தனக்காக காத்திருக்கிற எதிர்காலம் பற்றி கவலை கொள்வதால்தான் ஒரு வலுவான மத்திய அரசை கட்டப் பார்க்கிறது. இந்த பரந்த நாட்டுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. மேலும் அவர்கள் புதியதோர் பிரச்சனை யாக வங்கதேசத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாடு ஏற்கனவே சுயாட்சி கோரிக்கை எழுப்பியுள்ளது. பீகாருக்கும் குஜராத்திற்கும் இடையிலான பரந்த நிலப்பகுதியில் ஆதிவாசிகள் வாழ்கின்றனர். ஆதிவாசி மக்கள் திரள் மீதான சுரண்டலுக்கு ஒரு வரம்பே இல்லை. மகாராஷ்டிராவின் தொழில் பகுதிகளில் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். மைசூர் விவசாயிகள் மீதான சுரண்டல் பயங்கரமானதாகும்; பிற தெற்கத்திய பிராந்தியங்களிலும் இதுவே உண்மை நிலையாகும். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, கிளர்ச்சி எப்படி தன்னை வெளிப்படுத்தும், என்ன வடிவம் எடுக்கும் என்று ஒருவரால் முன்னரே கணக்கிட்டு அறிந்து சொல்ல முடியாது. இதுவரை நினைத்து பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் அடுத்த அய்ம்பது, நூறு ஆண்டுகளில் நடக்கும் என தலைவர் சொல்லியுள்ளார். நம் நாட்டிலும் இது வரை நினைத்து பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
மறுபுறம், வியட்நாமின் வீரம்செறிந்த மக்கள் மொத்த உலகத்தின் மக்களுக்கும் துணிச்சலும் உற்சாகமும் தருகிறார்கள். அவர்கள் இணையற்ற ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள். வியட்நாம் விடுவிக்கப்பட்டால் அந்த நெருப்பு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவும். வியட்நாமை மய்ய விசயமாகக் கொண்டு மற்ற நாடுகளோடு சேர்ந்து கொண்டு ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த குரல் எழுப்பும். கூடவே, அவை உலகப் புரட்சியின் மகத்தான கோட்டையான சோசலிச சீனத்துடன் உறவுகளை நிறுவியுள்ளன. நம் நாட்டில் நாகாக்களும் மிசோக்களும் தனிநாடு கோரிக்கைக்காக முழுமையான தேசிய போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்; வீரம் நிறைந்த வியட்நாம் மக்களின் போராட்டங்களைக் கண்ட அவர்கள் சீனத்தோடு உறவுகளை நிறுவி உள்ளனர்.
ஒரு பேரெழுச்சி, ஒரு நாடுதழுவிய பேரெழுச்சி வந்துகொண்டு இருக்கிறது. நாம் இதனை மனதில் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நாம் நம் மீது நம்பிக்கைக் கொள்வோம். கடந்த காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பேரெழுச்சி கண்டுள்ளோம். வரப்போகிற பேரெழுச்சி கடந்த காலங்களைக் காட்டிலும் மிகவும் பரந்த பகுதிக்கு பரவும். மிகவும் உயர்ந்த ஒரு கட்டத்தை எட்டும். போராட்டத்தின் முன்னேற்றம் பரிணாம தன்மை கொண்டது அல்ல, புரட்சிகர தன்மை கொண்டது என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் தற்போது நம் கட்சி தலைமை தாங்கும் போராட்டத்தின் வேகத்தை மட்டுமே கணக்கில் கொண்டால், 1975ல் என்ன, 2001ல் கூட நம் நாடு விடுவிக்கப்படாது. போராட்டத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் புரட்சிகரமானது என்பதால்தான், நேற்று ஒரு சிறிய பகுதியில் நிகழ்ந்த பேரெழுச்சி அந்தப் பகுதியோடு சுருங்கி நின்றுவிடாது; அந்த போராட்டம் முந்தைய காலங்களை காட்டிலும் வரும் காலங்களில் மேலும் மகத்தான தீவிரம் அடையும். மேலும் தீவிரமான கட்டத்தை எட்டும்.
வரப் போகிற பேரெழுச்சியில் எல்லா இடங்களிலும் நாம் தலைமை தாங்குவது சாத்தியமா? நிச்சயமாக முடியாது. நம் கட்சியின் உணர்வுபூர்வமான தலைமையால் போராட்டம் வழிநடத்தப்படும் பகுதிகள், அப்படிப்பட்ட தலைமை இல்லாத மற்ற பகுதிகளின் போராட்டத்திற்கு, முன்னுதாரணமாய் இருக்கும். இன்று நாம் சில பகுதிகளில் விவசாய சீர்திருத்தங்களை மேற்கொண்டால், புரட்சிகர பேரெழுச்சியின் போது, அது தன்னெழுச்சியாகவே வேறு பல பகுதிகளுக்கு பரவும். நமது உணர்வுபூர்வமான தலைமை ஓர் ஆயுதம் தாங்கிய புரட்சி கர பேரெழுச்சியை கொண்டுவரும். இந்த ஆயுதம் தாங்கிய புரட்சிகர பேரெழுச்சி மூலம் நமது தலைமை எல்லா இடங்களிலும் நிறுவப்படும்.
பரந்த மக்கள் மத்தியில் கட்சியை கட்டும் பணியை முன்னெடுப்பதும், போராட்டத்தின் அடிப்படையில் மக்களின் பரந்த பிரிவினருடன் ஒரு கூட்டு மேடையை நிறுவுவதும் இன்று நம்முன் உள்ள கடமைகளாகும். காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, ஒரு பரந்த கூட்டு முன்னணியை நிறுவுவது சாத்தியமே. இன்று, மக்கள் மீது காங்கிரஸ் ஏவியுள்ள ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்க இடதுசாரி கட்சிகள் மறுக்கிறார்கள். இந்த கட்சிகளின் செல்வாக்கில் உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும், இந்த மறுப்பால் தங்கள் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள். நாம் ஒன்றுபட்ட போராட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு அய்க்கியப்பட முயற்சிக்க வேண்டும். ஒரு காலத்தில் நமது எதிரிகளாக இருந்தவர்கள் கூட, சிறப்பு சூழ்நிலைகளில் நம்மோடு ஒன்றுபட முன்வருவார்கள். நமக்கு அத்தகைய சக்திகளோடு ஒன்றுபட, பரந்த மனது வேண்டும். பரந்த மனது கொண்டு இருப்பது கம்யூனிஸ்டுகளின் பண்பாகும். இன்று மக்கள் நலன் ஒன்றுபட்ட போராட்டத்தை கோருகிறது. மக்கள் நலனே கட்சியின் நலன் ஆகும்.