தண்ணீர் கேட்பது எங்கள் உரிமை
தண்ணீர் தருவது அரசின் கடமை
தண்ணீர் பிரச்சனை பற்றி பேசும்போது இரண்டு பக்கெட் தண்ணீரில் குளிக்கிறேன் என்று சொல்லும் திறன் குன்றிய முதலமைச்சரை இது வரை நாம் கண்டதில்லை
.அந்த குறை போக்க மோடியின் கருணையில் நமக்கு எடப்பாடி பழனிச்சாமி கிடைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திடீரென இன்று தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடவில்லை. மழை இல்லை, நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது, நீர் தேக்கங்களில் நீர் குறைந்து வருகிறது என்பவை முதலமைச்சருக்கு, ஆட்சியாளர்களுக்கு இன்று ஓய்வு பெற்றுவிட்ட கிரிஜா வைத்தியநாதன் போன்ற அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். பிரச்சனை என்று வந்துவிட்டால் மக்கள் அரசிடம் கேட்கக் கூடாது என்று இந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள். எதிர்ப்பார்ப்பு பொய்த்து கேள்விகள் வரும்போது, பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக கேள்வி எழுப்புபவர்களை அதிகாரத்தின் துணையுடன் எதிர்கொள்கிறார்கள்.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஆனால், அது அனைவருக்குமல்ல. வசதியற்றவர்களுக்கு, தலை காய்ந்தவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவே இல்லை.சென்னை தெருக்கள்தோறும் காலிக் குடங்களுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் காத்திருந்த வண்ணம் இருக்கிறார்கள். திடீரென ஒரு வாகனம் வருகிறது. ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளி ஓடி தண்ணீர் பிடிக்கிறார்கள். அடித்துக் கொள்ள நேர்கிறது. உறவினர்கள், நண்பர்கள் பகைவர்களாகிறார்கள். இப்படி ஒரு பிரிவு. இது மிகப்பெரிய பிரிவு. பெரும்பான்மை.
இன்னொரு பிரிவு இருக்கிறது. அலைபேசியை எடுக்கிறது. ஏதோ ஓர் எண்ணுக்கு அழைக்கிறது. தண்ணீர் டேங்கரில் வருகிறது. வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டி நிரம்புகிறது. இவர்களுக்குத் தட்டுப்பாடே இல்லை. காசு கொடுத்தால் தண்ணீர் கிடைக்கிறது. (ரெண்டு பக்கெட்காரருக்கு காசும் தர வேண்டியதில்லை). இது சிறுபான்மை.
இன்னும் ஒரு பிரிவு சென்னை மாநகராட்சியின் தண்ணீர் வாரிய எண்களை அலைபேசியில் அழைக்கிறது. அல்லது அதன் இணைய பக்கத்தில் தண்ணீர் வேண்டும் என்று முன்பதிவு செய்கிறது. மாலையோ, ஓரிரு நாட்கள் கழித்தோ தண்ணீர் கிடைத்து விடுகிறது. காசு தர வேண்டியிருக்கிறது. சில நேரம் சில நாட்கள் கூட காத்திருக்க நேர்கிறது. ஆனாலும் தண்ணீர் கிடைத்துவிடுகிறது. இதுவும் சிறுபான்மைப் பிரிவுதான். இதுவும் தண்ணீர் வாங்க ஆகும் செலவால், இருக்கும் சேமிப்பு குறையாது என்றாலும் தண்ணீர் தட்டுப்பாட்டு காலத்தில் சேமிப்பதை குறைத்துக் கொள்ள நேரும் பிரிவுதான்.
ஆக, பணக்கார, மேல்நடுத்தர, நடுத்தர சென்னைவாசிகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை. அல்லது, இருக்கிறது, ஆனால் இல்லை. இவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் இருந்தும், தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்களிடம் இருந்தும் தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் ஒரு பொருளாக மிகவும் திட்டவட்டமாக மாற்றிய பெருமை நமது முதலமைச்சர் பழனிச்சாமியை சாரும். அவர் வழிகாட்டியான ஜெயலலிதா அரசு குடிநீர் விற்பனையை தமிழ்நாட்டில் துவக்கி வைத்தவர். பேருந்து நிலையங்களில் வந்து போகும் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவது அரசின் கடமை. ஆனால் ஜெயலலிதா கும்மிடிபூண்டியில் குடி தண்ணீருக்காக ஒரு தண்ணீர் நிலையம் துவக்கி அதில் இருந்து தண்ணீரை ரூ.10 என விற்று காசு பார்க்க முடியும் என்று செய்து காட்டியவர். இப்போது குடிநீர் தர வேண்டிய சென்னை மாநகராட்சியே அந்த தண்ணீரை விற்க முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
24,000, 30,000, 40,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கர்கள் சென்னையின் குறுக்கும்மறுக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. 24,000 லிட்டர் டேங்கர் ஒன்று ரூ.3,000. ஒரு பகுதியில் மட்டும் குறைந்தது 1,000 முறையாவது இந்த டேங்கர்கள் தண்ணீர் விற்பனை செய்கின்றன. சில வாரங்களுக்கு முன் தனியார் தண்ணீர் டேங்கர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தபோது, டேங்கர் உரிமையாளர் ஒருவர் தந்த விவரங்கள் இவை. ஒரு பகுதியில் ஒரு டேங்கரில் வருமானம் ரூ.30 லட்சம். ஒரு பகுதியில் 2,40,00,000 லிட்டர் தண்ணீர் விற்கப்படுகிறது. இவ்வளவு தண்ணீரும் தனியார் நிறுவனங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? சென்னையில் மட்டும் 4,500 தனியார் தண்ணீர் டேங்கர்கள் உள்ளன. இவர்களுக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது? அரசு மக்களுக்குத் தர வேண்டிய தண்ணீரை இவர்களிடம் காசுக்கு விற்றுவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. முதலமைச்சர் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் விளைநிலங்களில் இருந்து இவர்கள் தண்ணீர் எடுக்கிறார்கள். இப்போது இந்த நிலங்களிலும் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துவரும் திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் இரண்டே வாரங்களில் பத்தடிக்கு கீழே நீர் போய்விட்டதாக அவர்களே சொல்கிறார்கள். இப்போது தண்ணீர் எடுக்க இன்னும் தள்ளி இருக்கிற மாவட்டங்களுக்குச் செல்கிறார்களாம். விளை நிலங்களின் கீழே இருக்கும் தண்ணீரை எடுத்துவிட்டால் அந்தப் பகுதி சாமான்யர்கள், விவசாயிகள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள்?
மக்கள் பிரச்சனைகள் பற்றி எந்த உடனடி பார்வையோ, தீர்வோ தொலைநோக்கு திட்டமோ.... இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் அடிமை ஊழல் ஆட்சியாளர்கள். சாராய ஆலைகள், குளிர்பான ஆலைகள், பன்னாட்டு, பகாசுர தொழில் நிறுவனங்கள், பணக்காரர்க ளுக்கான கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள், பணக்காரர்களுக்கான மருத்துவமனைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
உண்மையில், அரசே தண்ணீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. காசிருந்தால் கல்வி, காசிருந்தால் மருத்துவம் ஆகியவை போல், காசிருந்தால் தண்ணீர் என்ற பரிணாம வளர்ச்சிக்கு தமிழ்நாட்டை பழனிச்சாமி அரசு கொண்டு போய்விட்டது. தண்ணீர் குறைந்து வரும்போது, இருக்கிற தண்ணீர், மக்களுக்குச் சேராமல் தனியார் தண்ணீர் வியாபாரிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது.
ஏரிகளை, குளங்களை, நீர் நிலைகளை கான்கிரீட் கட்டிடங்களாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து... காடுகளை அழித்து, மணல் திருடி விற்று.... மழைக்கும் நீர்வரத்துக்கும் தேவையான அனைத்தையும் காசாக்கி விழுங்கி விட்டு, இன்று காசுள்ளவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் சாகிறார்கள். இருக்கிற தண்ணீராவது பாதுகாக்கப்பட, இனி வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க, இன்றாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்ணீர் எங்கள் உரிமை, தண்ணீர் தருவது அரசின் கடமை என்ற முழக்கம் தமிழ்நாடெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.