ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு கிடக்கட்டும்...
ஒரே நாடு ஒரே சுடுகாடு கிடைக்குமா?
2020 ஜுன் 30க்குள் நாடெங்கும் இந்தத் திட்டத்தை அமலாக்கிவிடப் போவதாக மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சொல்கிறார்.
ஆதார் அட்டைகளுடன் ரேசன் அட்டைகள் இணைக்கப்பட்டு நாட்டின் எந்த கடையிலும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்றும் சொல்கிறார். ஆதார் அட்டையுடன் ரேசன் அட்டை இணைக்கப்படுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஜார்க்கண்டில் சொந்த மாநில மக்களே ரேசன் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் மடிகிறார்கள். ஒரு திட்டத்தை ஒரு மாநிலத்துக்குள் செயல்படுத்துவதிலேயே தோல்வி கண்டிருக்கிற ஓர் அரசாங்கம் இவ்வளவு பெரிய நாட்டில் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு எப்படி செயல்படுத்தும்?
2019 மே மாதத்தில் 20.95 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டு 13.81 லட்சம் மெட்ரிக் டன் எடுக்கப்பட்டுள்ளது. 18.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கப்பட்டு 16.03 லட்சம் மெட்ரிக் டன் எடுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை முழுவதுமாக விநியோகிக்கும் திறனற்ற அரசாங்கம் இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றும்?
ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்களில் எல்லா ரேசன் கடைகளுக்கும் இணைய வசதி இருப்பதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திவிட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 81.34 கோடி பேரை உள்ளடக்குவது இலக்கு என்றாலும் 80.72 கோடி பயனாளிகளை திட்டம் சென்றடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட பிறகு 2013ல் இருந்து 2017 நவம்பர் வரை 2.75 கோடி ரேசன் அட்டைகளை ரத்து செய்திருக்கிறார்கள். இப்போது ஒரே நாடு ஒரே கார்டு என்று சொல்லி இன்னும் சில கோடி பேரை பொது விநியோகத் திட்டத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கம் மட்டும் நிறைவேறும்.
தமிழ்நாட்டின், கேரளத்தின் மக்கள் தங்கள் விழிப்புணர்வால், கண்காணிப்பால் பொது விநியோகத் திட்டத்தை ஒப்பீட்டுரீதியில் மேலானதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் புகுந்து ஆட்டத்தை குலைத்து மக்களை அலைய விடும் நோக்கமும் மாநில உரிமைகளை பறிக்கும் நோக்கமும் நிறைவேறும்.
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு கிடக்கட்டும், சுடுகாட்டுக்கும் சுடுகாட்டுப் பாதைக்கும் உரிமையற்றவர்களாக கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் நாடெங்கும் அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்று நீங்கள் சொல்வீர்களா?
இடஒதுக்கீடு நோக்கங்களுக்குத் தவிர வேறு எந்த போக்குவரத்துக்கும் நாட்டில் சாதி கணக்கில் கொள்ளப்பட்டால் கடுமையான தண்டனை என்று சட்டம் கொண்டு வருவீர்களா?
கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை தர மறுக்கும் மத்திய அமைச்சர்கள் இருக்கிற நாட்டில் நான் இந்த நாட்டு குடிமகன்/ள் என மெய்ப்பிக்கும் நிர்ப்பந்தம் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதை திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹ÷வா கடுமையாகச் சாடியது உரைக்கவில்லையா? யார் கேட்டது ஆதார் வேண்டும் என்று?
உங்களுக்கு நாட்டு மக்களுக்கு நன்மை தரும் எந்தத் திட்டத்தையும் அமலாக்கத் தெரியாது. இருப்பவற்றை சிதைப்பதைத்தான் நாங் கள் கடந்த அய்ந்து ஆண்டுகள் பார்த்தோம். நீங்கள் திறமையற்றவர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்றால், ஆட்சியைக் கலைத்துவிட்டு ஓடிவிடுங்கள்.