மக்களாட்சியில் மக்களுக்கு உரிமைகள் கிடையாதா?
காவல்துறை மக்கள் உரிமைகளைப் பறிக்குமா?
கணியன்
கோவை பிரிக்கால் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் 06.03.2019ல் வழங்கிய தீர்ப்பை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் 02.04.2019 வழங்கிய தீர்ப்பை, அவர்கள் முன்பு, அரசின் முன்பு தான் தந்த வாக்குறுதிகளை, தமிழக அரசு 03.05.2019 போட்ட அரசாணையை மதிக்க மாட்டேன் காலில் போட்டு மிதிப்பேன் எனக் கொக்கரிக்கிறது.
பிரிக்கால் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு வரும்போது அவர்களுக்கு வேலை தருவேன் என 29.11.2018 அன்று அரசிடம் வாக்குறுதி தந்தது. பழிவாங்க மாட்டேன் என்றது. ஆனால் 03.12.2018 அன்றே, வேலை நிறுத்தம் செய்ததை காரணம் காட்டி 302 பேரை உத்தர்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. 11.02.2019 அன்று வேலை நீக்கம் செய்தது. வேலை நீக்கத்திற்கு தடை வழங்கப்பட்ட பின்னணியில், வேலை நீக்கத்திற்கு முந்தைய, வேலை நீக்கத்திற்கு காரணமான பணியிட மாற்றல் நியாயமா என நீதிமன்றம் விசாரிக்க, பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க கோரும் மனுவில் அரசு உத்தரவிட தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை என்றது. நீதிமன்ற இரு அமர்வங்கள் உத்தரவிட்டதால் வேலை வாய்ப்பை, தொழில் அமைதியைக் காக்க பிரிக்கால் நிர்வாகம் பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு 03.05.2019 அன்று ஆணையிட்டது. முடியாது, உன்னால் என்ன செய்ய முடியும் என்ற வகையில் பிரிக்கால் நிர்வாகம் வாலாட்டியது. சட்டத்தின் 29ஏ பிரிவுப்படி, அரசு ஆணையை நிறைவேற்றாவிட்டால் பிரிக்கால் நிர்வாகத்தின் மீது, ஒரு வருடம் சிறைக்கு அனுப்பவும் அபராதம் வசூலிக்கவும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்லி, அரசு அவர்கள் வாலை அறுத்து இருக்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் பலர் பிரிக்கால் நிர்வாகம் முன் கை கட்டி வாய் பொத்தி வாலாட்டிக் கொண்டு நின்றனர்.
பணம், அதிகாரம் உள்ள சீமான்களுக்கு, சீமாட்டிகளுக்கு பல்லக்கு தூக்குபவர்கள், தொழிலாளர்களை மிரட்டுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை காக்கிச் சட்டை விறைப்பாக விரட்டுகிறது. சட்டப்படி பிரிக்கால் நிர்வாகத்தின் மீது அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் 27.06.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர். பெரியநாயக்கன்பாளையம் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து 26.06.2019 தேதியிட்ட கடிதம் தந்தார்.
அவற்றில் சில நிபந்தனைகள்
இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தெருமுனை கூட்டத்தில் எவரும் பேசுதல் கூடாது.
தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தொழிலாளர்களையோ பொது மக்களையோ யாரையும், வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ, மிரட்டவோ மூளை சலவை செய்யவோ கூடாது.
பிரிக்கால் தொழிலாளர்கள் வீடுக ளுக்குச் சென்று தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்தவோ கட்டாயப் படுத்தவோ மிரட்டவோ மூளைச் சலவை செய்யவோ கூடாது.
கொடியை உயர்த்திப் பிடிக்கக் கூடாது. கோஷம் போடக் கூடாது.
நம் கேள்விகள்
பெரியநாயக்கன்பாளையம் தெருமுனையில் ஆபத்துக்குள்ளாகும் அளவுக்கு இந்திய இறையாளுமை பலவீனமானதா? பிரிக்கால் போன்ற முதலாளிகளுக்கு எதிராகப் பேசுவது, இந்திய இறையாளுமைக்கு எதிரானதா? பிரிக்கால் நலனே இந்திய இறையாளுமையா? இவ்வளவு அப்பட்டமான முதலாளித்துவ விசுவாசமா?
மூளை சலவை செய்வது என்றால் என்ன? மூளைக்கு இஸ்திரி போடலாமா? கருத்து பரப்ப கூடாது என்று சொல்ல வீட்டிற்கு போய் தொழிலாளர்களை பொது மக்களை நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்று சொல்ல காவல்துறைக்கு உரிமை உண்டா? முதலாளியும் சட்டத்தை மீறுவார், காவல் துறையும் சட்டத்தை மீறும் என்று சொல்வதுதான் மோடி பழனிச்சாமி கால சட்டத்தின் ஆட்சியா?
மல்லையாவை, நீரவ் மோடியை சோக்சியை, கொள்ளையடித்த முதலாளிகளை தப்பவிட்ட காவல்துறை, சாதி மத வெறியரை, பெண்கள் மீதான வன்முறையாளர்களை சுதந்திரமாக நடமாட விடும் காவல்துறை, சாதாரண தொழிலாளர்களிடம் விறைப்பும் வீரமும் காட்டுவது, உண்மையில் அடாவடியும் கோழைத்தனமும்தானே?
சென்னையில் ஒரு வினோதம்
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நீட் தேர்வுக்கு, இந்தி திணிப்புக்கு எதிராக 17.06.2019 அன்று சென்னை - 1 நாராயணப்பன் தெருவில் (மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில்) ஆர்ப்பாட்டம் நடத்த திரு.ஜே.மோகன்ராஜ் 11.06.2019 தேதிய மனு மூலம் அனுமதி கோரினார். 11.06.2019 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அனுமதி வழங்கினார்.
இதே ஜே.மோகன்ராஜ் அதே 11.06.2019 அன்று அதே சென்னை - 1 நாராயணப்பன் தெருவில் 22.06.2019 அன்று 8 வழிச்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினார். அதே சென்னை பெருநகர காவல் ஆணையர் 20.06.2019 அன்று அனுமதி மறுத்து உத்தரவு போடுகிறார்.
16 முதல் 20 தேதிகளில் ஜ÷ன் 2019ல் எந்த மாற்றமும் நடக்கவில்லை. சூரியன் கிழக்கே உதித்து மேற்கில்தான் மறைந்தது. ஆனால் போராடும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தை புரட்சிகர இளைஞர் கழகத்தை, காவல்துறை தொடர் குற்றவாளிகள், சமூக விரோதிகள் என 20.06.2019 உத்தரவில் சித்தரிக்கப் பார்க்கிறது.
இந்த அமைப்புகள், மத்திய மாநில அரசுகளுக்கெதிராக கண்டனம் முழங்கி பதாகை ஏந்த உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக நம்பகமான தகவல் உள்ளது என்று உத்தரவு சொல்கிறது. நம்பகமானவர்களுக்கு நம்பகமான தகவல்கள். அதன் பிறகு, உத்தரவு பின்வருமாறு சொன்னது:
‘மேலும் தங்கள் அமைப்பினர் ஒழுங்குமுறை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பாக கீழ்க்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மனுதாரருக்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
1. 29.06.2017 அன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பி - 3 கோட்டை கா.நி.குற்ற எண். 299/2017 ச/பி 147, 290 இதச)
2. 03.07.2017 அன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் இருந்து அனுமதியின்றி பேரணியாக சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (பி-1 வடக்கு கடற்கரை கா.நி. குற்ற எண். 1061/2017 ச/பி 143, 188 இதச)
3. 20.09.2017 அன்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (சி-1 பூக்கடை கா.நி. குற்ற எண். 1372/2017 ச/பி 143, 188 இதச மற்றும் 7(1) (எ) சிஎல்ஏ ஆக்ட்).
4. 24.01.2017 அன்று பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லவன் இல்லத்தை முற்றுகை யிடும் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (எப்-1 சிந்தாதிரிப்பேட்டை கா.நி. குற்ற எண். 20/2018 ச/பி 341, 143, 188, 353 இதச உ/இ 41(6) சி.ஆர்.பி.சி)
5. 23.05.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (பி-1 வடக்கு கடற்கரை கா.நி. குற்ற எண். 310/2018 ச/பி 143, 188 இதச)
6. 17.07.2018 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து புத்தகம் வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (சி-1 பூக்கடை கா.நி. குற்ற எண். 561/2018 ச/பி 143, 188, 505 (1) (பி) இதச உ/இ7 (1) (எ) சிஎல்ஏ ஆக்ட்)
7. 28.09.2018 அன்று கோவை பிரிக்கால், யமாஹா, என்பீல்டு, எம்எஸ்அய் ஆட்டோமோடிவ் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். (பி-3 கோட்டை கா.நி. குற்ற எண். 85/2018 ச/பி 147, 188, 151 இதச உ/இ 7(1)(எ) சிஎல்ஏ ஆக்ட்)
மேலும் இத்தகைய சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென குழுமி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொது சொத்திற்கும்/தனியார் சொத்திற்கும் சேதம் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என மனுதாரருக்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், உச்சநீதிமன்றம் ஒரு மேல் முறையீட்டு மனுவில் சிவில் அப்பீல் எண். 7926 - 2001 கே.கே.சாலை, வியாபாரிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு) கீழ்க்கண்டவாறு ஆணையிட்டுள்ளது மனுதாரரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
மேற்கூறப்பட்ட காரணங்களினாலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக் காக்க வேண்டியதன் அவசியத்தினா லும் மனுதாரர் 22.06.2019 அன்று காலை 11.00 மணியளவில், நாராயணப்பன் தெரு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது’.
ஆறே நாட்களில் கண்டறியப்பட்ட காரணங்கள் சொத்தையானவை, சட்டப்படியும் நியாயப்படியும் செல்லாதவை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புலப்படும்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின், புரட்சிகர இளைஞர் கழகத்தின் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியை எடுத்துப் பட்டியலிட்டுக் காட்டி, எல்லா வழக்குகளையும் நடத்தினால் என்ன செய்வீர்கள், தூக்கினால் என்ன செய்வீர்கள் என்று மிரட்டுகிறார்கள். போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு, புதியவர்களுக்கு எதிர்காலம் பற்றி, வேலை வாய்ப்பு பற்றி, நீதிமன்ற அலைக்கழிப்பு பற்றி அச்சமூட்டுகிறார்கள்.
இந்தப் பின்னணியில், திரைப்பட இயக்குநர் ரஞ்சித் விஷயத்தில் நீதிமன்றம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருந்ததும், ஆர்ப்பாட்டங்கள் ரவுடித்தனமாகக் கூடாது என பொத்தாம் போக்கில் சொல்வதும், எந்த கோரிக்கையில் யார் போராடலாம் எந்த கோரிக்கையில் யார் போராடக் கூடாது என்று சொல்வதும் ஜனநாயக சிந்தனை உடையவர்களைக் கவலை கொள்ளச் செய்கிறது.
வலதுசாரி சூழலில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பான பிரச்சனை பின்னுக்குச் செல்வதும் நீதிமன்றமும் ஜனநாயகப் பறிப்புக்கு உதவுவதும் வியப்பு தரும் விஷயங்கள் அல்ல.
மக்கள் பல பல ஆயிரங்களாக, லட்சங்களாக, கோடிகளாக திரளும்போது, ஜனநாயகத்துக்கு குறுக்கே நிற்பவை அனைத்தும் காணாமல் போகும். மிகவும் அவசியமான அந்தப் பணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம்.
ஓர் ஒளிக்கீற்று
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், ஏஅய்சிசிடியு அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான தோழர் பாரதி தலைமையில், சென்னை அம்பத்தூர் காமராஜபுரம் பகுதி மக்கள் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடினர்.
24.09.2016 முதல் உண்ணாநிலை போராட்டம் நடத்த முயன்ற தோழர் பாரதி உள்ளிட்ட 96 பேர் மேல் இந்திய தண்டனை சட்டம் 143, 188 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் போராட்டத்தால், அரசு, நடுநிலைப் பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது. ஆனால் வழக்கிற்காக மக்கள் துன்புறுத்தப்பட்டனர். வாய்தாக்கள், வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றால் போராட்டம் செய்ததே தவறு, இனி செய்யக் கூடாது என நினைக்க வைக்க வேண்டும் என முயன்றனர்.
தோழர் பாரதியுடன் செயல்படும் வழக்கறிஞர்கள் விஜய், ரமேஷ் உமாபதி, அதியமான், அழகுலட்சுமி ஆகியோர், மூத்த வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ் ஆஜராக வழக்கு நடத்தி, 27.06.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றம் கிரிமினல் ஓ.பி.எண்.16543/2019ல் 96 போராட்டக்காரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்தது.
விடுதலைக்கு வாழ்த்துகிறோம்.
தொடர்ந்து போராட அழைக்கிறோம்.

Apex
Court passed its final order on 10.04.2003 - its gist as follows:
“..............Police
already have powers under existing enactments to regulate processions and
meetings. .............the antecedents of the organisers and whether there
would be any prejudice in maintenance of Law and Order/ public tranquility,
peace and security of the State. It was therefore considered that there should
be an element of discretion with the authorities of the State. In view of the
above, no further orders are necessary. The Civil Appeal stands disposed off
accordingly.”மேற்கூறப்பட்ட காரணங்களினாலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக் காக்க வேண்டியதன் அவசியத்தினா லும் மனுதாரர் 22.06.2019 அன்று காலை 11.00 மணியளவில், நாராயணப்பன் தெரு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது’.